ஆணடவரின் மேற்பார்வையில் நடக்கும் ஏஞ்சல் டிவி ஏன் பலருக்கு இடறலாக இருக்கிறது என்பது எனக்குப் புரியாத புதிர்!!
ஏஞ்சல் டிவி மாத்திரமல்ல, குரு ராம்தேவ் மற்றும் அன்னா ஹஸாரே போன்றவர்களின் போராட்டமும் ஆண்டவரின் மேற்பார்வையில் தான் நடக்கிறது; இன்னும் ஒரு தெருவில் சவ ஊர்வலமும் இன்னொரு தெருவில் திருமண ஊர்வலமும் மற்றொரு தெருவில் விக்கிரத்தின் ஊர்வலமும் போய்க்கொண்டிருக்கிறது; அவையும் கூட ஆண்டவருடைய மேற்பார்வையில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
இன்று மதியம் (12:30)-க்குசாது ஐயா சொல்லுகிறார், அவர் தெரியாம தப்புக்கணக்கு போட்டு 2 கோடி கேட்டு ஓவி வேன் (OV van) வாங்க அறிவிப்பு செய்தாராம், ஆனால் தற்போது தான் தெரிய வந்திருக்கிறது, அதற்கு குறைந்தது 8 கோடி வேண்டுமென; அதாவது முன்பு ஆண்டவரே (தவறாகக்) கணக்குப்போட்டு 2 கோடியை கேட்க சொல்லியிருக்கிறார்; இப்போதோ விலைவாசிக்கு ஏற்ப அது சில மாதங்களிலேயே 8 கோடியாக மாறிவிட்டது;
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம், இவர்களுக்கு ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்ட கோடிக்கணக்கான ரூபாய்களை வெள்ளையாக மாற்றவே இதுபோல மீடியாவில் பஞ்சவேஷம் போடுகிறார்கள்; திடீரென இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது அமலாக்க அதிகாரிகள் கேட்டால் மிக எளிதாக சொல்லிவிடலாம், நான் ஏஞ்சல் டிவியில் அறிவிப்பு வெளியிட்டிருந்தேன், அதன்பயனாக எனது இரசிகர்கள் அனுப்பித் தந்தார்கள் என்று கூறி..!
இந்த அக்கிரமங்களெல்லாம் ஆண்டவருடைய மேற்பார்வையில் நடைபெறுகிறது என்று கூறி தயவுசெய்து தேவ மகிமையை அவதூறு செய்யாதிருக்க சாது ஐயாவின் இரசிகர்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளுகிறேன்; நாசரேத்தூர்காரர் இதுபோல பிச்சையெடுத்து ஊழியம் செய்தவர் அல்லர்; அவர் சர்வ வல்லவராக்கும்;வனாந்தரத்தை காடைகளால் நிரப்பி தமது ஜனத்தை திக்குமுக்காடச் செய்தவராக்கும்; தன்னுடைய டிவியில் உட்கார்ந்து, பரலோகத்தை படம்பிடிக்க காமிரா வாங்கப்போகிறேன்,அல்லாரும் பணம் அனுப்புங்க என்று கேட்பதைவிட தேவ விரோத அறிவிப்பு ஏதாவது இருக்குமா என்ன..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
தனிட்ட மனிதர்மீதுள்ள அனுதாபம் என்னும் கண்ணாடியை சற்று கழற்றி வைத்துவிட்டு ஏஞ்சல் டி.வி. ஐ பாருங்கள் சகோதரி... அப்போது புரியும்....!
?? என்ன அனுதாபம்? எனக்கு இப்போதைக்கு சோல் & பெரேயன்ஸ் மேல் தான் கொஞ்சம் அனுதாபம் இருக்கிறது!!
John wrote:
என்ன சகோதரி நான் சாது அய்யா மேற்பார்வையில் நடப்பதாக அல்லவா நினைத்து கொண்டு இருந்தேன். ஆண்டவர் மேற்பார்வையில் நடந்தால் ஏஞ்சல் டி வியின் நிகழ்ச்சிகளை வேதமாக அல்லவா எடுத்து கொள்ளவேண்டும்
அப்படியா? உங்க வாழ்க்கையை நீங்க ஆண்டவர் சொல்கிறபடி நடத்துகிறதில்லையா?
//ஆணடவரின் மேற்பார்வையில் நடக்கும் ஏஞ்சல் டிவி ஏன் பலருக்கு இடறலாக இருக்கிறது என்பது எனக்குப் புரியாத புதிர்!!//
என்ன சகோதரி நான் சாது அய்யா மேற்பார்வையில் நடப்பதாக அல்லவா நினைத்து கொண்டு இருந்தேன். ஆண்டவர் மேற்பார்வையில் நடந்தால் ஏஞ்சல் டி வியின் நிகழ்ச்சிகளை வேதமாக அல்லவா எடுத்து கொள்ளவேண்டும்
எங்கள் அன்பு தோழி கோல்டா அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதிய வட்டதுக்குள் நுழைகிறார்கள்;இப்படியே விரைவில் ஏஞ்சல் டிவியின் அக்கிரமங்களைத் தோலுரிக்க வாழ்த்துக்கள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)