//ஆடம்பர வாழ்க்கை என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது, //
2 அர்த்தமாவது சொல்லுங்க.
// 12 பேர் வேலையை விட்டு தான் வந்தார்கள் இல்லை என்று சொல்லவில்லை!! அவை ஒரு காலத்திற்கு மட்டுமே!!//
???. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்தானே.
//Xerox copy will LOOK like original, BUT Xerox Copy IS NOT the original!!//
உருவ ஒற்றுமை கிடையாது என்று நீங்க தான் சொன்னீங்க. இப்ப copy என்று சொல்றீங்க. பிதா தன்னைத்தானே இப்படி ஒரு காப்பி எடுத்துக் கொண்டாரா?
//தேவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து சபைக்கு பரிந்து பேசும் பரிந்துரையாளராகவும், தேவனுக்கும் உலகத்திற்கும் மத்தியஸ்தராக இருக்கிறார்!! உயர்த்தப்படவராக இருக்கிறார்!! ஆளுகை செய்ய வரயிருக்கும் ராஜாவாக இருக்கிறார்!! இப்படி எல்லாமுமாக இருந்தாலும் பிதாவிற்கு கீழ்ப்படிந்து இருக்கிறார்!!//
சரி ஏன் தூதன் என்று இப்ப சொல்லக் கூடாது??
//வேதத்தில் உள்ள எங்கள் இயேசு நீங்கள் நம்பினாலும் நம்பாமற்போனாலும், நல்லவரே!! //
bereans: //எனக்கு தெரியாது; ஆனால் வசனம் சொல்லுகிறது:
3 யோவான் 1:2. பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
இதில் ஆடம்பரம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது!! அப்படியே இருந்தாலும் அது நிச்சயமாக அவன் அவன் செய்யும் வேலையின் நிமித்தமே உண்டாயிருக்க முடியுமே தவிர, காணிக்கை பெட்டிகளால் அல்ல!!//
கழுவுற மீனில் நழுவுற மீன் மாதிரி பேசுறீங்களே!பயப்படாதீங்க பெரேயன்ஸ்! ஆடம்பர வாழ்க்கை தப்புன்னா தப்புன்னு சொல்லுங்க. சோல் ஒன்றும் சொல்ல மாட்டார்.
//
//அத்துடன், இயேசு கிறிஸ்து வேலை பார்த்துக் கொண்டே ஊழியம் செய்தது போல் தெரியவில்லையே.//
I கொரிந்தியர் 11:1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். //
இந்த வசனத்தின் மூலமாக என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து ஊழியத்தில் ஒரு காணிக்கைப் பை இருந்தது. அவர் வேலை செய்து கொண்டே ஊழியம் செய்தது போல் தெரியவில்லை. அத்துடன் வேலை செய்து கொண்டிருந்த 12 பேரை வேலையை விட்டு விட்டுதான் தன் பின்னால் வரச் சொன்னார்.
//உங்க ஆட்களை நீங்களே காட்டிக்கொடுக்குறீங்களே!!//
எப்படி நீங்க எங்க ஆட்கள் இல்லையோ, அது போல் அவர்களும்(prosperity gospel preachers) எங்க ஆட்கள் இல்லை!!
//அப்ப வேற வேற தான் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்!! நல்லது!! திரும்பவும் மாற்றிக்கொள்ள மாட்டீர்களே!!//
No. Never!!
//அவரை (பிதா) போன்றவரே ஆனால் பிதா அல்ல!! There is always a difference between Original and Express Image (Xerox copy)!! You can't say that the Express Image is THE ORIGINAL!! That's ALL!!//
Xerox copy will look the same as original. உருவ ஒற்றுமை கிடையாதுன்னு சொல்லிட்டு, இப்படி ஒரு உதாரணம் சொல்றீங்க.
//நீங்க தானே உருவ ஒற்றுமை உண்டு என்கிறீர்கள்!! இப்ப கிடையாது தான் என்கிறீர்கள்!! அதான் சொன்னேன் ஒரே நிலையில் இல்லை என்று!! இப்ப சொல்லுவீர்கள் பிறகு மாற்றுவீர்கள்!!//
உங்க நண்பர் பிள்ளை அப்பா மாதிரி இருக்கும் என்று சொன்னதை ஆமோதித்து சொன்னதுதான் அது. உருவத்தின்படி அல்ல, தன்மையின்படியான ஒற்றுமை என்று வைத்துக் கொள்வோமே!
//நீங்கள் வளர்த்தது உங்களை தான் கடிக்கும்!!//
சிங்கத்தை யாராவது வளர்ப்பார்களா??
//குழப்பத்தின் உச்சம்!! பாதி பிதாவை குறித்து எழுதிவிட்டு கடைசியில் இயேசு கிறிஸ்துவை "வெறும்" ஒரு தூதர் என்று சொல்லுவதை குறித்து எழுதுறீங்களே!!//
நான் சிருஷ்டிகரைப் பற்றி எழுதினேன். இயேசு கிறிஸ்துதானே சகலத்தையும் சிருஷ்டித்தார்??
//இயேசு கிறிஸ்து இப்ப தூதர் என்று ஒரு பதிவிலும் நாங்கள் எழுதவில்லை!!//
இப்ப என்னவா இருக்கார்?
//பெரேயன்ஸை நீங்கள் பார்க்காமல் இருக்கலாம்,//
பார்த்தேன். சூலூர் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தீர்கள்!
திருமணம் இல்லையென்றால், சிறு பிள்ளைகள் எப்படி ராஜ்யத்தில் இருப்பார்கள் என்றால், மரித்த பிள்ளைகள் அப்படியே உயிர்த்தெழுவார்கள் என்று சொல்கிறீர்கள். சரி, அப்ப, 100 வருடம் வாழ்ந்தவர் கிழவனாகவே இருப்பாரா என்றால், சாரி, உயிர்த்தெழுதலில் 30 வயது வாலிபனாக மாறி விடுவார் என்று சொல்கிறீர்கள்.
//100 வயதுள்ளவனும் உயிர்த்தெழுதலில் ஆதாமின் வயதிற்கு வந்து விடுவான்!! 930 அல்ல, வெறும் 30!! எல்லாம் முந்தய நிலைக்கு திரும்பும்!! ஒரு கஷ்டமும் கிடையாது!! உங்களுக்கு புரிந்துக்கொள்வதில் தான் கஷ்டம்!!//
மனிதன் பூமிக்காகவே படைக்கப்பட்டான் என்று சொல்றீங்க. மனிதன் உயிர்த்தெழுந்தும் பூமியின் விதிகளால் கட்டுப்பட்ட மனிதனாகவே இருப்பான் என்று சொல்றீங்க.ஆனால் திருமணம் மட்டும் கிடையாது என்றும் சொல்றீங்க. ஏன் என்றால் உயிர்த்தெழுந்தவர்களையே பூமி தாங்குவது கஷ்டம்தான். அவங்களுக்கு சந்ததியும் பிறந்தால் பூமி பத்தாது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே திருமணத்திற்கு தடை போட்டு,(வசனம் அப்படி எதுவும் சொல்லாவிட்டாலும்) குடும்பக் கட்டுப்பாடு இல்லாமலே ஜனத்தொகையை குறைத்து விடுகிறீர்கள்.
திருமணம் இல்லையென்றால், சிறு பிள்ளைகள் எப்படி ராஜ்யத்தில் இருப்பார்கள் என்றால், மரித்த பிள்ளைகள் அப்படியே உயிர்த்தெழுவார்கள் என்று சொல்கிறீர்கள். சரி, அப்ப, 100 வருடம் வாழ்ந்தவர் கிழவனாகவே இருப்பாரா என்றால், சாரி, உயிர்த்தெழுதலில் 30 வயது வாலிபனாக மாறி விடுவார் என்று சொல்கிறீர்கள்.
பிள்ளைகளும் வளர்ந்து 30 வயதை அடைவார்களோ? அப்ப 30 வருடத்திற்குப்பின் அனைவரும் 30 வயதாய் இருப்பார்கள்! இராஜ்யத்தில் எல்லாம் 30 மயம்! இதுக்கெல்லாம் என்ன வசன ஆதாரம் இருக்கு?