Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆஸ்திரேலியர்களே உங்களுக்கு இது அடுக்குமா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
ஆஸ்திரேலியர்களே உங்களுக்கு இது அடுக்குமா?
Permalink  
 


மெல்போர்னில் உள்ள ஒரு நாடக குழுவினர், பிள்ளையாருக்கும் ஹிட்லருக்கும் விவாதம் வரும்படியான ஒரு நாடகத்தை முன்னெடுத்து பெரிய அளவில் கண்டனத்தை சம்பாதித்து இருக்கிறார்கள். ஒன் இந்தியா தளத்தில் இதை குறித்து ஒருவர் கோபாவேசத்தோடு கொந்தளித்து இருந்தார்.

//மெல்போர்ன்: விநாயகரை அவமதிக்கும் வகையில் ஒரு நாடகத்தை மெல்போர்ன் நகரில் அரங்கேற்றவுள்ளனர். ஆஸ்திரேலியாவின் இந்த இனவெறிச் செயலைக் கண்டித்து இந்து மதத் தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் இனவெறி உலகம் அறிந்தது. தங்களைத் தவிர உலகில் யாருமே உயர்ந்தவர்கள் இல்லை, புத்திசாலிகள் இல்லை, திறமைசாலிகள் இல்லை என்பது அவர்களது 'தாழ்மையான' கருத்தாகும். ஏன், இங்கிலாந்துக்காரர்களையே கூட அவர்கள் மதிக்க மாட்டார்கள். ஆசியர்களைப் பார்த்தாலே அவர்களுக்குப் பற்றி எரியும். அப்படி ஒரு நல்ல மனசுக்காரர்கள் ஆஸ்திரேலியர்கள்.

இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் தலைவிரித்தாடிய இனவெறித் தாக்குதல்கள், படுகொலைகள் இந்தியர்களால் மறக்க முடியாததாகும். இந்த நிலையில் மீண்டும் இந்தியர்களை சீண்டும் ஒரு செயலைச் செய்துள்ளனர் ஆஸ்திரேலியர்கள்.

இந்துக்களின் முதன்மைக் கடவுளாக விளங்கும் விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் ஒரு நாடகத்தை உருவாக்கியுள்ளனர் மெல்போர்ன் நகரில். அங்கு தொடங்கும் விழா ஒன்றில், கணேஷ் வெர்சஸ் தேர்ட் ரீச் என்ற பெயரில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது. கீலாங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த நாடகத்தை தயாரித்துள்ளது.

இதில், விநாயகரை ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் கைது செய்து விசாரிப்பது போல காட்சியை வைத்துள்ளனர். அதாவது தனது ஸ்வஸ்திக் சின்னத்தை விநாயகர் திருடி விட்டதாக கூறி ஹிட்லரின் உத்தரவுப்படி விநாயகரை கைது செய்து விசாரிக்கின்றனறாம்.

இந்த நாடகம் குறித்து மெல்போர்ன் முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தக் கொழுப்புத்தனத்தைப் பார்த்து இந்துக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இந்து மதத் தலைவர் ராஜன் ஜெத் இதுகுறித்து கூறுகையில், இந்த நாடகம் மெல்போர்ன் விழாவில் நடத்தப்படவுள்ளது அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக உள்ளது.

இந்துக் கோவில்களிலும், வீடுகளில் உள்ள ஆலயங்களிலும் வைத்து வணங்கப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். அவரை அனைவரும் பார்த்து சிரித்துக் கேலி செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது வேதனை தருகிறது.

விநாயகர் புனிதமானவர். அவரது உண்மையான புனிதத்தை சித்தரிக்கும் வகையில் திரைப்படமோ, நாடகமோ அல்லது நிகழ்ச்சிகளோ அமைந்தால் அதை இந்துக்கள் வரவேற்பார்கள். மாறாக இதுபோல கேலிச் சித்திரமாக அவரை சித்தரிக்க முயன்றால் அதை ஏற்க முடியாது.

இந்த நாடகத்தில் நாஜிக்களின் உளவுப் படையினர் விநாயகரை கைது செய்து சித்திரவதை செய்வது போலவும், விசாரிப்பது போலவும் காட்சிகளை அமைத்துள்ளதாக தெரிகிறது. இது நிச்சயம் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை கடுமையாக பாதிக்கும் என்றார்.

இந்த சர்ச்சைக்குரிய நாடகத்தை தயாரித்துள்ள நிறுவனத்தின் செயல் தயாரிப்பாளர் ஆலிஸ் நாஷ் என்பவர் கூறுகையில், இது இந்துக்களின் உணர்வுகளை பாதிக்கும் அளவுக்கு இருக்காது என்றே நம்புகிறோம். அதுபோலத்தான் கதையை உருவாக்கியுள்ளோம். மேலும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்துடன் நாங்கள் இந்த கேரக்டரை உருவாக்கவில்லை.

சின்னங்கள் மூலமாகவும், சம்பிரதாயங்கள் மூலமாகவும் எப்படிக் கதை சொல்வது என்பதைத்தான் இந்த நாடகம் மூலம் நாங்கள் விளக்குகிறோம். இந்துக்களின் கடவுளான விநாயகரை பார்த்து யாரும் சிரிக்கும் வகையில் நாடகத்தில் காட்சிகள் இல்லை. நிச்சயம் அப்படி இருக்காது என்றார்.

செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி முதல் இந்த நாடகத்தை மெல்போர்ன் விழாவில் நடத்தவுள்ளனராம்.// Thanks :oneindia

தனிப்பட்ட முறையில் இந்து சகோதரர்களை இது புண்படுத்துமானால் இது வருந்தத்தக்கதே ஆனால் அதே சமயம் பல வலதுசாரி இந்து இயக்கங்களும் அவர்களது ஊடகங்களும் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் எந்தளவுக்கு கீழ்த்தரமாக விமர்சனம் செய்யமுடியுமோ அந்தளவுக்கு செய்கின்றனர் என்பதையும் கவனிக்கவேண்டும். தமிழ் ஹிந்து தளம் பற்றி சொல்லவே வேண்டாம் சமீபத்தில் கூட "இயேசுவுக்கான இந்து நரபலிகள்" என கட்டுரை வெளி வந்துள்ளது
1) இயேசுவென் போதனைகளை களங்கப்படுத்துவது
2) கிறிஸ்தவ நாடுகளின் செயல்பாடுகளை கிறிஸ்தவத்துடன் சம்பந்தப்படுத்தி இகழ்வது
3) வேதாகமம் என்பது இயேசுவின் காலத்துக்கு பின் மாஃபியா கும்பலால் எழுதப்பட்டது, மனித வாழ்க்கை மேம்படுவதற்கு அதில் ஒன்றும் இல்லை என்பது
4) இந்திய கிறிஸ்தவர்களின் தேசபக்தியை கேள்விக்குறியாக்குவது

இப்படி பல வகைகளிலும் கிறிஸ்தவர்களை இகழ்ந்தும் கிறிஸ்தவத்தை குறைகூறியும் வரும் போது மாத்திரம் கிறிஸ்தவர்கள் புண்படமாட்டார்களா என யோசிக்கவேண்டும். ஆஸ்திரேலியர்களின் இனவெறி குறித்து விமர்சிப்பவர்கள் நமது நாட்டில் ஜாதி வெறிக்கு காரணம் என்ன என்பதை ஆராய்வார்களா? ஆரியம் திராவிடம் எல்லாம் வெள்ளைக்காரர் கொண்டுவந்தது என்பவர்கள் தங்கள் கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் பூஜை செய்ய தாழ்த்தப்பட்ட ஜாதியினரை அனுமதிப்பார்களா?
ஹிந்து தளங்கள் கிறிஸ்தவர்களை இகழ்வதையும் கண்டு இந்து ஆர்வலரான அமெரிக்கர் ராஜன் ஜெட் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தால் நன்றாக இருக்கும். கிறிஸ்தவர்களுக்கு புனிதமானவரான கிறிஸ்துவை இகழ்வது கிறிஸ்தவர்களுக்கு சந்தோஷத்தையா தரும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard