ஸூப்பர்..ஸூப்பரோ ஸூப்பர்..! எப்படி இப்படி சரியாகச் சொல்லுகிறீர்கள் என்று யோசித்தபோதே யோசித்தேன்,ஒருவேளை அந்த ஒட்டகத்தில் வந்தவர் நீங்களாக இருக்கலாமோ..?
ஓகே, இந்த கதையிலிருந்து அறிந்துகொள்ளவேண்டிய நீதி என்னவென்றால் எப்படி அந்த கதையில் பிரச்சினை தீருவதற்கு அந்த ஒரே ஒரு குதிரை காரணமாக இருந்ததோ அதுபோலவே நம்முடைய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கலாம்,அதில் இயேசுவை அழைத்தால்- இணைத்தால் மிக எளிமையாக தீர்வைக் காணலாம். அதுக்கு அப்புறமென்ன, இருங்க என்றால் இருப்பார், போங்க என்றால் போய்விடுவார்..!
17 ஒட்டகங்களையும் மூத்தவனுக்கு இரண்டில் ஒரு பங்கும் அடுத்தவனுக்கு மூன்றில் ஒரு பங்கும் இளையவனுக்கு ஒன்பதில் ஒரு பங்குமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே;
எங்கேயோ எப்போதோ கேட்ட கதைதான்....
வந்தவர் தாம் ஏறிவந்த ஒட்டகத்தையும் மற்ற ஒட்டகங்களோடு நிறுத்தினார். இப்போது 18 ஒட்டகங்கள்.
அதில் மூத்தவனுக்கு பாதி அதாவது இரண்டில் ஒரு பங்கு = 9
அடுத்தவனுக்கு மூன்றில் ஒரு பங்கு = 6
இளையவனுக்கு ஒன்பதில் ஒரு பங்கு = 2
மொத்தம் பங்கு வைக்கப்பட்டவை 9+6+2 = 17
மீதமிருந்த தன் சொந்த ஒட்டகத்தில் வந்தவர் ஏறி ஜோராக சென்றார்.
இன்று காலை (19.09.2011) 7 மணிக்கு தமிழன் டிவியில் சத்திய வசனம் நிகழ்ச்சியில் முகத்தை விழித்தேன்; நல்ல முதிர்ந்த அனுபவமும் வயதும் நிரம்பிய ஐயா எடிசன் அவர்களுடைய செய்தியானது மெய்யாகவே பயனுள்ளதாக இருந்தது; நேற்று மதியம் (மேசியாவின்) எதிரிகளுடனான நேரடி மோதல் காரணமாக மிகவும் சோர்ந்துபோயிருந்த எனக்கு இந்த செய்தியானது அதிக உற்சாகத்தைத் தந்தது;அதன் விவரத்தை சுருக்கமாக இங்கே பகிர்ந்துகொள்ளுகிறேன்; இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கக்கூடிய நேயர்களும் கருத்து கூறலாம்.
இன்றைக்கு பலரும் தங்கள் பிரச்சினைகளில் சமாதான பிரபுவான இயேசுவின் உதவியை நாடுகிறதில்லை;கணவன் மனைவியிடையிலான பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் ஈகோ எனப்படும் விட்டுக்கொடுக்காத தன்மையே காரணம்;ஈகோ (EGO) எனும் வார்த்தையிலுள்ள E-G-O ஆகிய எழுத்துகளுக்கு " Edging- GOD- Out " ஆகிய மூன்று வார்த்தையைச் சொல்லலாம்; அதாவது பிரச்சினைகளின் போது ஆண்டவருக்கு இடம் தராமல் அவரைத் தள்ளிவிடுவது;சமாதானக் காரணரான அவரே இல்லாவிட்டால் சமாதானம் எப்படி வரும்?
இப்படியே வயதான தகப்பன் ஒருவர் தான் மரிக்கும் தருவாயில் த்ன்னிடம் இருந்த ஒரே சொத்தான 17 ஒட்டகங்களைத் தனது மூன்று மகன்களும் சண்டை சச்சரவு இல்லாமல் பிரித்து எடுத்துக்கொள்ளும்படியாகவும் சமாதானத்துடன் வாழும்படியும் புத்திமதி கூறிவிட்டு நிம்மதியாக கண்ணை மூடிவிட்டார்;அவர் சொன்னது என்னவென்றால் அந்த 17 ஒட்டகங்களையும் மூத்தவனுக்கு இரண்டில் ஒரு பங்கும் அடுத்தவனுக்கு மூன்றில் ஒரு பங்கும் இளையவனுக்கு ஒன்பதில் ஒரு பங்குமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே;17 ஒட்டகங்களை சமமாகப் பிரிப்பதே சிரமமெனில் இந்த சிக்கலான பங்கை எப்படி நிறைவேற்றி தகப்பனின் ஆத்துமாவை சாந்தியடையவைப்பது,என்று சகோதரர்கள் மிகவும் குழம்பிப்போனார்கள்;இந்த சச்சரவை தீர்த்துவைக்கச் சொல்லி ஊரிலிருந்த பெரியவர் ஒருவரின் உதவியை நாடினார்கள்;இதுபோன்ற பல பிரச்சினைகளைத் தீர்த்துவைத்த அனுபவமுடைய அவரும் மிக எளிமையாக தீர்வைச் சொல்லி சகோதரர்களை நிம்மதியடையச் செய்தார்.
செய்தியின் முடிவில் இந்த வாரம் முழுவதும் நான் தியானித்துக்கொண்டிருந்த பிலிப்பியர்.4:8 ஐக் கூறி அழகாகவும் சுருக்கமாகவும் ஜெபித்து முடித்தார். காணிக்கையைக் குறித்தோ ஊழியத்தைக் குறித்தோ எந்த பெருமையுமில்லாமல் செய்தி அளித்தவரும் பிரபலமானவராக பந்தாவாக இல்லாமல் எளிமையாக இருந்து ஆனால் உள்ளத்தைத் தொடும் ஒரு செய்தியைக் கொடுத்தது தனிச்சிறப்பு.