Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: (மேசியாவின்) எதிரிகளுக்காக ஒரு விண்ணப்பம்..!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: (மேசியாவின்) எதிரிகளுக்காக ஒரு விண்ணப்பம்..!
Permalink  
 


பெரேயன்ஸ்: //இவர் தான் அவர், அவர் தான் இவர் என்கிறீர்களா, பிதா வேறு குமாரன் வேறு என்கிறீர்களா!!?? இதை மட்டும் தெளிவாக புரியும்படி எந்த விதமான குழப்பமும் இல்லாமல் எழுதுங்களேன்!!//

 

வேற வேற தான். வளையல் வேற. கம்மல் வேறதான். இரண்டும் தங்கம்தான்.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
(மேசியாவின்) எதிரிகளுக்காக ஒரு விண்ணப்பம்..!
Permalink  
 


பெரேயன்ஸ்://நாங்களும் இதை தான் சொல்லுகிறோம்!! கிறிஸ்து ஒருவர் தான் தேவனின் தற்சொரூபம்!! வேறு யாருமே கிடையாது!! //

 

???!!! அல்வா கிண்டுறீங்க அல்லது ஜிலேபி சுத்துறீங்க. நீங்க என்னதான் சொல்றீங்க என்று புரிந்து கொள்வதற்கு ஒரு தனி முளை வேண்டும் போல.

 தற்சொரூபம் என்றால் என்ன அர்த்தம்?

 

//இது உருவ ஒற்றுமை சமாச்சாரம் கிடையாது,//

 

கிடையாதுதான்.

 

//ஆதாமின் விலா எழும்பிலிருந்து வந்த ஏவாள் உருவ ஒற்றுமையில் ஆதாமை போல் இருந்தாளா!!?? என்ன கூத்து பண்ணுரீங்க‌!!??//

 

இல்லையா? ஆதாம் போல் இரண்டு கண்ணு, ஒரு மூக்கு எல்லாம் இருந்தது. ஆதாம் போல் பிள்ளைகளும் பிறந்தது. அப்ப ஆதாம் போன்ற மனிதப்பிறவிதானே ஏவாள்? இனம் இனத்தோடு சேரும். தன் இனத்தைப் பிறப்பிக்கும்.

 அது போல் இயேசு கிறிஸ்து பிதாவின் தன்மையின் மனித வடிவம். எனவே அவரும் பிதாவைப் போல ஒரு கடவுள்தான்.அதனால்தான் என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று சொன்னார். வேறு யாரும் இப்படி சொன்னால் தேவ தூஷணமாகி விடும்.

 // அது போலவே பிதாவின் வார்த்தை இயேசுவின் உருவம் என்று பிதற்றுகிறீர்கள்!! வார்த்தை என்பது தமிழில் இருந்தாலும் லோகோஸ் என்கிற வார்த்தையை மொழிப்பெயர்த்து வந்ததாக்கும்!! இந்த லோகோஸ் என்றால் ஏதோ ஒருவர் பேசும் வார்த்தை கிடையாது, மாறாக ஒருவர் பேசுவதை எடுத்து வந்து சொல்லும் ஒரு செயல்!!//

 ????? Grrrrrr........ படத்தைப் பார்த்து,  பார்த்துப் பேசுங்க! இல்லன்னா, சிங்கம் வந்து கடிச்சிடும்!

 

lion_roar.jpg

 



-- Edited by golda on Sunday 25th of September 2011 04:33:12 PM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: (மேசியாவின்) எதிரிகளுக்காக ஒரு விண்ணப்பம்..!
Permalink  
 


சோல்:

//எல்லாம் "சரி நானே பிதா" என்று ஏன் சொல்லவில்லை?//

 

எனென்றால் அவர் பிதாவின் காணக் கூடிய 3 D உருவம். ஆனால் பிதா இல்லை.

 

//இவன பாத்தா இவங்கப்பன பாக்க வேண்டாம் அவ்வளவு ஒற்றுமை என்று நிறைய பேர் சொல்லியிருக்காங்க‌..//

ஆமாம். இவர் அவரோட அச்சு அசலான படம். இவர் மட்டும்தான் அப்படி. வேறு யாரும் இப்படிப்பட்ட உருவ ஒற்றுமையுடம் இருந்ததில்லை. இருக்கவும் முடியாது.

 ஏவாள் ஆதாமின் விலா எலும்பிலிருந்து வந்ததால் ஆதாமைப் போல மனுஷியானாள். அதுபோல் பிதாவின் வார்த்தைதான் இயேசுவாகிய உருவம் என்பதால், இயேசு பிதாவைப் போன்ற ஒரு கடவுள்தான்.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Amen to that prayer!

What they need is a real personal one to one encounter with God!

என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். இப்படி எந்த மனிதனாவது, தூதனாவது சொல்ல முடியுமா? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறார். இப்படி எந்த மனிதனாவது, தூதனாவது சொல்ல முடியுமா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
(மேசியாவின்) எதிரிகளுக்காக ஒரு விண்ணப்பம்..!
Permalink  
 


இயேசுவே நீர் தொழத்தக்கவர் அல்ல என்றும் நீர் பிரதான தூதனாகிய மிகாவேல் மாத்திரமே என்றும் கூறி அன்றைக்கு உம்மை எதிர்த்து நின்ற அதே எதிரிகள் இன்றைக்கு எங்கும் பரவி அப்பாவிகளை வஞ்சிக்கிறார்கள், ஐயா...நீர் ஏதும் செய்யமாட்டீரா..?

ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று உம்மைப் பார்த்து கேட்ட பவுலுடன் பேசினீரே இவர்களுடன் பேசமாட்டீரா..?

உம்மை நோக்கி கூப்பிட்டால் பிதா கேட்கமாட்டாரா,நீரும் பிதாவும் வெவ்வேறானவர்களா, நீர் அனுப்பிய தேற்றரவாளனாகிய பரிசுத்தாவியானவர் வெறும் காற்று போன்றவரா..?

சொல்லும் ஐயா, சொல்லும், உம்முடைய பிள்ளைகளுடன் பேசும், எமது குற்றங்குறைகளை தயவாக மன்னித்து எங்களுக்கு நியாயஞ்செய்ய இரங்கும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard