நன்மைக்கு நன்மை செய்வது மனிதனின் குணம்; தீமைக்கு தீமை செய்வது மிருக குணம்; நன்மைக்கும் தீமையே செய்வது பிசாசின் குணம்;ஆனால் தீமைக்கும் நன்மையே செய்வது தெய்வீக குணம்..!
மனிதத் தன்மையும் தெய்வத்தன்மையும் சேர்ந்தால் இவ்வுலகம் சுவர்க்கமாகும்; தெய்வத்தன்மையில்லா உலகம் நரகமாகும்;காரணம் தெய்வத்தின் தொடர்பை இழக்கும் மனிதன் மிருகம் மற்றும் பிசாசினால் ஆளப்பட்டு உலகை நரகமாக்குகிறான்;
கல்வாரி மரத்தில் ஏழு மலர்கள் பூத்தனவாம்; 1. மன்னிப்பு 2. இரட்சிப்பு 3. அரவணைப்பு 4. தத்தளிப்பு 5. தவிப்பு 6. அர்ப்பணிப்பு 7. ஒப்புவிப்பு
"இந்த பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்து............."