ஆலோசனையின் காரணம் : சபை விட்டு வெளியேறுவது என்றால் நாம் மட்டும் தப்பிதுகொள்ள பார்க்கிறோம் என்று அர்த்தம். இந்த உலகில் கர்த்தர் நம்மை எங்கு வைகிறறோ அங்கு நாம் அவரை விசுவசித்து சாட்சியாக நின்று ஒளி விசவேண்டும். சரியாய் சொல்லிவிட்டேன் என்று நினைகிறேன். என்ன சரிதானே சகோதரர்களே, சகோதரிகளே.
-- Edited by Jenefa on Sunday 11th of September 2011 08:25:42 PM
இந்தக் கட்டுரையில் வீசும் கற்பூர வாசனையைப் புரிந்து கொள்ளாமல் போனதென்ன? உங்கள் சிறு மதியைக் கண்டு சீற்றம் அடைகிறேன்.
ஆவிக்குரிய ஆகாரம் கிடைக்கவில்லை என்றால், கிறிஸ்து இருப்பதாகக் கருதி நீங்கள் அடுத்த சபையை நோக்கிப் பறந்து செல்வது நல்லதுதான். இருக்கின்ற சபையை ஆவிக்குரிய சபையாக மாற்ற நீங்கள் ஜெபிக்க வேண்டாம். ஜெபித்தாலும் அது கேட்கப்படாது. ஏனென்றால் நீங்கள் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள மற்றக் கருத்துகளைப் பார்க்க மறுத்துவிட்டீர்கள். எனவே, நீங்கள் எந்த சபையை நோக்கிப் பறந்தாலும், அந்த சபையில் ஆவி இல்லை, பரிசுத்தம் இல்லை, கிறிஸ்து இல்லை என்று கூறி, கூடு விட்டு கூடு பாய்வது போல பறந்து கொண்டே இருப்பீர்கள்.
அதற்காக தேவன் கவலைப்பட மாட்டார். ஆவியில்லாமல் எந்த சபையும் அழிந்து போனதாக சரித்திரம் கிடையாது. ஏனென்றால், நீங்கள் புறப்பட்டுப் போனவுடனேயே, ஆவிக்குரிய எழுப்புதல் கொண்டுவரக்கூடிய வேறு ஆத்துமாவை தேவன் அங்கே கொண்டு வந்து நிரப்பி விட்டார். ஆவியில் எளிமை உள்ள அவர்களோ, அந்த ஆலயத்திற்காக ஊக்கமாக ஜெபிப்பதோடு வளர்ச்சியை நோக்கி குருவானவரோடு ஒத்துழைக்கிறார்கள். ஆலயத்தில் இயங்கும் சண்டே ஸ்கூல், வாலிபர் சங்கம், தாய்மார் சங்கம், தகப்பனார் சங்கம் என்று சிறு சிறு குழுக்களுக்குத் தலைமை தாங்கி தேவனின் வார்த்தைகளைப் போதிக்கிறார்கள். ‘ஆவிக்குரிய ஆகாராம் வேண்டும்’ என்பதை மட்டும் அவர்கள் நோக்கமாகக் கொள்ளவில்லை. மாறாக, ‘நான் பெற்ற ஆவிக்குரிய ஆகாரத்தைப் பிறரோடு பகிர்ந்து கொள்வேன்’ என்ற நிலையில் அவர்கள் வளர்ச்சியடைந்து வருகிறார்கள்.
ஆற்றின் நீரோட்டத்தில் உருண்டு கொண்டே இருக்கின்ற கல் பாசியைச் சேகரிக்க முடியாது. அதே போல், சபை விட்டுச் சபை பாய்ந்து செல்கிற ஆத்துமாக்களும் ஆவிக்குரிய ஆகாரத்தைத் தங்களுக்காகவும் ஆதாயப்படுத்திக் கொள்ள முடியாது.... பிறருக்காகவும் ஆதாயப்படுத்திக் கொளள முடியாது.
‘குருவானவர் மேய்ப்பர் - தாங்கள் மந்தைகள்’ என்றே கூடு பாய்கிற ஆத்துமாக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ‘தாங்களும் குருவானவருக்காக மற்ற மந்தைகளுக்கு மேய்ப்பராகலாம்’ என்பது ஆவியில் எளிமையுள்ளவர்களின் கருத்து. அது உண்மையும் கூட.
பதினோரு கருத்துகள் சரியாக இருக்கின்றன என்று கூடு பாய்கிற ஆத்துமாக்களுக்குப் புரியாது. ஒரே ஒரு தவறான கருத்து மட்டும் அவர்கள் கண்களுக்குக் காட்டு மரம் போல் தெரியும். அதுவும் நியுஸ் லெட்டரில் இடம் பெற்றிருக்கும் 12 கருத்துகளும் புதை நிலையில் (implicit) கிறிஸ்துவைதான் மையப்படுத்தியிருக்கின்றன என்பதைப் பலமுறை வாசித்தால் புரியும். சூரியன் என்னதான் வெளிச்சமாகப் பிரகாசித்தாலும் பிறவிக் குருடர்களுக்கு உலகம் இருளாகதான் இருக்கும். அதுபோல், ஆன்மீக வெளிச்சத்தைக் காணமுடியாத நமது ஆவிக்குரிய ‘ரெட்டினா’ காலம் முழுவதும் வெளிச்சம் எங்கே இருக்கிறது என்று தேடிக் கொண்டுதான் இருக்கும்.
Chillsam:
நண்பர் ராவங்க் அவர்கள் ஆசிரியர் என்பதால் அவருக்கு ஏற்புடையவண்ணமாக ஒரு காரியத்தைச் சொல்லுகிறேன்...
எனது மாணவப் பருவத்தில் எனது ஆசிரியர்களிடையே நிலவிய ஒருவித உட்பூசலையும் பனிப்போரையும் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்; ஆனால் அவர்கள் நேரில் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக்கொள்ளுவார்கள்; உதடு சிரிக்கும்,ஆனால் உள்ளமோ...? ஆண்டவரே அறிவார்..!
நண்பர் ராவங்க் அவர்கள் அப்படிப்பட்ட ஆசிரியராக இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்;சரி,நான் ஏன் இதனைக் குறிப்பிடுகிறேன், இங்கே ஆத்மிய உணவு சரியில்லை என்ற காரணத்துக்காக ஒரு விசுவாசி ஸ்தல சபையைவிட்டு வெளியேறலாம் என்று கூறப்படும் கருத்தையொட்டியே இதனை யோசித்தேன்; அதாவது ஆசிரியர்களுக்கிடையே இப்படி பனிப்போருக்கு முக்கியமான காரணமாக மாணவர்களே இருப்பார்கள்; எப்படியெனில் ஒரு ஆசிரியரைக் குறித்து மற்றொரு ஆசிரியரிடம் கோள் சொல்லுவதே மாணவச் செல்வங்கள் தான்; அதில் அவர்களுக்கு ஒரு தனி சுகம்..! போட்டு வாங்கும் ஆசிரியர்களும் உண்டு, போட்டுத் தாக்கும் ஆசிரியர்களும் உண்டு; ஆசிரியர்களிடையே நிலவிய போட்டிக்கும் பொறாமைக்கும் மற்றொரு காரணம் அவர்கள் கற்பிக்கும் முறையினால் வேறுபடுவதே; இதனால் யாரிடம் அதிகமாக ட்யூஷன் எனப்படும் சிறப்பு வகுப்புக்கு சேருகிறார்களோ அவர் மீது ட்யூஷன் கிடைக்காத ஏழை ஆசிரியர் மனத் தாங்கல் கொள்ளுவார்; உண்மையில் அந்த ஆசிரியர் நன்றாக சொல்லிக்கொடுப்பவராக இருப்பார் ஆனால் மாணவனை ஈர்க்கும் சக்தி திறமை குறைந்தவரிடமே காணப்படும்; அதேபோலவே தற்கால சபைகளிலும் நடைபெறுகிறது; எந்த குருவானவரும் அல்லது எந்தவொரு போதகரும் ஒன்றிலும் குறைவுபட்டவரல்ல; உண்மையில் சிலருடைய தனித்திற்மைகளே கவர்ச்சிக்கப்படக்காரணமாக இருக்கிறது; வேத ஞானத்திலோ ஆத்துமாவுக்கு உணவு பரிமாறுவதிலோ திறமை வாய்ந்தவரிடம் சேரும் கூட்டம் குறைவு என்பதே உண்மையாகும். பாடும் திறனாலோ நகைச்சுவையுணர்வு போன்ற தனித் திறமைகளாலோ காத்தரால் அல்ல -மக்களாலேயே ஒருவர் புகழ்பெற்று விளங்குகிறார்.
நண்பர் ராவங்க், நீங்கள் எவ்வளவு தான் கோபக்காரராக இருந்தாலும் உங்கள் நண்பர்களை கழுதையுடன் ஒப்பிடுவது கொஞ்சம் அதிகம்தானே, நல்லவேளை நான் தப்பித்தேன், நீங்கள் கழுதை என்று என்னை மறைமுகமாகத் தாக்குவதாக நான் நினைத்திருந்தால் நான் கழுதையல்ல,கரடி என்று காட்டியிருப்பேன், நல்லவேளை தப்பித்தீர்கள் ஐயா..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
உங்கள் சபையைவிட்டு வேறுசபைக்கு மாற ஆசைபடாதிருங்கள். ஒருவேளை உங்கள் சபையில் சரியான ஆத்தும ஆகாரம் இல்லாமல் இருக்குமானால் ஆராதனை முடிந்த பிற்கு ஆகாரம் கிடைக்கும் இடத்திற்குச் செல்வதில் தவறில்லை --
pgolda Wrote on 10-09-2011 21:51:38:
இது தவறான ஆலோசனை. நம் வாழ்க்கை இப்படி சபையை மையப்படுத்தி அல்ல, கிறிஸ்துவை மையப்படுத்தியே இருக்க வேண்டும்!!
arputham Wrote on 11-09-2011 01:17:12:
சகோ.கோல்டா சரியாகச் சொன்னீர்கள். ஒரு சபையில் ஆத்தும ஆகாரம் தொடர்ந்து கிடைக்க வில்லை என்றால் அந்தச் சபையில் தேவனே இல்லை என்றுதானே பொருள். நல்ல கட்டுரையில் ஒரு தவறான கருத்து.
Chillsam:
ஐக்கியத்துக்கு சபையைச் சார்ந்துகொள்ளுவோம்;ஆகாரத்துக்கு கிறிஸ்துவைச் சார்ந்துகொள்ளுவோம்; நமக்குள்ளே சமரசமாக போய்விடுவோம்; எல்லாரும் ஒரே இடத்துக்கு தானே போகப்போகிறோம்..!?
இது கட்டுரைப் பகுதியாக இருக்கிறது; ஆனால் விவாதத்துக்குரிய பின்னூட்டங்களே இடப்படுகிறது; எனவே சுருக்கமாக எனது கருத்தை முன்வைக்கிறேன்.
சபையின் முதலாவது நோக்கம் ஐக்கியமே என்றும் அங்கே நடைபெறவேண்டியது தொழுகையே என்று நினைக்கிறேன்; ஆத்மிய ஆகாரத்துக்கு உதவும் பல்வேறு வாய்ப்புகள் இன்றைக்கு வந்துவிட்டது; ஆனால் சபையென்பது அன்றும் இன்றும் சரி, தொழுகை ஸதலமாகும்; இதனை தற்காலத்தில் நம்முடனிருக்கும் இந்து மற்றும் ஏனைய மதங்களிலிருந்து அறியலாம்; ஆதியிலும் அவ்வாறே யூத ஜெப ஆலயத்துக்கு தொழுதுகொள்ளுவதற்காகவே சென்றனர்; அன்றைய யூத ஜெப ஆலயமும் சரி, தற்காலத்தில் முகம்மதியர்கள் வழிபடும் மசூதிகளும் சரி பொதுவான அமைப்பாகவே இருந்து வந்துள்ளது; ஆனால் கிறித்தவர்கள் மாத்திரமே தத்தமது வட்டார சபைக்கு தனித்தனி நாமகரணங்களைச் சூட்டி பிரித்து பார்க்கிறார்கள்; ஆனால் ஆறுதலான விஷயம் என்னவென்றால் மெயின் லைன் சர்ச் எனப்படும் கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த சபையாரின் தொழுகை ஸ்தலங்கள் அனைவருக்கும் பொதுவானதாகவும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வந்து செல்ல ஏதுவாகவும் இருக்கிறது; இதுபோன்ற சபை அமைப்புகளையே கிறிஸ்தவர்களாகிய நாம் ஊக்குவிக்கவேண்டும்; சபையில் முறைகேடுகள் என்று பார்ப்போமானால் அந்த காலத்திலேயே ஏலி ஆசாரியனாக இருந்தபோது முறைகேடுகள் நடந்தது; ஆனாலும் தம்முடைய சன்னிதானத்துக்கு ஆவலோடு வரும் அப்பாவி மக்களை ஆசீர்வதிக்க அங்கே சர்வ வல்ல தேவன் இருந்தார்; ஆசாரியனோ தண்டிக்கப்பட்டார்;
அவ்வாறு ஆத்மிய ஆகாரம் தருவோராக ஊடகங்களில் தோற்றமளித்து இவர்களால் பயன்பெறும் சபை மக்களும் வட்டார சபைகளும் தங்களுக்கு தசமபாகம் அனுப்பவேண்டும் என்கிறார்களே, அது சரியா..? இது ஏஞ்சல் டிவியில் அதிகம் நடைபெறுகிறது; அதாவது சாதுஜி ஒரு கடிதத்தை எடுத்து வாசிப்பார்; அது ஒரு பாஸ்டர் எழுதியதாக இருக்கும்; அதில் இவ்வாறு இருக்கும், "ஐயா,உங்கள் செய்திகளின் மூலம் நான் அதிகம் பயனடைகிறேன்,உங்களை என்னுடைய ஆவிக்குரிய தகப்பனாக நினைத்து என்னுடைய சபையில் எடுக்கப்படும் காணிக்கையிலிருந்து தசமபாகம் எடுத்து ஒவ்வொரு மாதமும் அனுப்ப தீர்மானித்துள்ளோம், எனக்காகவும் என்னுடைய ஊழியங்களுக்காகவும் ஜெபியுங்கள்,ஐயா " என்பதாக வாசிக்கப்படும் கடிதத்தின் நோக்கம் என்ன தாங்களே ஆத்தும ஆகாரத்தை பரிமாறுவதில் சிறந்தவர்கள்,எனவே ஒவ்வொரு சபையும் தங்கள் வருமானத்திலிருந்து தசமபாகத்தை எங்களுக்குத் தரவேண்டும்,என்கிறார்கள்;சரியான ஆத்தும ஆகாரம் தர இயலாத சபையின் மக்கள் தரும் காணிக்கை மட்டும் இனிக்குமா,என்ன..? வேண்டாம், விட்டுருங்க..!
எனவே சபையைக் குறித்து ஆவியில்லாத சபை என்றும் பாவிகள் நிறைந்த சபை என்றும் குற்றஞ்சொல்லாமல் தேவனை- தேவனுக்காக மட்டுமே தொழுதுகொள்ளுவதற்காக மட்டுமே ஆலயத்துக்குச் செல்லுவோமானால் நம்முடைய மார்க்கம் இன்னும் செழிக்கும்.நம்மை எப்படி போஷிக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியாதா..? சபையை உடைப்பது எளிது, கட்டுவது கடினம் என்பதை நினைவில் கொண்டு யாராக இருந்தாலும் கருத்துகூறவும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சபை என்பது அழைக்கப்பட்டவர்களின் கூடுகை. அவ்வளவுதான், அது ஒரு அமைப்பாக இக்காலத்தில் மாறி விட்டது. அந்த அமைப்பு, அமைப்பு சார்ந்த விஷயங்களைத்தான் இக்காலத்தில் சபை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவின் சரீரம்தான் சபை என்பதை மறந்து விட்டோம்.
நாம் அடிக்கடி சபையில்(?) கேட்கும் காரியங்கள்:
சபைக்கு தவறாமல் வரவேண்டும்
சபைக்கு உண்மையாய் இருக்க வேண்டும்
சபைக்கு, சபைக்குத்தான் காணிக்கை, தசம பாகம் கொடுக்க வேண்டும்
வேறு சபைக்குப் போகக் கூடாது
வேற பாஸ்டரை வீட்டுக்கு வர விடக் கூடாது
பாஸ்டருக்கு/சபைக்கு உண்மையாய் இருக்க வேண்டும்.
பாஸ்டருடன் ஐக்கியமாக இருக்க வேண்டும்
சபையின் தரிசனம்/பாஸ்டரின் தரிசனம் தான் அதி முக்கியம்
சபை வளர்ச்சிக்குப் பாடு பட வேண்டும்
சபைக்கு ஆத்துமாக்களைக் கூட்டிச் சேர்க்க வேண்டும்
இப்படி சபையை/பாஸ்டரை மையப்படுத்தியே அதிகம் பேசப்படுகிறது, பல சபைகளில். இது சரியல்ல என்பது என் கருத்த. எல்லாம் இயேசு கிறிஸ்துவை மையப்படுத்தியே பேசப் பட வேண்டும், அவரை மையப்படுத்தித்தான் காரியங்கள் செய்யப்பட வேண்டும். அவர் சித்தம்தான் செய்ய நினைக்க வேண்டும். இப்படி தலையை விட்டு விட்டு, சரீரத்தை மகிமைப்படுத்தும் காரியங்கள் ஆண்டவர் நாசிக்கு நாற்றமாயிருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஆண்டவர் கிருபையாய் இருப்பதால் பிழைத்திருக்கிறோம். இன்னும் எத்தனை காலம் இப்படிப் போகுமோ?