அருமையானதொரு எளிமையான விளக்கத்துக்காக நன்றிகள்,நண்பரே; தாங்கள் இதனை தமிழில் எழுதி பதிக்கலாமே, நமது தளத்தின் வலது மூலையில் உள்ள தமிழ் பலகை என்பதை தட்டினால் அதன்மூலம் தாங்கள் எளிமையாக தமிழில் எழுதலாம்.
First we should understand Books are not like video. The incidents may occur one by one or simultaneously. But in writing incidents can be written one by one. We can't show simultaneously. In the first chapter it is a brief only. In the second chapter the creation is explained. Even slow reader can understand. But .... What to say.
One more example we can see in Bible about Cain.
Genesis Chapter 4: 17. Cain lay with his wife. She became pregnant. And she had a baby, whom she called Enoch.
Here you could ask ‘who is the wife of Cain?’ The first answer is suitable for here also. Moreover God say you will die. That’s all. When he will die? At What age? See the age of Adam. Compare with our age, maximum 100 years only. So he might get married after a long time. It means after people spread over the land. Up to that might be roaming in somewhere.
After the death of Abel, Eve got many children. That people spread over the land.
Again I want to say that “In books we can tell the incidents one by one though it may occur simultaneously.
பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் மற்றும் இரண்டாம் அதிகாரங்களில் உலகம் மற்றும் மனுஷர்களின் படைப்பு பற்றிய செய்திகள் வருகிறது. ஆனால் இவ்விரண்டு அதிகாரங்களிலும் மனுஷன் மற்றும் உலகம் படைக்கப்பட்ட வசனங்களை ஆராய்ந்து பார்த்தால், இரண்டுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதை அறியமுடியும்:
1. முதல் அதிகாரம் : இங்கு சிருஷ்டித்தவர் தேவன் (எலோஹீம்)
இரண்டாம் அதிகாரம்: இங்கு உருவாக்கியவர் தேவனாகிய கர்த்தர் (யாவே தேவன்மனிதனை மண்ணினால் உருவாக்கினார்
7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலேஉருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
2. முதல் அதிகாரம் : சிருஷ்டிக்கும்போதே ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்
27. ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். இரண்டாம் அதிகாரம்: கர்த்தர் ஆதாமை உருவாக்கி அவன் தனியாய் இருப்பது நல்லதல்ல என்று கருதி அவன் விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கினார்
18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்
22. தேவனாகிய கர்த்தர்தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
3. முதல் அதிகாரம்: மனுஷர்களை ஆசீர்வதித்து பல்கி பெருகி பூமியை நிரப்ப கட்டளையிட்டார்
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
இரண்டாம் அதிகாரம்:நன்மை தீமை அறியும் கனியே விலக்கிவிட்டார்! ( பிறகு எப்படி பலுகி பெருக முடியும்? எனவே இங்கு ஆசீர்வதிக்கவில்லை மாறாக எச்சரிக்கை மட்டுமே கிடைத்தது)
16.தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
4. முதல் அதிகாரம் :தேவன் வார்த்தையால் சொன்ன உடன் புல் பூண்டு முளைத்துவிட்டது
12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது
இரண்டாம் அதிகாரம் இங்கு படைத்தபோது மழைஇல்லாத காரணத்தால் புல்பூண்டு முளைத்திருக்க வில்லை
5.நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை;
5. முதல் அதிகாரம்: மிருக ஜீவன்களை வார்த்தையால் உண்டாக்கினார்
24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
இரண்டாம் அதிகாரம்:கர்த்தர் மண்ணினால் செய்து தனது கிரியையினால் உண்டாக்கினார்:
வேதபுத்தகத்தில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் காரணமின்றி குறிப்பிடப்பட வில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் படைத்தல் பற்றிய இந்த செய்திகள் இரண்டு வெவ்வேறு நிலைகளையே குறிப்பிடுகின்றன என்று நான் கருதுகிறேன் மேலும் தேவன் ஒரு தரம் மனிதனை சிருஷ்டித்து அவர்களை நோக்கி"பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்" என்று சொல்லி தனது எல்லா கிரியையும் முடித்து ஏழாம் நாளிலே ஒய்ந்து இருந்தார் என்று வேதம் சொல்லி முடித்த பிறகு இரண்டாம் அதிகாரத்தில் தேவனாகிய கர்த்தர் வந்து மண்ணினால் மனிதனை உருவாக்கினார் என்று புதியதாக படைப்பு ஆரம்பிக்கிறது
இதன் உண்மை நிலையை அறிந்தவர்கள் யாரேனும் இருந்தால் விளக்கலாம்.
தம்வார்த்தையினால்சிருஷ்டித்த சகலத்தையும் பார்த்து அதாவது மிருங்கங்கள் பறவைகள் புல் பூண்டுகள் வானம்பூமிமற்றும்ஆணும் பெண்ணுமான மனிதர்கள் இப்படி எல்லாவற்றையும் தம் வார்த்தையினால் சிருஷ்டித்த பிறகுதேவன் தம்முடைய சிருஷ்டிப்பை பார்த்து நன்றாய் இருந்தது என்று சொல்கின்றார்
ஆதியாகமம் :1 அதிகாரம்
31.அப்பொழுது தேவன்தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அதுமிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்
ஆதாமை மண்ணினால் உருவாக்கினார் சரி ஆதாமை படைத்த பின்பு ஏன் கர்த்தர் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல வேண்டும்
18. பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்
முதல் அதிகாரத்தில் ஆணும் பெண்ணுமாக படைத்தது நன்றாய் இருந்தது என்று சொன்ன தேவன்
இரண்டாம் அதிகாரத்தில் ஏவாளை உருவாக்கும் முன்பே கர்த்தர் மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லது அல்ல என்று சொல்கின்றார்
இதில் இருந்து தெரியவருகின்றது என்னவென்றால் முதல் அதிகாரத்தில் படைக்கபட்ட ஆணும் பென்னுமானவர்கள் வேறு
இரண்டாம் அதிகாரத்தில் கர்த்தரின் கிரியைகளால் உண்டாக்க பட்ட ஆதாம் என்பவன் வேறு
ஏதோ ஒரு திட்டம் ஆதாம் சிருஷ்ட்டிப்பில் இருந்து இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்
இன்னும் புரியவில்லை என்றால் ஆதியாகமம் முதல் அதிகாரத்தயும் இரண்டாம் அதிகாரத்தையும் 1 மணிநேரம் பொறுமையாக வாசித்துபாருங்கள் மனுஷர்கள் சிருஷ்டிப்பில் இருவேறு நிலைகள்தெரியவரும்.....
இறைவன் தளத்தின் சுந்தர் வி(வ)காரமான கொள்கையையுடையவர் என்பதை ஆரம்பம் முதலாக சொல்லிவருகிறோம்;அவருடைய கருத்துக்களால் கவரப்பட்ட இரு சிறுவர்களை துணைக்கு வைத்துக்கொண்டு எதையெதையோ எழுதி வருகிறார்;அத்தனையும் தமாஷ் இரகம்;நாம் அவரையும் எதிர்த்து எழுதி பெரிய ஆளாக்க விரும்பாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துவருகிறோம்;ஆனாலும் கிறித்தவத்தின் ஆதார சத்தியங்களிலேயே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான அமைப்பின் பின்னணியோ உத்தரவாதமோ தர இயலாத சிலர் இதுவே வேதம் போதிப்பது என்று பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமான கொள்கை விளக்கங்களை அறிவிப்பார்களானால் நம்மால் ச்சும்மா பார்த்துக்கொண்டிருக்கமுடியாது;ஒரு துளி விஷத்தினால் ஒரு குடம் பாலும் விஷமாகிப் போகுமே,என்பதால் இதோ தமிழ் கிறித்தவ வட்டாரத்தின் முன்பாக இதனைக் கொணருகிறேன்;இது இறைவன் தளத்தின் சுந்தருக்கு எதிரானது மட்டுமல்ல,இதுபோன்ற பல்வேறு கொள்கைக் குழப்பங்கள் ஆங்காங்கு இருக்கிறது,ஆனால் அவற்றைக் கண்டறியும் பொறுமை நமக்கு இல்லை என்பதே உண்மையாகும்;இதுபோன்ற துருபதேசங்கள் பல்வேறு வெளிநாட்டு பிரசங்கிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஆவியானவர் பெயரால் கடைவிரிக்கப்படுகிறது;கொள்வோர் கொள்ளட்டும்,செல்வோர் செல்லட்டும் என்பதே கள்ளப் போதகர்களின் துணிகரமான நிலையாகும்.
தமிழக அரசில் எம்ஜிஆர் ஆட்சி காலத்திலிருந்து ஒரு வழக்கம் உண்டு,சட்டசபையில் எடுக்கப்பட வேண்டிய சில முக்கிய முடிவுகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்க சிலரை ஆயத்தப்படுத்தி அவர்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை அல்லது கேள்வியை எழுப்பச்செய்வார்கள்;பிறகு அதன் அடிப்படையிலேயே ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் புதியதாக இயற்றப்பட்டது போன்ற தோற்றத்துடன் நிறைவேறும்;அதுபோலவே சுந்தர் சிந்தையைத் தூண்டுவது போன்ற பாவனையுடன் ஒரு சர்ச்சையை வேதத்திலிருந்து எழுப்பி வைக்கிறார்;பின்னர் அதன் அடியொற்றி அவரால் மாசுபடுத்தப்பட்ட இளம் விசுவாசி ஒருவர் எல்லாம் தெரிந்தவர் போல சத்தியத்துக்கு விரோதமாக எதையோ எழுதி வைக்கிறார்;இவர்கள் இருவருமே சென்னையில் ஏஜி போன்ற முன்னணி ஆவிக்குரிய சபையில் பங்கேற்போர்;ஆனால் பக்திவிருத்திக்காக இப்படியாக ஆராய்ச்சி செய்கிறார்களாம்.
மேற்கண்ட விவாதத்திலுள்ளவற்றில் விவகாரமான போதனை இன்னதென்று பகுத்தறிந்தவர்கள் இங்கே பகிர்ந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)