கன்னிப் பெண்களுக்கு ஏஞ்சல் டிவியின் முதலாளியான சாதுஜி விசேஷ அழைப்பு:
ஆண்டவருடைய வருகைக்கான சேனையை ஆயத்தப்படுத்த வேதத்திலுள்ள் பிரபல தீர்க்கர்கள் மீண்டும் வந்துபிறக்கப் போகிறார்களாம். எனவே கன்னிப்பெண்கள் (மரியாளைப் போல?) தங்கள் கர்ப்பப்பையை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டுமாம்.
முன்பு பெறப்பட்ட தகவல்:
அதே நேரத்தில் சாத்தானும் தூதர்களும் கூட மனிதவடிவில் வந்து இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யக்கூடும்.எனவே இளம்பெண்கள் விரைவில் பரிசுத்த ஆவியைப் பெற்று தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாம்.
பெரேயன்ஸின் காமெடி என்ற திரியில் பதிக்கப்பட்ட ஏஞ்சல் டிவி சாது குறித்த விமரிசனம் சகோதரர் சில்சாமின் வேண்டுகோளுக்கிணங்க இங்கே தனித்திரியாக....
Golda Wrote:
பெரேயன்ஸ்:
//ஏன், சாது எத்துனையோ முறை போயிட்டு வருகிறார், அட் லீஸ்ட் அவரிடமாவது உங்களுகு ஒரு மாளிகையை பரலோகத்தில் புக் செய்துவிட்டு வர சொல்லவேண்டியது தானே!!//
சாது சொன்னது:
அவர் ஒரு முறை ஊழியத்திற்காக அமெரிக்கா சென்று ஒரு வயதான தம்பதியினரின் வீட்டில் தங்கியிருந்தாராம். அவர்கள் வீட்டில் உள்ள தரைவிரிப்பு (carpet) கிழிந்திருந்தால், அதை மாற்றும்படி ,அவர்கள் மகன் 3000 டாலர் கொடுத்தாராம். அச்சமயத்தில் ஒரு ஆஃப்ரிக்க நாட்டில் உள்ள அனாதை ஆசிரமத்திற்கு ஒரு தேவையிருக்கிறது என்று செய்தி வந்ததால், இத் தம்பதியினர் அந்த பணம் முழுவதும் அங்கு அனுப்பிவிட்டு , கிழிந்த கார்ப்பெட்டுடன் இருந்தார்களாம்.
இவர் அவ்ர்களைக் குறித்து ஜெபித்த போது அவர்களுக்காக கட்டப்படும் மாளிகையை ஆண்டவர் காட்டினாராம். அது விலையேறப்பட்ட கற்களால் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததாம். அவர்கள் கொடுத்த இந்த 3000 டாலர் காணிக்கையும் ஒரு விலையேறப்பட்ட கல்லாக மாறி அந்த மாளிகையில் இருந்ததாம்.
golda wrote://இவர் அவ்ர்களைக் குறித்து ஜெபித்த போது அவர்களுக்காக கட்டப்படும் மாளிகையை ஆண்டவர் காட்டினாராம். அது விலையேறப்பட்ட கற்களால் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததாம். அவர்கள் கொடுத்த இந்த 3000 டாலர் காணிக்கையும் ஒரு விலையேறப்பட்ட கல்லாக மாறி அந்த மாளிகையில் இருந்ததாம்.
இதான் அது!//
இது சாதுவின் காமெடி...!!!
பரலோகத்தில் மழையாவது வெயிலாவது இல்லை! எனவே மழைக்காகவும் வெயிலுக்காகவும் இயற்கைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் மனிதன் அமைத்துள்ளதுபோன்ற வீடுகளோ மாளிகைகளோ தேவையில்லை. அங்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடுகள் என்றால் சற்று கற்பனை செய்துபாருங்களேன், தனிமைச்சிறைபோல அல்லவா இருக்கும்..!!! நம்மை ஒரு பெரிய மாளிகையில் தனிமையாக குடியிருக்கவைத்தால்.... சற்று சிந்தித்துப்பாருங்களேன்.! அங்குதான் கொள்வினையும் கொடுப்பினையும் இல்லை, பின் எதற்று மறைவிடம்..?? வாசஸ்தலம் என்பதை flat range-க்கு கற்பனை செய்வதால் வரும் காட்சிகள் தான் இவை..!!!
பெரியவர்கள் என நம்மப்படுகிறவர்களே இப்படி கூறுவதால்தான் கீழ்காணும் வஞ்சகங்களும் அரங்கேறுகின்றன..!!!
//அங்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடுகள் என்றால் சற்று கற்பனை செய்துபாருங்களேன், தனிமைச்சிறைபோல அல்லவா இருக்கும்..!!! நம்மை ஒரு பெரிய மாளிகையில் தனிமையாக குடியிருக்கவைத்தால்.... சற்று சிந்தித்துப்பாருங்களேன்.! //
வீடு தான், ஜெயில் இல்லை. வெளியே தாராளமா வரலாம். வீடு வேண்டாமென்றால் வெளியவே இருப்போம் சகோ பீட்டர் அவ்ர்களே! அங்கு சிந்தனை வேகத்தில் பயணம் செய்வோம் என்று சிலர் சொல்கிறார்கள்.
பரலோகம் எப்படி இருக்கும்? அங்கு என்ன இருக்கும்? நாம் என்ன வேலை செய்வோம்? என்பதெல்லாம் இப்ப நமக்கு முழுமையாக தெரியாமல்தான் இருக்கிறது. போய் பார்த்துக் கொள்வோம்!
அந்தப் பெண் நல்லா கதை சொல்ற மாதிரிதான் இருக்கிறது. ஆவிக்குரிய அனுபவங்கள் தனக்குப் பிரயோஜனமா இருக்க வெண்டும். கேட்பவர்களுக்கும் பிரயோஜனமா இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லை. இந்த பெண் சொல்வதில் எந்த ஆவிக்குரிய உணர்வுமே இல்லை! ஏதோ மெஷின் மாதிரி பேசுது!
அந்த பெண்ணின் கண்ணை மறைத்தால் அந்தப் பெண்ணின் அடையாளம் மறைந்து விடுமா? இது MGR படத்தில் மாறு வேடம் போடுவது போல் இருக்கிறது. சின்ன பருவும், சின்ன மீசையும் வைத்துக் கொள்வார். பெத்த அம்மாவிற்குக் கூட அடையாளம் தெரியாது!
ஏன் இப்படி கோட் சூட் போட்டுக் கொண்டு அந்த ஊழியர் பேசுகிறார்?? சாதாரண மனிதர்கள் போல் ஊழியர்கள் உடை அணிந்தால் ஆகாதா? அந்தப் பெண் சொல்லும் தரிசனங்கள் பற்றி அவர் சொல்லும் பல கருத்துக்கள் சரிதான்.