Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்த 'கட்டளை' யாருக்கு?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
இந்த 'கட்டளை' யாருக்கு?
Permalink  
 


சோல்:

[எதற்காக பலி செலுத்தினார்கள்? நாம் ஏன் பலி செலுத்த வேண்டியதில்லை? ஏன் மீண்டும் மீண்டும் பாவம் செய்வதே இல்லையா?]

கிறிஸ்துவின் பலி முழுமையானது. மிருக பலி குறைவுள்ளது. நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்து போகும்.கடவுளுக்கு எல்லாமே present tense தானாம். அதாவது இயேசுவின் இரத்தம் இப்பதான் சிந்தப்பட்டது மாதிரி. அல்லது சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் இப்பவும் ஜீவனோடு இருக்கிறது. அது எப்பவும் நமக்கு available என்று எடுத்துக் கொள்ளலாம். எனவே திரும்ப பாவம் செய்து மனந்திரும்பினால் இயேசுவின் இரத்தம் திரும்ப நம்மை சுத்திகரிக்கும்.

 ஆனால்,மிருக இரத்தம் அப்படியல்ல. ஒரு தடவை கொட்டியாச்சுன்னா, காணாமல் போய் விடும். அடுத்த பாவத்திற்கு அடுத்து ஒரு மிருகம் அடிக்கணும். மிருக இரத்தத்திற்கு ஜீவன் உண்டு, நித்திய ஜீவன் கிடையாது.

(என் விளக்கத்தைப் பார்த்து எனக்கே ஆச்சர்யமாயிருக்கு!!)

 

[கிறிஸ்து நமக்காக மட்டும் பலியானாரா? சர்வலோகத்தின் பாவத்துக்கும் பலியானாரா?]

நமக்கு என்றால் யார்?? நாம் சர்வலோகத்தின் பகுதிதானே?

--

ஒரு கேள்வி:

ஆதாம் பாவம் செய்தவுடன் உடனே பாவம் மனுக்குலத்திற்குள் பிரவேசித்தது. அது போல் ஏன் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தவுடன், அந்த நீதி அனைவர் மேலும் வரவில்லை? அதாவது, ஏன் அதன்பின் பிறந்த அனைவரும் மரிக்க வேண்டும்?? அதாவது ஏன் நீங்க சொல்லும் இரட்சிப்பு(மரணமின்மை, நித்திய ஜீவன்) உடனே பலிக்கவில்லை? எவ்வளவு பெரிய ஓட்டை இருக்குன்னு பாருங்க உங்க தியரியில்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[ சபை என்பது மக்கள் கூடுகை. அன்றும் இருந்தது. இன்றும் உண்டு. சபை என்றால் - assembly of called out people - என்றுதானே அர்த்தம்.//

மக்கள் கூடுகை என்றால் எல்லா மக்களும் சமமாக இருக்க வேண்டும், ஏனென்றால் எல்லாருமே தானே. பின்னர் எதற்கு மற்ற ஊழியங்கள்?]

எல்லோரும் சமம்தான். என்றாலும் சரீரத்தில் பல அவயவங்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு வேலை உண்டு என்பது போல் கர்த்தரின் சரீரமாம் சபையிலும் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் ஒரு பணி உண்டு. ஒரு தீர்க்கதரிசி கண் போல் தீர்க்கமாய் பார்த்து ஜனங்களை எச்சரிப்பான். ஒரு போதகன் வாய் போல் நன்றாக பேசுவான். சிலர் கால் போல் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து ஊழியம் செய்பவர்கள். சிலர் கை போல் பணிவிடை ஊழியம் செய்வார்கள். சிலர் வெள்ளை அணுக்கள் போல் , உடலைத் தாக்கும் கள்ள உபதேச வைரஸோடு போராடி அழிப்பார்கள்(சில்சாம் போல!). சபையில் பாடும் தாலந்து உள்ளோர் பாடினால்தான் நன்றாக இருக்கும். பிரசங்க வரம் உள்ளவர்கள் போதிக்கலாம். தீர்க்கத்ரிசன் வரம் உள்ளவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கலாம். இந்த ஒன் மேன் ஷோ/ ஒரு பாஸ்டர் மற்றும் அவர் குடும்பத்தினர் சபையை ஆளுகை செய்வது என்பது சரியான முறை கிடையாது என்பது என் கருத்து. தலைவர்கள் பணிவிடைக்காரராய் இருக்க வேண்டும் என்பதுதான் வேத நடைமுறை.

[மரத்தடியில் நடக்கலாம் என்றால் ஏன் சில மேய்ப்ப நாய்கள் மோகன் சீ லாசரஸ் போன்றவர்களை அழைத்து புதிய சபைக் கட்டிடங்களைத் திறக்கின்றன?]

நம்ம ஊர் வெயிலுக்கு மரத்தடியில் நடத்த முடியுமா? வீடு பலருக்கு வசதிப்படாது. கல்யாண மண்டபம் வாடகை கொடுத்து கட்டுப்படியாகாது.  எனவே தனி சொந்தக் கட்டிடம் இருப்பது நல்லதே! மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, ஆசீர்வாதம் பெற ஒரு பெரியவரை திறப்பு விழாவிற்கு அழைக்கிறோம். அவ்வளவே.

எதையும் பிரதிஷ்டை பண்ண வேண்டும் என்றால் தீர்க்கதரிசியைத்தான் அழைக்க வேண்டுமாம். அதுதான் வேத ஒழுங்கு என்று ஒரு தீர்க்கதரிசி சொல்லிக் கேட்டிருக்கிறேன்

[எல்லாருமே அழைக்கப்பட்டவர்கள் என்றால் எதற்காக மேய்ப்ப நாய்கள்? போதகப் பிசாசுகள்?]

நாய்கள் மந்தையின் பாதுகாப்பிற்கு!!

ஏன் பள்ளி சென்று படிக்கிறோம்? கற்றுக் கொள்ளத்தான். அது போல் தான் போதகத்தின் மூலம் கற்றுக் கொள்கிறோம். கற்ற பின் நாம் பிறருக்கு கற்றுக் கொடுக்கலாம்.

[நீங்கள் இதுவரை எத்தனை பேரை விடுதலை செய்திருக்கிறீர்கள்?]

None!

[//சபையாக கூடி வருவது நாம் கற்றுக் கொள்ள, கிறிஸ்துவுக்குள் வளர, உதவியாக இருக்கும். இரட்சிக்கப்படுகிறவர்களை ஆண்டவர் சபையில் சேர்க்கிறார். அப்படி புதிதாய் பிறந்த குழந்தைகள் வளர்ந்து, தேறி, சீஷர்களாய் மாறி, கிறிஸ்துவின் சேனையில் போர்சேவகர்களாய் பணி செய்ய வேண்டும். ஆனால்,விசுவாசிகளை சொல் பேச்சுக் கேட்கும் ஆவிக்குரிய குழந்தைகளாகவே வைத்திருக்கத்தான் பாஸ்டர்மார் விரும்புகிறார்கள்.//

முழுக்க முழுக்க முரண். எல்லாரையும் சீஷராக்கி, அதன் பின் தான் ஞானஸ்நானம் கொடுக்க கட்டளை. வளர்ந்து தேறி சீஷர்களாய் மாறி என்ப்து பொய்.]

??? ஞானஸ்நானம் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லையே! எல் கே ஜி, யூ கே ஜீ, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ... இப்படி படித்தால்தான் எந்த பாடமும் புரியும்!

[ஏன் இந்த பாஸ்டர்மார் அப்படி வைத்திருக்கிறார்கள]

அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்!!

ஒரு விழிப்புணர்வு உண்டாகிக் கொண்டு இருக்கிறது என்று நம்புகிறேன். விஜய்76 அந்த தீமில் தான் எழுதுகிறார்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul:

//நாமே ஆலயம் என்றால் ஏன் சரிச்சுக்குப் போறீங்க?//

ஆலயம் என்று அன்று ஒன்று இருந்தது. இப்ப இல்லை. நாமே ஆலயம்.

சபை என்பது மக்கள் கூடுகை. அன்றும் இருந்தது. இன்றும் உண்டு. சபை என்றால் - assembly of called  out people - என்றுதானே அர்த்தம்.

சபை கூடுகை எங்கு வேண்டுமானால் நடக்கலாம். வீட்டிலோ, மரத்தடியிலோ, ஆத்தங்கரையிலோ, கல்யாண மண்டபத்திலோ, இதற்கென்று கட்டப்பட்ட கட்டிடத்திலோ நடக்கலாம். துரதிர்ஷடவசமாக சபை கூடும் கட்டிடம் ’ஆலயம்’ என்று அழைக்கப்படுகிறது. சபை கூடுவது ’ஆலயம் செல்வது’  என்று சொல்லப்படுகிறது.

//அப்ப இப்ப ஊழியக்காரன், மேய்ப்பன், போதகன், மிஷனரி, அப்போஸ்தலன், என்றெல்லாம் சொல்லி தங்களை ஆசாரியராய் காண்பித்துக்கொண்டிருக்கும் ...... என்ன செய்யலாம்?//

அப்ப உள்ள ஊழிய அமைப்பு வேற. இப்ப உள்ள அமைப்பு வேற. எல்லா சீஷர்களும் உழியம் செய்யலாம் என்றாலும், சிலரை ஐவகை பணிக்காக ஆண்டவர் அழைக்கிறார். சிலருக்கு சில ஆவிக்குரிய வரங்களை , தாலந்துகளை கொடுக்கிறார். எல்லோரும் கூடி வருகையில் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்ய வரங்கள், தாலந்துகள் பிரயோஜனமாக இருக்கும்.

முதலாம் நூற்றாண்டில் திருச்சபையில் மூப்பர்கள் ஏற்படுத்தப்பட்டார்கள் தானே. சபை இயேசுவின் சரீரம் என்பதால், அவ்ருடைய கை கால் கண் வாயாய் நாம் சமூகத்திற்கு இருக்க வேண்டும். நம்மைப் பார்ப்பவர்கள் அவரைப் பார்க்க வேண்டும். அவர் இவ்வுலகில் இருக்கையில் நன்மை செய்பவராகவும், பிசாசின் பிடியில் அகப்பட்ட யாவரையும் விடுதலை செய்பவராகவும் இருந்தார். அப்படியே நாமும் செயல்பட வேண்டும்.

சபையாக கூடி வருவது நாம் கற்றுக் கொள்ள, கிறிஸ்துவுக்குள் வளர,  உதவியாக இருக்கும். இரட்சிக்கப்படுகிறவர்களை ஆண்டவர் சபையில் சேர்க்கிறார். அப்படி புதிதாய் பிறந்த குழந்தைகள் வளர்ந்து, தேறி, சீஷர்களாய் மாறி, கிறிஸ்துவின் சேனையில் போர்சேவகர்களாய் பணி செய்ய வேண்டும். ஆனால்,விசுவாசிகளை சொல் பேச்சுக் கேட்கும் ஆவிக்குரிய குழந்தைகளாகவே வைத்திருக்கத்தான் பாஸ்டர்மார் விரும்புகிறார்கள்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:
//ஆனா தசமபாகம் மட்டும் கண்டிப்பாக வேண்டும்!! அப்படி என்றால் வாங்குபவர்கள் லேவியர்களும், கொடுப்பவர்கள் 11 கோத்திரத்தாருமோ!!??//

இப்ப நாம் எல்லோரும் இராஜாக்களும் ஆசாரியர்களும் தான். எனவே அனைவரும் ஊழியம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.

தசமபாகம் கொடுப்பது தவறல்ல. கண்டிப்பாகக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்வது தவறு. திருடன் கத்தியைக் காட்டி மிரட்டுவது போல் சில(பல) ஊழியர்கள் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டத்தான் செய்கிறார்கள்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul:

//இந்த 'கட்டளை' யாருக்கு?

வேதத்தில் யாருக்கு என்ன சொல்லியிருக்கிறது என்பதை ஆராய்ந்தறியச் சொன்னால் கேலி பேசும் கூட்டம் கீழ்க்கண்ட 'கட்டளை'களைக் கைக்கொள்ளுமா? இல்லை அது வேறு யாருக்கோவா?

உபாகமம்14:24. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,

25. அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,

26. அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

27. லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.

(ஒன்றாகக் கூத்தடிக்கும் பட்சத்தில் மேய்ப்பனை மறந்துவிட்டாதீர்கள்)//

----

இப்ப ஆலயம் கிடையாது. நாமே ஆலயம்.
பலியாய் கிறிஸ்து வந்த பின் நாம் பலி செலுத்த வேண்டியதில்லை.
எனவே, ஆலயம், பலி சம்பந்தப்பட்ட காரியங்களை  நாம் கைக்கொள்ள  வேண்டியதில்லை.

இது புரிவதற்கு என்ன கஷ்டம்?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard