Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூன்று பேருக்கு தூக்கு..!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: மூன்று பேருக்கு தூக்கு..!
Permalink  
 


Truth vs Hype - "Sri Lanka Propaganda Wars" is going on in NDTV 24 X 7 now (10.9.11 10 pm)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Hindhu Wrote@Tcs on 09-09-2011 17:59:20:
ஐயா, நீங்கள். எம்மை விடுதலைப்புலியாகவும் அல்லது புலி ஆதரவாளராகவும் சித்தரித்தமைக்கு வேதனை படுகிறோம். அப்படி முயற்சித்தால் அது உமது அறியாமையே...!
எதிலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடிக்கும் pgolda-வை நம்பிவிடலாம்.உயிருக்காய் பயந்த மற்றோருவர், இனி யோசிக்க வேண்டும்.ஆனால், இன்னோருவர் என்ன சொல்ல வருகிறார். என்பது கடைசியில் ( எமக்கு) புரிந்து விட்டது. அதாவது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னை ஓர் தீவிர இந்தியராக காட்டிக்கொள்கிறார். இல்லா விட்டால், கோவை பெரியன்ஸ் - யை சார்ந்தவர்கள், தமது தேச இராணுவத்தை தர குறைவாக, பேசி விட்டார், என வழக்கு தொடுத்து விடுவார்களோ? என்ற அச்சம் இருக்கலாம்.

ஆனால், ராவங்க்ஜோன்சன் என்பவர் வெகு நிதானமாக பேசினார்.நல்லது.
ஐயா, நீர் முன் வைத்த பதிவுக்கு பின் பதில் தருவோம். முதலில் இதற்கு பதில் சொல்லும். வேற்று நாடான ஈழத்தில் 1987 - 1989 வரை இந்தியப் படைகள். நடத்திய அழிவு.கொலை.கொள்ளை.கற்பழிப்புக்கு சட்டத்தின் படி என்ன செய்யலாம். இது சாத்தியமா? அல்லது கிறிஸ்தவத்தின் படி என்ன செய்யலாம். ( பலர் தமது நெருங்கியவர்கள் கண் முன்னே கற்ப்பழிக்கப்பட்டனர். ( மகன் முன்னே தாயும், கனவன் முன்னே மனைவியையும், சகோதிரன் முன்னே சகோதரியும் கெடுக்கப்பட்டனர்).
இதே போல், பலரை அவர்களுடைய குடும்பத்தார். கண் முன்னே வைத்து கொன்றனர். யார் பதில் சொன்னாலும் இத்தகைய கொடுரம் தமக்கு நேர்ந்திருந்தால்.... என்பதை தயவுச்செய்து ஒரு கணம் யோசித்து.பதில் சொல்லவும்.

பாதிக்கப்பட்டவர்களுடைய சட்டத்தின் படி.அவர்கள் என்ன செய்யலாம்.?
அல்லது, கிறிஸ்துவின் சட்டத்தின் படி என்ன செய்யலாம்.?

தமக்கு வேண்டப்பட்டவர்கள் அல்லது பலவான்கள் என்று எண்ணி அஞ்சி, இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுக்க வேண்டாம். எளியவர்கள் என்று இவர்கள் மீதும் பரிதாபப்பட்டு இவர்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு கொடுக்க வேண்டாம். அல்லது, படித்தும் பதில் கொடுக்காமலும் இருந்து விட வேண்டாம். நீதியாய் நியாயந்தீருங்கள்.தேவனாகிய கர்த்தர் நீதியின் தேவன்.


Chillsam:

திரு.ஹிந்து அவர்களே,
உங்களுடைய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நாங்கள் அபாத்திரராய் இருக்கிறோம்; இந்த தளத்தில் எம்மை விட தமிழுணர்வுடன் எழுதிய கிறித்தவர் யாருமிருக்க முடியாது; உங்களுக்கும் சரி, க்ளமெண்ட் என்பாருக்கும் சரி, இந்த கலந்துரையாடல் தளத்தின் மூத்த உறுப்பினர்களை மதிக்கத் தெரியவில்லை என்பது வருத்தத்துக்குரிய காரியமாகும்; எங்களைக் குறித்து விமர்சனம் செய்ய உங்களை பணித்தது யார்? குறிப்பிட்ட பிரச்சினையில் உங்கள் கருத்து என்ன என்று சொல்லுவது மட்டுமே உங்கள் உரிமையாகும்; நாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து ஒன்றும் அறிந்திராத நீங்கள் எங்களைக் குறித்து விமர்சிக்க சிறிதும் தகுதியற்றவர்கள்; இந்த தளத்தில் நிர்வாகமும் தணிக்கை முறையும் விழிப்பாக இருக்குமானால் எங்களுக்குரிய நியாயம் கிடைக்கும்.

உங்கள் தேசத்தின் அரசாங்க ஊழியரான ஒருவர், எமக்கு அரசியலும் தெரியாது வேதமும் தெரியாது என்று தனிப்பட்ட முறையில் எழுதி இழிவுபடுத்துகிறார்; நீங்களோ இந்த திரிக்கு சம்பந்தமில்லாத காரியங்களையெல்லாம் எழுதி எம்மை சிறுமைப்படுத்த முயற்சிக்கிறீர்கள்; மலையைப் பார்த்து எதுவோ குரைக்கிறது என்று போய்விடலாம், ஆனால் இதுபோன்ற செயல்களைக் கண்டிக்காமல் விட்டால் அதுவே ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடுமே என்று எழுதுகிறேன்.

தேசப்பற்றைத் தூக்கி குப்பையில் போடு என்றவர் இனவெறியைத் தூண்டும் கவிதையைப் படைக்கிறார்; சாத்தானின் தூண்டுதலின் காரணமாகவே கவிஞர் தாமரை இந்த கவிதையைப் புனைந்தார் என்று நான் சொல்லட்டுமா..?

இந்த திரியைப் பொறுத்தவரையிலும் இது இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அலசும் திரி அல்ல; மாறாக இது எங்கள் தலைவர் இராஜீவ்காந்தியைக் கொன்றவர்களை மன்னிப்பதா தூக்கில் போடுவதா என்பதைக் குறித்ததாகும்; நாங்கள் அதை மட்டுமே கவனத்தில் கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்தோம்; வாதத்தை பலரும் உள்நோகத்துடன் திசைதிருப்பினாலும் மையப் பொருளில் நிற்கவே முயற்சித்தோம்; இலங்கைத் தமிழரின் அவலங்களை இராஜீவ் கொலையுடன் ஒப்பிடவேண்டாம் என்று மீண்டும் மீண்டும் மன்றாடினோம்; ஆனாலும் படித்த இலங்கையரும் சரி,படிக்காத இலங்கையரும் சரி,தமிழுணர்வுள்ள இலங்கையரும் சரி இலங்கை அரசாங்கத்தின் தயவுநாடி நிற்பவரும் சரி ஒன்றை மட்டும் உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டார்கள், இந்தியா உதவிசெய்யவில்லை என்பதோடு இந்தியாவே இந்த போரை நடத்தியது என்று குற்றஞ்சாட்டி இந்திய துவேஷ கருத்துக்களை விதைப்பதில் மட்டும் கவனமாக இருந்தார்கள்; விடுதலைப்புலிகளின் பிடிவாதப் போக்கின் காரணமாகவே இத்தனைப் பெரிய இழப்பு ஏற்பட்டது என்பதையும் கருணா என்ற துரோகியே அனைத்துக்கும் காரணம் என்பதையும் எடுத்துச்சொன்னாலும் அவர்களுடைய நோக்கமெல்லாம் இந்தியாவைக் குற்றஞ்சாட்டுவதிலேயே இருந்தது; இந்தியாவில் எங்களுக்கு கருத்து சுதந்தரம் இருப்பதால் நாங்கள் யாருக்கும் பயந்துகொண்டு கருத்து கூறவில்லை;ஆனால் இலங்கை அரசாங்கத்திலேயோ கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் உங்கள் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம்..!

உங்கள் தேசத்துக்கு வரும் தலைவரை மதிக்கத் தெரிந்ததா,உங்கள் அரசாங்கத்துக்கு..? ராணுவ மரியாதை அணிவகுப்பிலேயே அவமரியாதை செய்தார்களே,அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு தெற்காசியாவின் அமைதி ஒன்றையே இலக்காக வைத்து சிந்தித்த எங்கள் தலைவரை சிதைத்த பாவம் விடுதலைப்புலிகளை சும்மா விடாது; ஆனால் உங்கள் தேசத் தலைவர்களோ திருப்பதி முதல் சனி பகவான் வரை தரிசித்துவிட்டு பாதுகாப்புடன் திரும்பி செல்லுகிறார்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

clementraj Wrote on 09-09-2011 12:18:40:
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்:?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்:?

;);););););););););););););)

Chillsam:

அதுதானே ஆச்சரியமாக இருக்கிறது..? இவ்வளவு நிதானமாக விளக்கியும்கூட மெத்தப்படித்தவர்களும்கூட மேதாவிகளைப் போல பரியாசம் பண்ணுகிறார்களே..? நல்லா சினிமா மட்டும் பார்ப்பார்கள் போலும், இரவும் பகலும் அதன் தியானமே சிலருக்கு இன்பமாம்..!

wordofgodhitssatan.gif

01012011407.jpg

நேற்று முழுவதும் இலங்கை இந்திய பிரஜைகளுக்கிடையிலான விவாதமாகவும் ஜனநாயகவாதிகளுக்கும் தீவிர எண்ணம் கொண்டவர்களுக்கும் இடையிலான மோதலும் போலச் சென்ற இந்த திரியின் விவாதத்தின் பாதிப்பில் நான் என்னுடைய அவ்தார் எனப்படும் படத்தையே மாற்றிவிட்டேன்;எனது பழைய அவ்தார் சாத்தான் வீழ்த்தப்படுவதுபோல இருக்கும்;ஆனால் இந்த விவாதத்தின் விளைவாகத் தோன்றிய எண்ணம் என்னவென்றால் இன்றைக்கு தங்கள் சொந்த நாட்டைவிட்டு அகதிகளாகத் துரத்தப்பட்ட எமது தமிழினத்தின் பங்காகவும் பாகமாகவும் சுதந்தரமாகவும் சர்வ வல்லவரே இருக்கிறார் என்பதை உணர்த்தவே இதனை எனது அவ்தார் ஆக தேர்வுசெய்தேன்.எனது உணர்வுகளை சிருஷ்டிகர் அறிவார்,அதற்குரிய பலனைத் தருவார்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தானியேல் 10

19. பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.
20. அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.
21. சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத்தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்கிற வேறொருவரும் இல்லை.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சாத்தான் அதிபதியாக நியமிக்க பட்டுள்ளான். ஆக இந்தியா மற்றும் இலங்கைக்கும் சாத்தான் அதிபதியாக நியமிக்கபட்டிருப்பான். நான் அறிந்த மட்டும் அவர்களே உலகை ஆளுகிறார்கள். So, உங்கள் நாட்டு பற்றை தூக்கி தூர எறிந்து விட்டு வேதத்தை அறிவித்தால் என் போன்றோருக்கு உதவியாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.

கிறிஸ்துவன் நாடு, மொழி, இனம், ஜாதி இவைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருத்தல் அவசியம்.
ஏதாவது புதிதாக கிறிஸ்துவை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இந்த தளத்திற்கு வந்தால் நீங்கள் இங்கு அடிக்கின்ற கூத்து ரொம்ப கொடுமை.

கிறிஸ்துவர்களாகிய உங்களிடையே ஒற்றுமை இல்லை என்ன அருகதை இருக்கிறது வேதத்தை மற்றவர்களுக்கு விளக்குவதற்கு ........... ??????????????????


Chillsam on 09-09-2011 12:03:18

நண்பரே, ச்சும்மா கோணியில கல்லை கட்டி அடிப்பது போல எதையாவது எழுதிவிட்டுப் போவது கொஞ்சமும் சரியல்ல; நீங்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்தவரல்ல என்பதையும் உங்களுக்கும் நன்மை தீமையைப் பற்றிய அறிவும் சுகத்தையும் துக்கத்தையும் குறித்த சிந்தனையும் உண்டென்பதையும் மறந்துபோக வேண்டாம்; கிறிஸ்துவைக் குறித்து எதையாவது புதியதாகத் தெரிந்துகொள்ள நினைக்கும் உங்களைப் போன்றவர்களாலேயே இத்தனை குழப்பமான உபதேசங்களும் பிரிவினைகளும் விளைந்தது; கிறிஸ்துவன் நாடு, மொழி, இனம், ஜாதி இவைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருத்தல் அவசியம் என்பது வாசிக்கவும் கேட்கவும் நன்றாக இருப்பினும் நடைமுறையில் சாத்தியமில்லை;வேதமும் அப்படி சொல்லவில்லை.

ஒவ்வொருவரும் அவரவர் தேசத்தின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்களே;ஒவ்வொருவரும் அவரவர் மொழியைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டும்;ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்துள்ள சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடவும் வேண்டும்; அப்போஸ்தலர்.1:8 படிக்கவில்லையா..? அங்கே சொல்லப்பட்டுள்ள ஊர்களே இன்றைய சமுதாயம்; சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதும் அடக்குமுறைகள் நடப்பதும் நிதர்சனமான உண்மையில்லையா..? உங்கள் ஊருக்கு தண்ணீர் வசதியும் சாலை வசதியும் இல்லாவிட்டால் "அல்லேலூயா, ஸ்தோத்திரம்.." மட்டுமே போடுவீர்களா?

ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு அதிபதி அதாவது சாத்தான் அதிபதியாக இருக்கிறான் என்பது ஏதோ ஒருவகையில் சரிதான்; அதனை மேற்கொள்ள புதிய ஏற்பாடு சொல்லித்தரும் வழிமுறை என்ன, கருத்தொற்றுமை ஏற்படுத்துவது தானே, அப்போஸ்தலர்கள் பேசாமல்- எழுதாமல் எப்படி கருத்தொற்றுமையினை ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு எதிர்ப்பு வந்ததா, அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்ததா, அவர்கள் ஆவியானவரின் நடத்துதலின்படி பிரிந்து சென்றார்களா, அதே நடைமுறையைத் தான் நாங்களும் பின்பற்றுகிறோம்; இதில் நீங்கள் பஞ்சாயத்து பண்ணுமளவுக்கு நீங்கள் சாதித்ததை முதலில் சொல்லுங்கள்.

இங்கே ராவங்க் ஜாண்சன் எனும் சகோதரர் எத்தனை அருமையாகக் கருத்து சொல்லியிருக்கிறார் பாருங்கள், உங்கள் கருத்து அவருடைய உணர்வையும் சேர்த்தே புண்படுத்தியிருக்கிறது; விவாத மேடை என்பதே ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் அவரவருடைய பார்வையைப் பகிர்ந்துகொள்ளுவதே; இங்கே ஒற்றுமையை நிலைநாட்டுவதல்ல நோக்கம், சத்தியத்தை நிலைநாட்டுவதே; சத்தியம் அவரவர் மனதில் விதைக்கப்படுவதாக இருப்பதால் இங்கே ஒற்றுமை இல்லாதது போல காணப்பட்டாலும் சத்தியமானது தன் வேலையை சரியாகவே செய்யும்.

முதலில் நீங்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தண்ணீரில் முழுகி திருமுழுக்கு எடுத்துவிட்டு சபை ஐக்கியத்தில் தவறாமல பங்கேற்று புதிய ஏற்பாட்டின் புத்தகங்களை ஒரு வாரத்துக்கு ஒருமுறையாகிலும் வாசித்து உங்களை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு பிறரையும் ஆயத்தப்படுத்துங்கள்; இதுவே எல்லார் மேல் விழுந்த கடமையும் கூட..!

clementraj Wrote@Tcs on 09-09-2011 10:57:53:

...உங்கள் நாட்டு பற்றை தூக்கி தூர எறிந்து விட்டு வேதத்தை அறிவித்தால் என் போன்றோருக்கு உதவியாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.


Chillsam on 09-09-2011 12:03:18

"வந்தே மாதரம்" எனும் பாடல் இஸ்லாத்துக்கு விரோதமானது என்று அதனைப் பாட அவர்கள் மறுத்து கலகம் செய்தார்கள்;அவர்களை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்யமுடியவில்லை;ஆனால் அதே பாடலின் அடிப்படையில் பாடல் எழுதி சிடி போட்டு விற்று கல்லா கட்டுகிறார்கள், பிரபல ஊழியர்கள்..! அப்படியானால் நீங்கள் தேசபக்தியைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு வேதத்தைக் கற்பிக்கச் சொன்னதை அவர்கள் ஏன் செய்யவில்லை; தேசப்பற்றும் தேசபக்தியும் இல்லாதோர் எப்படி இந்த தேசத்துக்காக பரிதபிக்கமுடியும்..?

நண்பர் சுவிசேஷ ஜெப ஐக்கியத்தின் ஒவ்வொரு பாடலையும் கேட்டுப்பாருங்கள்; தேசபக்தி தேவையா இல்லையா என்பது விளங்கும். கிறிஸ்தவர்கள் சமுதாயத்திலிருந்து தங்களைத தனிமைப்படுத்திக்கொண்ட காரணத்தினாலேயே எல்லாவற்றிலும் பின் தங்கியிருக்கிறோம்; தாழ்த்தப்பட்டவர்கள் கிறித்தவர்களானதுமே அவர்களுடைய சலுகைகள் முடிவுக்கு வருகிறது; இங்கே தமிழர்கள் என்ற அடையாளத்தையும் தொலைத்துவிட்டு சமுதாயத்தில் அனாதைகளாக நிற்கச் சொல்லுகிறீர்களா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இராஜீவ் கொலையாளிக்ளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுகிறதோ இல்லையோ அதை முன்னிட்டு தமிழ் கிறித்தவ தளத்தின் நண்பர்களிடையே அனல்பறக்கும் விவாதம் நடந்தது;அதில் நாம் பதிவிட்டிருந்த கருத்துக்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

pgolda Wrote on 30-08-2011 23:16:41:

ஒரு தேசத் தலைவரின் கொலையை சாதாரணமாகப் பார்ப்பதும், அவரை கொலை செய்ய உடந்தையாய் இருந்தவர்களை தண்டிக்கக் கூடாது என்று சொல்வதும், அவர் முன்பே இறந்திருக்க வேண்டும் என்று விரும்புவதும் என்னால் ஜீரணிக்க முடியாத விஷயங்கள்.

rawangjohnson:

//இப்போது அந்த பாரத மாதா மீண்டுமொரு முறை தன் கிறிஸ்தவ சிந்தனையை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. //

pgolda:

பாராத மாதா கசாப் பையும் கிறிஸ்தவ சிந்தையோடு பார்த்து விடுதலை செய்ய வேண்டுமோ? ஒரு நாடு தன் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டும்.

Chillsam on 31-08-2011 22:41:08

சகோதரி கோல்டா பிழையாக எழுதியதுபோலிருந்தாலும் மிகச் சரியாகவே எழுதியிருக்கிறார்; ஆம், சில காரியங்களில் "பாரத மாதா", "பாராத மாதா"வே தான்;ஒரு கண்ணுல வெளக்கெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்புமா பாரத மாதா மாற்றாந்தாயைப் போல ஓரவஞ்சனையே செய்துவந்திருக்கிறாள்; அது காவிரியாக இருந்தாலும் சரி,ராமேஸ்வரத்தின் கடலோரமாக இருந்தாலும் சரி இன்னும் ஈழமாக இருந்தாலும் சரி அவளுக்கு தமிழ்நாடு தமிழரும் தமிழும் ஏதோ தொங்குசதையைப் போலவே இருக்கிறது; இந்திய எனும் மாபெரும் சனநாயக நாடு தனது இறையாண்மைக்குட்பட்டு தனது சட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்று தானே நாமும் போராடுகிறோம்? மூவருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டால் தான் அந்த சட்டம் புனிதமடையுமா என்பதே தமிழர்களின் கேள்வி.

ஒரு ரேடியோ கடைக்கு சால்டிரிங் எனப்படும் ஈய ஒட்டுவேலைக்காக எத்தனையோ பேர் வருவார்கள்;ஒரு டிவி மெக்கானிக்குக்கு பழுதுபார்க்க பல இடங்களிலிருந்து அழைப்பு வரலாம்;தான் சால்டிரிங் பண்ணும் சர்க்யூட் வெடிகுண்டு வெடிக்க பயன்படப்போகிறது என்று தெரிந்தால் அந்த ரிஸ்க்கை அந்த தொழிலாளி (அந்த காலத்தில்..) 10 ரூபாய்க்காக எடுப்பானா? தன் வீட்டில் வாடகைக்கு வரும் ஒரு நபர் தனது தேசத்தின் தலைவரை கொலைசெய்யப்போவதை எப்படி யூகிக்கமுடியும்....என்பவையெல்லாம் சாமான்யனுடைய மனதில் எழும் கேள்விகளாகும்;இன்னொரு புறம் ஜெயின் கமிஷன் அறிக்கையை வைத்து குற்றமானது இன்னும் நிரூபிக்கப்படவில்லையென்றும் பெல்ட் குண்டை தயாரித்தது இன்னார் தான் என்பது நிரூபிக்கப்படவில்லையென்றும் சொல்லப்படுகிறது;தடாவுக்கும் பொடாவுக்கும் அஞ்சி நியாயம் வாய்மூடி மௌனியான காலத்திலேயே வழக்கு இந்த அளவுக்கு வளர்ந்தது;தடாவும் பொடாவும் அமலிலிருந்த காலத்தில் இதை எழுதுவதும் கூட தேச துரோகமாகவும் சதி செயலாகவும் பார்க்கப்பட்டது;எனவே குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குதண்டனை பெற்றுள்ள மூவருடைய குற்றம் நீருபிக்கப்பட்ட வழிமுறைகளில் பல மர்மங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது;உதாரணமாக ஒரு பொய்யான வாக்குறுதி தரப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கலாம்; குற்றஞ்சாட்டப்பட்டவரும் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிக்கச் சொன்ன ஏதொவொன்று அவரை மற்றொன்றில் சிக்கவைத்திருக்கலாம்; ஆனால் மாறிவரும் நாகரீக சமுதாயத்தில் தற்போதைய நிலைமையே வேறு; அதன் காரணமாக ஊரறிய அரங்கேற்றப்பட்ட ஒரு கொடூரத்தைச் செய்தவன் ("கசாப்") இன்னும் தண்டிக்கப்படாமல் பல இலட்ச ரூபாய் செலவில் பாதுகாக்கப்படுகிறான்;இது இந்தியாவில் மட்டுமே நடைபெறக்கூடிய அநியாயம் அல்லவா..?

சேர்த்துவைத்திருந்ததையெல்லாம் மொத்தமாக கொட்டிட்டேன்...யாரும் பிரச்சினை பண்ணாம இருந்தா சரி..!

pgolda:

பாரத மாதா பற்றி பாராமல் நான் செய்த பிழையை செய்தியாக்கிய சகோ சில்சாமிற்கு பாராட்டுக்கள்!

colvin Wrote on 01-09-2011 12:18:31:

சகோதரி கோல்டாவுக்கு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்பதை தெரிவித்துக் கொள்ள பிரயாசைப்படுகிறேன். அவர் ஜனாதிபதியாக இருந்தால் என்ன பிரதமராக இருந்தால் குற்றம் யார் செய்திருந்தாலும் ஒரே தண்டனைதான்.பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்றும் கற்பழித்தவர்களுக்கும் இந்தியா என்ன தண்டனை கொடுத்தது என்பதை தெரிவிப்பீர்கள் என்றால் மகிழ்ச்சி அடைவேன்.


Chillsam on 01-09-2011 16:28:38

நண்பர்களே, நாமெல்லாரும் அறிவுடைமையுடன் யோசிக்கிறவர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்; எந்தவொரு அரசியல்வாதியும் தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுத்துவிடமுடியாது; முடிவெடுக்கும் ஸ்தானத்திலுள்ள அரசியல்வாதிக்கு மிக அருகில் யார் இருக்கிறார்களோ அவர்களுடைய யோசனையே ஆதிக்கம்- செல்வாக்கு பெறும்; இதனை அண்மையில் வெளிவந்த செய்திகள் மெய்ப்பிக்கிறது;அதாவது தமிழ்நாட்டில் மூன்று பேரையும் தூக்கிலிடுவது தொடர்பான ஆணை பிறபிப்பதில் இருவேறு கருத்துக்கள் அலசப்பட்டிருக்கிறது; விரைந்து முடிவுகளை எடுப்பதில் பேர்போன ஜெயலலிதாவே மிகவும் தடுமாறிப்போனாராம்; இன்னுமொரு முக்கிய அறிவிப்பு வரும் 5-ந்தேதி வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இலங்கைப் பிரச்சினையில் இராஜீவ் எடுத்த முடிவுகளும் அதன் விளைவுகளுமே அவரது மரணத்துக்கும் காரணம் எனும் கொடிய நிலையை நாம் எடுத்தோமானால் நாமெல்லாம் ஜனநாயகவாதிகள் என்பதற்கே அர்த்தமில்லாது போகும்; ஜனநாயகமும் தீவிரவாதமும் இரண்டு வெவ்வேறு முனைகளாகும்; எனவே இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் பல்வேறு நிலைகள் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதையும் இராஜீவ் கொலையையும் தனித்தனியாகப் பார்க்கவேண்டும்.

சில நாட்களுக்கு முன்பாக நணப்ர் ராவங்க் அவர்களுடைய கருத்தின் பாதிப்பில் நான் யோசித்தது என்னவென்றால் இராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகளின் நேரடி சம்பந்தம் இருப்பதாக நினைக்கவில்லை; இது ஒருவித யூகம் மாத்திரமே; இதுவே உண்மையாக இருக்கும் என்று சொல்லவரவில்லை; ஆனாலும் இதுவே உண்மையாகவும் இருக்கலாம்; எப்படியெனில் சிங்கள பேரினவாத வெறியர்கள் விடுதலைபுலிகளுக்குள்ளிருந்து கருணா எனும் கைக்கூலியை உரு(வி)வாக்கியது போலவே இராஜீவ் கொலைக்காகவும் ஒரு உலகளாவிய சதி நடைபெற்றிருக்கலாம்;

இது இலங்கையில் வைத்து ஒரு ராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது இராஜீவ் தாக்கப்பட்டதிலிருந்தே துவங்குகிறது; அப்போது தவறவிட்ட வாய்ப்பையே நன்கு திட்டமிட்டு எதிரிகள் நிறைவேற்றியிருக்கிறார்கள்; ஆனால் சூத்திரதாரிகள் இன்னும் சிக்கவில்லை; அவர்கள் இராஜீவினால் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டவர்களுமல்ல; அவர்கள் கூலிக்கு பொருத்தியவர்களே இந்திய ராணுவத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும்; அவர்களுடைய கோபத்தையே எதிரிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்;

இராஜீவ் கொலைசெய்யப்பட்ட கோர சம்பவத்தை இலங்கையில் இந்திய ராணுவம் செய்த அநியாயங்களுடன ஒப்பிட்டு நியாயப்படுத்துவது கூடவே கூடாது; எமது தேசத்தின் தலைவரை அந்நியர்கள் ஊடுறுவி கொன்றனர் என்பது மறுக்க முடியாததும் மன்னிக்க முடியாததுமான கோடூர சம்பவமாகும்; அதனை எந்தவகையிலும் யாரும் நியாயப்படுத்தக்கூடாது; அதன் காரணமாகவே தமிழர்களாகிய நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம்; நாம் இலங்கையில் இந்தியாவிலுமாக இருந்தாலும் இதயத்தால் ஒரே நாட்டினர்; இந்த உறவு தொடரவேண்டுமானால் இந்த காரியத்திலுள்ள சிக்கலானதும் நுட்பமானதுமான காரியங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்;

உதாரணமாக அண்மையில் இந்தியாவுக்கு வந்திருந்த இலங்கைப் பிரதிநிதி ஒருவரிடம் ராஜபக்ஷே செய்யும் அநியாயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எமது தேசத்தின் சட்டப்படி நான் அதுகுறித்து எதுவும் பேசக்கூடாது என்று சொன்னதாக ஞாபகம்; அப்படியானால் அவர்களுக்கு அவர்களுடைய நாட்டின் சட்டத்தின்மீது இருக்கும் மதிப்பு நமக்கும் இருக்கவேண்டாமா? சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழன் என்பதால் அவன் செய்த கொலைகளையெல்லாம் நியாயப்படுத்திவிடமுடியுமா? (ஆயினும் அவனுடைய கிராமத்தினர் இன்றைக்கு அவனையே தெய்வமாக வணங்குகின்றனர்).

அதுபோலவே இராஜீவ் கொலையில் சம்பந்த ப்பட்ட உண்மை குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும்; அவருடைய கொலையை நியாயப்படுத்தி தமிழர்கள் பேசக்கூடாது; இந்திய இராணுவம் ஒரு அந்நிய தேசத்தில் செய்த தவறுகளுக்கு பத்து மார்க் கொடுத்தால் இலங்கை ராணுவம் தன் சொந்த மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு நூறு மார்க் கொடுக்கலாம்;

இந்திய அரசாங்கம் மாவோயிஸ்டுகள் விஷயத்தில் எப்படி நடந்துகொண்டது என்பதையும் அவ்வளவு ஏன் அண்மையில் அன்னா ஹஸாரே விஷயத்தில் எத்தனை சாதுரியமாக நடந்துகொண்டது என்பதையும் கவனித்தவர்களுக்கு தெரியும், இந்தியா எப்போதுமே ஒரு மிதவாத நாடாகவே இருந்து வந்துள்ளது; அயல்நாட்டு விவகாரங்களிலும் அப்படியே ஆறப்போடும் அணுகுமுறையினையே கடைபிடிக்கிறது; இன்னும் அந்நிய விவகாரங்களில் தலையிடுவதையும் பெரும்பாலும் தவிர்க்கிறது; போப்பா எங்க பிரச்சினையே தலைக்கு மேல இருக்குது என்ற மனப்பான்மையே இந்தியாவின் அரசியல் கொள்கையாகும்;

அப்படியானால் இந்தியாவின் உதவியில்லாமல் இலங்கையில் சிங்களப் பேரினவாத வெறியர்களின் அரசாங்கம் விடுதலைப் புலிகளை வென்றெடுத்தது எப்படி என்ற கேள்வி எழலாம்; இதற்கு ஒரே காரணம் அல்ல, மூன்று காரணம் உண்டு; மூன்று காரணம் அல்ல, மூன்றெழுத்து காரணம், அது என்னவென்றால் கரணம் அடித்தாலும் மரணம் என்றால் என்ன என்று கேட்கும் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்படக்காரணம் கருணா எனும் கருநாகமே..!

ஏனோ அவனை யாரும் பெரிதாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை; கருணா உண்மையான தமிழச்சிக்கு பிறந்தவனா என்று கூட சந்தேகம் அளவுக்கு அவன் துரோகம் செய்தான்; மூன்று இலட்சத்துக்கும் மேலான தமிழர்கள் சில நாட்களில் கொல்லப்படக் காரணமாக அமைந்த வியூகங்களை அமைத்துக்கொடுத்தது கருணா எனும் கலகக்காரனே; மாத்தையாவிலிருந்தே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எப்போதுமே சகோதர யுத்தம் நடத்துவந்திருக்கிறது; அதில் ஒரு கலகக் குழுவே விடுதலைப்புலிகளுக்கு களங்கத்தையும் பின்னடைவையும் -அதேநேரத்தில் இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கும் சவால் விடும் சர்வதேச் சதியுடன் கூட்டமைத்து இராஜீவை கொன்றனர்; ஆனாலும் எடுத்த் கேஸை ஒருவழியாக செட்டில் செய்து ரிடையர் லைஃப் என் ஜாய் பண்ணவேண்டுமே சிலர் சுயநலமாக சிந்தித்ததன் விளைவாகவே அப்பாவிகள் தூக்குமேடை வரை வரவேண்டியதானது;

எனவே இந்த பிரச்சினையில் கிறித்தவ சகோதரர்களாகிய நாம் குறுகிய நோக்கங்களை விட்டு விட்டு விசால மனதுடன் சிந்திக்கவும் ஜெபிக்கவும் வேண்டும்;நாமெல்லாம் ஆவியைப் பெற்ற மக்கள்தானே,கடவுளின் தூய ஆவியர் நமக்கெல்லாம் இரகசியங்களை சொல்லித்தராமலா போய்விடுவார்..?

william20074 Wrote on 01-09-2011 19:06:12:
Law is common for all Why Rajiv get much importance?

Chillsam on 01-09-2011 23:12:38

திரு.வில்லியம் அவர்களே,
நான் தமிழில் எழுதியிருப்பவற்றை நீங்கள் வாசிக்கவில்லையோ? உங்கள் கேள்விக்கான பதிலை நானும் அணுகியிருக்கிறேன்; மீண்டும் சொல்லுகிறேன், எங்கள் தலைவர் உங்கள் நாட்டுக்கு தனது ராணுவத்தை அனுப்பி உங்களுக்கு தீமை செய்தார் என்பதால் அவரை சட்டரீதியாக தண்டிக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள், அவ்வளவுதானே? ராஜீவ் இன்னும் மரிக்கவில்லை; அண்மையில் பெருந்தீமைகள் செய்த ராஜபக்ஷே இதோ இருக்கிறார்; இருவரையும் எப்படி தண்டிக்கப்போகிறீர்கள்? சர்வதேச சட்டநடைமுறைகளின்படியாகத் தானே? அதைத் தானே இப்போதும் ஈழ ஆதரவாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்?

அதையெல்லாம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் இராஜீவ் செய்த அரசியல் தவறுகளையே முன்னிறுத்தி அவர் கொலைசெய்யப்பட்டதை நியாயப்படுத்துவது எத்தனை கொடூரமான நிலையல்லவா? ஒரு தீவிரவாத இயக்கம், தன் சொந்த மக்களையே கேடயமாகப் பயன்படுத்தியதன் விளைவுகளை அந்த இயக்கமும் அந்த சமுதாயமும் சந்தித்தது; இதில் எங்கள் தேசத் தலைவர் செய்த பாவம் என்ன, அவரை தண்டிக்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? ஒருதலைபட்சமாக எதையாவது பேசி அப்பாவிகளுக்கு நியாயம் கிடைக்காமற் செய்துவிடாதிருங்கள்;

இராஜீவ் கொலையை நியாயப்படுத்தி சிலர் குளிர்காயலாமே தவிர அப்பாவிகளை தூக்குக்கு தப்புவிக்கவோ சிறையிலிருந்து வெளியே கொண்டுவரவோ இயலாது; தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகனைத் தவிர மற்ற இருவர் மீதும் நாங்கள் அனுதாபமே கொண்டிருக்கிறோம்; தீயநட்பின் விளைவை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்; குற்றவாளிகளுடன் அவர்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லையென்று சொல்லிவிடமுடியாது;

எனவே மீண்டும் மீண்டும் இராஜீவ் கொலையை நியாயப்படுத்தும் வண்ணமான விமர்சனங்களைத் தவிர்த்தால் மட்டுமே இந்திய சமுதாயத்தின் அனுதாபத்தை இனியும் நாம் பெறமுடியும் என்பதை சக தமிழன் என்ற முறையில் தெரிவித்துக்கொள்ள‌விரும்புகிறேன்.இராஜீவ் என்பவர் தனி மனிதர் அல்ல,அவர் நூறு கோடி இந்தியரின் தலைவராக இருந்தவர்; அவர் செய்த குற்றத்துக்கு நீங்கள் அவரை மாத்திரமே கொன்றிருக்கவேண்டும்; அவரோடு சேர்ந்து மேலும் 36 அப்பாவிகளைக் கொன்றீர்களே? அதுமாத்திரமா, இன்றைக்கு எங்கெல்லாம் மனித வெடிகுண்டுகள் வெடிக்கிறதோ அதற்கெல்லாம் முன்னோடி நீங்கள் தானே? இது எத்தனை பெரிய சாபம் அல்லவா?

வரலாற்றில் புகழ்பெற்ற சக்ரவர்த்தியான அசோகர் யுத்த களத்தில் இரத்த சகதியைப் பார்த்து மனம் நொந்து இனி யுத்தம் செய்வதில்லை என்று தீர்மானித்து பௌத்த மார்க்கத்தைத் தழுவினார் என்று கேள்விபட்டிருக்கிறோம்; அதுபோன்றதொரு முடிவை விடுதலைப்புலிகள் தலைவர் இராஜீவ் அவர்களின் கொடூர மரணத்துக்குப் பிறகாவது எடுத்திருக்கலாமே? போரின் மூலமே ஈழத்தை மீட்க முடியும் என்ற தீவிரவாத நிலையின் விளைவு தானே இவ்வளவும்..? இன்னும் இரும்புத்திரையின் பின்னால் ஆயுதக் கடத்தல் முதல் போதை மருந்து கடத்தல் வரை எவ்வளவோ மர்மங்கள் இருக்கிறது,நண்பரே..!

josephsneha Wrote on 07-09-2011 17:27:28:
நண்பர் கொல்வின் அவர்களே,
ராஜீவ் காந்தியை தண்டனைக்குரியவராக நீங்கள் காண்பிக்க முனைந்தால் உங்கள் கருத்துக்கள் இங்கு மதிப்பிழந்து தான் நிற்கும் என்பதை மனதில் வையுங்கள்.


Chillsam on 07-09-2011 19:14:18

சக தமிழர் என்ற வகையிலேயே இங்கே எமது உணர்வுகளைப் பகிர்ந்துவருகிறோம்; இந்நிலையில் முதலாவது "ஹிந்து" என்ற புதிய‌ உறுப்பினரும் தொடர்ந்து கோல்வின் என்பவரும் இங்கே இந்திய துவேஷ கருத்துக்களைத் தூவி வருகிறார்கள்; அவர்களுடன் லாவணி பாட விருப்பமில்லாத காரணத்தினாலேயே அமைதியாக இருக்கிறோம்; இது இந்திய இறையாண்மைக்கு எதிரானதும் உரிமை மீறியதுமான செயலாகும்.

இராஜீவ் காந்தி எனும் அப்பாவி இளைஞரின் கோர மரணமே இன்றைய முள்ளிவாய்க்கால் பயங்கரங்களுக்குக் காரணம் என்றால் அதனை யார் மறுக்கமுடியும்? அவருடைய ஆன்மாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் காரணமான இரத்தப்பழியே இன்றைக்கு இலங்கைத் தமிழரின் எல்லா சாபத்துக்கும் காரணம் என்று நாங்கள் சொல்லுவோம்; ஏனெனில் இராஜீவ் மரணத்துக்குப் பின் விடுதலைப் புலிகள் திருந்தி- மனம்வருந்தி தங்கள் பாதையை மாற்றிக்கொள்ள சுமார் 15 வருடத்தை இயற்கை அருட்கொடையாகக் கொடுத்திருந்தது; ஆனால் அந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளாததுடன் தொடர்ந்து கண்மூடித்தனமான யுத்தத்திலேயே பழக்கப்பட்டு விட்டார்கள்;

ஆனால் அப்பாவி இந்திய சமுதாயமோ தொப்பி போட்டவனெல்லாம் காந்தியாக இருக்கக்கூடாதா என்று ஏங்கும் அமைதி விரும்பிகளால் அமைக்கப்பட்டதாகும்;அதன் காரணமாகவே இங்கே அன்னா ஹஸாரே போன்றவர்களெல்லாம் இந்திய நாடாளுமன்றத்தையே மிரட்டமுடிகிறது.


colvin Wrote on 07-09-2011 22:28:51:
// சக தமிழர் என்ற வகையிலேயே இங்கே எமது உணர்வுகளைப் பகிர்ந்துவருகிறோம்; இந்நிலையில் முதலாவது "ஹிந்து" என்ற புதிய‌ உறுப்பினரும் தொடர்ந்து கோல்வின் என்பவரும் இங்கே இந்திய துவேஷ கருத்துக்களைத் தூவி வருகிறார்கள்; அவர்களுடன் லாவணி பாட விருப்பமில்லாத காரணத்தினாலேயே அமைதியாக இருக்கிறோம்; இது இந்திய இறையாண்மைக்கு எதிரானதும் உரிமை மீறியதுமான செயலாகும்.//

காரணமில்லhமல் என்னை வம்புக்கிலுக்கும் சில்சாமை வன்மையாக கண்டிக்கிறேன். ராஜீவின் து}ரநோக்கற்ற செயல்களினாலும் இந்தியப் படைகளின் அட்டூழியங்களினாலுமே இலங்கைத் தமிழர் பிரச்சினை தீரக்கமுடியாத கட்டத்திற்கு நகர்ந்தது. ஏதோ ஒன்றும் தெரியாத பிள்ளை போல பேச வேண்டாம். ராஜீவின் ஊழல் உலகப் புகழ் பெற்றது. தெரியவில்லையெனில் கூகுளில் தேடிப் பாருங்கள்; அவர் இணைத்து வைத்த வடக்கு கிழக்கு இணைப்பு ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது என உயர; நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.


Chillsam on 07-09-2011 23:48:52

எனது மதிப்பிற்குரிய (முன்னாள்..?) நண்பர் கோல்வின் அவர்களின் கண்டனம் என்னை ஒன்றும் செய்யாது என்பதையும் விடுதலைப்புலிகளின் அட்டூழியம் முழுவதையும் இங்கே எடுத்து வைத்தால் அதனை அவர் தாங்கமாட்டார் என்பதையும் ஈழத் தமிழரின் பேரழிவுக்கு சிங்களப்‍ பேரினவாதத்தைக் காட்டிலும் பிரபாகரன் எனும் தனிநபரின் பிடிவாதமே காரணம் என்பதையும் இனியும் இந்திய துவேஷ கருத்துக்களை அவர் தொடர்ந்து விதைப்பாரானால் அதற்குரிய கடுமையான எதிர்வாதங்களை அவர்களை சந்திக்கவேண்டியிருக்கும் என்ப்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்..! யாரையும் வம்புக்கு இழுக்கும் அவசியம் எனக்கில்லை, எப்போதும் காரணத்துடனே போராடுகிறேன்; எமது தலைவர் தீவிரவாதிகளின் கோரப்பசிக்கு பலியாகியிருக்கிறார்; 20 வருடத்துக்குப் பிறகும் கூட அவருடைய மரணத்துக்கு நியாயம் கிடைக்கக்கூடாது என்று எதிரிகளும் தேசத் துரோகிகளும் இணைந்து தோள் தட்டுகிறார்கள் என்பதே சத்தியம்.

காலஞ்சென்ற இந்திய பிரதமர் இராஜீவ்காந்தி அவர்கள் ஊழல் செய்தாரெனில் அதைக் குறித்த அண்டை நாட்டினருக்கு என்ன கவலை..? இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு குற்றச்செயலுக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் தண்டிக்கப்பட்டனர் எனில் அதில் தலையிட அந்நிய தேசத்தவருக்கு என்ன உரிமை..? முருகன் என்பவர் விடுதலைப்புலி என்னப்படுவதால் அவருக்கு இந்திய அரசாங்கம் மன்னிப்பு தரவேண்டிய அவசியமில்லை, முகாந்தரமின்றி அவர் தண்டிக்கப்பட்டிருக்கமாட்டார்; மேலும் அவர் பிடிபட்ட அன்றே இயக்கவிதியின் படி சயனைடு தின்று இறந்திருக்கவேண்டும்; அவர் இன்னும் உயிர்வாழ மனுபோடுவது இயக்கத்தின் கொள்கைகளுக்கு முரணானதாகும்.

இந்தியாவைக் காட்டிலும் இந்த கொலை வழக்கை இத்தனை நிதானமாகவும் நேர்மையாகவும் மற்றொரு நாடு நடத்தியிருக்கமுடியுமா..? இதுபோன்ற நிதர்சனமான உண்மைகளையெல்லாம் குழிதோண்டி புதைத்துவிட்டு தேசத் துரோகிகளான குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களெல்லாம் மனித உரிமையைக் காப்பாற்றிவிடமுடியுமா..? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுபவர்களில் முதலாவது இடத்தில் இருப்போர் விடுதலைப்புலிகள் என்றால் அது மிகையல்ல; இன்றைக்கு எம்ஜிஆர் எனும் மாமனிதன் இருந்திருந்தால் அந்த் உண்மைகளெல்லாம் வெளியில் வந்திருக்கும்..!

தயவுசெய்து தள நண்பர்களில் யாரும் அரசியலையும் கிறித்தவ விசுவாசத்தையும் கலக்காமல் பொதுவான க்ருத்துக்களை மாத்திரம் முன்வைக்குமாறு வேண்டுகிறேன்;மற்றபடி உலகக் கிறித்தவத்தில் நிகழ்ந்த அனைத்து கிறித்தவ விரோத செயல்களையும் அலசி ஆராயவேண்டியதிருக்கும்.

Hindhu Wrote on 02-09-2011 22:32:35:

ஐயா இராசீவ்காந்தி உத்தமரும் அல்ல.! விடுதலைப்புலிகள் கொடூரர்களும் அல்ல.!

இந்த நல்ல விவாதம் திசைமாறி செல்லக்கூடாது..!

தூக்கு தண்டனை மிகவும் கொடூரமான ஒன்று. மரணம் யாரையும் மனந்திரும்ப செய்யாது என்பது உண்மை. இது பலரை கடினப்படுத்தும். மேலும் பகையை வளர்க்க வழிவகுக்கும். தண்டனைக்குரியவர்களை, தியாகிகளாக்கும். விசாரணை அறிக்கை மற்றும் இவர்கள் எழுதிய புத்தகங்களே, இவர்கள் பலிகடாவாக ஆக்கப்பட்டிருப்பது தெளிவு.
மனிதாபிமானம் கொண்டவர்கள் இந்த தண்டனையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

பாரதமாதா இரக்கம் கொண்டவள், அமைதி விரும்பி என்பதெல்லாம் புழுகாண்டி வார்த்தை. ஒரு காலத்தில் அணிசேரா நாடுகளுக்கு தலைமை வகித்த அந்த பாரதமாதா, இப்போது காணோம்..!
எளியவர்களை வாட்டுவதும், வலியவர்களோடு வலிய சென்று ஒட்டுவதுமாய் இருக்கிறாள்.

ஐயா இயேசு கிறிஸ்துவும் தம்மை கொடிய சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்தார்.
அவரை பின்பற்றுபவர்கள் அவரை போல் அல்லவா இருக்க வேண்டும்.?

இராசீவ்காந்தி போய்விட்டார். ஆனால் அவருடைய மனைவி, பிள்ளைகள் அதிகாரத்துடன், செல்வ செழிப்புடன் இருக்கின்றனர்.
ஆனால், இவர் பெயரால் 3 இலட்ச மக்கள் கொல்லப்பட்டனர். பல இலட்ச மக்கள் சித்ரவதைபட்டு வருகின்றனர்.
இன்னுமா, இரத்தப்பசி அடங்கவில்லை. இன்னுமா வெறி அடங்கவில்லை.!


தூக்கு தண்டனை யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்த போவதில்லை.
பல கடினமானவர்களையே ஏற்ப்படுத்தும். அதை தடுக்க இறைவனிடம் மன்றாடுவோம்.
"இன்றைய இளைய பருவத்தினரிடையே காந்தி, நேரு படத்தை காட்டி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. காலம் கடந்து கொண்டிருக்கிறது" இதற்காக இறைவனிடம் வேண்டுவோம்.
தூக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று சில கிறிஸ்தவர்கள் கூறுவது வேதனையானது.


"உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர்கள் இவள் மீது முதலில் கல் எறியட்டும்" என்றார் இயேசு கிறிஸ்து.
"நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் கட்டளையை கைக்கொள்ளுங்கள்" என்றார் இயேசு கிறிஸ்து.
" என் ஆடுகள், என் சத்தத்துக்கு செவி கொடுக்கும்" இதுவும் அவருடைய வார்த்தையே..!


பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிப்போம்.... அதற்கு காரண மானவர்களுக்காகவும் செபிப்போம்.


Chillsam on 08-09-2011 02:01:43

இந்த வரிகளுக்கு வரிக்கு வரி பதிலளிக்கமுடியும்...ஆனால்..?

தோழர் (தோழி..?) செங்கொடியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று இங்கே யாரோ ஒருவர் பதிவிட்டிருந்தார்; அந்த வரிகளைத் தற்போது காணவில்லை, ஆனாலும் அதைக் குறித்த எனது கருத்து: செங்கொடி மாத்திரமல்ல, இன்னும் இதுபோன்ற பொது பிரச்சினைகளுக்காக எத்தனை அப்பாவி உயிர்கள் இதுபோல பறிக்கப்பட்டதோ அத்தனை இரத்தப்பழியும் ஏழை எளிய மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி சுயநல அரசியல் செய்யும் சிலரையே சாரும்; இவர்களுடைய உணர்ச்சிப்பூர்வமான உரைகளே (உதாரணம்: வைகோ மற்றும் சீமான்) அவர்களை மரணக் குழிக்குள் தள்ளுகிறது என்பது மனவியலாளர்களின் கூற்றாகும்;சாவதைவிட சாகத் தூண்டுவது மாபாபமாகும்.

rawangjohnson Wrote on 08-09-2011 09:19:43:
சகோ.கொல்வின் அவர்களே,
சகோ.சில்சாம் அவர்களே,

உங்கள் அரசியல் வேறுபாடுகள் பேதங்களாக மாறி, சூடான வார்த்தைகளைப் பேசுவது கண்டு பெரிதும் ஏமாற்றமும் அவமானமும் அடைகிறேன். ‘சகோதரரே, சகோதரர“ என்று சொல்லிக் கொண்டு, இப்போது நட்பைக் கூட (முன்னால்?) என்ற நட்பின் அடைமொழியைப் பயன்படுத்துவது எனக்கு வேதனையைத் தருகிறது.

‘சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே.....’ என்ற பாடல் வரிகளை சபைகளில் மட்டும்தான் பாடுகிறீர்களா? சபைக்குள் மட்டும்தான் நீங்கள் கிறிஸ்தவர்களாக வாழ்கிறீர்களா? சபைக்கு வெளியே இருளின் பிள்ளைகளாய் இருக்கிறீர்களா?

ராஜிவ் காந்தியும் சரி, பிரபாகரனும் சரி. இருவரும் மாம்சமான உலகத்திற்குரிய மனிதர்கள். இயேசுவை அறியாதவர்கள். அவர்கள் உலகத்திற்குரிய கொள்கைக்காக வாழ்ந்தவர்கள். மாம்சமான யாவும் பெலவீனமுள்ளவை. ஆவியின் வரங்களோ உற்சாகமுள்ளவை. அவர்கள் இருவரும் ஆவியின் வரங்களைப் பெற்றிருந்து தங்கள் ஜனங்களுக்காகப் போராடியிருந்தால் அசைக்க முடியாத வெற்றியைப் பெற்றிருப்பார்கள். ஆனால், பரிதாபம். மாம்சமும் மாம்சமும் மோதி இரண்டும் புதையுண்டு போயின.

ஆவியின் வரங்களைப் பெற்றிருக்கும் நாமோ, பரிசுத்த சிந்தையோடு இந்தப் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும். ஆனால், சில்சாம் அவர்களின் கடைசி வரிகள் உலகப் பிரகாரமான அரசியல்வாதிகளின் சிந்தையைப் பரிதாபமாய் பிரதிபலிக்கின்றன.

கொல்வின் அவர்களின் ‘வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்ற செந்நிற எழுத்துகளும் அவ்வண்ணமே. பிரபாகரனை உங்கள் செந்நிற எழுத்துகள் தெய்வமாக்கி விட்டன. விக்கிரக ஆராதனைக்கு உங்கள் கொள்கை வழிநடத்துகிறது. இரட்சிக்கப்பட்டவர் சிந்தையைப் பிரதிபலிக்கவில்லை.

இராஜிவ் காந்தி கொல்லப்பட்டதிலும் நான் வேதனையடைகிறேன். இந்த வேதனை ஆவியின் பிரகாரமானது. அரசியல் சமூகப் பிரகாரமானதன்று. இலங்கைத் தமிழ் மக்களுக்காகவும் நான் மிகுந்த வேதனையடைகிறேன். அந்த வேதனையிலும் ஆவியின் சிந்தை நிறைந்திருக்கிறது. நால்வர் தூக்கிலிடப்படுவது குறித்த எனது கருத்துகளும் ஆவியின் பிரகாரமானது. நேற்று முன்தினம் டில்லி குண்டு வெடிப்பில் மரித்தவர்களுக்காக துக்கப்படுவது ஆவியின் பிரகாரமானது.

ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்களும், தேசங்களுக்கு விரோதமாக தேசங்களும் எழும் என்ற தீர்க்கதரிசனம் எல்லாம் உலகப் பிரகாரமான அழிவைக் குறிக்றது. இந்த உலகப் பிரகாரமான அழிவுக்கு நீங்களும் ஆளாக வேண்டாம் என்பது எனது உருக்கமான வேண்டுகோள்.

Chillsam: திரு.ராவங்க் அவர்களே,நீங்கள் ஆசிரியர் என்பதால் நன்றாக பாடம் எடுக்கிறீர்கள்,பாராட்டுக்கள்..!

josephsneha Wrote on 08-09-2011 11:14:29:
//... சகோதரர் சில்சாம் தனது வாதத்தில் ராஜீவின் மரணத்தையும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளையும் ஒப்பிட்டு, ஈழ தமிழர்கள் மேல் அது சாபம் என்று வெந்த் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் எழுதினார். அவரிடம் நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, இது சாபம் அல்ல நண்பரே, இந்த பாரிய அழிவுக்கு அஸ்திவாரமே தெற்காசியாவின் கூட்டு முயற்சி தான், எந்த ராணுவத்தோடு எல்லையில் முறைத்து கொண்டிருக்கிறோமோ அதே ராணுவத்தின் தளபதிகளோடு கைகுலுக்கி சிரித்து மகிழ்ந்ததும் சிங்கள பூமியில் நடந்தது, சுற்றியுள்ள நாடுகளின் துணையின்றி அவர்களால் ஒன்றும் புடுங்கியிருக்க முடியாது. போர் நிறைவுற்றபின், இந்தியாவுக்கு நன்றி என சிங்கள சீமான்கள் புல்லரித்து போய் புகழ்ந்தனர். இங்கே இலங்கை தமிழர் பிரச்சனை சற்றும் சம்பந்தமில்லாத நாராயணன்களாலும், மேனன்களாலும் ராவ்களாலும் விவாதிக்கப்படுகிறது. தயவுசெய்து முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அந்த மக்கள் மேல் வந்த சாபம் என சொல்லாதீர்கள், அப்படியானால் சீக்கிய எதிர்ப்பு கலவரத்தில் கொல்லப்பட்ட சில நூற்றுக்கணக்கான சீக்கியர்களோடு இந்திரா காந்தியின் சாபம் முடிந்துவிட்டதா, ஈழத்தில் மட்டும் லட்சக்கணக்கில் ராஜீவின் சாபம் பலிகொண்டும் நிறைவேற வில்லையாக்கும். கொஞ்சம் யோசித்து எழுதுங்கள் நண்பரே....//

Chillsam on 08-09-2011 12:23:13

அருமை நண்பர் ஜோசப் அவர்களே,
எனக்கு வேண்டப்பட்டவருடைய மனம்புண்படுமோ என்று யோசித்து உண்மையை மறைக்கலாமா..? ஆனாலும் உங்களுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் தவிர்த்தேன்; அப்படியும் நீங்கள் புண்பட்டிருப்பது குறித்து வருந்துகிறேன்.

எனது வரிகள் பதிலுக்கு பதில் என்ற வகையிலேயே அமைந்திருப்பதை கவனியுங்கள்; ஏனெனில் தாங்களே குறிப்பிட்டவண்ணமாக இந்த திரியானது கவனிக்கப்படாமலிருந்தது, அதில் நான் ஆரம்பித்து வைத்த கருத்துக்களை மீண்டும் திரும்பி வாசித்துப்பாருங்கள்; அதன்பிறகே இந்த திரியானது மேலெழுந்து வந்ததை அறியலாம்; நான் எழுதியதில் முன்னுக்குப் பின் முரணாக எதையாவது எழுதிவிடக்கூடாதே என்ற எச்சரிக்கையுணர்வுடனே அண்மைய பின்னூட்டங்களை எழுதினேன்;அந்த அளவுக்கு சில நாட்கள் இடைவெளியில் பல கருத்துக்கள் வந்து குவிந்திருக்கிறது;அத்தனையும் துஷ்டத்தனமான கருத்துக்களாகும்;அவற்றை வாசித்தவுடனே என் மனதில் தோன்றிய வரிகளே எனது ஆரம்ப வரிகளாக இருந்தது;அதாவது இவையனைத்துமே இந்திய துவேஷ கருத்துக்களாகும்.

தூக்கில் போடப்படுவதை எதிர்த்து போராடும் இளகிய உள்ளம் உங்களுக்கு இருந்திருக்குமானால் நீங்கள் இதற்கு முன்பு தூக்கில் போடப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கவேண்டும்;இதோ அப்சல்குருவை தூக்கில் போடுவதை எதிர்த்து டில்லியில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறதாம்; எனக்குத் தெரிந்து ஆட்டோ சங்கர் எனும் குற்றவாளி அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டான்;தூக்கு மேடையில் ஏறுவதற்கு சில வாரம் முன்பு இயேசுவானவரை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு திருமுழுக்கு பெற்றான்;மறுமையின் நம்பிக்கையுடன் தூக்கில் தொங்கி மரித்தான்;இந்த தளமானது ஆரோக்கிய உபதேசத்தில் தேறியவர்களின் ஆவிக்குரிய தளமாக இருந்திருக்குமானால் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களே இங்கே பகிரப்பட்டிருக்கும்;நானும் அதனை இன்முகத்துடனே வரவேற்றிருப்பேன்.

ஆனால் இனவெறியையும் மொழிவெறியையும் வர்க்கவெறியையும் தூண்டும் கருத்துக்களை இங்கே சிலர் கிறிஸ்தவ போர்வையில் இருந்துகொண்டு பகிருவார்களானால் நான் அதற்கு ஒத்துப்போகாமல் அந்த போர்வையை விட்டு வெளியே வந்து சாமான்ய மனிதனாக- சமுதாயத்தில் ஒருவனாக இருந்து வாதிடலாம் வா என்று அழைக்கிறேன்; விவாதிக்கவேண்டிய முதலாவது எடுத்துக்கொள்ளவேண்டிய கருத்து ஜனநாயகமா,தீவிரவாதமா என்பதே; அந்தவகையில் சர்வதேச பயங்கரவாதியாகப் பார்க்கப்பட்ட ஓசாமாவையும் நம்ம ஊர் வீரப்பனையும் குறித்தும்கூட விவாதிக்கலாம்;அவர்களுக்கும் ஆதரவாளர்கள் இருக்கிறார்களே..?

எந்தவொரு யுத்த களத்திலும் கேடயம் அதாவது தற்காக்கும் பாதுகாப்பு கவசம் பிரதானமானதாகும்; இலங்கையில் ஈழமக்களுக்காக போராடுவதாகச் சொல்லி யுத்தம் பண்ணின விடுதலைப் புலிகள் தங்களுக்கு கேடயமாக நம்பியிருந்தது எதை தெரியுமா,மனித வெடிகுண்டு என்ற மாபெரும் கண்டுபிடிப்பை கண்டறிந்து வெற்றிகண்ட தீவிரவாத இயக்கமான அது தன் மக்களையே கேடயமாகப் பயன்படுத்தியது; அதன்காரணமாகவே அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொத்துக்குண்டுகளுக்கு பலியாக நேர்ந்தது; வசதியான தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டார்கள்; பலியானோர் அத்தனை பேரும் ஏழை எளிய மக்களே; அவர்கள் இலங்கை அரசாங்கத்தையும் நம்பமுடியாமல் தங்கள் விடுதலைக்காக் போராடுவதாகச் சொல்லி தங்களையே பலியாக்கும் புலிகளையும் எதிர்க்கமுடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்;

இத்தனை உள்விவகாரங்களையும் மூடிமறைத்துவிட்டு இராஜீவ் கொலையுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒப்பிட்டு விவாதிப்பது சற்றும் மனிதாபிமான செயலாக எனக்குத் தெரியவில்லை;இன்றைய அரசாங்கங்களும் உலக சமுதாயமும் இலங்கைத் தமிழருக்கு நியாயம் செய்திட முன்வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; அதே நேரத்தில் இராஜீவ் கொலைக்குக் காரணமானவர்கள் சட்டத்தின்முன்பு நிறுத்தப்படவேண்டும்; அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினாலும் இந்திய அமைதிப் படையினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலும் அவர்களுக்கு எந்த சலுகையும் காட்டப்படக்கூடாது; இப்படியே ஒவ்வொரு குற்றவாளியும் தான் செய்த குற்றத்துக்குக் காரணம் சொல்லிக்கொண்டே போனால் யாரையுமே யாருமே தண்டிக்கமுடியாமற் போகும்;நீதி விசாரணை அமைப்பும் கேலிக்குரியதாகும்.

josephsneha Wrote on 08-09-2011 12:36:29:

ராஜீவ் கொலைக்கு காரணமனவர்களை தான் முள்ளிவாய்க்காலிலேயே முடித்து விட்டார்களே இப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் (எந்த வகையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது?) தண்டிக்கப்பட்டால் எல்லாம் முடிந்துவிடுமா?


Chillsam on 08-09-2011 12:50:11

நண்பரே, இராஜீவ் கொலைக்குக் காரணமானவர்கள் முள்ளிவாய்க்காலில் தீர்த்துக்கட்டப்பட்டார்கள் என்பது சரியல்ல; அப்படியானால் இந்தியா ‍அதாவது சோனியாகாந்தி தனது கணவனைக் கொன்றவர்களைப் பழிவாங்க இந்திய இராணுவத்தை அனுப்பி மறைமுகமாக யுத்தம் செய்தார் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்பது அர்த்தமாகும்;அதையே விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் சொல்லுகிறார்கள்;ஆனால் உலகெங்கும் பெரும்பிரச்சினையாக உருவெடுத்துள்ள தீவிரவாதத்துக்கு எதிரான போரில் விடுதலைப்புலிகள் அநியாயத்துக்குக் குற்றஞ்சாட்டப்பட்டு சிங்கள இனவெறி அரசினால் தவறாக சித்தரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை;அதற்கு உறுதுணையாக இருந்தது,கருணா எனும் இனதுரோகி என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன்;எனவே கிறிஸ்தவராகிய தாங்கள் தூக்குத்தண்டனையை கிறித்தவ கண்ணோட்டத்தில் பார்ப்பது மாத்திரமல்ல,தீவிரவாதத்தையும் கிறித்தவ கண்ணோட்டத்தில் பாக்குமாறு வேண்டுகிறேன்;அதை முன்னிட்டு உங்களுக்காக ஒரு வசனத்தைப் பதிக்கிறேன்.

"அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்."(மத்தேயு 26:52)

josephsneha Wrote on 08-09-2011 12:48:29:

தனியாக இவர்களுக்கு மட்டுமன்று தூக்கில் போடுவதையே, ஏன் மரண தண்டனையே ஒழிய வேண்டும் என்பது தான் என் விருப்பம். நான் சொல்லாமல் விட்டதால் எல்லாருக்கும் ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை என கேட்காதீர்கள். மரண தண்டனை என்பது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு முரண்பட்டது. அதுபோக அது நிறைவேற்றப்படுவதில் இத்தனை கால தாமதமும், ஒரு சிலருக்காக இது தீவிரப்படுத்தப்படுவதும் நான் இதை எதிர்ப்பதற்கு மற்றொரு காரணம்.


Chillsam on 08-09-2011 13:07:04

தாமதமான நீதியானது அநீதிக்கு சமமாகும்;அந்த வகையில் இராஜீவைக் கொன்றவர்கள் இன்னும் இந்த் தேசத்தில் தண்டிக்கப்படாதது குறித்து நடுநிலையாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்;இந்தியாவில் மட்டுமே நடைபெறக்கூடிய அநியாயமாகும் இது;

இந்த நேரத்தில் நாவரசு கொலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சட்டத்தின் சந்துபொந்துகளில் தப்பித்து இயேசுவிடம் பாவமன்னிப்பு கேட்டு பாதிரியாராகி ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப்போய் மீண்டும் பிடிபட்டு தண்டனைக்காகக் காத்திருக்கும் ஜான் டேவிட்-டுக்காகவும் பரிந்துபேசுவீர்களோ..?

josephsneha Wrote on 08-09-2011 12:55:59:

அந்த வசனத்தை நான் நினைவுகூறுகிறேன் ஆனால் இந்தியா இதற்கு ஒரு துளி கூட உதவாமல் நடு நிலையுடன் இருந்தது என்பது நிச்சயம் தானா? யோசித்து பாருங்கள்? சில விஷயங்களை ரொம்ப ஆழமாக விவாதிக்கவேண்டாம், பல்லை குத்திக்கொண்டு குச்சியை முகர்ந்து பார்த்த கதையாகிவிடும்.


Chillsam on 08-09-2011 13:09:21

எனக்கு அந்த கெட்டப் பழக்க்ம் உண்டு நண்பரே;அதன் காரணமாகவே எனது பற்களின் மோசமான நிலைமைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்யமுடிந்தது;ஏனெனில் எனது பற்கள் எனது மரணத்துக்குப் பிறகும் மரிக்காத தன்மையுடையதல்லவா..?

josephsneha Wrote on 08-09-2011 12:55:59:

... இந்தியா இதற்கு ஒரு துளி கூட உதவாமல் நடு நிலையுடன் இருந்தது என்பது நிச்சயம் தானா?


Chillsam on 08-09-2011 13:14:38

இந்தியா நடுநிலையுடன் இராதிருந்தால் இலங்கை தேசம் நம்முடைய தென்மாநிலங்களில் ஒன்றாக இருந்திருக்கும்;பிறகு சிங்களவனும் இலங்கைத் தமிழனும் போட்டி போட்டுக்கொண்டு இந்திய அரசாங்கத்தை எதிர்த்து போராடிக்கொண்டிருந்திருப்பார்கள்;இந்திய அரசாங்கம் ஜனநாயக வழிமுறைகளை மதிக்கும் காரணத்தினாலேயே விடுதலைப் புலிகளுக்கு உதவமுடியாத் இக்கட்டான நிலை ஏற்பட்டது;மேலும் அன்னை இந்திராவைப் போன்ற விறுவிறுப்பான அரசியல் செய்யும் தலைவர்கள் இந்தியாவுக்கு வாய்க்கவில்லையே..!

josephsneha Wrote on 08-09-2011 12:48:29:

தனியாக இவர்களுக்கு மட்டுமன்று, தூக்கில் போடுவதையே, ஏன் மரண தண்டனையே ஒழிய வேண்டும் என்பது தான் என் விருப்பம். நான் சொல்லாமல் விட்டதால் எல்லாருக்கும் ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை என கேட்காதீர்கள். மரண தண்டனை என்பது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு முரண்பட்டது. அதுபோக அது நிறைவேற்றப்படுவதில் இத்தனை கால தாமதமும், ஒரு சிலருக்காக இது தீவிரப்படுத்தப்படுவதும் நான் இதை எதிர்ப்பதற்கு மற்றொரு காரணம்.


Chillsam on 08-09-2011 13:23:28

இந்தியாவில் தூக்குத் தண்டனையை இரத்து செய்யச் சொல்லி அன்னா ஹசாரே மூலம் கச்சத்தீவில் ஒரு உண்ணாவிரதத்தை ஏற்பாடு பண்ணுவோமா..? திடீரென தமிழனுக்கு தூக்குத் தண்டனைக் கைதிகள் மீது என்ன பாசமோ..? ஏன் கசாப் உயிர் மட்டும் அத்தனை கேவலமா என்ன..? ஒசாமா பின்லேடன் கூட நல்லவர் போலத் தெரிகிறதே..?

pgolda Wrote on 08-09-2011 12:58:41:
Joseph: //இந்த மாதிரி கருத்துக்களை எடுத்துவைத்தால் என்னமோ தேச துரோகம் செய்துவிட்ட ரேஞ்சில் சிலர் பேசுகின்றனர். உண்மையில் நேற்று சில பதிவுகளை வாசித்தபோது தளத்தைவிட்டே போய்விடலாமா என்று யோசித்தேன். விமர்சித்தாலே தேச விரோத செயலா? //

ஐயா, இப்படியெல்லாம் பேசி அனுதாபம் தேட வேண்டாம். எல்லோருக்கும் மனசு இருக்கு. எல்லோருக்கும் வலிக்கத்தான் செய்யும். ராஜீவ் காந்தியயும், அவர் கொலையையும் துச்சமாக பேசியதைப் பார்க்கையில் எனக்கு மனது மிகவும் வலித்தது!!


Chillsam on 08-09-2011 13:29:08

"ஓடிப்போயிருவேன்..." மிரட்டலை கோல்டா மற்றும் நான் உட்பட எல்லோருமே (???) கையாண்டிருக்கிறோம்; அண்ணன் அற்புதம் மட்டுமே இதுபோல அறிவித்ததில்லை;ஆனால் அத அடிக்கடி செஞ்சு காட்டுற ரோஸக்கார மனுஸன் அவரு..! ஆனாலும் எப்போதுமே இது பிரசவ வைராக்கியமாகவே இருந்து வந்துள்ளது; அந்த அளவுக்கு பாசம்...அப்படித்தானே..?! இவ்வளவு பாசத்தை நெஞ்சுல போட்டு சொமந்துகிட்டு ஏன் சிலர் வேஸம் போடறாங்களாம்..?

josephsneha Wrote on 08-09-2011 13:40:58:

நண்பரே, ஜான் டேவிட் பாதிரியாராகி ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப்போனார் என்பது ஒரு வதந்தியாக தான் இருந்தது, அவன் இருந்ததென்னமோ இங்கே தான். தவறான தகவலை தராதீர்கள். நீங்கள் நக்கலாக சொன்னீர்களா என்ன என்று எனக்கு தெரியாது ஆனால் என்னால் அப்படி இருக்க முடியும், சும்மா ஸ்டன்ட் அடித்து பழக்கமில்லை, ஏன் ட்ரூத் சீக்கர்ஸ் தளத்திற்கு போகாமல் தானே இருக்கிறேன். ஏற்பாடு பண்ணுங்களேன், இன்னும் ஹசாரே தாக்கம் ஓயவில்லை, பல முன்னேறிய நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்திருக்கின்றன, நார்வேயில் கொலை வேட்டை நடத்தியவன் கூட தனிமை சிறையில் தான் அடைக்கப்படுவானாம், நம்மை ஆண்ட பிரிட்டிஷார் கூட அதை ஒழித்து விட்டனர்.தாமதமான நீதியும் கூட அநீதி என ஒத்துக்கொண்டதுக்கு நன்றி, ஏன் நீதி செலுத்தப்பட 21 வருடம் ஆகவேண்டும். ஐயா, நடு நிலையாளர்கள் அதிர்ச்சி அடைய வேண்டுமானால் இன்னும் எவ்வளவோ விஷயங்களுக்கு இங்கே அதிர்ச்சி அடையலாம். குஜராத், ஒடிஷா போன்ற இடங்களில் எல்லாம் நீதி செலுத்தப்பட்டாகிவிட்டதா? இதுக்கு மட்டும் பதிலே கொடுக்கமாட்டேங்கறீங்க‌.[/color]


Chillsam on 08-09-2011 13:55:05

நண்பரே, ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப்போனது வதந்தியல்ல,உண்மை தான்;ஆனால் அவன் தேடப்படும் போது இங்கே இருந்தான் என்பதே உண்மை;தான் செய்த குற்றத்துக்கான தண்டனையை ஏற்காமல் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துபவன் கிறிஸ்தவனா என்று சொல்லுங்களேன்..?

இந்தியா என்பது ஒரு தேசமாக இருக்கவேண்டுமானால் இதுபோன்ற பிரிவினைக் கருத்துக்களை கிறிஸ்தவர்களாகிய நாம் ஊக்கப்படுத்தக்கூடாது என்பதே என்னுடைய நிலையாகும்; மதத்துக்காகவும் மொழிக்காகவும் இனத்துக்காகவும் ஒவ்வொரு பிரிவும் பிரிந்து மோதிக்கொண்டிருக்குமானால் இந்தியா என்ற தேசம் சிதைக்கப்படும்;அதுவே வல்லரசுகளின் கனவாகவும் இருக்கிறது.

அன்னா ஹஸாரே என்பவர் தனிமனிதர் அல்ல என்பதும் திரைமறைவிலுள்ள இந்திய விரோத சக்திகளின் கைப்பாவை என்பதும் விரைவில் தெரியவரும்; ஆனாலும் அப்போது எல்லாம் கைமீறி முடிந்துபோயிருக்கும்; அது தானே நமக்கு ஸ்பெஷாலிட்டி..!

ஏன்,கடந்த ஞாயிறு மாலையில் நீங்கள் விஜய் டிவியின் டாக் ஷோ பார்க்கவில்லையா..? அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்குக் காரணமானது,"அன்னெத்திக்கல் மாப்" என்று சொல்லப்படுகிறதே..? இதைக் குறித்து தனி கட்டுரை எழுத இருக்கிறேன்.

colvin Wrote on 08-09-2011 18:51:34:

Chillsam Wrote: இனியும் இந்திய துவேஷ கருத்துக்களை அவர் தொடர்ந்து விதைப்பாரானால் அதற்குரிய கடுமையான எதிர்வாதங்களை அவர்களை சந்திக்கவேண்டியிருக்கும் என்ப்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்

உமது மிரட்டல்களையெல்லாம் வேறு யாரி்டமாவது வைத்துக் கொள்ளும். உம்மைப் போன்றோர்களுடன் விவாதம் புரிவது நேர வீணடிப்பு. உமக்கு அரசியலும் தெரிவதில்லை. வேதமும் புரிவதில்லை இலங்கையை அவமானப்படுத்தும் எத்தனை பதிவுகளை போட்டுள்ளீர்? எந்த அடிப்படையில் வீடியோக்களையும் படங்களையும் போடுகிறீர்? உமக்கு வெட்கமில்லையா?

. உமக்கென்ன கூகிளில்தான் உமக்கு நல்ல பெயர இருக்கிறதே

அன்பு சகோ. ராவங“ஜோன்ஸடன் நீங்க்ள நினைக்கும் விதமாக நான் இல்லை. நான் இலங்கை அரசு ஊழியன். எனவே அரசாங்கத்தையே எப்போதும் ஆதரிப்பேன். தற்போதைய என் நிலைப்பாடும் அப்படியே. புலிகள்தான் தமிழ் மக்களின் தற்போதைய துன்ப நிலைக்கு காரணம். அவர்கள் ஒழிக்கப்பட்டது நிம்மதியே. தற்போது உள்ள இலங்கை அரசிற்கெதிரான விசாரணைகளும் தேவையற்றவை என்பதே என் தனிப்பட்ட கருத்து

ஆரம்பத்திலிருந்தே இலங்கையில் இளைஞர்களுககு ஆயுதப் பயிற்சி அளிததது இந்தியாவே. பிற்பாடு இந்தியப்படைகள் பாரிய இனஅழிப்பு போரினை தமிழர்களுக்கு எதிராக நடத்தின. ஆயிரக்கணககானோர் மாண்டனர். பல்லாயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் வீடு வாசல்கள இழந்தோர்., அநாதையானோர், அங்கவீனமானோர் மிக அதிகம்.

விசாரணை என்று வந்தால் அனைத்தையும் விசாரிக்க வேண்டும். தற்போது இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என கோருவது நியாயமற்றது.


Chillsam on 08-09-2011 20:14:26

இதுக்கு எங்க ஊரில அந்தர் பல்டி என்று சொல்லுவர்;அதாவது குரங்கு அடித்த பல்டி என்பது பொருளாகும்; இலங்கை தேசம் குரங்கு சம்பந்தப்பட்டதானதால் அந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி அவ்வப்போது பல்டியடிப்பது வழக்கம் தான்;அதைக் குறித்து ஆரோக்கிய மனநிலையுள்ளவர்கள் ஆச்சரியப்படக்கூடாது;இவர்களுக்கெல்லாம் தமிழரின் பாதுகாப்பைவிட தத்தமது சொந்த பாதுகாப்பே முக்கியமாகும்;போதை மருந்துக்கும் ஆயுதக் கடத்தலுக்கும் பேர்போன சில மர்ம நபர்களால் இந்தியாவின் தெற்கு பகுதியே பதட்டமானதாக மாறியது சில அரசாங்க ஊழியர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை;"நீயா...நீயெல்லாம்.." என்று எகத்தாளமாக எதிராளியை மட்டந்தட்டத் தெரிந்தால் மட்டும் போதாது;கொஞ்சம் சிந்திக்கும் திறனும் தேவைப்படும்.கூகுளில் தேடினால் எதுதான் கிடைக்காது..? கூகுளில் கிடைப்பதெல்லாம் பவித்ரமானதா என்ன..?

உலை வாயை மூடாமல் ஊர் வாயை மூடப்போனானாம் ஒருத்தன்; தன்னுடைய கண்ணில் இருக்கும் சாதாரண தூசியை ஊதிப் போடப் போடத்தெரியாதவர்கள் அடுத்த வீட்டிலுள்ள உத்திரங்கள் தகர்க்கப் புறப்பட்டுவிட்டார்கள்; யார் வெட்கப்படவேண்டும்? யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளை அழிக்க இந்தியாவின் உதவி வேண்டும்; ஆனால் அதன் விளைவுகளையும் பழிகளையும் இந்தியா சுமக்கவேண்டும்; அரசாங்க ஊழியரின் நியாயம் நன்றாக இருக்கிறது;மானங்கெட்ட ரெட்டை நிலைப்பாட்டில் இருப்போர் எதிராளியைப் பார்த்து வெட்கமில்லையா என்று கேட்பது கேலிக்குரியதாகும். பாலுக்கும் காவலாம் பூனைக்கும் தோழனாம்..!


paul222 Wrote on 08-09-2011 20:18:39:
colvin wrote: அன்பு சகோ. ராவங“ஜோன்ஸடன்
நீங்க்ள நினைக்கும் விதமாக நான் இல்லை. நான் இலங்கை அரசு ஊழியன். எனவே அரசாங்கத்தையே எப்போதும் ஆதரிப்பேன். தற்போதைய என் நிலைப்பாடும் அப்படியே. புலிகள்தான் தமிழ் மக்களின்தற்போதைய துன்ப நிலைக்கு காரணம். அவர்கள் ஒழிக்கப்பட்டது நிம்மதியே.

தற்போது உள்ள இலங்கை அரசிற்கெதிரான விசாரணைகளும் தேவையற்றவை என்பதே என் தனிப்பட்ட கருத்து

சபாஷ் சகோதரர் கொல்வின் அவர்களே,

இலங்கை தமிழருக்காக மாங்கு மாங்கு என்று எழுதுகிறீர்கள் என நினைத்தேன்.உலகம் முழுவதும் கண்டனத்துக்கும் போர்க்குற்றவாளியாகவும் கருதப்படும் ராஜபக்‌ஷக்கு விசாரணை தேவையற்றதா? விடுதலைபுலிகளை மட்டுமல்லாது அப்பாவி தமிழர்களையும் வேரறுத்த ராஜபக்‌ஷக்கு விசுவாசமாக பேசும் உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது எங்கள் முன்னாள் பிரதமரையும் இந்தியாவையும் பற்றி பேசுவதற்கு? சொல்லுங்கள்.

உங்கள் இரட்டை வேடம் கலைந்து விட்டது நண்பரே!

colvin Wrote on 08-09-2011 20:28:47:
நீங்கள் மட்டும் எப்படி நடந்து கொள்கிறீர்கள். இந்தியா இலங்கை மேற்கொண்ட படுகொலைகளை கண்டு கொள்வதில்லை. அதுவும் அத்துமீறி செய்த படுகொலைகள். இலங்கை அரசை கண்டிக்க மட்டும் எப்படி முண்டியடிக்கிறீர்கள். இந்த அக்கறையில் ஒரு சதவீதமேனும் இந்தியப் படைகளின் அட்டூழியங்களுக்கு காட்டுகிறீர்களா?

இந்தியப் படுகொலைகளுக்கு விசாரணை தேவைப்படாதபோது எதற்காக இலங்கைக்கு மட்டும் விசாரணை தேவை? போரை முன்னின்று நடத்தியதே இந்தியா தான். அப்ப அதற்கும் விசாரணை தேவையில்லையா?
உங்களுக்கு மட்டும்தான் தேசப்பற்றா எனக்கு இருக்க கூடாதா? இலங்கையை தண்டிப்பதால் தமிழருக்கு நீதி கிடைத்து விடுமா?

குற்றவாளி என நீங்கள் சொல்லாதீர்கள். இதே நாடுகள்தான் ஐ.நா வில இலங்கை அரசினை பாராட்டின. சுயநல நோக்கத்த்திற்காகவே தற்போது இலங்கை அரசை பணிய வைகக எத்தனிக்கின்றன. முடிவு இலங்கைகு சுபமாகவே இருக்கும். இலங்கை தணடிக்கப்பட்டால் போரை முன்னின்று நடத்திய இந்தியாவை என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.


Chillsam on 08-09-2011 20:48:46

மகா கேவலமானதும் பேடித்தனமானதுமான குற்றச்சாட்டு இந்தியாவின் மீது சுமத்தப்படுகிறது; இந்தியா விடுதலைப்புலிகளுக்கெதிரான போரில் ஈடுபட்டதாம்; இலங்கை மாமா விளக்கு பிடித்தாராம்..நல்ல ஜோக்..! இலங்கை நிகழ்த்திய போர்க்காலக் குற்றங்களுக்காக ஒருபோதும் தண்டிக்கப்படப் போவதில்லை; ஏனெனில் ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக சீனா களம் இறங்குகிறது;கருணா ஆதரவாளர்கள் இனி பாயசம் சாப்பிடலாம்..பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சி..!

pgolda Wrote on 08-09-2011 20:46:04:

Colvin: உமக்கென்ன கூகிளில்தான் உமக்கு நல்ல பெயர இருக்கிறதே
--

இது பாராட்டுதான் சில்சாம் அவர்களே!! சகோ கொல்வின் உங்களைத் திட்ட நினைத்தாலும் அவரால் முடியவில்லை! அவர் இருதயத்தில் இருப்பது வாயில் வந்து விட்டது!


Chillsam on 08-09-2011 20:58:16

"கள்ளப்போதகன்" என்று கூகிளில் தேடினால் என்னுடைய பெயரே முதலில் வருகிறது என்பது இலங்கை அரசாங்க ஊழியரின் கிண்டல்;அவர் இதனை மீண்டும் மீண்டும் சொல்லி ஓவென சிரித்தது என் காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது;எட்டப்பன்கள் எல்லா காலத்திலும் பிறக்கிறார்கள்; கட்டபொம்மன்களுக்கே பஞ்சகாலம் போலிருக்கிறது. இது தனிப்பட்ட முறையில் (சாட்டிங்கின் போது...) ஒருவரை புண்படுத்தும் என்பதையறிந்தும் பரியாசமும் எகத்தாளமுமாக நண்பர் என்ற போர்வையில் மெத்தப் படித்த மேதாவி செய்த தூஷணமாகும்.

  • "அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு.
  • சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.
  • மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.
  • நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.
  • என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்." (மீகா.7:4 முதல் 8 வரை)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

தூக்குத்தண்டனை சரியா இல்லையா என்பதே சரியான விவாதமாக இருக்க முடியும்.என்னைக் கேட்டால் எந்த உயிரையும் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதால், தூக்குத் தண்டனையை நீக்கி விடலாம்.

ராஜீவ் காந்தி கொலை என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்குவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டசபையில் 3 பேரின் தண்டனை குறைப்பிற்கு தீர்மானம் நிறைவேற்றியது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

இவர் சூழல் எனும் அற்புதமான சிறுகதையினை தமிழ் கிறித்தவ தளத்தில் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது;அதனைப் பதித்த வேகத்திலேயே அவர் நீக்கிவிட்டாலும் என் போன்றோர் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது; அதனை அவர் விரும்பினால் இங்கே பதிக்கலாம் அல்லது நாமே எழுதி பதிப்போம்

--

இப்ப சமீபத்தில் எழுதி நீக்கப்பட்ட கதையா? இங்கு பதித்து சூழலைக் கெடுக்காதீர்கள்!


 எனக்கன்பான சகோதரியின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இவர் சூழல் எனும் அற்புதமான சிறுகதையினை தமிழ் கிறித்தவ தளத்தில் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது;அதனைப் பதித்த வேகத்திலேயே அவர் நீக்கிவிட்டாலும் என் போன்றோர் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது; அதனை அவர் விரும்பினால் இங்கே பதிக்கலாம் அல்லது நாமே எழுதி பதிப்போம்

--

இப்ப சமீபத்தில் எழுதி நீக்கப்பட்ட கதையா? இங்கு பதித்து சூழலைக் கெடுக்காதீர்கள்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நம்முடைய தளத்தின் நண்பரான ஜோசப் அவர்கள் சில நாட்களுக்கு முன்பதாக தமிழ் கிறித்தவ தளத்தில் மிகுந்த பாரத்துடன் ஒரு பதிவைப் போட்டிருந்தார்;அதில் யாரும் கருத்து கூற முன்வராத நிலையில் இன்று அதில் நம்முடைய மற்றொரு நண்பர் ராவங் ஜாண்சன் எனும் ஆசிரியர் (இவர் சூழல் எனும் அற்புதமான சிறுகதையினை தமிழ் கிறித்தவ தளத்தில் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது;அதனைப் பதித்த வேகத்திலேயே அவர் நீக்கிவிட்டாலும் என் போன்றோர் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது; அதனை அவர் விரும்பினால் இங்கே பதிக்கலாம் அல்லது நாமே எழுதி பதிப்போம்.) தம்முடைய மேலான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்; அதனை நம்முடைய யௌவன ஜனம் தளம் வாசக நண்பர்களுடைய கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்; இது சம்பந்தமான என்னுடைய கருத்தை இன்றிரவு பகிர்ந்துகொள்வேன்.


தூக்கு தண்டனை சரியானது தானா..?

http://health.howstuffworks.com/diseases-conditions/death-dying/death-by-hanging.htm

images?q=tbn:ANd9GcQ2rLjQQPXiLM0odB207_Zg1j-w2AmtuD9hKjVOAqp4xx4IRP-kimages?q=tbn:ANd9GcRfZxCvkb9VCnjGZuRKhMqjjaHHEZTCB365gjp9NfJG646bA6my

 

இனி...

நண்பர் ஜோசப் மற்றும் ராவங் ஆகியோருடைய கருத்துக்கள்:

josephsneha@Tcs on 27-08-2011 00:17:40 

The recent announcement of the rejection of the mercy petition of the 3 convicts in the sensational Rajiv Gandhi murder case has created a flutter in many circles. While incarcerating in prison for 21 years, the 3 had already lost everything life had in store for them. While the prime accused in Sri lanka are pronounced dead the Indian state had now recommended death for the last 3 of the surviving convicts.

The think tank in India are thinking twice about the fate of these 3 men, it is high time that the youth of this country debate the need of the cruel punishment, if they are to be hanged they should have been hanged long back had this case been dealt in the fast track mode. Facing the uncertainty of death hanging like a sword over their heads, these men had lived in death's shadow for the past 21 years. Elite men like Justice Krishna Iyer had condemned death sentence for any one. Many countries are against this and had abolished it. Even the erstwhile rulers of our country, the British had abolished death sentence.
No one has the right to take off Life and it is equivalent to murder for justifying the punishment for another murder.
A life lost is always lost and to do it after a long gap is something.... it chokes...


If the convict is remorseful then he, by all means can be forgiven and given pardon. Even the worst sinner has a chance of repentance and getting saved says the message of Christ. We as christians can pray so that these men find grace in the eyes of the Lord as well as the government and let us unite our hearts that such punishment is scrapped from our constitution.

Personally I am against the death sentence, may sanity prevail. Friends can express their views and the forum is open for discussion

On 29-08-2011 11:16:06

வேலூர் சிறைச்சாலையில் தூக்கு மேடையை சீர்செய்ய போலீசார் பல மேஸ்திரிகளையும் ஆசாரிகளையும் அழைத்து இருக்கிறார்கள், ஒருவர் கூட அதற்கு முன்வரவில்லையாம். இதில் இருந்தே தெரிகிறது பலருடைய எண்ணம் இத்தண்டனைக்கு எதிராக இருப்பதை. இதற்கென போராட்டங்கள் வலுத்து வருகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இவர்களை தூக்கிலிட துடியாய் துடிக்கிறார், அதேபோல ராமகோபலய்யரும் இவர்களை தூக்கிலிட வேண்டும் அப்போது தான் கொடுஞ்செயல் புரிய மக்கள் தயங்குவார்கள் என்கிறார்.

தங்கபாலு சொன்னபடி தூக்கிலிடட்டும். அப்புறம் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட ஆளே இருக்கமாட்டார்கள், அதன் பின்னர் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கானோரை படுகொலை செய்த மாபாதகர்களை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத்தர இவர் இருக்கும் காங்கிரஸ் கட்சி முன்வருமா? அதே போல ராமகோபாலய்யர் சொன்ன மாதிரி செஞ்சுடலாம் அப்படியே ஒரிசாவிலும் குஜராத்திலும் மதவெறியின் காரணமாக கொடுஞ்செயல் புரிந்தவரையெல்லாம் வரிசையாக தூக்கு மேடைக்கு அனுப்பவேண்டும் செய்ய ஆவண செய்வாரா ராமகோபாலய்யர். மாண்புமிகு த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் இப்போது ஈழ‌ விஷ‌ய‌த்தில் பாராட்ட‌த்த‌க்க‌ நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இப்போது த‌லையிட்டு இத்த‌ண்ட‌னையை ர‌த்து செய்வ‌த‌ன் மூல‌ம் சிங்க‌ள் வெறிய‌ர்க‌ளுக்கு ஒரு வ‌லுவான‌ நிலைப்பாட்டை சிக்ன‌லாக‌ அனுப்ப‌ முடியும்.

rawangjohnson@Tcs on 29-08-2011 22:36:45

அன்புடைய சகோதரர் ஜோசப் அவர்களே,

வணக்கம்.

நீங்கள் இரண்டு தொடர்புடைய பிரச்சனைகளை இங்கு முன் வைக்கிறீர்கள்....

1. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்டி விடுதலை செய்தல்.

2. இந்தியாவில தூக்குத் தண்டனையை ரத்து செய்தல்.

இந்த இரண்டு பிரச்சனைகள் தொடர்பாக நான் என் சொந்தக் கருத்தைத் தெரிவிக்கிறேன்.

பாரததேசம் நீதி நியாயம் தொடர்பான விஷயங்களில் எப்போதும் சங்கடமான நிலையில் சிக்கிக் கொள்கிறது. பல சமயங்களில் தர்மம் அடிப்படையில் சரியானதைச் செய்ய எத்தனித்தாலும், சூழ்நிலை காரணமாக இந்தியாவால் இயலாமல் போகிறது.

இந்தியா மனது வைத்திருந்தால், எப்போதோ இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால், சூழ்நிலையின் நிமித்தமாக அதனால், அப்படிச் செய்ய முடியவில்லை. இலங்கை உள்நாட்டுப் பிரச்சனையில் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால், பக்கத்தில் உள்ள பாக்கிஸ்தான் வேண்டுமென்றே சிங்கள அரசுக்குச் சார்பாகக் குரல் கொடுக்கும். அதேபோல், ஸ்ரீ லங்கா அரசுக்குச் சாதகமாகப் பேசினாலும், அதன் சமரச முயற்சிக்கு எதிராக, தமிழர்களுக்கு ஆதரவாகப் பாக்கிஸ்தான் பேசும்.

இன்னொரு கோணத்திலும் நாம் இந்தப் பிரச்சனையை நோக்க வேண்டியிருக்கிறது. தமிழர்களின் தனிநாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கினால், காஷ்மீரின் தனிநாடு கோரிக்கைக்கும் இணங்க வேண்டும் என்று பாக்கிஸ்தான் நிர்பந்திக்கும்.

இந்த இரண்டு கோணங்களிலும் பாக்கிஸ்தானைப் போலவே, இந்தியாவோடு பகைமை கொண்டுள்ள சீனாவும் எதிர்ப்பாகவே செயல்படும். இந்திய எந்த முடிவை எடுத்தாலும், தன் தேசத்தின் எதிர்கால விளைவுகளை தேசத் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு இந்திய பச்சை விளக்கு காட்டினால், இந்தியாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு மாநிலங்களும் தனிநாடு கோரிக்கையை முன் வைக்கும். இது இந்தியாவின் எதிர்கால அரசியலுக்குக் கடும் சேதத்தைத்தான் விளைவிக்கும்.

இப்படி எல்லா கோணங்களிலும் பார்க்கும் போது, அதன் நிலைப்பாடுகள் நமக்கு வேதனையைத் தந்தாலும், நியாயமாகவே தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், விருப்பம் இல்லாவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

இப்போது ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விஷயத்திற்கு வருவோம். பார்க்கப் போனோல் அந்த மூவராலும் இனி நாட்டின் பாதுகாப்புக்கு எந்தப் மிரட்டலும் வராது எனலாம். ஆனால், அவர்களைத் தூக்கிலிடுவதற்கு இந்திய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற அரசியல் குற்றங்களுக்கு என்னதான் தண்டனை வழங்கப்பட்டாலும், அரசியல் தலைவர்கள் படுகொலைகள் என்றும் ஓயப் போதில்லை. இப்போது பிரதமாரக உள்ள மன்மோகன் சிங்கை, அவருடைய சொந்த காளிஸ்தான் ஜனங்களே கொலை செய்ய சதித் திட்டம் தீட்டலாம். எதிர்காலத்தில் வருகிறது பிரதமருக்கும் இதே கதிதான். அன்னல் காந்தி அவர்களை கோட்சே சுட்டுக் கொன்றதுபோல் அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் இயற்கையான மரணத்தைத் தழுவவுவது அசாத்தியமான காரியமாகி விட்டது. இந்த அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒன்றாகதான் இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பற்றிருக்க வேண்டும்.

சகோ.ஜோசப் அவரிகளிடம் பின்வருபவர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டது நியாயமா என்று கேட்கவிரும்பிகிறேன்....

1. ஓசாமா பின் லாடேன்
2. சடாம் ஹுசேன்
3. மும்பாய் தாஜ் விடுதியைத் தாக்கியவர்கள்

இவர்கள் வேட்டையாடப்பட்டதில் நாம் அதிகமாகக் கவலைப் படவில்லை ஏன்றால், ராஜீவ் படுகொலையில் சம்பந்தப் பட்டவர்கள் மூவருக்காகவும் ஏன் நம் மனம் கலங்குகிறது?

விருப்பமில்லாவிட்டாலும், நீதிமன்றத்தின் உத்தரவின்படி நாம் அந்த மூவரையும் தூக்குத் தண்டனைக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், இஸ்லாமிய சந்தர்ப்பவாதிகள், இவர்களுக்கு வழங்கப்பட்ட கருணையைத் தங்கள் ஜிகாத் சகாக்களுக்கும் வழங்க வேண்டும் என்று பிற்காலத்தில் கேட்பார்கள்.

உங்கள் பதில் கண்டு, ‘தூக்குத் தண்டனை’ தொடர்பான காரியங்களை அடுத்தப் பதிப்பில் விவாதிக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard