Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவிக்குரிய மரணம், சரீர மரணம்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: ஆவிக்குரிய மரணம், சரீர மரணம்
Permalink  
 


joseph wrote:

//இதற்கு அர்த்தமே புசிக்காத பட்சம் சாகவே போவதில்லை என்பதுதான். பூமி பத்தாது என்பதெல்லம் உம் எண்ணம். மனிதன் தோன்றி கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளில் மொத்த ஜனத்தொகை ஏறத்தாழ 50பில்லியன் மட்டுமே. இதில் எல்லாருக்கும் 100 சதுர அடி கொடுத்தாலும் ஏதேனும் ஒரு கண்டமே போதுமானதாக இருக்கும். தேவனுடைய ஞானத்தை குறைவாக எண்ணவேண்டாம்.//


 ஆமாமா சாகாதிருந்திருந்தால் ஒவ்வொருவருக்கும் இப்போதைய கணக்குப்படி 10-க்கு 10 சதுர அடி..!! இனி ஒரு 1000 வருடம் கூட தாண்டும்போது 6-க்கு 4 சதுர அடி மட்டுமே ஒவ்வொருவருக்கும் போதுமானதாக இருந்திருக்கும். (பூமியை பண்படுத்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது. மல்லாக்க படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் போதுமானது...!!!)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

joseph wrote:
துன்மார்க்கன் அழிந்து, இல்லாமல் போனால் அப்போ நியாயதீர்ப்பு என்பது யார் யார் எந்த கோர்சில் சேர்வது என்ற கவுன்சிலிங்காக இருக்குமோ?

 சூப்பர் கேள்வி..கிண்டல் எகத்தாளமும் அல்ல...நகைச்சுவையும் அல்ல... அப்புறம்... அதை தெரிஞ்சு ஆகப்போறது ஒண்ணுமில்லே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//ஏனோக்கு எலியா விஷயங்களூக்கு பின்னர் வரலாம். தேவன் மனிதனை படைத்ததது அவனை பூமியில் நித்தியமாக இருக்கும்படிதான். இதைப் புசித்தால்தான் சாவாய் என்றுதான் சொன்னார். இதற்கு அர்த்தமே புசிக்காத பட்சம் சாகவே போவதில்லை என்பதுதான். பூமி பத்தாது என்பதெல்லம் உம் எண்ணம். மனிதன் தோன்றி கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளில் மொத்த ஜனத்தொகை ஏறத்தாழ 50பில்லியன் மட்டுமே. இதில் எல்லாருக்கும் 100 சதுர அடி கொடுத்தாலும் ஏதேனும் ஒரு கண்டமே போதுமானதாக இருக்கும். தேவனுடைய ஞானத்தை குறைவாக எண்ணவேண்டாம்.

மரணம் என்றாலே அழிவுதான் நீஙகள் எண்ணுகிறபடி வேரொரு விதமாக உயிரோடு இருப்பது அல்ல‌....//

 

என்ன செய்ய உங்களுக்கு அலர்ஜியான விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு உவமைகளாக தெரிகிறது ( நரகம் தான்). துன்மார்க்கன் அழிந்து, இல்லாமல் போனால் அப்போ நியாயதீர்ப்பு என்பது யார் யார் எந்த கோர்சில் சேர்வது என்ற கவுன்சிலிங்காக இருக்குமோ? சதுசேயருக்கு பதில் சொல்லும் போது ஆண்டவர் என்ன சொன்னார், தேவன் செத்துப்போன ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபுக்கா தேவனாக இருக்கிறார்? கல்லறைக்குழியில் செயலற்ற நிலையிலேயே அவர்கள் நிலை இருக்கிறது என்றால் இஸ்ரவேலருக்கு தன்னை வெளிப்படுத்தும் போது ஆண்டவர் ஏன் ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் என சொல்கிறார். சவுலுக்கு காணப்பட்ட சாமுவேலின் ஆவி என்பது என்ன? 

 




__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

(நீங்க அங்க போய் பார்க்கலாம் ஜோசப் அவர்களே! தப்பில்லை. சோல் இப்ப(சில மணி நேரங்களாக) மாறிட்டார்!)

--

soul:

ஆரம்பம் முதல் இறுதிவரை வேதத்தில் இல்லாத வார்த்தைகளைப் பதித்துவிட்டு ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம் என்கிறீர்.

தலைப்பே தவறு. வேதத்தில் மரணம் என்றால் மரணம் மட்டுமே. அதென்ன ஆவிக்குரிய மரணம், சரீர மரணம். வேதத்தில் இல்லாத வார்த்தைகளைப் போட்டு குழப்ப வேண்டாம். பூமியை நிரப்புங்கள் என்பதுதான் தேவன் மனிதனுக்குக் கொடுத்த ஆசீர்வாதம். பரலோகத்தை நிரப்புங்கள் என்பதல்ல. பூமி ஏதோ ஒரு ஃபேக்டரி போலவும் தேவன் மனிதர்களைப் பூமியில் படைத்து அதில் தேர்ந்தெடுத்து பரலோகத்துக்கு ஆள் சேர்ப்பதுபோல உள்ளது உமது பதிவு.

மரணத்துக்குப் பின் ஆத்துமா அழிவுரும் என்று நாங்கள் சொல்லவில்லை. மரிப்பதே ஆத்துமாதான், மனிதனே (உயிரூட்டப்பட்ட சரீரமே) ஆத்துமா. ஆத்துமா என்பது என்னவோ உருவமில்லாத உணர்வுள்ள ஏதோ ஒன்று அது மனிதன் மரிக்கும்போது வெளியேறி வேறெங்கோ போகிறது என்பது வேதத்தில் இல்லாத ஒன்று. இதுவே நீங்கள் சாகவே சாவதில்லை என்ற பிசாசின் கோட்பாடு.

//இல்லாமல் போன ஒன்று எப்படி அழிய முடியும். தற்கால அறிவியலோடு கூட இவர்கள் கூற்று ஒத்துப்போவதில்லை. மரணத்தை பற்றிய சத்தியம் நன்ன்ன்ன்ன்ன்றாக தெரிந்தவர்கள் இதை விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்.//

டாக்டர்... அழிவு என்பதே இல்லாமல் போவது என்ற சாதாரண விஷயத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது? நித்திய ஜீவனுக்கு எதிர்ப்பதம் நித்திய அழிவாகும் (Destruction Beyond recovery) ஜீவனுக்கு எதிர்ப்பதம் மரணமே வேறு வடிவிலோ ரூபத்திலோ 'ஜீவிப்பது' அல்ல. இருந்தான், இல்லை. அவ்வளவே.

ஆதியாகமம் 3:19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

பிரசங்கி 3:20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

//ஏனெனில் மனிதன் பலுகி பெருகும் பட்சத்தில் அப்போது இருந்து அனைவரும் தங்கிவிட்டால் the earth would have been overpopulated. மரணம் என இப்போது நாம் பார்க்கும் காரியம் வேறு விதமாக இருந்திருக்கும். Probably the exit route would have been different and better. ஒருவேளை பாவம் செய்யாத சரீரமாக இருந்திருந்தால் அந்த மனிதன் தேவனோடு சஞ்சரித்துகொண்டிருக்கும் போதே (அவன் அந்த ஐக்கியத்தை இழக்காததால்) எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பான் (ஏனோக்கை போல).//

ஏனோக்கு எலியா விஷயங்களூக்கு பின்னர் வரலாம். தேவன் மனிதனை படைத்ததது அவனை பூமியில் நித்தியமாக இருக்கும்படிதான். இதைப் புசித்தால்தான் சாவாய் என்றுதான் சொன்னார். இதற்கு அர்த்தமே புசிக்காத பட்சம் சாகவே போவதில்லை என்பதுதான். பூமி பத்தாது என்பதெல்லம் உம் எண்ணம். மனிதன் தோன்றி கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளில் மொத்த ஜனத்தொகை ஏறத்தாழ 50பில்லியன் மட்டுமே. இதில் எல்லாருக்கும் 100 சதுர அடி கொடுத்தாலும் ஏதேனும் ஒரு கண்டமே போதுமானதாக இருக்கும். தேவனுடைய ஞானத்தை குறைவாக எண்ணவேண்டாம்.

மரணம் என்றாலே அழிவுதான் நீஙகள் எண்ணுகிறபடி வேரொரு விதமாக உயிரோடு இருப்பது அல்ல‌....

ஒரு நல்ல பதிவை உருப்படியான பதிவை போதனைகள் பகுதியில் தொடங்கியுள்ளீர்கள். ஆனால் பரிதாபம் ஒருவர் கூட இதுகுறித்து பதிய முன்வரமாட்டார்கள். சோல் மற்றும் பெரேயன்ஸை விமரிசிக்க குதிக்கும் இவர்கள் மரணம் குறித்து பதியவே மாட்டார்கள். குட்டு வெளிப்பட்டுவிடுமே. கேட்டால் பிரசங்கி யின் புத்தகம் பிசாசு எழுதியது என்றுகூட சொல்வார்கள்...

ஒரு வேளை கொல்வின் மீண்டும் அவரது வசந்தகுமாரின் கொள்கைகளை பதிவிடக்கூடும்.

பிரசங்கியின் புத்தகத்தில் மிகத்தெளிவாக உள்ளது மரணம் பற்றிய விளக்கம்.

பிரசங்கி 3:19 மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

20. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

9:2. எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.

3. எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.

4. இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.

5. உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.

6. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழேசெய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.

10. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

எல்லாரும் போகுமிடம் கல்லறையே....

ஆதலால்தான் உயிர்த்தெழுதல் என்கிற மாபெரும் நிகழ்வு "நற்செய்தி" ஆகிறது.

--



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

joseph wrote:
யாரும் இவர்களது உபதேசங்களால் கெட்டுவிடாதபடிக்கு நம்முடைய போராட்டம் தொடரும். இந்த தொகுப்பு போதனைகள் பகுதியிலேயே இருக்கட்டும். 

 தங்களது வைராக்கியத்துக்கும் விடாமுயற்சிக்கும் ஒத்துழைப்புக்கும்  நன்றி நண்பரே..!

joseph wrote:
இந்த தொகுப்பு போதனைகள் பகுதியிலேயே இருக்கட்டும். 
 தங்களது அனுமதிக்கு நன்றி நண்பரே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

நீங்கள் சொல்லும்படி நானும் நினைத்ததுண்டு; ஆனால் என் விசுவாசமும் நம்பிக்கையும் சிதைந்துவிடாதபடி தேவன் என்னை காத்துக்கொண்டார். வேதத்தை இன்னும் ஆழமாக கற்கவேண்டும் என்ற வெறியே இவர்களுடன் மோதியதில் இருந்து தான் ஆரம்பித்தது. இந்த விஷயத்தில் இவர்களால் எனக்கு நன்மையே. ஆனால் விசுவாசத்தில் உறுதியில்லாதவர்கள் நிச்சயம் இவர்களிடம் சிக்கினால் அதோகதி தான். என்னமோ,

// எங்களுக்கு ஆள் சேர்த்து பழக்கமில்லை என்பவர்கள், எல்லாருக்கும் ரட்சிப்பு என்பவர்கள் ஏன் இவ்வளவு உக்கிரமாக நம்முடன் மோதவேண்டும். //

யாரும் இவர்களது உபதேசங்களால் கெட்டுவிடாதபடிக்கு நம்முடைய போராட்டம் தொடரும். இந்த தொகுப்பு போதனைகள் பகுதியிலேயே இருக்கட்டும். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பர் ஜோசப் அவர்கள் சிந்தனையைத் தூண்டும் நல்லதொரு திரியைத் துவக்கியிருக்கிறார்; (மேசியாவின்) எதிரிகள் எந்த அளவுக்கு நம்மைக் குழப்பி எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறார்கள் என்பதற்கு நண்பருடைய வரிகளே சாட்சியாக அமைந்துள்ளது; இப்படியே இரவும் பகலும் இவர்களுடைய மோசடியான உபதேசங்களைக் குறித்தே சிந்திக்க வைத்து பெலவீனமான இருதயமுடையோரை (மேசியாவின்) எதிரிகள் வஞ்சிக்கும் ஆபத்தும் இதில் உண்டு; 'அதானே அவன் சொல்றதும் நியாயமாகத் தானே தெரிகிறது' என்று ஒரு வினாடி யோசித்தாலும் சாத்தான் உள்ளே வந்து நிரந்தரமாகத் தங்கிவிடுவான்;இப்படியே சாத்தானானவன் ஏவாளின் சிந்தைக்குள் புகுந்து அவள் மூலம் முழு மனுக்குலத்தையும் சாபத்துக்குள்ளாக்கிப்போட்டான் என்பதே மனுக்குலத்தின் சோக வரலாறு;

ஆனால் ஏவாள் சாத்தானால்- சர்ப்ப வடிவில் வந்து உடல்ரீதியாக கெடுக்கப்பட்டாள் என்பதே ஏஞ்சல் டிவி கூட்டத்தாரின் உபதேசமாகும்; அதன் பின்னணியிலிருப்பதே காலஞ்சென்ற கள்ளத் தீர்க்கதரிசியான ப்ரன்ஹாமின் உபதேசம் ஆகும்; ப்ரன்ஹாம்- இரஸல் என்பாரின் உபதேசத்தினால் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு பின்னர் சுதாரித்து அதை தழுவியே மற்றொரு போலியை சமைத்தார் என்பதே வரலாறு; இவர்களெல்லாருக்கும் முன்னோடியானவர் ஏரியஸ் என்பதும் இவர்களெல்லாருடைய பாதிப்பும் இஸ்லாத்தில் உண்டு என்பதும் ஆசிய கண்டத்தின் மார்க்க வரலாறு ஆகும்.

நண்பர் ஜோசப் அவர்களின் இந்த கட்டுரையானது போதனைகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது; தேவைப்பட்டால் விவாதங்கள் பகுதிக்கு மாற்றிவிடலாம்; ஆனால் போதனா ரீதியிலேயே தளநண்பர்களும் தங்கள் கருத்தைப் பகிர்ந்தால் நலமாக இருக்கும்; எப்படியெனில் தாங்கள் அலச விரும்பும் காரியம் சம்பந்தமான எதிர்தரப்பின் வரிகளை மேற்கோள் காட்டி நீங்கள் கற்றறிந்த போதனையை வாசிப்போரின் பக்திவிருத்திக்கு உதவியாக எழுதி பதிக்க பட்சமாக வேண்டுகிறேன்; இனி எதிர்தரப்பினருடன் நேருக்கு நேர் வாதம் செய்வதைக் குறைத்துக்கொண்டு போதனை மற்றும் விசுவாசத்தை நிறுவுவதில் கவனம் செலுத்த நானும் விரும்புகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

ஆதியாகமத்தில் தேவன் ஆதி மனுஷனான ஆதாமோடு சொன்னது என்னவென்றால் நீங்கள் பலுகி பெருகுங்கள் என. அப்படி பலுகி பெருகி ஆண்டுக்கணக்காக மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தால் இன்றைக்கு இந்த பூமியின் நிலை எவ்வாறு இருக்கும். இதை சாப்பிடும் நாளில் நீ சாகவே சாவாய் என தேவன் சொன்னது ஆவிக்குரிய மரணத்தை (அஃதாவது தேவனோடு கொண்ட ஐக்கியத்தை இழத்தலை), ஆனால் மேசியாவின் எதிரிகள் மரணத்துக்கு பின் 6 க்கு 4 சைஸ் நரகத்தில் ஆத்துமா அழிவுறும் என்கின்றனர். அழிவுறுவது என்பது ஒரு process. இல்லாமல் போன ஒன்று எப்படி அழிய முடியும். தற்கால அறிவியலோடு கூட இவர்கள் கூற்று ஒத்துப்போவதில்லை. மரணத்தை பற்றிய சத்தியம் நன்ன்ன்ன்ன்ன்றாக தெரிந்தவர்கள் இதை விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

ஒரு வேளை பாவம் செய்யாமல் மனிதன் தப்பியிருந்தாலும் (அந்த கனியை புசிக்காமல்) இந்த பூமியில் அவனது நாட்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்திருக்காது. ஏனெனில் மனிதன் பலுகி பெருகும் பட்சத்தில் அப்போது இருந்து அனைவரும் தங்கிவிட்டால் the earth would have been overpopulated. மரணம் என இப்போது நாம் பார்க்கும் காரியம் வேறு விதமாக இருந்திருக்கும்.    Probably the exit route would have been different and better. ஒருவேளை பாவம் செய்யாத சரீரமாக இருந்திருந்தால் அந்த மனிதன் தேவனோடு சஞ்சரித்துகொண்டிருக்கும் போதே (அவன் அந்த ஐக்கியத்தை இழக்காததால்) எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பான் (ஏனோக்கை போல). 

பாவம் செய்யாமல் இருந்திருந்தால் ஆவிக்குரிய மரணமும் இருந்திருக்காது சரீர மரணமும் இருந்திருக்காது. தேவன் சாகவே சாவாய் என சொன்னது ஆத்தும மரணம் தான்.மரணம் என்பது ஏன் துக்ககரமாகிறது என்றால் உலகத்தில் உள்ள பற்று நம்மை விடாமல் இருப்பது தான். எப்போது மனிதன் பாவம் செய்தானோ அப்போதே உலகத்தின் மீதான பற்று அவனை ஆண்டுகொள்ள ஆரம்பித்தது (ஏனெனில் தேவனோடு கொண்ட தொடர்பை, ஐக்கியத்தை இழந்ததால்) . மனிதனுக்கு எந்த ஒரு அனுபவமும் அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடிகிறது ஆனால் மரணம் என்ற அனுபவத்தை மாத்திரம் அடுத்தவர்களிடம் மரணமடைபவரால் பகிர்ந்துகொள்ளமுடியாது அதனால் தான்மரணம் பயம் நிறைந்த ஒன்றாக ஆகிப்போனது. அதை பற்றிய தெளிவில்லாமல் போனது அவன் பாவம் செய்ததால் தான்.

வாசக அன்பர்கள் இதில் தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காண்பிக்கலாம். நான் புரிந்துகொண்டது இது அவ்வளவே.



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard