Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இலங்கையில் ஆல்வின் ஊற்றும் அக்கினியும் விடுதலையும்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: இலங்கையில் ஆல்வின் ஊற்றும் அக்கினியும் விடுதலையும்..!
Permalink  
 


Freedom in Srilanka

ஆல்வின் அவர்களின் இலங்கா சுற்றுப்பயணம் வெற்றி..?!

http://www.facebook.com/media/set/?set=a.169276209819050.42531.100002100164966


 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இலங்கையில் ஆல்வின் ஊற்றும் அக்கினியும் விடுதலையும்..!
Permalink  
 


golda wrote:

To Bro Peter Samuel,

நான் ஒரு இரகசியத்தை உங்களுக்கு சொல்கிறேன். சகோ. சில்சாமுக்கு சாது ஆகவே ஆகாது. எனவே அவரோடு இணைந்து ஊழியம் செய்யும் எவரையும் அவருக்கு பிடிக்காது...அது மோகன் சி லாசரஸாக இருந்தாலும் கூட! 

 நீதிமன்ற நடைமுறைகளில் பிரபலமான‌ சொல்வழக்கு ஒன்றுண்டு, "ஒரு குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும் என்பதைவிட ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது", என்பதாக; அவ்வாறே ஒரு நல்ல போதனையை ஆதரிப்பதைவிட ஒரு துர்ப்போதனையை ஆதரிக்காதிருத்தல் முக்கியமானது; அப்படியும் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை முழுவதும் சரியானவர் யாருமில்லை; அதில் மோகன்.சி‍- யும் விதிவிலக்கல்ல; எப்படியெனில் ஒருவர் குற்றஞ்செய்வதால் மட்டுமல்ல, குற்றவாளிக்கு உடந்தையாகவோ அல்லது குற்றம் நடைபெறுவதையறிந்தும் மனதார எதிர்க்காதிருப்பதோ கூட குற்றமே; எனவே அவர்களுடைய பணப் பரிவர்த்தனை சம்பந்தமான மோசமான செய்திகளுக்குள் நான் போகிறதில்லை; ஆனாலும் குறைந்தபட்சம் செயல் திட்டம் (Common Minimum Programme) என்பார்களே அதுபோல, அவர்கள் "இயேசுகிறித்துவை தொழத்தக்க தெய்வமாக.." ஏற்பவர்கள் என்ற வகையில் பெரும்பாலானோரை நான் கண்டுங்காணாமல் இருக்கிறேன்.

ஏனெனில் நான் நீதிபதியோ நீதிமானோ அல்ல, நானும் ஒரு பாவி தான்; காலஞ்சென்ற சகோதாரர் டிஜிஎஸ் அவர்கள் தனது பரலோக தரிசனங்கள் எனும் புத்தகத்தில் எழுதியிருந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தது;அது என்னவெனில், "என் ஆவிக்குரிய வாழ்வைப் பொறுத்தமட்டில் நான் ஒரு எளிய மனிதன்,கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி..". அப்படியானால் நான் என்ன சொல்லுவேன், நானும் அதைவிட இன்னும் கீழாகவே நிற்கிறேன்; நான் விமர்சிப்பவர்களெல்லாம் உலகப் பார்வையில் மிகப் பெரிய சாதனையாளர்கள் மற்றும் சமுதாயத்தில் அந்தஸ்தும் மரியாதையும் பெற்றவர்கள் ஆவர்; அப்படியானால் அவர்களை நான் துணிகரமாக எதிர்க்கக் காரணமாக இருப்பது எனது மதியீனமோ மேதாவித்தனமோ அல்ல; (மேசியாவின்) எதிரி சொல்லுவதுபோல "நான்" என்ற அகங்காரமும் அல்ல.

கல்லில் நார் உரிப்பது போலவும் மணலால் கயிறு திரிப்பது போலவும் நம்முடைய மக்களிடமிருந்து எதையாவது சொல்லி காசு பிடிப்பது எப்படிப்பட்ட சாதனையல்லவா? அதில் நம்முடைய தலைவர்கள் நிச்சயமாகவே ஜெகஜ்ஜால கில்லாடிகள் தான்; இதற்காக சத்தியத்தை வளைப்பதுதான் வருத்தமாக இருக்கிறது; இந்த திரியின் ஆரம்பத்தில் ஆல்வின் இலங்கை சுற்றுப்பயணம் குறித்து நான் குறிப்பிட்டுள்ளவற்றை யாரும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை; நண்பர்களுடைய பின்னூட்டத்திலிருந்து நான் அறிந்துகொள்ளுவது யாதெனில் நான் எல்லோரையும் குற்றஞ்சொல்லுகிறேன், என்பதே; அப்படியெல்லாம் ஒருபோதும் கிடையாது என்று நான் சொன்னால் ஒருவரும் நம்பப்போவதில்லை; ஒவ்வொருவருமே அவரவருக்குப் பிடித்தமானவரை நான் எதுவும் சொல்லாதிருந்தால் போதும் என்றெண்ணுவதாகவே தோன்றுகிறது; ஆனால் இந்த தலைவர்களெல்லாரும் சேர்ந்து சர்வ வல்லவருடைய நாமத்துக்கு தூஷணத்தைக் கொண்டு வருகிறார்களே அதைக் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; இந்த போக்கு மாறவேண்டும்; ஆண்டவருடைய காரியத்தில் ஒருமித்த கருத்து உருவாக்கப்படவேண்டும் என்பதே என்னுடைய உள்ளத்தின் அவா.

எனது அன்புக்குரிய தோழி கோல்டா சொல்லுகிறார்,

// "நான் ஒரு இரகசியத்தை உங்களுக்கு சொல்கிறேன். சகோ சில்சாமுக்கு சாது ஆகவே ஆகாது. எனவே அவரோடு இணைந்து ஊழியம் செய்யும் எவரையும் அவருக்கு பிடிக்காது...அது மோகன் சி லாசரஸாக இருந்தாலும் கூட!" // என்பதாக;

இதனை நான் தீர்க்கமாக மறுக்கிறேன்;ஏனெனில் சாதுவை எனக்கு பிடிக்காது என்பது, ஏதோ எனக்கு பாகற்காய் சாம்பார் பிடிக்காது என்பது போன்ற விஷயமல்ல, அவருடைய உபதேசமே வி(வ)காரமானது என்பதே; அதன் ஆழங்களுக்குள் செல்ல எனக்கு அவகாசமில்லை; எனவே வெளிப்படையான காரியங்களை மட்டுமே கண்டித்துவருகிறேன்; இன்னும் அவரே அவ்வப்போது கான்ட்ரவர்ஷியலான காரியங்கள் வேண்டாம் என்று மூடிமறைத்து பொடிவைத்து பேசி மழுப்புவது எல்லோருக்கும் தெரியும்;

அவர் தன்னுடைய சானலை பிரபலப்படுத்தவும் மோகன்.சி -யின் ஆதரவாளர்களை வளைத்துப்போடவுமே அவருடன் மிக அண்மையில் கூட்டணி அமைத்தார் என்பது அப்பட்டமாகத் தெரியவரும் வியாபாரத் தந்திரமாகும்; இதே காரணத்துடனே ஆல்வின் தாமஸ் வளைக்கப்பட்டிருக்கிறார்; அவரிடமுள்ள இளைஞர் கூட்டம் ஏஞ்சல் டிவிக்கு வேண்டும்; ஆல்வினுக்கோ ஏஞ்சல் டிவியின் மூலம் தான் செலவில்லாமல் பிரபலமாக வேண்டும்; இது ஏஞ்சல் டிவியின் நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவரும் தகவல்;

ஆனாலும் சாதுஜிக்கே கௌண்டர் பண்ணுவதுபோல ஏட்டிக்கு போட்டி தீர்க்கதரிசனம் சொல்லி அலம்பல் பண்ணும் ஆல்வின் விரைவில் அங்கிருந்து ஓரங்கட்டப்படுவார் என்று நம்புகிறேன்; இவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஃபார்முலா வைத்து வேலை பார்க்கிறார்கள்; எப்படியெனில் சாதுஜி தனது ஊழியத்தின் ஆரம்பகாலத்தில் தீர்க்கதரிசனமெல்லாம் சொன்னதில்லை; "குணமாக்கும் அன்பு" எனும் எளிமையான நிகழ்ச்சியை நடத்திவந்தார்; ஆனால் ஒரு கட்டத்தில் தன்னை வல்லமையான தீர்க்கதரிசியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார்; அது மிகச் சரியாக சகோதரர் டிஜிஎஸ் மறைவுக்குப் பிறகே நடந்தேறியது; அப்படியானால் அவருடைய மாஸை யார் வளைத்துப்போடுவது என்பதில் பெரிய போட்டியே நடந்திருக்கிறது; இவையெல்லாவற்றையும் ஆவியானவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்; இவர்கள் அனைவருமே கள்ளத் தீர்க்கதரிசிகள் என்பதையும் தாங்கள் யூகிப்பதையே சொல்லுகிறார்கள் என்பதையும் சாதாரண மனிதன் கூட நன்கு அறிவான்; ஆனால் வேதத்திலுள்ள தீர்க்கதரிசிகள் அப்படிப்பட்டவர்கள் அல்ல; அவர்கள் பேசும்போது தேசத்தின் இராஜா முதல் கடைக் குடியானவன் வரை கலங்கினர்;தேசம் அசைக்கப்பட்டது;அந்த நாட்கள் இவர்கள் மூலம் வரப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்;

மோகன்.சி இதுவரை மோசடியான காரியங்களைச் செய்திராவிட்டாலும் பல தவறான நபர்களுடன் அவர் தொடர்பு வைத்துள்ளது அனைவரும் அறிந்த உண்மையாகும்; இவையெல்லாம் மேலிடத்து சமாச்சாரங்கள் அல்லவா? உதாரணமாக மலேசியாவில் ஒரு பிரபல ஊழியருக்கு மந்திரி ஒருவருடைய மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்தது; அதன்காரணமாக அவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்;ஆனால் அவருடைய சபைக்குச் சென்ற மோகன் சி.அதைக் குறித்து அந்த ஊழியரைக் கண்டிக்க தைரியமில்லாமல் (நாகரீகம் கருதி..) அவர் கொடுத்த காணிக்கை பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பினார் என்பது பழைய செய்தியாகும்;

இதுபோல நம்முடைய ஊழியர்கள் சென்று வரும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரசியமான செய்தி இருக்கிறது; இவர்களுக்கு அவர்களுடைய பணம் வேண்டும்;அங்கிருப்பவர்களுக்கோ பிரபலமானவர்களுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்ற பெருமையும் எப்போதாவது இங்கு வந்தால் இங்கேயுள்ள மாஸ் அவர்களுக்கு ஒரு போதை..! நாய் வித்த காசு குரைக்காது என்பார்களே அதுபோல நடக்கிறது தற்கால ஊழியம், இவர்களெல்லாம் எப்படி தங்களை எலியாவுடனும் எலிசாவுடனும் ஒப்பிட்டுக்கொள்ளத் துணிகிறார்களோ..?!

எனவே என்னுடைய வேதனையையெல்லாம் அடக்கிக்கொண்டு இரவும் பகலும் துன்பப்படுகிறேன்; ஒருவர் மீதுகூட பொறாமையோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது; ஆனால் இவர்களெல்லாம் கர்த்தர் தங்களுக்குக் கிருபையாகக் கொடுத்த மந்தையை சுயநலமானதும் இழிவானதுமான ஆதாயத்துக்காக நிர்விசாரமாக செய்கிறார்களே என்று பயங்கரமான கோபம் உண்டு; எனவே சிலரைக் குறித்து எழுதவும் பிடிக்கவில்லை; எப்படியும் கெட்டு நாசமாகப் போகட்டும் எனக்கென்ன வந்தது என்றும் அமர்ந்திருக்கிறேன்.

எனது எல்லைகளை வகையறுத்துக்கொண்டேன்; அது என்னுடைய விவரக் குறிப்பு பக்கத்திலேயே இருக்கிறது; அது இதுதான், "துருபதேசக்காரர்களுக்கு சம்மட்டியாகவும் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் இந்த தளம் விளங்கும்..!"

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: இலங்கையில் ஆல்வின் ஊற்றும் அக்கினியும் விடுதலையும்..!
Permalink  
 


To Bro Peter Samuel,

மோகன் சி லாசரஸ் மிகவும் அருமையான எளிமையான தாழ்மையான ஆத்தும பாரம் ஜெப பாரம் நிறைந்த பணம் புகழ் ஆசையில்லாத உழியக்காரர். நாலுமாவடியில் நடக்கும் எந்த கூட்டத்திலும் எனக்குத் தெரிந்து காணிக்கை எடுப்பதில்லை. அதாவது காணிக்கைப் பை வராது.

அதே போல் இப்போதைக்கு எனக்கு மிகவும் பிடித்தவர்கள் சகோ வின்சென்ட் செல்வகுமார்(இராமநாதபுரம்) மற்றும் சகோ ராஜூ(பெங்களுர்). சகோ ராஜூவை உங்க சபைக்கு கூப்பிடுங்க. அவருடைய ஊழியத்தைப் பாருங்க. அவரையும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

யார் தவறு செய்தாலும் சொல்ல வேண்டும் என்பதுதான் என பாலிசியும்.

ஆலன் பால் புத்தகத்தை வாசித்த போது மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்றாலும் அப்படி 72000 ஆண்டுகளுக்கு பின்பாகிலும் ஆத்துமாக்கள் நரகத்திலிருந்து விடுதலையானால் மகிழ்ச்சிதானே! அத்தனை வருடம் கஷ்டப்படுவது போதாதா? எனவே அந்த வெளிப்பாடு சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்! மற்றபடி அவ்ருடைய உபதேசத்தில் எந்தக் குறையும் என் கண்ணுக்குத் தெரிந்ததில்லை

கோவைபெரேயன்ஸுக்கு சரியான match சகோ சில்சாம் தான் என்பதில் சந்தேகமில்லை. எத்தனை சோல்சொல்யுஷன்கள் வந்தாலும் சமாளித்து விடுவார் என்பதிலும் சந்தேகமில்லை! நான் ஒரு இரகசியத்தை உங்களுக்கு சொல்கிறேன். சகோ சில்சாமுக்கு சாது ஆகவே ஆகாது. எனவே அவரோடு இணைந்து ஊழியம் செய்யும் எவரையும் அவருக்கு பிடிக்காது...அது மோகன் சி லாசரஸாக இருந்தாலும் கூட! எதிர் கேம்ப்பிலிருக்கும் சோலே வெறுத்துப் போய் சுவிசேஷம் சொல்ல விடுங்கப்பா என்று சொல்லுமளவிற்கு சகோ சில்சாமிற்கு எல்லா பாப்புலர் ஊழியரையும் பிடிக்கிறது என்பது தான் பிரச்சினையே!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

சில்சாம் அவர்களே! தாங்கள் ஏற்றுக் கொள்ளும் உபதேசமும், ஊழியமுறைகளும் உள்ள கொஞ்சம் பிரபலமான 2 அல்லது 3 ஊழியர்கள் பற்றி சிறு குறிப்பு வரைக!


 நமது பள்ளிக் காலத்தில் வருடத்துக்கொரு முறை இன்ஸ்பெக்ஷன் என்று ஒன்றை வைப்பார்கள்;அன்றாடம் டீச்சரையும் எப்போதாவது வரும் பிரின்ஸிபலையும் சமாளித்துவிடும் நாம் டி இ ஓ என்பவரைக் குறித்த அதீத பயத்தினால் நடுங்கிக்கொண்டிருப்போம்;அவர் எப்போது வருவார், என்ன கேட்பார், யாரிடம் கேட்பார் என்று தவியாய் தவிப்போம்.

அதுபோலவே திடீரென் தோழி கோல்டா அவர்கள் நெத்தியடியாக நேரடியாகவும் என்னை நோக்கி கேள்வியெழுப்பியதும் தடுமாறித் தான் போனேன்; நல்லவேளை எனது உற்ற நண்பனான பீற்றர் இடைபட்டு காப்பாற்றினார்; அவர் என்னைக் குறித்து இத்தனை நல்ல அபிப்ராயம் வைத்திருப்பது குறித்து ரொம்ப சந்தோஷம்; ஆனாலும் நண்பர் பீற்றர் சொல்லும் அளவுக்கு நான் மேதாவியல்ல; நான் மிக மிக சாதாரணமானவன்; நான் சார்புநிலை எடுப்பது எனக்கு பாதுகாப்பையும் கௌரவத்தையும் கூட ஒருவேளை தரலாம்; ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை; எனது கண்களை எனது மணவாளனாகிய கிறித்துவின் மீதே பதித்திருக்கிறேன்.

எனக்குப் பிரியமான ஊழியர்களும் உண்டு; ஆனால் அவர்களில் யாரும் பிரபலமாக இல்லையே என்ன செய்வது..? பிரபலமானவர்களிலும் சிலரை நான் காரணமில்லாமல் நேசிக்கிறேன்; அவர்கள் யாரென்பது அனைத்து நண்பர்களுக்கும் தெரியும்; சிலரை பொறாமையுடன் இரசிக்கிறேன்; அவ்வளவு ஏன் சாதுஜியைக்கூட‌ எனக்கு ரொம்ப பிடிக்கும்; அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை, அவருடைய சிரிப்பு தான்.

ஆனால் சத்தியம் என்பது இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதல்லவா? அதை வார்த்தையினாலோ எழுத்தினாலோ முழுவதுமே வெளிப்படுத்த ஒருவராலும் கூடாது; அப்படி கூடுமானால் நான் திரித்துவத்தைக் குறித்து இந்நேரம் விளக்கியிருப்பேனே..! எனது முன்னோர்களாலேயே கூடாத ஒரு காரியத்தை நான் செய்துவிடமுடியுமா,என்ன..?

  • "கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே."(1.தீமோத்தேயு.1;5)
  • "விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்."  (1.தீமோத்தேயு 3:9)

ஆமாங்க, அது இரகசியம் ஆனால் இரகசியமில்லே..! அது மறைபொருள் போல இருக்கும்; ஆனால் மறைபொருள் அல்ல;அது விளங்காதது போல இருக்கும்; ஆனால் விளக்க ஒன்றுமில்லே..!

அவரவர் எல்லையிலேயே நிற்பது ஒன்றே பாதுகாப்பானதாகும்; இது ஒன்றே நான் கிறித்தவ ஜீவியத்தில் கற்றறிந்த பாடமாகும்;இதுகுறித்து பவுலடிகள் எழுதுவது என்ன,

  • "சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்." (1.கொரிந்தியர்.4:6)
  • "நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்." (2.தீமோத்தேயு.3:14,15)
  • "அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்." (ரோமர்.12;3)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
இலங்கையில் ஆல்வின் ஊற்றும் அக்கினியும் விடுதலையும்..!
Permalink  
 


நான் சொல்லலாமா சகோதரி!

சமீபத்தில் (17/08/11) எங்கள் சபை புதிய கட்டிட பிரதிஷ்டைக்கு மோகன் சி. லாசரஸ் அவர்கள் வந்திருந்தார்கள். ஜனங்களை ஜெபிக்க வைத்தார்கள் (குதிக்க அல்ல), கட்டுக்கதைகளை சொல்லவில்லை ஆனால் தேவனைப் பற்றிய சாட்சி சொன்னார்கள்! மோகன் சி. ஒருபோதும் சுகம் தர முடியாது, தேவன் தான் சுகம் தரவேண்டும் என்றார்கள். வேதத்திலிருந்து ஜெபித்து நன்மை பெற்றவர்களைக்குறித்து விளக்கினார்கள்! அவர்கள் முன் ஜெபிக்கவந்தவர்களுக்கு எந்த முகசுழிப்புமின்றி நேரமாகிவிட்டாலும் ப்சியோடு ஜெபித்தார்கள். என்ன ஒரு எளிமை!!!

உண்மையாய் சொல்கிறேன்! நான் எந்த தனிமனிதனையும் உயர்த்த விரும்புவதில்லை! மோகன் சி. யை நான் இதுவரை (அன்றுவரை) நேரில் பார்த்ததுகூட இல்லை! ஆனால் அவரைக் குறித்து சொல்லாமல் இருக்க இயலவில்லை.

சிலர் அவர் கூட்டங்களில் பெற்ற அற்புதங்களைக் குறித்து சொன்ன சாட்சிகள் தவறியிருக்கலாம், ஆனால் அது எல்லோரும் சொல்கிறார்களே நாமும் சொல்வோம் என்று சொன்ன; சொன்னவர்களுடைய தவறேயல்லாமல் அவர் தவறல்ல. மட்டுமல்ல, சாட்சி சொல்பவர்களைக் குறித்து: அவர் முக்காலமும் அறிந்த ஞானியென்றும் தன்னை ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை!! நக்மா விஷயமும் அப்படியே!!!

அவர் கூட்டங்களில் அற்புதம் பெற்றுக்கொண்டவர்கள் அனேகரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். எல்லோர்மேலும் சேற்றை வாரியிறைக்கும் எவரும் (திரு. புஷ்பராஜ் போன்றோர்) மோகன் சி. அவர்களைக் குறித்து சில சாட்சிகள் விஷயத்தில் குற்றம் சாட்டலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் வாழ்க்கையைக் குறித்தோ, செய்தியைக் குறித்தோ குற்றம் சொல்ல இயலாது.

சில்சாம் அவர்களின் உள்ளத்தின் பாரத்தை நீங்கள் இதுவரை புரிந்துகொள்ளாதது ஆச்சரியம்! அவர் தவறான உபதேசங்களையுடையவர்களையும் மக்களை வஞ்சிக்கிறவர்களையும் கிறிஸ்தவர்கள் அடையாளம் காணவேண்டும் என்ற ஆதங்கத்தில் அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.சரியானவற்றை கூற அனேகர் இருக்கிறார்களே! தவறானதை சுட்டிக்காட்ட சில்சாம் போல ஒரு சிலரே உள்ளனர். நம்முடைய சுய விருப்பு வெறுப்புகளை ஆண்டவருடைய ஊழிய விஷயத்தில் காட்டக்கூடாது. தவறு செய்பவர்கள் யாரானாலும் (அது ஆல்வினானாலும், சாதுவானாலும்) கண்டிக்கப் படவேண்டியவர்களே!!!

இராஜ்யத்தில் 1000 வருடம் போதிக்கப்படுவார்கள் என கூறுவதை வன்மையாக கண்டிக்கும் நீங்கள் 72000 வருடங்கள் நரகத்தில் அவதியுறுவார்கள் எனக் கூறும் ஆலன்பாலைக் குறித்து என்ன சொல்வீர்கள்? நித்தியம் என்பது 72000 வருடங்கள் தானா?!!!!!!!!

சில்சாம் அவர்களின் எழுத்துக்கள் சில நேரங்களில் எதிரிகள் எழுதுவதற்கான பதில்களாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத சில வார்த்தைப் பிரயோகங்கள் உடையதாயினும் அதிலே ஆண்டவரிடத்தில் அவர் காண்பிக்கும் அன்பு வைராக்கியமாக வெளிப்படுவதையே நான் உணர்ந்திருக்கிறேன்.

சில்சாம் அவர்கள் செய்யும் ஊழியம் ஆடுகளுக்கு ஓநாயை அடையாளம் காட்டுவது, (சில வேளைகளில் ஓநாய்கள் மீது கல்லெறிவது கூட.!!!!) மேய்ப்பர்களை காட்டுவதல்ல. மேய்ப்பர்களை நீங்களும் நானும் காட்டுவோமே! ஏன் அவரைப் போய் தொந்தரவு செய்யவேண்டும்!!!!!!!!!

ஆண்டவர் ஏற்றுக்கொள்ளாத ஊழியங்களை அவர் அடையாளம் காட்டுவதே மிகச் சிறந்த ஊழியம் என்பது என் கருத்து!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: இலங்கையில் ஆல்வின் ஊற்றும் அக்கினியும் விடுதலையும்..!
Permalink  
 


சில்சாம் அவர்களே! தாங்கள் ஏற்றுக் கொள்ளும் உபதேசமும், ஊழியமுறைகளும் உள்ள கொஞ்சம் பிரபலமான 2 அல்லது 3 ஊழியர்கள் பற்றி சிறு குறிப்பு வரைக!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அண்மையில் கல்பாக்கத்தில் 1300 வாலிபர்களைக் கூட்டி இறக்கிய அப்பிசேக்க (அந்நிய‌)அக்கினி முகாமில் கலந்துகொண்ட ஆல்வின் அவர்கள் கூடியிருந்த இளைஞர்களை ஈர்க்கும் வண்ணமாக "சிங்கம்ல" என்று அசிங்கமாகவும் சினிமாத்தனமாகவும் கூவினாராம்;உடனே இளைஞர்களெல்லாம் ஆர்ப்பரித்தார்களாம்;(இது ஆண்டவருடைய இரண்டாவது வருகையினை நேரடி ஒளிபரப்பு செய்யப்போவதாகச் சொல்லிக்கொள்ளும் ஏஞ்சல் டிவியின் சாதுஜி நேற்றிரவு சொன்னது.)

ஆம்,உலகம் தன்னுடையதை சிநேகிக்கும் என்று ஆண்டவர் சொல்லவில்லையா? உலகத்துக்கொத்த வேடம் தரியாதே என்று பவுலடிகள் எழுதவில்லையா?

பொதுவாகவே மனிதனுக்கு நூதனமாகவும் சுவாரசியமாகவும் பேசுவோர் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு;பவுலடிகளையும் இவ்வாறே மார்ஸ் மேடைக்கருகில் நின்றோர் ஆவலுடன் நோக்கினர்;அவரோ இரட்சிப்பின் சுவிசேஷத்தை மட்டுமே சொன்னார் அல்லவா? அந்த ஆளு ஒரு மாங்கா மடையன், சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோ போன்றவர்களின் தத்துவங்களையும் மாவீரன் அலெக்ஸாண்டர் போன்றவர்களின் வீரதீர பராக்கிரமங்களையும் கொஞ்சம் எடுத்துவிட்டிருந்தாரானால் முழு ரோமையும் அன்றே கைப்பற்றியிருக்கலாமே என்பார்கள் தற்கால அடிப்பொடி அடியவர்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சகோ கொல்வின், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இலங்கையில் ஆல்வின் ஊற்றும் அக்கினியும் விடுதலையும்..!
Permalink  
 


singamle...

Live Fire is coming to Revive YOU!!!

Dear brothers and sisters,

The day has come for Bang at Srilanka by Pas. Alwin Thomas and Ruah worship team to shake the city and to bring the Revival and God’s Glory over the Srilanka.  

26th, 27th and 28th August 2011 in Santhakeni public, Play Ground, Kalmunai (Near Private Bus Stand)

30th and 31st August 2011 Angel International School, Manipay, Jaffna

2nd, 3rd and 4th September 2011 in Vihara Mahadevi Park, D.S Senanayake Mawatha, Colombo

Praise and Worship and the God’s Word will be shared by the Man of God
PASTOR. ALWIN THOMAS. 
Come and Be Blessed!

Be Blessed!!!

Yours in His Service,

Ruah Ministries

 

மேற்கண்ட செய்தியானது படத்துடன் எனது மின்னஞ்சல் முகவரிக்கு வ்ந்தது; நல்ல விஷயந்தானே, இதில் என்ன தவறு என்று யோசித்தேன்; ஆனாலும் மனதில் ஏதோவொரு சங்கடம்; இந்த அறிவிப்பை இன்னும் முள்வேலி முகாம்களில் சிக்கி மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் ஈழத்தமிழர்களின் கண்ணோட்டத்தில் பார்த்தேன்;மிகவும் கூச்சமாக இருந்தது;

முள்ளிவாய்க்காலில் துவங்கி முள்வேலி வரை தமிழ் குடிமக்கள் அடைந்த தாங்கவொண்ணா துயரங்களுக்கு எந்தவொரு ஆறுதலும் சொல்ல முன்வராத இந்த மகான்கள் அங்கே யாருடைய சுதந்தரத்தைக் கொண்டாட செல்கிறார்கள்? யாருக்கு அங்கே சுதந்தரம் கிடைத்துவிட்டது?  தந்திரத்தால் வருவதா சுதந்தரம்..? சௌகரியமானதும் பாதுகாப்பானதுமான இடத்தில் நின்றுகொண்டு குதித்து கூத்தாடிவிட்டு தங்கள் சிடிக்களை விற்று பெட்டி கட்டிக்கொண்டு வருவதுதான் இவர்களுடைய அழைப்பா அல்லது அதுதான் பிழைப்பா என்று கேட்கத் தோன்றுகிறது; என்னைப் போன்றவர்கள் எதையெடுத்தாலும் குற்றஞ்சொல்லுகிறோமோ எல்லாவற்றையும் விமர்சனக் கண்ணோட்டத்துடனே பார்க்கிறோமோ என்று அடிக்கடி நானும் யோசிப்பேன்; ஆனால் இந்த அறிவிப்பிலுள்ள அக்கினி ( FIRE ) எனும் வார்த்தையும் சுதந்தரம் ( FREEDOM ) என்ற தலைப்புமே என்னை இதுகுறித்து எழுத தூண்டியது; மற்றதெல்லாம் போகட்டும், அது இவர்களுடைய பிழைப்பு என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது; இசையின் இரைச்சல் காரணமாகவும் குத்தாட்ட குதூகலம் காரணமாகவும் இளைஞர்களுக்கேயுரிய பரவச உணர்ச்சிகள் காரணமாகவும் எழும்புவதை எப்படி அக்கினி என்றும் அபிஷேகம் என்றும் சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை; குறிப்பிட்ட சுதந்தரம் அல்லது விடுதலை எனும் வார்த்தை ஆல்வின் அவர்களுடைய ப்ராண்ட ( BRAND ) அல்லது தீம் (THEME) போல செட் ஆகியிருக்கலாம்;ஆனாலும் இந்த வார்த்தையானது தமிழ் நெஞ்சங்களின் உணர்வில் என்னவிதமான பாதிப்புகளை உண்டாக்குமோ என்று கஷ்டமாக இருக்கிறது; கொத்துக்குண்டுகளின் நெருப்பில் ( FIRE ) வெந்து தணிந்த பூமியில் அக்கினியைக் குறித்து என்ன சொல்லப்போகிறார்களோ?

சீமான் என்று ஒருவர் குறுகிய காலத்தில் மீடியா பிரபலமாகியதன் காரணம் என்ன, அவர் சந்திக்கும் பிரச்சினையையும் அவரை அணுகும் மக்களின் நிலைமையையும் குறித்த சரியான அறிவையும் தாக்கத்தையும் பெற்றவராக செயல்பட்டார்; இதன்காரணமாகவே தமிழ் இளைஞர்கள் இன்றைக்கு அவர் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்; இதேவிதமான சமூகப் பொறுப்புள்ள எண்ணமும் செயல்பாடும் நம்முடைய ஊழியர்களுக்கும் இருக்குமானால் எத்தனை நலமாக இருக்கும்? சினிமா பாடகர் மனோ போன்றவர்கள் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜனாதிபதியின் நிகழ்ச்சியையே புறக்கணித்துவிட்டு சென்னை திரும்பியதை செய்திகளில் கவனித்தோம்;

ஆனால் இலங்கை தேசம் சம்பந்தமாக கள்ளத் தீர்க்கதரிசனம் சொல்லிய ஒரு தீர்க்கதரிசியாவது இன்றுவரை அதற்காக மன்னிப்பு கேட்டார் இல்லை; அவர்களில் முக்கியமான இருவர் பால் தினகரன் மற்றும் ஏஞ்சல் டிவியின் பங்காளி வின்சென்ட் செல்வகுமார் ஆகியோர்.அதுபோன்ற தீர்க்கதரிசனத்தை நானாகவே உரைத்துள்ளேன் என்பது அதன்பிறகு நடந்த சம்பவங்களாலேயே தெரியவந்தது;ஆண்டவருடைய சமாதானமும் அமைதியும் விடுதலையும் இதுபோன்றதல்ல என்று ஒப்புக்கொள்ளும் மனோதிடமும் மனத் தாழ்மையும் நமது ஊழியர்களுக்கு இல்லையே..!

இந்நிலையில் தன்னை தானே தீர்க்கதரிசி என்றும் தேவனுடைய மனுஷன் என்றும் சொல்லிக்கொள்ளும் ஆல்வின் அந்த காலத்து மிட்டாய் வியாபாரி போலவும் சர்க்கஸ் கோமாளியைப் போலவும் ஆடிப்பாடி குதித்து எதையாவது தீர்க்கதரிசனம் என்ற பெயரில் சொல்லிவிட்டு வந்தாரென்றால் தாங்கமுடியுமா?

இப்போது இவர்கள் உடனடியாக செய்யவேண்டியது என்ன, எம் மக்களின் தேவை என்ன, என்பதை அறிந்து அதற்கேற்றதொரு ஊழியத்தை கிறித்துவின் அன்போடு செய்யட்டும்; காயங்கட்டும் ஊழியமே தற்போதைய உடனடி தேவை; கண்டதுக்கும் சர்வே எடுத்து விளம்பர ஏஜென்ஸிகளுடன் கைகோத்து வேலை பார்க்கும் இந்த மீடியா மிருகங்கள் இலங்கையின் தற்போதைய நிலை என்ன, அந்த மக்களின் தேவை என்ன என்பதை அறிந்திருக்கவேண்டாமா? அங்கே சென்று இவர்கள் நிமிர்த்தப்போவது ஒன்றுமில்லை என்பது நமக்கு நன்றாகத் தெரியும்; ஒன்றிரண்டு கூலிகளை வைத்து தற்புகழ்ச்சி நாடகங்களை நடத்துவார்கள்; கூத்து பட்டறைகளில் அலப்புவார்கள்; ஆடு நனையுதே ஓநாய் அழுததாம் என்பது போல நீலிக்கண்ணீர் வடித்து கழுத்தில் கை வைத்து பிடித்து கீழே தள்ளுவார்கள்; விழுந்து கிடப்போரை எழுப்பும் ஊழியத்தை செய்யச் சொன்னால் நிற்க முயற்சிப்போரையும் விழத் தள்ளுவதையே அபிஷேகம் என்றும் அக்கினி என்றும் சத்தியத்துக்கு விரோதமாக உபதேசித்து செயல்படுகிறார்கள். அதற்கு மேல் இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது;

ஏனென்றால் கிறித்துவுக்காக நஷ்டப்படுவது என்றால் என்ன, பாடனுபவிப்பதென்றால் என்ன என்பதெல்லாம் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது;ஆனாலும் இவர்களைக் கொண்டே ஆண்டவர் எதையாவது செய்திட வேண்டும் என்ற நிலை; ஏனெனில் இவர்களெல்லாம் மீடியா பிரபலங்கள்; அப்படியானாலும் உலகப் பிரகாரமான மீடியா பிரபலங்களுக்கு இருக்கும் சமூக பொறுப்புணர்வில் சிறிதும் இல்லாமல் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணும் இந்த அடிமாடு அடியவர்களுக்காக யௌவன ஜனம் வருந்துகிறது.

  • "அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
  • திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக் கொண்டிருக்கிறான்." (ஏசாயா. 56: 10,11)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard