Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தெய்வீக சுகம்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
தெய்வீக சுகம்
Permalink  
 


சோல்:

//ஏன் வியாதி சுகமாவதில்லை என்றால் வியாதிக்கென்று ஒரு டாக்ரேட் பட்டம் வாங்குமளவு பதிக்கிறார்கள். //

Thanks!

//எந்த முடவன் துள்ளிக்குதித்து ஓடினான் என்றால் பதில் இல்லை. //

முதல் நூற்றாண்டு திருச் சபையில் நடந்த அளவிற்கு அற்புதங்கள் இப்ப இல்லை என்றாலும் திரும்ப வட்டம் அங்கு போய்தான் முடியும் என்று ஒரு தீர்க்கத்ரிசி சொல்லியிருக்கிறார். அதாவது அன்று பெய்த முன்மாரி கால மழை போல் பல மடங்கு அதிகமான பின் மாரி கால மழை பொழியும். அப்பொழுது அன்று நடந்ததை விட அதிகமான பெரிய அற்புதங்கள் நடக்குமாம்.

அபிஷேகம் வருகிறது. எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

இதில் சொல்லப்பட்டது நடக்கும்.

Where are they?

http://www.northwestprophetic.com/2010/08/where-are-they-in-my-vision-woman-who.html



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

(மேசியாவின்) எதிரிகளுடனான விவாதத்தில் இயேசுகிறித்துவை தொழத்தக்க தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் யௌவன ஜனம் தளத்தின் நண்பர்கள் முதிர்ச்சியுடனும் நிதானத்துடன் பங்கேற்றுவருவது குறித்து அதிக மகிழ்ச்சி;(மேசியாவின்) எதிரிகள் எவ்வளவு தான் கோபப்படுத்தினாலும் உணர்ச்சிவயப்படாமல் சத்தியத்தை மாத்திரம் எடுத்துரைக்க முயற்சிப்பதன் மூலம் தாங்கள் ஒவ்வொருவரும் தத்தமது மாண்பை வெளிப்படுத்துகிறீர்கள்; இந்நிலையில் நீண்டு கொண்டே போகும் சில திரிகளிலிருந்து சில கருத்துக்களைப் பிரித்தெடுத்து தனி திரியாக அமைப்பதில் தோழி கோல்டா அவர்கள் சிறப்பாக பங்காற்றி வருகிறார்கள்;ஏனைய நண்பர்களும் இதே வழிமுறையினைப் பின்பற்றிடவும் நமது தளத்தின் முகப்பிலுள்ள பல்வேறு தரப்பட்ட பகுதிகளிலும் பங்காற்றிடவும் பணிவன்புடன் வேண்டுகிறேன். அவர்களால் துவக்கப்பட்ட இந்த திரியில் தள நண்பர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//ஆமா தெய்வீக சுகம் அனைவருக்கும் எங்கே வாக்குப்பண்ணப்பட்டுள்ளது? ஒரு வியாதியில் சுகம் கிடைத்தவன் இன்னொரு வியாதிவந்து சாவதில்லையா? ஏன் "தெய்வீக சுகம்" குறிப்பிட்ட வியாதியைமட்டும் நீக்கிவிட்டு மற்ற வியாதிகளுக்கு பலிக்காதா?//

யாத்திராகமம் 15:26 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

ஏசா 53:5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

எல்லா வியாதிக்கும் விடுதலை உண்டு. காலத்துக்கு முன்பே மரிக்கும்படி பாவத்தினால், பிசாசினால் வரும் வியாதியிலிருந்து சுகப்பட்டு, அவருக்கு சாட்சியாக வாழ்ந்து பின் மரிக்கலாம்.

 

// எல்லா சுகமாக்கும் ஊழியர்களும் வியாதிவந்துதான் மரிக்கிறார்கள். ஏன்?//

சகோ தினகரனை எடுத்துக் கொண்டால் மரணத்துக்கேதுவான வியாதி வரும். ஆண்டவர் சுகம் தருவார். அப்புறம் ஊழியம் செய்வார். இப்படியேதான் அவர் காலம் சென்றது. அவர் இத்தனை வயது வரை பிழைத்திருந்து ஊழியம் செய்ததே பெரிய அதிசயம் தான். தேவ கிருபைதான்!

//பின்னர் ஏன் குணமாக்கும் அன்பு நிகழ்ச்சியில் இதெல்லாம் சொல்வதில்லை? என்ன வியாதி வந்தாலும் இயேசு சுகமளிப்பார் என்றுதானே தம்பட்டம் அடிக்கிறார்கள்?//

 

பாவத்தைக் குறித்து, பிறரை மன்னிக்க வேண்டியது குறித்து எல்லாம் சொல்லத்தான் செய்றாங்க. அத்துடன் ஆண்டவரால் எந்த வியாதியையும் சுகமாக்க முடியும்தானே.

 

//வியாதி பிசாசினால் வரலாம் என்ற ஒரு முக்கியமான கிறிஸ்தவத்தில் ரொம்ப ஃபேமஸான பாயிண்டை விட்டுட்டீங்க‌?//

அதான் முதல் பாய்ண்டா சொல்லியிருக்கிறேன்!.

//இயற்கைப் பேரழிவுகள், விபத்துக்கள் தவர ஏறக்குறைய எல்லா மரணங்களுக்கும் வியாதிதானே காரணம். //

உடல் வலிமை இழக்கிறது. எனவே வியாதி வருகிறது.

மோசேயும், ஆரோனும் இறந்த விதத்தை வாசிக்க மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். இன்று நீ சாகப் போகிறாய். மலையில் ஏறு என்று ஆண்டவர் சொல்வார். ஏறுவாங்க. அவ்வளவுதான். கதை முடிந்து விடும்.இப்படி எல்லோருடைய மரணமும் இருந்தால் நல்லாதான் இருக்கும்!

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

தெய்வீக சுகம் அனைவருக்கும் வாக்குப் பண்ணப்பட்டிருந்தாலும் ஏன் கிடைப்பதில்லை என்பதும் ஒரு விவாதத்திற்குரிய கேள்வியாகத்தான் இருக்கிறது.

வியாதி ஏன் வருகிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. காரணத்தைப் பொறுத்து சுகம் கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம்.

1. யோபு போல் பிசாசினால் வரலாம்.

யோபு 2: 7. அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.

2. பாவத்தினால் வரலாம்.

யோவான் 5:14. அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

3. மன்னிக்காத சுபாவத்தினால் வரலாம்.

மத் 18:34. அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.

4. ஆண்டவர் மகிமையடையும்படி கூட வரலாம்

யோவான் 9:3. இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.

5. சரியாக ஆரோக்கியமாக உடம்பை பராமரிக்காததால் வரலாம்.

I தீமோத்தேயு 5:23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.

6. பவுல் போல் நம்மை உயர்த்தாதபடிக்கு வரலாம்.

II கொரிந்தியர் 12:7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது

 

பாஸ்டர் ஜீவானந்தம் இறுதியில் கேன்சர் வியாதியில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கையில், ஏன் நான் இப்படி கஷ்டப்பட வேண்டும். நன்றாகத்தானே ஊழியம் செய்தேன் என்று சாதுவிடம் கேட்டதாகவும், மரணத்திற்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா என்று ஆண்டவர் ஒருமுறை சொன்னதை சொன்னதாகவும் , சாது சொல்லிக் கேட்ட ஞாபகம்.

--

சோல்:

//பவுலுக்கே பிரச்சனை

2கொரி12:8. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.

9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.

ஆக கிருபை இருந்தால் வியாதியோ, பிரச்சனையோ போகாது என்றுதான் அர்த்தம்.//

தலைகீழா சொல்றீங்க! வியாதி, பிரச்சினை இருந்தாலும் தேவ கிருபை இருந்தால் தாங்கிக் கொள்ளலாம் என்றுதான் அர்த்தம்!

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard