Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிருபையா? கிரியையா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: கிருபையா? கிரியையா?
Permalink  
 


ஒழுக்கத்தையும் ஒற்றுமையுணர்வையும் சட்டத்தையும் நீதியையும் நிறைவேற்றுவதில் உதவிசெய்வதுடன் தேசத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டிய பொறுப்பான நிலையிலுள்ள இராணுவத்தில் அதிலும் விமானப் படையில் 20 வ்ருடங்கள் பணியாற்றியதாகச் சொல்லிக்கொள்ளும் (மேசியாவின்) எதிரிகள் நான் நட்புணர்வுடனும் மன பாரத்துடன் எழுதிய வரிகளுக்கு அளித்துள்ள அழகான பதில் பின்வருமாறு:

 

avatar_7120.gif

Senior Executive

ai.gif
Status: Online
 
Posts: 909
Date: 00:13:24 Sep 2, 2011
  

/எங்கள் மார்க்கத்தைக் குறித்தும் எங்கள் வேதத்தைக் குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான செயல் என்பதையும் உள உறுதியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இழப்புகளுக்கும் நீங்களே பொறுப்பாளிகள் என்பதையும் நேர்மையுணர்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இது சட்ட நிபுணர்களின் ஆலோசனையின்படி நட்புணர்வுடன் அறிவிக்கப்படுகிறது.//

அதென்ன உங்கள் வேதம்? உங்கள் மார்க்கம்? உனக்கு ஒசத்தியாயிருந்தால் அமுக்கிக்கொண்டு உன்னோடு அது இருக்க வேண்டும். அடுத்த மத விஷயங்களில் தலையிடக்கூடாது. மூருகப்பெருமானை மிருகப்பெருமான் என்று பதிக்கும்போது இந்த உண்ர்வு எங்கே போனதாம்?

உன்னை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை சில்சாமு. வீணாக டென்ஷனாகி முன்பு போல செருப்படி வாங்காதே. நீ வேண்டுமானால் எங்கள் நம்பிக்கையை என்ன வேண்டுமானாலும் எழுதலாம், விமரிசிக்கலாம் நாங்கள் செய்தால் அப்படியே பொத்துக்குதோ? உன் சொட்ட நிபுணர்களின் கழிவுகளை நீயே தின்னு. உன்னுடைய எல்லா பதிவுகளும் எங்களிடம் பத்திரமாக உளளது. உன் சட்ட நிபுணர்களே உன்னை பிஞ்ச வெளக்கமாரில் அடிப்பார்கள்... விஷயம் தெரிந்தால்.

உன்னுடைய ஒரு மஹா சிண்டு என் கையில் உள்ளது. விநாயகர் சதூர்த்தி பண்டிகை காலத்தில் சக நண்பர்களுக்கு தெரிவித்தால் இன்னும் உனக்கு விசேஷமாக இருக்கும்...

நீ என்ன பிரகடனம் செய்வது கடந்த சில ஆண்டுகளாகவே நாங்களே அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் கழித்துதான் உனக்கு ரோஷம் வந்திருக்கா? வாயேன் மோதித்தான் பார்க்கலாம். யாருக்கு செருப்படி விழும் என்று உன் தளத்தாரும் அறிந்துகொள்வார்களே.

கிறிஸ்துவையும் மார்க்க தூஷணம் செய்பவர், மார்க்க விரோதி என்றுதான் அப்போதைய வேசிமார்க்க ஊழியர்கள் அழைத்தார்கள்... எங்களுக்கு இது புதிதல்ல‌...

என் விலாசம் உள்ளது, என் அலை பேசி எண் உள்ளது. எங்கே உன் சொட்ட நிபுணர்களை தொடர்பு கொள்ளச்சொல். என் பிதாவின் சித்தமின்றி ஒரு மயிரையாகிலும் அவர்களால் பிடுங்க முடியாது.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


இவர்கள் சொல்லும் கிறிஸ்துவிடம் எனக்கு என்ன கிடைக்கும்? அந்த கிறிஸ்துவின் பிதாவுடன் எனக்கு என்ன உறவு இருக்கமுடியும்?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// கிருபையைப் பெறுவதற்கு 'தகுதி' தேவையில்லை என்பது இவரைப் போன்றோருக்கு ஜீரணிக்க முடியாத விஷயம்.//

மேற்கண்ட வரிகள் பத்து கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலமே இரட்சிப்படைய முடியும் என்ற கொள்கையுடைய அன்பு அவர்களுக்கு எதிராக (மேசியாவின்) எதிரிகளின் தளத்தில் அலி.எண்.2 "வசனத்தை மாற்றும் நித்திய ஜீவன் தளத்தின் பதிவு" என்ற திரியில் எழுதப்பட்டுள்ள‌து; கிருபையைப் பெறுவதற்கான தகுதியாக பத்து கற்பனைகளையல்ல, அதைவிட கடினமான நூற்றுக்கும் மேற்பட்ட தகுதிகளை தேவன் எதிர்ப்பார்க்கிறார் என்பதை (மேசியாவின்) எதிரிகளுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

கொஞ்சமும் அறிவில்லாமல் இருப்பது தவறல்ல, அசட்டு துணிச்சலும் தவறல்ல, யாருடைய போதனையை எடுத்துப் போதிக்கிறோம் என்பதைக் குறித்த அச்சம் சிறிதும் இல்லாமல் நெருப்புடன் விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் இது உங்களுக்கும் சந்ததிக்கும் பெருந்தீமையாகவும் சாபமாகவும் மாறும் என்பதை தேவ ஆவியின் தூண்டுதலால் எச்சரிக்கிறேன்; நீங்களெல்லாம் திருந்தவேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பல்ல; ஆனால் நீங்கள் செய்வது மார்க்க தூஷணம் என்பதையும் நீங்கள் மார்க்க விரோதிகள் என்பதையும் பிரகடனம் செய்கிறேன்; இதன் விளைவுகளை நீங்கள் எதிர்காலத்தில் சந்திப்பீர்கள்; கத்தோலிக்கரைத் தொடர்ந்து வேசி மார்க்கத்தார் என்று குறிப்பிடுவதிலிருந்து தொடர்ந்து பல்வேறு சகோதர்களை இழிவாகவும் கீழ்த்தரமாகவும் எழுதி மன உளைச்சல் தருவதுவரை நீங்கள் செய்துவரும் பல்வேறு அநியாயங்களுக்காக அதிகம் வருத்தப்படவேண்டியதிருக்கும்.

எங்கள் மார்க்கத்தைக் குறித்தும் எங்கள் வேதத்தைக் குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான செயல் என்பதையும் உள உறுதியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இழப்புகளுக்கும் நீங்களே பொறுப்பாளிகள் என்பதையும் நேர்மையுணர்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.இது சட்ட நிபுணர்களின் ஆலோசனையின்படி நட்புணர்வுடன் அறிவிக்கப்படுகிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//அடடா என்ன ஒரு விளங்கிக்கொள்ளுதல். "முகத்தைத் திருப்பாதே" என்பதற்கு அர்த்தம் கடன் கொடுக்க மறுக்காதே என்பதுதான். "சாந்தமாக" நைசாக நழுவிக்கொள்ளுதல் இல்லை. மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காதே என்றால் ஆடையில்லாமல் நிற்போமா?

mathew5:40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

நேரடி அர்த்தம் எடுத்தால் கேவலமாகிவிடும்.

41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

இதுவும் "மார்னிங் வாக்" அல்ல‌.

42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

ஏன் கேட்கிறவனுக்குக் கொடு என்ற வசனத்தை ஆண்டவர் உணர்த்தவில்லையோ?

---

 

சோல் அவர்களே, தாங்கள் எடுத்த வேத பாடத்திற்காக நன்றி!

நீங்க சொல்வது சரிதான். கடன் கேட்பவனுக்கு கொடு என்று தான் அர்த்தம்.

சகரியா பூணன் ஆர்மியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இப்படித்தான் ஒருவர் அடிக்கடி கடன் கேட்பாராம். இவரும் கொடுப்பாராம். அவர் ஒரு குடிகாரராம். பணத்தை பொறுப்பாக செலவழிக்க மாட்டாராம். ஒரு முறை கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது , இவரை அந்த குடிகாரர் திட்டி விட்டாராம். இவர் ஆண்டவரிடம் இதைப் பற்றி ஜெபிக்கையில் , இந்த மனிதனுக்குக் கடன் கொடுக்கலாமா என்று என்னிடம் கேட்டாயா? என்று ஆண்டவர் கேள்வி கேட்டாராம். எனவே கேட்கும் எல்லோருக்கும் கண்டிப்பாக கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லை.

கண்டிப்பாக ஏழைகளுக்கு, ஆதரவற்றோருக்கு, தேவையில் இருப்போருக்கு நாம் உதவி செய்யத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இன்னொரு முக்கியமான் விஷயம். கடன் கொடுப்பது போன்றவைகள் எல்லாம் நாம் செய்ய வேண்டிய கிரியை லிஸ்டில் தானே வருகிறது!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்னாரே, ஜீவிய காலத்தில் ஏதாவது ஒரு கணத்திலாவது கல்லெறிய நம் யாருக்காவது "தகுதி" வருமா? கிரியை எவ்வளவு குறைவுள்ளது தெரிகிறதா?//

அதுக்காக, உங்களை மாதிரி நீ ஒன்று சொன்னால் நான் ஒன்பது சொல்வேன் என்றும் இருக்கக் கூடாது!!

நாம் ஆண்டவர் சமூகத்தில் பயத்துடன்/நடுக்கத்துடன் களி கூருகிறோம். பிசாசுகளும் ஆண்டவரைப் பார்த்து நடுங்கத்தான் செய்கின்றன. நாம் அவர் சொன்னதை செய்யணும்/கீழ்படியணும்(கிரியை) என்று நினைக்கிறோம். பிசாசுகள் கீழ்படியாமல் ,எதிர்த்து நிற்கின்றன. இது தான் வித்தியாசம்.

இரட்சிக்கப்படாமல் செய்யும் நற்கிரியைக்கு என்ன weight இருக்கு என்று தெரியவில்லை. ஆனால் இரட்சிக்கப்பட்டபின் ஆண்டவருக்கு, அவர் வசனத்திற்கு கீழ்படிய வேண்டிய கடமை(கிரியை) நமக்கு இருக்கத்தான் செய்கிறது. அந்த விருப்பமாவது இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.

ஒரு முறை உடன் வேலை செய்யும் அட்டெண்டர் ஒரு பெரிய தொகையை கடனாக கேட்ட போது, எனக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. அது ஒரு அத்தியாவசியமான செலவு கிடையாது. நான் வேறு ஒருத்தரிடம் கேட்டிருக்கிறேன். அவங்க தரவில்லை என்றால் நீங்க கொடுங்க என்று ரொம்ப உரிமையாக வேற கேட்டார்.இபபடியெல்லாம் கேட்கக் கூடாது ...என்று கொஞ்சம் கடினமாக பேசி விட்டேன். உடனே ...உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகத்தை திருப்பாதே...என்று ஆண்டவர் சொன்னார். அப்ப இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கவா சொல்றீங்க?... என்று கேட்டேன். கொடுக்க விருப்பமில்லை என்பதை சாந்தமாக முகத்தைத் திருப்பாமல் சொல்லும்படி உணர்த்தப்பட்டேன்.

என்ன சொல்ல வர்றேன் என்றால், இப்படி சில கிரியைகளை ஆண்டவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். அதாவது நாம் கனி தர வேண்டும் என்று விரும்புகிறார். கனி தராத மரம் வெட்டப்படும் என்று வேறு சொல்லியிருக்கிறார்!

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard