Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோழி தன் குஞ்சுகளைக் கூட்டி சேர்ப்பது போல‌...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: கோழி தன் குஞ்சுகளைக் கூட்டி சேர்ப்பது போல‌...
Permalink  
 


joseph wrote:

Brother Chillsam

[நீ விரும்பும் மரணம் உனக்கு சீக்கிரமே வந்துசேரும்;]

Please don't write like this, It is not our duty to condemn in this fashion, consider this as a request


  •  "சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான் நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்." (எசேக்கியேல்.3;18,19)

அன்பர்களே, நான் சமாளிப்பதாக நினைக்கவேண்டாம்;நீங்கள் நினைப்பதுபோல நான் (மேசியாவின்) எதிரியின் மாம்ச மரணத்தையல்ல, அவனுடைய ஆத்தும மரணத்தைக் குறித்தே யோசிக்கிறேன்; ஏனெனில் நீங்கள் அனைவரும் அறிந்தவண்ணமாக அவர்கள் மீண்டும் மீண்டும் மரணத்தைக் குறித்தும் ஆத்துமாவைக் குறித்தும் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்; கேள்வி எழுப்புவது மட்டுமல்ல, எகத்தாளமும் செய்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே; ஆதியாகமம்.3- ம் அதிகாரத்திலுள்ள சர்ப்பத்தின் அறிவிப்பையே நாம் நம்புவதாகவும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்பாததாகவும் சொல்லுகிறார்கள்; அடிப்படையான இந்த காரியத்திலேயே அவர்களுக்கும் நமக்கும் வேறுபாடு நிலவுகிறது. இன்னும் அவர்கள் இயேசுவானவரின் சரீரப் பிரகாரமான உயிர்த்தெழுதலையே நம்பாதவர்கள் எனும் அதிர்ச்சிகரமான செய்தி உங்களில் பலருக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்; அவர்களுடைய ஒவ்வொரு பதிவையும் வாசித்து (தேவைக்கு அதிகமாகவே அவர்களோடு நேரம் செலவிடும் குற்றத்தை நான் செய்வது குறித்து எனக்கு அதிக வருத்தமே...) அவர்களோடு மிக நெருக்கமாக நின்று வாதிடும் எனக்கும் என்னையே தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு நான் எழுதும் நோக்கமும் அதன் உட்கருத்தும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும்; அதுகூட தெரியாவிட்டால் அவர்கள் விமானப்படையில் இருந்ததற்கே அர்த்தமிராது அல்லவா?

  • "கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு."(எசேக்கியேல் 33:11)

அவர்கள் சீக்கிரமே மனந்திரும்பாவிட்டால் மீட்க முடியாத மரணத்துக்குச் சென்று விடுவார்களே என்ற பதைக்கும் தாயுள்ளத்தின் தவிப்பு மட்டுமே இங்கே வெளிப்படுகிறதல்லவா..? அதையொட்டியே நானும் எழுதுகிறேன்.

ஏற்போர் "ஆம்" என்க, மறுப்போர் "இல்லை" என்க..."ஆம்",என்போரின் கருத்தே அதிகம் என்றெண்ணுகிறேன்; தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது என்கிறார்,சபாநாயகர் ஜெயக்குமார்..!


(பாலைவன வேசி சோலு ... "இப்படி சப்பகட்டு வேற கில்லாடிடா சாமு நீயி...")



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

Brother Chillsam

[நீ விரும்பும் மரணம் உனக்கு சீக்கிரமே வந்துசேரும்;]

Please don't write like this, It is not our duty to condemn in this fashion, consider this as a request



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[மதியம் மல்டி லெவல் சரக்கு உள்ளே போனதுமே மீண்டும் விஷத்தை கக்கியிருக்கிறான்;]

அப்படி வேற இருக்கா? அல்லது நீங்க எழுதியதையெல்லாம் முழுமையாக கொஞ்சம் லேட்டாத்தான் வாசித்திருப்பார்!!

[நீ விரும்பும் மரணம் உனக்கு சீக்கிரமே வந்துசேரும்;]

இப்படியெல்லாம் எழுத வேண்டாமே சில்சாம் அவ்ர்களே! Kindly consider my request!!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கோழி தன் குஞ்சுகளைக் கூட்டி சேர்ப்பது போல‌...
Permalink  
 


"க்ஷணசித்தம், க்ஷணபித்தம்" என்பார்கள்; அதுபோலவே எமெல்லெம் பார்ட்டியான சோலு இருக்கிறான்; இன்று காலை இவனுடைய எழுத்துக்களைப் பார்த்தவுடன் சற்று மகிழ்ந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உணர்ந்தேன்; இவனுடைய குழுவில் யாராவது இவனுக்கு நல்ல புத்திமதி சொல்லியிருப்பார்கள் என்றும் நினைத்தேன்; மதியம் மல்டி லெவல் சரக்கு உள்ளே போனதுமே மீண்டும் விஷத்தை கக்கியிருக்கிறான்; இந்த திரியில் அடியேன் தன்னடக்கத்துடன் எழுதியுள்ள வரிகளை மேற்கோள் காட்டி பின்வருமாறு எழுதியிருக்கிறான்...

சத்தியம் தெரியாது என்று வரிக்குவரி ஒத்துக்கொள்ளும் மூடன்:

Chillsam:

//ஆனால் சத்தியம் என்பது இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதல்லவா? அதை வார்த்தையினாலோ எழுத்தினாலோ முழுவதுமே வெளிப்படுத்த ஒருவராலும் கூடாது; அப்படி கூடுமானால் நான் திரித்துவத்தைக் குறித்து இந்நேரம் விளக்கியிருப்பேனே..! எனது முன்னோர்களாலேயே கூடாத ஒரு காரியத்தை நான் செய்துவிடமுடியுமா,என்ன..?//

MLM.Solusolishan:

வார்த்தையாலோ, எழுத்தினாலோ வெளிப்படுத்தமுடியாத சத்தியத்தை பின்னர் எதைக்கொண்டு அறிவிக்கச் சொல்கிறீர்கள். பிதற்றலின் உச்சம்... வசனத்தில் நீ சூனியம் என்று உன் வாயாலேயே ஒத்துக்கொண்டு இருக்கிறாய், இப்படி சப்பகட்டு வேற கில்லாடிடா சாமு நீயி...

இதுபோன்ற வரிகளை பலமுறை வாசித்து கடந்துசென்றிருக்கிறேன்; ஆனாலும் ஏனோ இப்போது கீழ்க்கண்ட வசனம் என்னுடைய நினைவுக்கு வந்தது...

  • "எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." (எரேமியா 13:23)

ஆம், (மேசியாவின்) எதிரிகளான இவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லையோ என்று அச்சமாக இருக்கிறது;மேலும் முன்பின் பார்த்திராத தளநண்பர்களை இவ்வாறு கீழ்த்தரமாக குறிப்பிடது துணிவதிலிருந்தே இவர்களுடைய தராதரமும் தெரியவருகிறது;என்னுடைய வாயிலிருந்து குற்றங் கண்டுபிடிக்கவேண்டி ஓநாய்களைப் போல சுற்றிவரும் உங்களுக்கு வாய்ப்பு தராமல் மற்றவரையும் எச்சரிப்பதன் காரணமாகவே இப்படி என்மீது சீறுகிறீர்கள் என்பது நன்றாக விளங்குகிறது.

  • "இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,அநேக காரியங்களைக் குறித்துப்பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்." (லூக்கா.11;53,54)
  • "இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை." (யோவான்.2:24)

பன்றிக்கு முன்பாக முத்தைப் போடுவார்களா,என்ன? பிள்ளைகளின் அப்பத்தை நாய்களுக்கு போடுவார்களா,என்ன? பத்தினிகள் தலைநிறைய பூச்சூடிக் கொண்டு ஊரெல்லாம் சென்று நான் பத்தினி பத்தினி என்று தம்பட்டம் அடிக்கமாட்டார்கள்;விபச்சாரிகள் தான் பத்தினிபோல பூவோடும் பொட்டோடும் வேடமிட்டு இடுக்கமான கிணற்றில் தள்ளிவிடப்பார்ப்பார்கள்; நீங்களும் உங்களைக் குறித்து வேத மாணவர் என்றும் சொல்லிக்கொள்ளுவது அதே இரகம்தான்;நீ ஆவிக்குரிய உலகின் விபச்சாரி என்பதையும் உனக்கு பலரோடு கள்ளத் தொடர்பு இருப்பதையும் அனைவரும் அறிவர்;பல ஊர் தண்ணி உனக்குள் பாய்ந்து ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும்;எனக்கோ நாசரேத்தூர்காரர் கொடுத்த ஜீவத்தண்ணீரைத் தவிர வேறொன்றையும் குடித்து பழக்கமில்லை;தேவையானது இன்னது என்று என் தலைவன் எனக்கு சொல்லித் தந்திருக்கிறார்.

  • "தேவையானது ஒன்றே..."(லூக்கா.10:42)

நீயோ திருட்டு தண்ணீர் தித்திக்கும் என்று அலைபாய அலைந்து திரியும் காட்டுக் கழுதை;உன்னிடம் வசனம் சொல்லி பேர் வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை; தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் கேடுகெட்ட புத்தி எனக்கு கிடையாது;நான் இன்னும் கற்றுக்கொள்ள விரும்புவதால் எதுவும் தெரியாது என்கிறேன்;நீயோ எல்லாம் கற்றறிந்தவன் போல பெருமையடிக்கிறாய்;நீ பதருக்கு ஒப்பாவாய்.

  • "மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்." (நீதிமொழிகள் 9:17 )

அப்படித்தானே இரஸலின் ஆட்களுடன் உறவாடிவிட்டு வாந்தியெடுக்க வந்தாய்..? உன்னால் வேறு யாரும் வாந்தியெடுத்துவிடாதிருக்கவே நான் போராடிக்கொண்டிருக்கிறேன். நீ விரும்பும் மரணம் உனக்கு சீக்கிரமே வந்துசேரும்; ஆத்துமாவே இல்லையெனும் நீ ஆத்துமாவுக்கு பிசின் தடவ இங்கேயும் அங்கேயும் சுற்றியலைகிறாயோ..? கோதுமை மணிகள் களஞ்சியத்திலும் பதரும் களைகளும் அக்கினியிலும் பங்கடையும்; சாக்கடைக்கும் கழிசடைக்கும் தூக்கு தூக்கும் நீ இனியும் என்னைக் குறித்து இழிவாக எழுதி உன்னைக் கெடுத்துக்கொள்ளாதே;உனக்கு நியாயத்தீர்ப்பு நெருங்கிவிட்டதடா..! உன் பாவங்கள் நியாயத்தீர்ப்புக்கு முந்திகொள்ளும்;உன் கண் முன்னிலையிலேயே எல்லாம் நடந்தேறும்.

  • "சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்." (I தீமோத்தேயு 5:24)

Tag. VNK>இணை போதகர் பீட்டரின் பிதற்றல்!!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: கோழி தன் குஞ்சுகளைக் கூட்டி சேர்ப்பது போல‌...
Permalink  
 


கூவம் சுத்தமாக ஓடிய காலத்தில் உள்ள எழுத்தாக உங்க எழுத்தை பாவித்திருப்பார்கள். நீங்க தான் தவறாக புரிந்துகொண்டீர்கள் .  

VNK கூட்டத்தார் தங்கள் எழுத்துக்கள் என்னமோ சுத்தமான லேக் மிசோரி தண்ணீர் மாதிரி இருப்பதாக கற்பனை செய்துகொள்கிறார்கள் போல‌...



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கோழி தன் குஞ்சுகளைக் கூட்டி சேர்ப்பது போல‌...
Permalink  
 


koovam river

பாவத்தைக் குறித்த அறிவில்லாத (மேசியாவின்) எதிரிகள் என்னுடைய எழுத்தினை கூவத்துடன் ஒப்பிடுவது வழக்கம்;கூவம் எதனால் கூவம் ஆனது என்பதையோ கூவத்தின் ஆதிநிலை என்னவென்பதையோ அவர்கள் அறிந்திட நியாயமில்லை;கூவம் நதியுங்கூட அது புறப்படும் இடத்தில் சுத்தமாகவே புறப்படுகிறது;ஆனால் வழியில் அது சந்திக்கும் அனுபவங்களே அதனை இகழ்ந்துரைக்கும் நிலைக்கு மாற்றிவிடுகிறது;அப்படியே நானும் (மேசியாவின்) எதிரிகளுடன் தொடர்ந்து போராடும் காரணத்தினால் என்னைக் கறைப்படுத்திக் கொண்டேன்;ஆனாலும் எனக்குள்ளிருந்தும் சில நியாயமான வாதங்கள் புறப்படுவதுண்டு;அதனை (மேசியாவின்) எதிரிகள் ஒருபோதும் பரிசீலித்ததே இல்லை;அவ்வாறு அண்மையில் கூட எனது விவாதத்தினூடே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறேன் அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு வம்புகளுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள்;இப்பவும் குறிப்பிட்டதொரு விவாதத்தினிடையே நம்முடைய நண்பர்களைப் பரியாசம் செய்வதற்கு கோழியை (மேசியாவின்) எதிரிகள் பயன்படுத்தினார்கள்; அவர்கள் ஏஸியை வைத்து (கோவை பட்டணம் எப்போதுமே ஜிலுஜிலு என்று இருக்குமாம்;அவர்களுடைய தேவன் அப்படியாக அந்த பட்டணத்தை ஏஸி பண்ணிவைத்திருக்கிறாராம்..) அலம்பல் பண்ணியபோது எப்படி என்னுடைய சிந்தனை வேறு திசையில் போனதோ அவ்வாறே கோழி பற்றிய வாதத்துக்கும் எனது சிந்தையில் சில கருத்துக்கள் தோன்றியது;அது சிறுவயதில் எனக்கு ஞாயிறு பள்ளி ஆசிரியர்களால் சொல்லித்தரப்பட்டது.

Hen and chicks

அந்த பாடல்:

 கோழி தன் குஞ்சுகளைக் கூட்டி சேர்ப்பது போல‌
கூவி அழைக்கிறாரே ஜீவன் தந்த இரட்சகர்

சாக்கு போக்கு சொல்லாமலே ஜல்தியாய் ஓடிவந்து
காக்கும் செட்டைகளின் கீழ் கண்டடைவாய் இரட்சிப்பை

தினமும் ஜெபிப்பதாலே வேதம் வாசிப்பதாலே
நிச்சயமாய் இயேசுநாதர் செட்டையின்கீழ் நீயிருப்பாய்

இந்த பாடல் மத்தேயு 23:37 இன் அடிப்படையில் எழுதப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே;அந்த வசனம்:

  •  "எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று."(மத்தேயு 23:37 & லூக்கா 13:34)

இந்த வசனத்தில் இயேசுவானவர் தன்னுடைய கரிசனையையும் அன்பையும் கோழியின் அன்புடனும் தன் மக்களின் நிலைமையை அவ்வப்போது விலகி, தூரப்பட்டு சிதறிப்போகும்  அதன் குஞ்சுகளின் நிலையுடனும் ஒப்பிடுகிறார்; இதே ஒப்பீட்டை - அதாவது தேவனுடைய பாதுகாப்பின் கரத்தை செட்டைகளுடன் ஒப்பிடும் பாங்கை பழைய ஏற்பாட்டிலும் நாம் வாசிக்கிறோம்; நாம் அனைவரும் நன்கு அறிந்த சங்கீதம்.91 -லும் உபாகமம்.1:31 லும் இன்னும் மல்கியா.4:2 லும் சங்கீதம்.63;7 லும் இதே ஒப்பீட்டை வாசிக்கிறோம்; (மேசியாவின்) எதிரிகள் கிறிஸ்துவானவரை நீதியின் சூரியன் என்று வர்ணித்து ஏற்கனவே எழுதியிருப்பதை சுட்டிகாட்டியிருக்கிறேன்.

  • உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
  • நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
  • அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

  • அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். (சங்கீதம்.91:1-4)
  • கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

  • கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. (உபாகமம்.32:11,12)
  • ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.(மல்கியா.4:2 )
  • நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.(சங்கீதம்.63:7)

அங்கே வார்த்தையாக வெளிப்பட்ட பிதாவின் அன்பையே இங்கே புதிய ஏற்பாட்டில் வெளிப்பட்ட இயேசுவிலும் காண்கிறோம்; பிதாவாகிய தேவனின் சகல அம்சங்களும் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவிலும் காணப்படுகிறது என்பதே அப்போஸ்தலர்களின் பிரதான செய்தியாக இருந்தது; முழு பூசணிக்காயை கைப்பிடி சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல  (மேசியாவின்) எதிரிகள் தங்களது சூழ்ச்சியும் சூதகமுமான போதனைகளூக்கு அப்போஸ்தலர்களையும் துணைக்கு அழைப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா..?

இனியாவது ஆரோக்கிய உபதேசத்தை நாடும் வாஞ்சையுள்ள ஆத்துமாக்கள் இதுபோன்ற துரோகிகளை அடையாளங் கண்டு (மேசியாவின்) எதிரிகளான இவர்களுக்கு விலகியோட வேண்டும் என்பதே யௌவன ஜனம் தளத்தின் அன்பர்கள் செய்யும் அன்றாட ஜெபமாகும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard