Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈடுபலியா,பரிகாரபலியா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஈடுபலியா,பரிகாரபலியா..?
Permalink  
 


lib_avtr_210.gif
Moderator
orangestar.giforangestar.giforangestar.gif
Status: Offline
 
Posts: 1602
Date: 08:17:29 Sep 13, 2011
 
 
//ஆனால் அவங்களுக்கு இரட்சிப்பும் இல்லை, பாவமுமில்லை பாவமன்னிப்புமில்லை, இரட்சகரும் தேவையில்லை;அவர்கள் இரட்சிப்பு என்பதாகச் சொல்லுவது மீண்டும் உயிரோடெழுவதையே;பாவத்துக்கான தண்டனை என்பது மாம்ச மரணம் மட்டுமே;அதிலிருந்து மீளவே இயேசு என்பவரை பிதா சிருஷ்டித்து அனுப்பினாராம்;ஏனெனில் அவர் பிதாவின் அருகில் கீழ்ப்படிதலுள்ள தூதனாக ஆவி ஜீவியாக இருந்தவராம்;அதாவது மிகாவேல் என்றும் சொல்லலாம்;இவர்களுக்கும் நமக்கும் என்ன பிரச்சினை என்பதை வாசக நணப்ர்கள் அறிந்துகொள்ளவேண்டும்;இதோ உங்கள் வீட்டின் அருகே நடைபெறும் வேத மாணவரின் வேத ஆராய்ச்சி கூட்டத்துக்கு அன்போடு அழைத்துச்செல்ல ஒரு கிழவி வந்துகொண்டிருக்கிறாள், பாருங்கள்;ஆம்,அவர்கள் ஊடுறுவி விட்டார்கள் என்பதே பயங்கரம்..!//


இவன் மீண்டும் மீண்டும் தன்னை கிறுக்கன் என்றே நிரூபித்திக்கொண்டு இருக்கிறான்!! எந்த பதிவை எடுத்துக்கொண்டாலும், கிறிஸ்து இயேசுவின் ஈடுபலி தான் எல்லாருக்கும் இரட்சிப்பை கொண்டு வருகிறது என்று எழுதுவது இவனுக்கு தெரியவில்லையா அல்லது விளங்கவில்லையா!! சர்ப்பத்திற்கு கண்கள் இருக்காது போல் தான்!! கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியும் என்று நீ நம்பினால் அதை போதிக்கவேண்டியது தானே!! மாறாக மனிதர்களாக சென்று அவரிடம் கேட்டால் தான் அவர் இரட்சிப்பார் என்பதை முதியோர் திட்டத்துடன் ஒப்பிடும் அளவிற்கு தான் உனக்கு அறிவு வளர்ந்திருக்கிறது!! ஜோசப்பும் ஜானும் என்னத்தை எழுதினார்கள் என்பதும் தெரியும்!! ஒன்று கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியும் என்றால் அது அவரின் ஈடுபலியானால் உண்டானது என்று நம்பு, அதை பிரசங்கம் செய்!! அல்லது கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று பதிவு செய்!! இரட்சகர் தேவை என்று தான் மூடனே நாங்கள் சொல்லுகிறோம்!! இல்லை இல்லை, நாமாகவே போனால் தான் இரட்சிப்பு என்று முதியோர் திட்டத்துடன் ஒப்பீட்டு நீ போதிக்கிறாய்!! என்ன ஒரு அறிவு!! இதை பேச மூன்று பேராம், அதுவும் காலையில் இருந்தாம்!!

நீ சொல்லுவது: உங்களுக்கு மன்னிப்பு கிடையாது, நீங்கள் நரகத்திற்கு போவீர்கள் என்கிறதான போதனைகளே!!

நான் சொல்லுவது: உனக்கு மன்னிப்பு இருக்குது, நீயும் இரட்சிக்கப்படுவாய், உனக்காக மாத்திரம் இல்லை, சர்வ லோகத்திற்காகவும் கிறிஸ்து மரித்தார், அதன் பயனாய், ஆதாமிற்குள் மரிக்கும் அனைவரும் கிறிஸ்துவின் ஈடுபலியால் உயிர்த்தெழுவார்கள்!! மரணமே உன் ஜெயம் எங்கே, பாதாளமே உன் கூர் எங்கே என்று கர்ஜித்து சொல்லுகிறோம்!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்கிற அன்பை விட ஒரு பெரிய அன்பு இல்லை!!

உன்னுடைய வஞ்சக போதனைகளிலிருந்து ஜனங்களை திருப்ப அவர் கிழவி என்ன, தவழ்ந்து வரும் பாலகனை கூட அனுப்புவார்!!

//இரட்சிக்கப்பட்டவர் இரட்சிப்பின் அனுபவத்தைக் காத்துக்கொள்ளும் போது கர்த்தருடைய வருகையில் இரட்சிக்கப்படுவார்;இரட்சிக்கப்படுவதற்காகவே இரட்சிக்கப்பட்டு அன்றாடம் இர்ட்சிக்கப்படுகிறார்; இன்னும் என்ன சொல்ல..? //

இரட்சிக்கப்பட்டவர்கள் மீண்டும் இரட்சிக்கபொபடுவார்களாம்!! இதை விட கேவலமான ஒரு போதனை இருக்க முடியுமா!! இன்னும் ஒன்றையும் நீ சொல்ல வேண்டாம்......!!

காரியம் அறியாத இந்த மூடர்களுடன் விவாதமே வேண்டாம் என்று நான் ஒதுங்கினாலும் சபைகளைக் குறித்ததான பக்தி வைராக்கியத்தினால் மீண்டும் எழுத வேண்டியதாகிறது;இந்த பக்தி வைராக்கியமானது (மேசியாவின்) எதிரிகள் கூறுவது போல பவுலடிகள் காலத்தோடு எல்லாம் முடிந்துபோகிறதில்லை; நாம் பவுலடிகளின் உணர்வுக்கும் ஊழியத்துக்கும் உடன்பங்காளிகளாக இருக்கிறோம் என்பதே நம்முடைய விசுவாசமாகும்;

  • "...எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? " (கொரிந்தியர்.11;28,29)

இத்தனை நிதானமாக எடுத்துக்கூறியும் விளங்கமறுப்போர் மற்றவரையும் குழப்பாதிருக்கும் வண்ணமாக தொடர்ந்து போராடவேண்டியதிருக்கிறது; கடந்த வாரத்தில் இவர்களால் உண்டான கடுமையான மனக்கொதிப்பிலிருந்து தட்டுத்தடுமாறியெழுந்து மீண்டும் இதோ சில வரிகளை நேற்றிரவு எழுதினேன்;

"எல்லோருக்கும் இரட்சிப்பா..? "

http://chillsam.activeboard.com/t43305641/topic-43305641/

ஆனால் இவர்கள் செய்த அவதூறுக்கும் தூஷணத்துக்கும் கொஞ்சமும் மனம்வருந்தாமல் இதோ என்னுடைய மேற்கண்ட வரிகளை எடுத்துக்கொண்டு அவர்களுடைய பாணியில் கீழ்த்தரமான வார்த்தைகளால் ஒருமையில் அர்ச்சிக்கிறார்கள்;இனி இவர்களுடன் நமக்கு போராட்டம் இல்லை;ஆனாலும் சத்தியத்துக்கு எதிரான இந்த மாயப் பிசாசுகளின் வேதப்புரட்டுக்குரிய பதில்களை இயன்றமட்டும் எழுதுவேன்;(மேசியாவின்) எதிரி எழுதியுள்ள  மேற்கண்ட வரிகளில் கிறிஸ்துவின் ஈடுபலி எனும் வார்த்தை என்னை மீண்டும் பாதித்ததால் ஈடுபலி எனும் வார்த்தைக்கும் பரிகார பலி எனும் வார்த்தைக்குமான வித்தியாசத்தை விளக்கக்கோரி எழுதியிருந்த இந்த திரியானது நினைவுக்கு வந்தது;

முதலில் ஈடுபலி அல்லது ஈடு என்பதற்கான ஆங்கில வார்த்தையினை யோசித்ததில் அது காம்ப்பன்ஸேஷன் (compensation) என்பதாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்து அந்த வார்த்தைக்கான பொருளையறிந்தேன்;

compensation - something (such as money) given or received as payment or reparation (as for a service or loss or injury)

http://www.thefreedictionary.com/compensation

இதன்படி ஈடுபலி எனும் வார்த்தை முற்றிலும் கிறிஸ்துவானவரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்; பரிகார பலி என்பதிலிருக்கும் தியாகமும் மேன்மையும் ஈடுபலி என்பதில் இல்லை என்பதே என்னுடைய ஆவியில் நான் செய்த தீர்மானம் ஆகும்;அப்படியானால் வேதமாணாக்கர் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் வேதம் சொல்லாத ஈடுபலி எனும் வார்த்தையை எங்கிருந்து பிடித்தார்கள்;வேதம் சொல்லும் பரிகார பலி எனும் வார்த்தை ஏன் தவிர்க்கிறார்கள் என்று யோசித்தால் அதற்கான காரணம் வேறொன்றுமில்லை, இவர்கள் இரஸல் எழுதிக்கொடுத்ததை மாத்திரமே வேதமாக பாவிக்கிறார்கள்;இரஸல் எனும் கள்ளப்போதகனுடைய 6 நிருபங்கள் அல்லது 6 தொகுதியான வசனங்களே இவர்களுக்கு பிரதான வேதம் என்பதும் அவனுடைய கண்ணாடியை மாட்டிக்கொண்டு வேதத்தை வாசிப்பதாலேயே இப்படிப்பட்ட வி(வ)காரமான உபதேசங்கள் வெளிப்படுகிறது என்பதும் நமக்கு தெரியவருகிறது.

  • "நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்." (I யோவான் 2:2)
  • "கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்." (ரோமர். 3:26)

இறுதியாக கிறிஸ்துவானவரின் தியாகத்தை ஏன் ஈடுபலி என்று சொல்லக்கூடாது என்பதற்கான என்னுடைய கருத்தை முன்வைக்கிறேன்; ஆதாம் காலத்திலிருந்து ஒருவனுடைய பாவத்துக்காக செலுத்தப்பட்டதெல்லாம் ஈடுபலியே; ஆனால் கிறிஸ்துவோ அனைத்து ஈடுபலிகளையும் நிறைவேற்றி பாவங்களை பரிகரிக்கும் கிருபாதார பலியானார்; பாவங்கள் அன்று மூடப்பட்டிருந்தது,இன்றோ நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது;ஈடுபலிகளெல்லாம் பரிகார பலியான இயேசுவானவருக்கு நிழலாக இருந்தது;எனவே ஈடுபலி எனும் வார்த்தையானது இயேசுவானவரின் மேன்மையான பலியைக் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கும் என்கிறேன்;ஏனெனில் இயேசு பாவமில்லாத பூரணப் புருஷன் என்பது மாத்திரமல்ல,அவர் தேவாதி தேவனின் ஒரு பாகம் அல்லது அவரே சர்வத்துக்கும் மேலான தேவன்;

"...மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். " (ரோமர் 9:5 )

இதைக் கேட்க சகிக்காவிட்டால் அகற்றும் அகற்றும்...தேவதூஷணம்  என்று கூச்சலிட்டு காதுகளைப் பொத்திக்கொண்ட அன்னா காய்பா கூட்டத்தாரைப் போல (மேசியாவின்) எதிரிகள் தங்கள் காதுகளைப் பொத்திக்கொள்ளட்டும்;இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமே என்று நான் நிரூபிக்க எழு(து)வதைக் கண்டால் இவர்களுக்கு காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருக்கிறதாம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


வாநோகொ (VNK) Internartional says:

// கிறிஸ்துவின் ஈடுபலியை விசுவாசிக்காத கூட்டம் எதை எதையோ எழுதி காமெடி செய்கிறார்கள்!! //

கிறிஸ்துவானவர் சிலுவையில் செய்த தியாகமும் அதனால் மனுக்குலம் அடைந்த- அடைகிற- அடையப்போகும் பாக்கியமும் எண்ணிமுடியாதது; ஆனால் இதனை சிறுமைப்படுத்தும் வண்ணமாகவும் கிறிஸ்துவானவருடைய தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வண்ணமாகவும் (மேசியாவின்) எதிரிகள் தொடர்ந்து குழப்பம் விளைவித்து வருகின்றனர்; இவர்களுடைய தந்திரமான- மோசம்போக்கும்- சூழ்ச்சிமிகுந்த வாசகங்களை நுணுக்கமான முறையில் ஆராய்வோரைத் தவிர வேறொருவருக்கும் இவர்களுடைய சுயரூபம் தெரியவர வாய்ப்பில்லை; உதாரணத்துக்கு இவர்கள் கிறிஸ்துவானவரை மிகவும் மதிப்பது போலவும் உயர்வாகக் கருதுவது போலவும் எழுதுவதெல்லாம் வெறும் சூழ்ச்சியே என்பதை எப்போதோ தோலுரித்துவிட்டேன்; மேலும் இவர்களுடைய இதுபோன்ற சூதகமானதும் தந்திரமானதுமான வார்த்தை விளையாட்டைக் குறிப்பிட்டே கண்டித்து வந்துள்ளேன்; ஆனால் நிறக்குருடர்களைப் போலவும் செலக்டிவ் அம்னீஷியா நோயாளிகளைப் போலவும் இவர்களுக்கு என்னுடைய நியாயமான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல தைரியமில்லை;அதிலொன்று தான் மேற்கண்ட "கிறிஸ்துவின் ஈடுபலி" எனும் வார்த்தை;இதனை விளக்கிச் சொன்னால் மட்டுமே அப்பாவி சகோதர்களுக்கு உரைக்கும்; அடடா, அதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா என்று..!

கிறிஸ்துவானவர் ஈடுபலியாக செலுத்தப்பட்டார் எனும் வார்த்தையில் என்ன தவறு என்று யோசிக்கிறீர்களா..? ரொம்ப சந்தோஷம், அதையே நானும் கேட்கிறேன்... அப்படியே உங்கள் கருத்தை எழுதினால் என்ன..? எழுதுங்களேன், கிறிஸ்துவானவரின் தியாகத்தை ஈடுபலி என்று எழுதுவது எவ்வாறு அவரை சிறுமைப்படுத்துவதாகும்..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard