Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எஸ்தரின் சரித்திரம்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: எஸ்தரின் சரித்திரம்
Permalink  
 


சோல்:

//சதீஷ்குமார் பிசாசுகளைத் துரத்தி துரத்தி இப்ப கோவையே பிசாசு ஃப்ரீ கோவையாகிவிட்டது.//

அதெப்படி? நீங்க இரண்டு பேர் இருக்கீங்களே!

 //அக்கிரம செய்கைக்காரன் சதீஷும் திருந்துவான். இவன் கூட்டத்துக்கு பிசாசுகள்தான் அதிகம் வருகிறதாம், ஒரு சில பிசாசுகள் சென்னையிலிருந்துகூட வந்திருக்கலாம் போல‌...//

யாரைச் சொல்றீங்க? நான் சென்னை கிடையாது ...

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

spetersamuel wrote:

எதையும் வித்தியாசமான கோணத்தில் யாருக்கும் தோன்றாத கோணத்தில் சிந்தித்துப்பார்ப்பது நல்லதுதான்! ஆனால் வேதம் எஸ்தரை எந்த கோணத்தில் பார்க்கிறது என்பது மிக முக்கியம்.

நமக்குத் தோன்றுகிறபடியல்ல, ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு சம்பவங்களும் அதை வாசிக்கும்போது முழுவேதத்திலும் அது எப்படி அர்த்தப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதன்படிதான் வியாக்கியானம் செய்யவேண்டும். அதில் தவறுவதால்தான் பலவிதமான விநோத உபதேசங்கள் உருவாகின்றன!!!


 

சரிதான். என்றாலும் சில வேறு கோண பார்வைகள் சுவாரஸ்யமாகவும், ஆவிக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதாகவும் இருக்கிறது!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

எதையும் வித்தியாசமான கோணத்தில் யாருக்கும் தோன்றாத கோணத்தில் சிந்தித்துப்பார்ப்பது நல்லதுதான்! ஆனால் வேதம் எஸ்தரை எந்த கோணத்தில் பார்க்கிறது என்பது மிக முக்கியம்.

நமக்குத் தோன்றுகிறபடியல்ல, ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு சம்பவங்களும் அதை வாசிக்கும்போது முழுவேதத்திலும் அது எப்படி அர்த்தப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதன்படிதான் வியாக்கியானம் செய்யவேண்டும். அதில் தவறுவதால்தான் பலவிதமான விநோத உபதேசங்கள் உருவாகின்றன!!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

எஸ்தரின் சரித்திரம்

கோயம்புத்தூரில் ஊழியம் செய்யும் நல்ல ஊழியக்காரரான சகோ சதீஷ் குமார் கொடுத்த வித்தியாசமான செய்தி இது.

ஒரு மனிதனின் சரித்திரத்தில் அந்த மனிதன் இங்கு , இன்னாருக்கு பிறந்தான் என்று ஆரம்பித்து , இப்படி மரித்தான் என்று அந்த மனிதனை பற்றி சொல்லி முடிக்கப்படும் . ஆனால் -எஸ்தரின் சரித்திரம் - என்று பெயரிடப்பட்டிருக்கும் புத்தகம் எஸ்தரில் ஆரம்பித்து, எஸ்தரில் முடியாமல் மொர்தெகாய் மேன்மைபடுவதில் வந்து முடிகிறது. ஏன் எஸ்தர் மேன்மை இழந்து போனாள்? எஸ்தரிடம் காணப்பட்ட தேவையற்ற குணங்கள் என்ன?

1. நிர்விசாரம்

எஸ்தர் 3 :15. அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கிற்று.

சூசான் நகரம் கலங்கும்படியான ஒரு செய்தி அரண்மனையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. ஆனால் அது எஸ்தருக்குத் தெரியவில்லை.

எஸ்தர் 4:5. அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.

பல கிறிஸ்தவர்களும் உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் தீப் பிடித்தால் நமக்கும் ஆபத்துதான் என்று புரியாமல் ஜப்பானில் பூகம்பம் வந்தால் என்ன, பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் என்ன, கர்நாடகாவில் பகவத் கீதையை படிக்கச் சொன்னால் என்ன என்று நிர்விசாரமாக இருக்கிறார்கள்.

2.மனித கட்டளைகளுக்குப் பயம்

எஸ்தர் 4:11 யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.

ராஜாவின் கட்டளையை நினைத்துப் பயந்தாள். மத மாற்ற தடை சட்டம் வந்தவுடன் நமக்கு பயம் வந்து விடுகிறது. பிற மத தலைவர்கள் பற்றியோ, அரசியல்வாதிகள் பற்றியோ ஊழியக்காரர்கள் மைக்கை விலக்கி விட்டுத்தான் ஆவேசமாகப் பேசுகிறார்கள். தானியேல் போல் ராஜாவின் கட்டளைக்கு பயப்படாமல் கிறிஸ்தவர்கள் இருக்க வேண்டும்.

3.உலகம் தரும் பாதுகாப்பின் மேல் நம்பிக்கை

எஸ்தர் 4: 13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.

அரண்மனையின் இருப்பதால் பாதுகாப்பு என்று நினைத்திருப்பாள். நாமும் நல்ல வேலை இருக்கு, பணம் இருக்கு, அழகு இருக்கு, அந்தஸ்து இருக்கு என்று உலகம் தரும் பாதுகாப்பின் மேல் நம்பிக்கையாய் இருக்கக் கூடாது.

4.மௌனம்

எஸ்தர் 4:14 நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.

ஆண்டவர் கொடுத்திருக்கும் ராஜமேன்மையை சுவிசேஷம் சொல்ல பயன்படுத்த வேண்டும். மௌனமாயிருக்கக் கூடாது.

5.சுயநலம்

எஸ்தர் 4:16 நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

தனக்காகத் தான், தான் ராஜாவினிடத்தில் பேசப் போகையில் அழிந்து விடக் கூடாது என்றுதான் உபவாசம் செய்தாள். யூதர்கள் அழியக்கூடாது என்பதற்காக அல்ல! சுயநல ஜெபங்கள் ஒழிய வேண்டும்!

எஸ்தரை இப்படி ஒரு கோணத்தில் நான் இதுவரை பார்த்ததில்லை!

அவர் அப்பா செய்வினையால் பிசாசால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் , இரண்டு ஊழியக்காரர்கள் வந்து ஜெபிக்கையில் சுகம் பெற்றாராம்.அப்ப இவர் மிகவும் சிறு பையனாக இருந்தாலும், அப்பாவிற்கு ஆண்டவர் விடுதலை தந்தால், அந்த ஊழியக்காரர்களை போல் நானும் ஊழியம் செய்வேன் என்று ஜெபம் செய்தாராம்.பின் வளர்ந்து , ஆண்டவரை விட்டு விலகி பின் ஊழியத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் பேய் பிடித்தவர்களுக்கு மட்டும் ஜெபிக்க மாட்டாராம். அவர்கள் தலையில் கை வைத்து ஜெபித்தால், பேய் இவரை தாக்கி விடும் என்ற பயம் தான் காரணமாம். ஒரு முறை பிசாசு பிடித்த ஒரு பெண்ணுக்காக அதிகம் ஜெபித்து களைத்துப் போன ஒரு ஊழியர் இவரை அழைத்து ஜெபிக்க சொல்ல, இவர் எதுக்கு வம்பு, பிசாசு போகவில்லை என்றால், வழக்கம் போல் ஆசீர்வதித்து ஜெபித்து அனுப்பி வைங்க என்று சொன்னாராம். அது ஒரு ஆத்துமா என்று நீ பார்க்க வேண்டாமா என்று அந்த ஊழியர் இவரை கடிந்து கொண்டாராம். அந்த வார்த்தையால் குத்தப்பட்டு, அன்று சிலர் வந்து ஜெபித்திராவிட்டால் அப்பாவிற்கு சுகம் கிடைத்திருக்காதே என்ற உணர்வும் வந்து, அன்று இரவு, ஆண்டவரே அப்படி பிசாசுகளை துரத்தி ஊழியம் செய்யவும் ஆயத்தமாயிருக்கிறேன். பயன்படுத்துங்க என்று ஒப்புக் கொடுத்தாராம். அதற்கப்புறம் கூட்டத்திற்கு மனிதர்கள் வருகிறார்களோ இல்லையோ, பிசாசுகள் அதிகம் வருகிறது என்று சொன்னார்!!. இரவு பிசாசு பிடித்தவருக்கு ஜெபிக்கச் சொல்லி ஃபோன் வருமாம். யார் பேசுறது என்று கேட்டால், காளி பேசுறேன் என்று பதில் வரும் என்று நன்றாகப் பேசினார்.

 

 

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard