Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீயா நானா..? (மேசியாவின்) எதிரிகளுக்குள் முட்டலும் மோதலும்..!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நீயா நானா..? (மேசியாவின்) எதிரிகளுக்குள் முட்டலும் மோதலும்..!
Permalink  
 


நான் புரிந்து கொண்ட வரை, பெரெயன்ஸ் & சோல், நேரா பரலோக ராஜ்யம் போயிடுவாங்க! நான், நீங்க எல்லாம் பூமியில் உண்டாகும் தேவ ராஜ்யமான 1000 வ்ருட அரசாட்சியில் படிச்சு பாசாகி ... அப்புறம் என்ன செய்வோம் என்று தெரியவில்லை!

ஆனால் இந்த வசனத்தில் ராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டோம் என்று வேற போட்டிருக்குது. சுதந்தரிக்காதவங்க என்ன ஆவாங்க? இத்தனை ராஜ்யத்தை வைத்துக் கொண்டு ஒரே குழப்பமாக இருக்கிறது!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

நீங்க வேற, மேற்சொன்னவுக எல்லாம், ராச்சியத்தை சுதந்தரிக்கமாட்டார்கள், இங்கே பூமி முந்தைய சீருக்கு திரும்பும்போது கற்றுக்கொள்வார்கள் என்பார்கள்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

--

இந்த வசனத்தினால் பெரேயன்ஸ் சகோ அன்புவிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். எனக்கும் ஆர்வமாகத்தான் இருக்கிறது. இதை எப்படி நம் பெரெயன்ஸ்&சோல் விளக்குவார்கள் என்று. ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்றால் உயிர்தெழ மாட்டார்களா? அப்ப ”இரட்சிப்பு” அனைவருக்கும் கிடையாதா?




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
நீயா நானா..? (மேசியாவின்) எதிரிகளுக்குள் முட்டலும் மோதலும்..!
Permalink  
 


நித்திய ஜீவன் தளத்தின் நிர்வாகியான திரு.அன்பு அவர்கள் தனது கூட்டாளிகளாக விளங்கிய (மேசியாவின்) எதிரிகளுடன் விவாதித்து வருகிறார்; இவர்களுடைய விவாதத்தின் போக்கை யௌவன ஜனம் தளம் நிதானமாக கவனித்து வருகிறது;அதில் பகிரப்படும் கருத்துக்களும் மதிப்பீடு செய்யப்படுகிறது.

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகவும் அதனை ஒரு கொள்கையாக அறிவிக்கவும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே;பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமான எந்தவொரு கொள்கை அறிவிப்பையும் போதனையையும் நாம் எதிர்ப்பதுடன் அதற்குரிய சரியான பதிலை தமிழ் இணையத்தில் பதிவுசெய்து வைக்க தீர்மானித்துள்ளோம்.

ஏனெனில் எந்தவொரு கொள்கையும் போதனையும் எதிர்காலத்தின் சாதகபாதகங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது;எனவே நம்முடைய நோக்கமெல்லாம் எது சரியானது என்று போதித்து பேர்வாங்குவதைவிட எது தவறானது என்று சுட்டிக்காட்டுவதாகவே இருக்கிறது;இதனால் நம்மை சிலர் குற்றஞ்சாட்டியே பேர்வாங்குபவர் என்று இகழக்கூடும்;ஆனாலும் உங்களுக்குள்ளும் ஒருவன் சாத்தானாக இருக்கிறான் என்று ஆண்டவர் சொன்னது போல நமக்குள்ளும் சிலர் அவ்வாறு இருக்கிறார்கள்;ஆண்டவர் அவ்வாறு சொன்னதுமே நானோ... நானோ என்று அனைவரும் கேட்டதுபோலவே இன்றைக்கும் பலர் தன்னை சரியானவர்களாகக் காட்டிக்கொள்ளப்போராடுகிறார்கள்;ஆனால் நம்மைப் பொருத்தவரையிலும் நாம் தற்காலத்தை மாத்திரமல்ல,எதிர்கால சந்ததியினரையும் மனதிற்கொண்டே இந்த விவாதங்களை அமைத்து வருகிறோம்;அதாவது நாம் பதிவுசெய்து வைக்கக்கூடிய எந்தவொரு கருத்தையும் நம்முடைய பின்னடியார் வாசிக்கப்போகிறார்கள்; அவர்களை எந்தவொரு கள்ளப்போதகனும் கள்ளத்தீர்க்கதரிசியும் வஞ்சித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

எனவே நித்திய ஜீவன் மற்றும் கோவை பெரேயன்ஸ் ஆகிய இரு வேற்றுமையான உபதேச தளங்களையும் இன்னும் இறைவன் என்ற பெயரில் தளம் அமைத்து ஏதோவொரு ஆவியின் பெயரால் கொள்கைகளை அறிவித்துக்கொண்டிருக்கும் சுந்தர் அவர்களையும் நேருக்கு நேராக எதிர்த்து வருகிறோம்;மறைமுகமாக செயல்படும் தளங்கள் பல இருந்தாலும் நாம் பழகிய வட்டாரத்திலுள்ள இவர்களிடம் கவனம் செலுத்திவருகிறோம்; இந்நிலையில் திரு.அன்பு மற்றும் இரஸல் போதகத்தைப் பின்பற்றும் குழப்பவாதிகளிடையே முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளது;இதுவும் தேவசித்தம் (!?) தான் என்று நம்புறோம்.

இந்த விவாதங்களில் மரணமும் ஜீவனும்,தேவ சித்தம், நியாயத்தீர்ப்பு, கிருபை மற்றும் கிரியை ஆகியவை கருப் பொருளாக இருக்கிறது;இவற்றைக் குறித்த விரிவானதும் ஆரோக்கியமானதுமான போதனைகள் இருந்தும் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு இருதரப்பும் தங்கள் வேற்றுமையான உபதேசங்களை நிறுவ முயற்சிக்கிறது;இதனால் மெய் விசுவாசத்தினை நாடும் நடுநிலையான வாசகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது; இருதரப்பாரின் விவாதங்களை கவனிக்கும் பல நண்பர்கள் இவர் சரியானவர் போலத் தோன்றுகிறதே ஏதாவதொரு பக்கம் சாய்ந்துபோக வாய்ப்புள்ளது; நம்முடைய யௌவன ஜனம் தளத்தின் வாசகர்களிலும் சிலர் இதனால் மோசம்போக வாய்ப்புள்ளது.

உதாரணமாக,திரு.அன்பு அவர்கள் எழுதுவதை கவனிப்போர் அவருடைய நேர்த்தியான வாதங்களால் கவரப்பட்டு, கிருபையினால் இலவசமாக‌ உண்டாகும் மாபெரும் இரட்சிப்பை இழந்துபோகவும் கோவை பெரேயன்ஸ் என்று சொல்லுக்கொள்ளும் இரஸலியன் குழுவினரால் தேவ‌கிருபை பிரஸ்தாபிக்கப்படுவதால் இயேசுகிறித்துவினால் உண்டாகும் நீதியை இழந்துபோகவும் வாய்ப்புள்ளது;எனவே இவ்விருவரையும் பிரிக்கும் மாயவலை இன்னது என்பதையும் இவ்விருவரையும் இணைக்கும் சூழ்ச்சிவலை இன்னது என்பதையும் அறிந்து அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இருவருமே இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவதை எதிர்ப்பதில் ஒன்றுபடுகிறார்கள்;ஆனால் ஜீவன், மரணம், நியாயத்தீர்ப்பு, இரண்டாம் மரணம்  மற்றும் நித்தியஜீவன் ஆகியவற்றில் வேறுபடுகிறார்கள் என்பது வெளிப்படையானது;மற்றபடி இவர்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் சமரசம் உண்டாகவே வாய்ப்புள்ளது;சில வருடங்கள் முன்பு யாரோ ஒரு கள்ளப்போதகனால் வஞ்சிக்கப்பட்டது போலவே இப்போதும் நடைபெறவாய்ப்புள்ளது;இந்த இரு தரப்பாருடைய எழுத்துக்களை வாசித்ததன் பாதிப்பு காரணமாகவே இறைவன் தளத்தின் சுந்தரும் மாறுபாடானவற்றை தாந்தோன்றித்தனமாக எழுதிவருகிறார்;நமக்கு சமயம் வாய்க்குமானால் இவ்விரு தரப்பாரின் வாதங்களையும் அலசி ஆராய்ந்து ஆரோக்கிய உபதேசத்தை வேதத்தின் அடிப்படையில் எழுதிட வாஞ்சிக்கிறோம்;ஆனாலும் இப்போதைக்கு சுருக்கமான நமது கருத்தை சொல்லிவைக்க முயற்சிக்கிறோம்.

எப்படியெனில் இயேசுகிறித்துவைப் பற்றிய விசுவாசமே தேவகிருபையின் திறவுகோலாக இருக்கிறது;இயேசுகிறித்துவைப் பற்றிய விசுவாசம் என்பது அவர் யார் என்பதைக் குறித்த அறிவிலிருந்து துவங்குகிறது;அந்த அறிவில்லாமலே ஆத்துமாவையும் மரணத்தையும் குறித்த அறிவை அடைந்திட முடியும் என்று சிலர் தவறாக நிதானிக்கிறார்கள்;புதிய ஏற்பாடு எனும் தேவ ஏற்பாட்டின் மையமாகவே கிறிஸ்து இருக்கிறார்;அவரைத் தவிர்த்துவிட்டு யெகோவா நாமத்தினால் எல்லாவற்றையும் அடைந்திடமுடியாது;பிதாவின் நாமத்தினால் வந்த இயேசுவானவருக்கு கனத்தையும் மகிமையையும் செலுத்தத்தவறுவோர் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாக பிதாவினால் பாவிக்கப்படுகிறார்கள்;கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் தேவ கோபமே விளங்குமேயன்றி தேவகிருபை விளங்கப்போவதில்லை;தேவன் அன்பாகவே இருக்கிறார்,யார் மீது..? அவர் அதிகமான கிருபையளிக்கிறார்,யாருக்கு..? ஆகியனவே கிறித்தவத்தின் ஆதாரப்போதனைகளின் ஆரம்பக் கேள்விகளாகும்;இவற்றுக்கான பதிலிலேயே ஆத்தும இரட்சிப்பு எனும் மாபெரும் பொக்கிஷமானது மறைந்திருக்கிறது;ஆத்துமாவே இல்லையென்போருக்கு இரட்சிப்பைக் குறித்து என்ன கவலை..? நாசியினால் சுவாசிக்கும் மனிதன் தன் சுவாசத்தை நிறுத்துவதே மரணம் என்றும் அதுவே பாவத்துக்கான தண்டனை என்றும் போதித்து கிறித்துவின் பாடு மரணத்தைக் கேலிக்குரியதாக்கி அதுவெறும் ஈடுபலி மாத்திரமே என்று கிறித்துவை சிறுமைப்படுத்துவோருக்கு இரண்டாம் மரணத்தைக் குறித்தும் நித்தியஜீவனைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் என்ன தெரியும்..?

எனவே மீண்டும் நாம் வலியுறுத்தவிரும்புவது என்னவென்றால் அனைத்தும் கிறித்துவில் துவங்குகிறது;அவரை அறிகிற அறிவு மாத்திரமே அனைத்தையும் போதிக்கும்;அவரை ஏற்றுக்கொள்ளுவது என்பது அவரால் ஒரு மனிதன் இயக்கப்பட தன்னை அனுமதிப்பது;அவர் போதகர் மாத்திரமல்ல, தொழத்தக்க தெய்வம்;அவர் தூதர்களில் ஒருவரோ பிதாவினால் ஏதோவொரு நோக்கத்துக்காக விசேஷமாக சிருஷ்டிக்கப்பட்டவரோ அல்ல என்பதை நிறுவுவதே யௌவன ஜனம் தளத்தின் தலையாய பணியாகும்.

இவர்களிடம் ஆரோக்கியமாகத் தோன்றுபவை இவர்களுக்கு சொந்தமானதல்ல என்பதையும் அவை இங்கிருந்து களவாடிச் செல்லப்பட்டவை என்பதையும் எந்தவொரு கள்ள உபதேசத்திலும் சரிபாதி உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் எனும் பொதுவான விதியை வாசகர்கள் கருத்தில் கொள்ளவும் பட்சமாக வேண்டுகிறோம்.

இனி, இயேசுகிறித்துவை தொழத்தக்க தெய்வமாக ஏற்க மறுக்கும் (மேசியாவின்) எதிரிகளில் ஒருவரான திரு.அன்பு அவர்கள் தனது உற்ற நண்பர்களும் சகோதரர்களுமான இரஸலியன் கூட்டத்தாருடன் விவாதத்ததில் சிறப்பானதொரு பகுதி பின்வருமாறு:

Page 1 of 1  sorted by Oldest FirstNewest First

avatar?id=1218535&m=75&t=1301450258

Militant
flame.gif

Status: Offline
Posts: 610
Date: 2h, 40m ago
கோவை பெரியன்ஸ் தளத்தின் முரணான/குழப்பமான கூற்றுக்கள்
 Printer Friendly


//நீங்கள் இப்பவும் உங்கள் கிரியை உசத்தியாக நினைக்கிறீர்களே தவிர தேவனால் என்ன செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இல்லையே!!//

என்னைக் குறித்து இப்படிப்பட்ட விமர்சனத்தை பலமுறை சொல்லிவிட்டீர்கள். கிரியையைக் குறித்து வேதம் சொல்கிற வசனங்களை எடுத்துரைப்பவனுக்கு நீங்கள் கொடுக்கும் நியாயத்தீர்ப்பா இது? இம்மாதிரி விமர்சனங்களை மீண்டும் மீண்டும் நீங்கள் சொல்கிறீர்கள்; சோல்சொல்யூஷனோ சற்றும் நாகூசாமல் “முட்டாள், லூசு” என்கிறார். அதை நீங்கள் கண்டிப்பதுமில்லை. அப்படியானால் அவரது மட்டரகமான கூற்றுக்களை நீங்கள் அங்கீகரிப்பதாகத்தானே அர்த்தம்?

உங்கள் பதிவுகளையும் எனது பதிவுகளையும் நன்றாகப் படித்துப்பாருங்கள். தனிப்பட்ட விமர்சனங்களை நான் அதிகமாகச் சொல்லியுள்ளேனா, நீங்கள் அதிகமாகச் சொலியுள்ளீர்களா என்பதைப் பாருங்கள். நிச்சயமாக நான் மிகக் குறைந்த அளவில்தான் சொல்லியுள்ளேன். நீங்களோ வரிக்கு வரி “நான் சுயநீதிக்காரன், கிரியையை நம்புவன், கிறிஸ்துவின் இரத்தத்தை அவமாக்குபவன்” என உங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்கிறீர்கள்.

வசனம் சொல்வதைத்தானே நான் சொல்கிறேன்? அதற்கு எனக்குத் தண்டனையா? வசனங்களுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாததால்தான் என்னை மட்டுப்படுத்தி விவாதத்தை திசை திருப்புகிறீர்கள். மெய்யாகவே உங்களுக்கு வசனத்தின் மீது நம்பிக்கையிருந்தால், என்னைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லாமல், நான் சொல்கிற வசனங்களுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். நானும் இனி உங்களைக் குறித்து ஒரு வார்த்தையும் பேசப்போவதில்லை.

வாசித்ததில்லையா, உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுக்கிறார் என்று” எனக் கேள்வி கேட்கிறீர்கள். ஆம், நான் வாசித்துள்ளேன்; ஆனால் எனது வேதாகமத்தில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.

சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். 2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, 3 நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

வசனங்கள் நாவல் போல் தொடர் கருத்தில் இருப்பதில்லை; துண்டு துண்டாக அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் இருக்குமென்கிறீர்கள். (அது சம்பந்தமான எனது எதிர்வாதத்துக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லை) அது ஒருபுறம் இருக்கட்டும்.

மேலே கூறப்பட்டுள்ள 3 வசனங்களாவது ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என ஒத்துக்கொள்வீர்களா? இதையும் ஒத்துக்கொள்ளவில்லையென்றால் என்னால் உங்களோடு விவாதிக்க இயலாது.

மேலே கூறப்பட்டுள்ள 3 வசனங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என நீங்கள் ஒத்துக்கொண்டால், எனது வாதத்திற்குப் பதில் சொல்லுங்கள்.

சங்கீதக்காரன் “கர்த்தருக்காகப் பொறுமையோடு காத்திருந்தாராம்; கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாராம்”. இப்படியாக முதல் வசனம் கூறுகிறது. அப்படி கர்த்தருக்காக காத்திருந்து, அவரை நோக்கிக் கூப்பிட்டவனைத்தான் உளையான சேற்றிலிருந்து கர்த்தர் தூக்கி எடுத்தார்.

அப்படியானால், “கர்த்தருக்காக பொறுமையோடு காத்திருந்து அவரை நோக்கி கூப்பிடுகிற எவரையும் அவர் உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுப்பார்” என்பதுதானே உண்மை? இந்த உண்மைதானே இவ்வசனங்களிலிருந்து நமக்குக் கிடைக்கிற போதனை?

இப்போதனையிலிருந்து நாம் அறிவதென்ன? கர்த்தருக்காகக் காத்திருத்தல், அவரை நோக்கிக் கூப்பிடுதல் எனும் 2 கிரியைகளும் உள்ளவனை அவர் உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுக்கிறார் என்பதுதானே? எனது வாதத்துக்கு நேரடியான எதிர்வாதம் வையுங்கள். அதை விடுத்து, “நான் அப்படி, இப்படி” என என்னைக் குறித்து எழுதாதீர்கள்.

சங்கீதக்காரனைக் குறித்து மற்றுமொரு கேள்வி. எல்லாரையும் தேவன் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார் என்கிறீர்கள். அப்ப்டியானால் சங்கீதக்காரனும் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்டவர்தானே? அப்படிப்பட்ட அவர், (தேவன் அவரை உளையான சேற்றிலிருந்து எடுப்பதற்கு முன்பாகவே) எப்படி கர்த்தருக்காகப் பொறுமையோடு காத்திருப்பவரானார்? எப்படி கர்த்தரை நோக்கி கூப்பிடுபவரானார்? தேவனால் கீழ்ப்படியாமைக்குள் அடைக்கப்பட்ட அவர், தேவனை மீறி வெளியே வந்துவிட்டாரா? 

அடுத்து, 3-ம் வசனத்தைப் பாருங்கள். சங்கீதக்காரனுக்கு தேவன் செய்ததைப் பார்த்து, மற்றவர்கள் தேவனுக்குப் பயந்து, அவரை நம்புவார்களாம்.

அதாவது உளையான சேற்றிலிருந்து எடுக்கப்பட்ட சங்கீதக்காரன் மற்றவர்கள் முன்பாக தேவனுக்கு ஒரு சாட்சியாக விளங்கினார். அப்படி விளங்கின அவரைப் பார்க்கிறவர்களும் தேவனுக்குப் பயந்து அவரை நம்புவார்களாம். அப்படியானால் உளையான சேற்றிலிருந்து எடுக்கப்பட்ட நாமுங்கூட மற்றவர்களுக்கு சாட்சியாக விளங்கவேண்டுமே! நம்மைப் பார்க்கிற பலரும் தேவனுக்குப் பயந்து அவரை நம்பவேண்டுமே!

நீங்கள் உங்களை “உளையான சேற்றிலிருந்து” எடுக்கப்பட்டவர் என்கிறீர்கள். அப்படியானால் உங்களைப் பார்க்கிற பலர், தேவனுக்குப் பயந்து அவரை நம்பியுள்ளார்களா? (உங்களைக் குறித்த தனிப்பட்ட இக்கேள்வி, என் வாதத்திற்கு நேரடியாக தொடர்புடையதாக இருப்பதால் இக்கேள்வியைக் கேட்கிறேன்.)

இன்னும் அந்த சங்கீதத்தின் பிற வசனங்களையும் படியுங்கள்.

8 என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். 9 மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர். 10 உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.

இவ்வசனத்தில் கூறப்பட்டவைகளெல்லாம் சங்கீதக்காரன் உளையான சேற்றிலிருந்து எடுக்கப்படுவதற்கு “முன்” அவர் செய்த காரியங்கள் என்பது எனது புரிந்துகொள்தல். நீங்கள் “முன்” அல்ல, “பின்” தான் எனப் புரிந்துகொண்டாலும் பரவாயில்லை. ஆனால் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளபடி “நாம் தேவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பவேண்டுமல்லவா? அவரது நியாயப்பிரமாணம் நம் உள்ளத்தில் இருக்கவேண்டுமல்லவா? அவரது நீதியை மகா சபையில் பிரசங்கிக்க வேண்டுமல்லவா? அவரது சத்தியத்தையும் இரட்சிப்பையும் பிறருக்குச் சொல்லவேண்டுமல்லவா? அவரது கிருபையையும் உண்மையையும் ஒளித்துவையாமல் மகா சபைக்கு அறிவிக்கவேண்டுமல்லவா?”

இக்கேள்விகள் ஒருபுறமிருக்க, பின்வரும் வசனத்தையும் படியுங்கள்.

11 கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.

கர்த்தருடைய இரக்கம் எல்லாருக்கும் உண்டு என்பதை சங்கீதக்காரன் அறியவில்லையா? பின்னர் ஏன் கர்த்தரின் இரக்கம் தனக்குக் கிடைக்காமற் போய்விடுமோ என அவர் அஞ்சுகிறார்? அவரது இந்த அச்சத்திலிருந்து நாம் அறிவதென்ன? சிலருக்கு கர்த்தரின் இரக்கம் கிடைக்காமற்போகவும் வாய்ப்புண்டு என்பதுதானே?

சரி, யாருக்கு இரக்கம் கிடைக்காமற்போகும் என்பதையும் சற்று பார்ப்போம்.

சங்கீதம் 143: 12 உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.

சங்கீதம் 40-ம் 143-ம் தாவீதால் எழுதப்பட்டவை. சங்கீதம் 40:11-ல் தேவகிருபை தனக்கு வேண்டும் என வேண்டுகிற தாவீது, சங்கீதம் 143-ல் தனது மீதுள்ள தேவகிருபையின்படி தனது சத்துருக்களை அழிக்கும்படி வேண்டுகிறார். இப்படி அவர் வேண்டுவதற்கான காரணத்தையும் கூடவே சொல்கிறார்.

ஆம், தாவீது தேவனுடைய அடியானாக இருப்பதால் தனக்கு தேவன் இரங்க வேண்டுமென்றும்,(அந்த இரக்கத்தின்படி) தனது சத்துருக்களை அழிக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகிறார். எனவே எல்லோருக்கும் இரக்கம் கிடையாது என்பதே உண்மை.

எவர்கள் “தேவனின் அடியாராக, அவருக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புவராக, அவரது நியாயப்பிரமாணத்தை உள்ளத்தில் வைத்திருப்பவராக, etc etc யாக இருக்கிறார்களோ” அவர்களுக்கே தேவனின் இரக்கம். இப்போது இரக்கம் சம்பந்தமான சில வசனங்களை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

மத்தேயு 6:15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

யாக்கோபு 2:13  ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்;

உளையான சேற்றிலிருந்து எடுப்பது பற்றிய உங்களது விவாதத்திற்கு இவ்விதமாக நான் எதிர்வாதம் வைத்துள்ளேன். இவ்வாதத்தின் ஒவ்வொரு வரிக்கும் முதலாவது பதில் தாருங்கள்; அதன் பின்னர் மற்றவற்றிற்குப் போகலாம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard