Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


//லாரி பஸ் பார்ப்பதுபோல எத்தனை பேர் நரகத்தைப் பார்த்தீர்கள்? //

 

பிதாவைப் பார்த்திருக்கீங்களா? இயேசு கிறிஸ்துவை? தேவ தூதர்களை?

எப்படி நம்புகிறீர்கள்?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul:

//நாங்களும் உங்களுக்காக மெனக்கெட்டு பதிலளிப்பதில்லை சகோதரி....//

செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுதென் என் காதினிலே!!

//மூடக்கிறிஸ்தவத்துக்கு நீங்கள் ஒரு ஆக இருப்பதால் தளத்துக்கு வரும் யாருக்கேனும் எங்கள் பதில் பிரயோஜனமாக இருக்கும் என்ற ஒரே நோக்கில்தான் இயங்கிவருகிறோம். எங்களுக்கு விளம்பரம் செய்து தருவதற்கு நன்றி!//

நன்றியெல்லாம் தேவையில்லை. அடி முட்டாளாய் இருந்தாலொழிய, அல்லது பிசாசினால் கடுமையாக வஞ்சிக்கப்பட்டிருந்தாலொழிய உங்க தளத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் உண்டாகாது.

//நரகத்துக்கு யாரும் போகப்போவதில்லை....

ஏனென்றால் அப்படி ஒரு வார்த்தையே மூல மொழியில் இல்லை.... இல்லவே இல்லை. சாத்தானின் வஞ்சகம்.

பாவத்தின் சம்பளம் மரணம்... மரணம் மட்டுமே...//

நீங்க சொல்வது ரோட்டின் நடுவில் நின்று கொண்டு கண்ணை மூடிக் கொண்டு, லாரி என்று ஒன்று இல்லை. பஸ் என்று ஒன்று இல்லை. எல்லாம வஞ்சகம், பொய், ஏமாற்று வேலை என்று கத்துவதைப் போல் இருக்கிறது!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:
Btw, சாதுவைப் பின்பற்றும்(??) நான் என்று அல்ல, நீங்க இங்க வந்து போஸ்ட் பண்ணினாலும் சில்சாம் அனுமதிக்கத்தான் செய்வார். நல்ல பரந்த மனப்பான்மை உடையவர்.அங்க போரடிச்சா, இங்க வந்து போஸ்ட் பண்ணுங்க. I welcome you to come and post in this board!

 ஆம்,எனக்கு அருமையான தோழி கோல்டா அவர்களே,

நீங்கள் எழுதியிருப்பது போலவே இங்கு (மேசியாவின்) எதிரிகள் வந்தால் அவர்களை நாம் மரியாதையுடன் நடத்துவோம் என்பதற்கு ஏற்கனவே வ‌ந்துபோன உளவாளிகளே சாட்சி;ஒரே நாளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிவுகளைப் பதித்து ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தினார்கள்;அப்போதும் அமைதி காத்து கௌரவமாகவே அவர்களை அனுப்பிவைத்தோம்;ஆனால்
(மேசியாவின்) எதிரிகளோ மூச்சுக்கு முந்நூறு முறை செருப்படி என்றும் கூத்தாடி என்றும் பேடி என்றும் அலி என்றும் மூட நாய் என்றும் வேசி சபையார் என்றும் இன்னும் அச்சிலேற்ற்ற முடியாத வார்த்தைகளால் தமிழ் இணையத்தையே மாசுபடுத்தி வைத்திருக்கிறார்கள்;அவற்றையெல்லாம் அவர்கள் இனி அழித்தாலும் டேட்டா பேஸில் (data base) இருந்துகொண்டே இருக்கும்;இங்கு மாத்திரமல்ல,அவர்கள் நம்பாத பரலோகத்திலும்..!

தொடரும் வேத வாக்கியம் கூறுவது போல,

  • நீதிமொழிகள் 16:27 பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.

(மேசியாவின்) எதிரிகள் இந்த வசனத்துக்கான அர்த்தத்தை மூலபாஷையில் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளட்டும்; இவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது சம்பந்தப்பட்ட வரிகளின் தொடுப்பைத் தரவேண்டும்; வேத வசனத்தையே திரிக்கும் இவர்கள் என்னுடைய கருத்தைத் திரிப்பது கடினமா என்ன..? ஆனாலும் உங்கள் பொறுமைக்காக நான் ஆண்டவரைத் துதிக்கிறேன்;உங்கள் கிரியைக்கேற்ற பலன் நிச்சயமாகவே உண்டு;

இப்படிப்பட்டவர்களைக் குறித்து கீழ்க்காணும் வசனங்கள் நினைவுக்கு வந்தது;இந்த வசனத்தை (மேசியாவின்) எதிரிகள் மீது சாட்டாமல் முதலாவது என்னை நான் தாழ்த்துகிறேன்; அடுத்து இந்த வசனங்கள் (மேசியாவின்) எதிரிகளுடனும் பேசட்டும்.

  • நீதிமொழிகள் 28:25 பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
  • நீதிமொழிகள் 29:22 கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
  • நீதிமொழிகள் 6:14 அவன் இருதயத்தில் திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
  • நீதிமொழிகள் 28:6 இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//"புருஷனைவிட சாதுவை அதிகம் நேசிக்கிறாய்" எனுமளவு கேவலப்படுத்தியிருக்கிறான்...//

நீங்க உங்க மனைவியை இயேசு கிறிஸ்து நேசிப்பதுபோல் நேசிக்கிறீங்களா சோல் அவர்களே? அவங்க சுயமா சிந்தித்து முடிவெடுக்க உரிமை உண்டா? ஆவிக்குரிய காரியங்களிலாவது? அல்லது உங்களுடைய இந்த வஞ்சிக்கும் உபதேசத்தைத்தான் குடும்பத்தார் அனைவரும் follow பண்ணனுமா? ஆசைப்பட்டா நீங்க நரகத்திற்குப் போங்க. பிறரை வற்புறுத்தாதீங்க. சரியா?

Btw, சாதுவைப் பின்பற்றும்(??) நான் என்று அல்ல, நீங்க இங்க வந்து போஸ்ட் பண்ணினாலும் சில்சாம் அனுமதிக்கத்தான் செய்வார். நல்ல பரந்த மனப்பான்மை உடையவர்.அங்க போரடிச்சா, இங்க வந்து போஸ்ட் பண்ணுங்க. I welcome you to come and post in this board!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

உங்களுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை திரு சோல்சொல்யூஷன் அவர்களே! ஏன் இப்படி குடையிறீங்க? உங்களுக்கு என்னதான் வேண்டும்?? நாங்க என்ன செய்தால் சந்தோஷப்படுவீங்க?? நாங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கும் வேறு போக்கிடம் இருப்பது போல் தெரியவில்லை.

அத்துடன் கொஞ்சம் ஓவராதான் எப்பவும் பேசுறீங்க. Enough! பேச்சை நிப்பாட்டிக்கலாம் என்று நினைக்கிறேன்.

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:

சில்சாமுக்கு தன் தளத்திலேயே செருப்படி...

//சகோதரி கோல்டா போலவே நானும் ஏமாறுவதற்கு ஆயத்தமாக‌ இருந்திருந்தால் இந்நேரம் சாதுஜி அருகில் ஆனந்துக்கு பதிலாக உட்கார்ந்திருப்பேன்;//

கோல்டா: சாது தப்பித்தார்?

------

 சில்சாம் அவர்களே , பொறாமை பிடிச்ச பிசாசு கோள் மூட்டுது என்று நினைக்கிறேன்!


 "சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே." -II கொரிந்தியர் . 2: 11



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சில்சாமுக்கு தன் தளத்திலேயே செருப்படி...

//சகோதரி கோல்டா போலவே நானும் ஏமாறுவதற்கு ஆயத்தமாக‌ இருந்திருந்தால் இந்நேரம் சாதுஜி அருகில் ஆனந்துக்கு பதிலாக உட்கார்ந்திருப்பேன்;//

கோல்டா: சாது தப்பித்தார்?

------

 சில்சாம் அவர்களே , பொறாமை பிடிச்ச பிசாசு கோள் மூட்டுது என்று நினைக்கிறேன்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//இவர்களுக்கு செவி கொடுங்கள்!!!//

 

II நாளாகமம் 20:20 அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

soul: மறை கழண்ட கேஸ்.

யாரு நீங்கதானே? Ha ha ha!

--

Mr.Soul , you are very disgusting and repulsive at times!!

உங்க நாய் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.நாய் நாய்ன்னு பேசி நாயாத்தான் மாறப்போறீங்க!

 

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்: //12 வருடங்களாக ஒரு நாளுக்கு 10 மாத்திரைகளை நம்பியிருந்த எனக்கும் அவர் சுகத்தை கொடுத்து இன்று மாத்திரைகள் போடுவதே இல்லை!! கை மோதிரவிரலில் சுமார் 6 வருடங்களாக ஆறாத ஒரு நகசுத்த, 3 நாட்களில் இடம் தெரியாமல் போக செய்தவரும் தேவனே!! அற்புதம் நடக்கிறது எல்லார் வாழ்க்கையிலும் தான்!! நாம் அனுதினமும் ஜீவனோடு சுக பத்திரமாக இருப்பதும் அற்புதமே!!//

 

இப்படி ஆண்டவர் சுகம் கொடுத்திருக்கிறார். நீங்களோ நன்றியில்லாமல் வேறு சுவிசேஷத்தை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

உண்மையை சொல்லுங்க... சுகம் கிடைத்தது K Link healthcare products ஆல் தானே?? அதனால் தானே சோல் சாமியை தொழுது கொண்டு இருக்கிறீர்கள்??

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நானும் ஒரு சாட்சியை எழுதுறேன்.

எல்லோருக்கும் சிக்குன் குன்யா வந்தது. எல்லா கொசுவும் என்னையும் கடித்தது. ஆனால் எனக்கு சிக்குன் குன்யா வரவில்லை. இது அற்புதமே. தேவ கிருபையே!

சாலை விபத்துகள் பற்றி பல செய்திகள் கேள்விப்படுகிறோம். எந்த விபத்திலும் நாம் இது வரை சிக்காமல் இருப்பதே பெரிய அதிசயம்தான். நான் செல்லும் வாகனம் (பஸ், இரயில் எதுவானாலும்) விபத்தில் சிக்காது என்ற விசுவாசம் எனக்கு எப்பொழுதும் உண்டு!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

Soul wrote:

//இயேசுதான் உம் வேதனைகளை சுமந்து தீர்த்துவிட்டாரே பின் ஏன் முதலில் உமக்கு வேதனை நேரிட வேண்டும். ஓ ஹோ அந்த கொஞ்ச நேர வேதனையை அவர் சுமந்து தீர்க்கவில்லையோ?//

 

 1 பேதுரு 1:6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.

 7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

//இதையெல்லாம் உம்மோடு வைத்துக்கொள்ளும். சபையில் மருந்து எடுக்கத் தேவையில்லை என்று போதித்து உதைவாங்காதேயும். அந்த வேதனையை நீர்தான் தாங்கியாகனும்//

மனிதனுக்கு உணவு எப்படியோ, அப்படியே மருந்தும்...! மருந்து எடுப்பது பாவமல்ல... ஆனால் மருந்தை விட மேலானது எனக்கு இருக்கும்போது மருந்து எனக்கு தேவையில்லை அவ்வளவே... இது விசுவாசிக்கும் எல்லோருக்கும் சாத்தியமே... இதை போதிப்பதினால் யாரும் என்னை உதைக்கமுடியாது நண்பரே...!

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

spetersamuel wrote:
ஒரு துருப்பிடித்த கம்பியை பலமாக இழுத்துக்கொண்டிருந்தேன்; கம்பி லாக்கிலிருந்து விடுபட்டு திடீரென மூக்கு மற்றும் கண்ணின் மேல்பாகத்தில் இடித்துவிட்டது. இரத்தம் கொளகொளவென கொட்டியது. இயேசு எனக்குப்பதிலாக காயப்பட்டார் எனவே எனக்கு காயம் இல்லை என சொன்னேன்: இரத்தம் அடுத்த நொடியில் நின்றது. வலி உண்மையில் நம்பினால் நம்புங்கள் அடிபட்டதுபோலவே தெரியாமல் மறைந்துவிட்டது. தையல் இல்லாமல் அவ்வளவு இரத்தம் உடனே நின்றது அதிசயம். வேண்டுமானால் இவை உண்மைதானா என எனது கிராமத்தில் வந்து விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள். இவை யாவருக்கும் தெரிந்த உண்மைதான். ஏனெனில் காயத்தை கண்டவர்கள் ஆஸ்பிடல் செல்லவில்லை என்பதையும் கட்டு போடவில்லை என்பதையும் கண்டிருக்கிறார்கள்.

 அருமை நண்பர் பீட்டர் அவர்களின் பல அனுபவங்களுடன் நானும் கடந்து சென்றிருக்கிறேன்;குறிப்பாக மருந்து மற்றும் மழை சம்பந்தமான சாட்சிகள் என்னிடம் அதிகம் உண்டு;ஆனாலும் வெட்டு காயம் பற்றிய சாட்சியை மட்டும் கூறுகிறேன்;என் வீட்டு வாசலில் இடைஞ்சலாக இருந்த ஒரு கொய்யா மரத்தின் கிளையை ஒரு மொக்கை கத்தியைக் கொண்டு வீராவேசமாக வெட்ட முயற்சித்தேன்; கத்தியானது கொய்யா மரத்தில் மோதி ஸ்லிப் ஆகியும் எகிறியும் சோதித்தது;ஒருகட்டத்தில் நான் பொறுமையிழந்து ஒரு கையினால் கிளையைப் பிடித்துக்கொண்டு மறுகையினால் சற்று வேகமாக கத்தியை வீச எதிர்பாராமல் கத்தி எனது விரல்களைப் பதம்பார்த்தது;சொன்னால் யாரும் நம்பமாட்டாங்க,கத்தியானது எனது இடது கை சுட்டுவிரலில் பட்டு விரலின் நகம் இரண்டாக உடைந்தது;நான் சற்று தடுமாறினாலும் கையை உயர்த்தி பிடித்துக்கொண்டு அப்படியே கொஞ்சநேரம் இருந்தேன்;எனது மனைவி செய்வதறியாமல் திகைத்தவளாய் குதிரை சாமந்தி எனும் செடியின் சாற்றைப் பிழிந்து வெட்டு காயத்தின்மீது ஊற்றினாள்; மற்றபடி நான் டாக்டரிடம் போகவில்லை;சில வாரங்களுக்குப் பிறகு சுட்டுவிரலின் நகம் இரண்டாக உடைந்த நிலையிலேயே வளர்ந்தது; விரல் நுனியிலிருந்த வெட்டு காயம் மறைந்தது;தற்போது அதன் தழும்பு தையல் போட்டது போல இருக்கும்;மற்றபடி நகம் சரியாகிவிட்டது;இதில் என்ன அற்புதம் என்றால் நான் கத்தியை வீசிய வேகத்தில் எனது விரலே துண்டாகியிருக்கவேண்டுமே,அதுவே அதிசயம்;கர்த்தருக்கே மகிமை..!

இப்படி நம்முடைய அனுபவ சாட்சிகளை எழுதினாலாவது ரெண்டு ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவார்கள்;ஆனால் இந்த படுவாவிகளுடன் மோதிக்கொண்டிருப்பதால் என்ன பயனோ தெரியவில்லை.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சகோ பீட்டர், என்ன ஒரு சாட்சியான வாழ்க்கை. Great !

சோலும், பெரேயன்ஸும் மயக்கம் போட்டிருப்பாங்களே!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


சோல்?? எழுதியது:

தங்களை தேவன் வல்லமையாக பயன்படுத்துவதாகக் கூறித்திரியும் பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள்(?) அடுத்தமுறை சந்திக்கும்போது, ஐயா எங்கள் வீட்டில் பிசாசுத்தொல்லை உள்ளது என்று கூப்பிடுங்கள் தாராளமாக வந்து ஜெபிப்பார்; ஒருவேளை பிசாசும் கூட போகலாம். ஆனால் எங்கள் வீட்டில் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது வந்து ஜெபியுங்கள் என்று சொல்லித்தான் பாருங்களேன். அவர்களால் ஒரு கொசுவைக்கூட துரத்த முடியாது...


 யார் சொன்னது அப்படி...? கொசுவை துரத்தமுடியாதென்று... இது கர்த்தரை நல்லவர் என்று ருசித்தறியாதவர்கள் கூற்று..!
என்னுடைய அனுபவங்களில் சிலதை கூறுகிறேன்:

என்னுடைய personal bathroom - ல் ஒருமுறை ஒரு குளவி கூடுகட்டி, குஞ்சுபொரித்து பெருகியது. நான் அதை கண்டுகொள்ளவில்லை சாவுக்கேதுவானதே சேதப்படுத்தாது என்று வசனம் உள்ளதே இந்த குளவி எம்மாத்திரம் என விட்டுவிட்டேன். ஆனால் அது பொரித்து, பெருகி கூடு பெரிதாகத் தொடங்கியது. குளிக்கும்போது சுற்றி பறந்துகொண்டிருக்கும். ஒருநாள் எனக்கு irritation தோன்றவே, அந்த குளவிகளைப் பார்த்து நான், வானத்தையும் பூமியையும் அண்டசராசரங்களையும் எனக்காக உருவாக்கி எனக்கு ஆளுகையும் அதிகாரமும் தந்த ஆண்டவருடைய சொந்த பிள்ளை; அவரின் சுதந்தரவாளி நான்: பெரியவராகிய அவர் எனக்குள் இருக்கிறார். எனக்குள் இருப்பதால் அவருடைய பெயரை உபயோகித்து கட்டளையிடும் அதிகாரத்தையும் தந்திருக்கிறார். எனவே குளவியே இயேசுவின் நாமத்தில் போ என உனக்கு கட்டளையிடுகிறேன் என்று கூறினேன். என்ன ஆச்சரியம், அந்த குளவிக்கூடு மறுநாள் காலியானது. சில நாட்கள் சென்றபின் அதற்குப் பக்கத்தில் வேறொரு கூடு சிறிதாக உருவாகிவந்தது. அப்போதும் இதேப்போல் கூறினேன். பாருங்கள் முட்டையிட்டு குஞ்சுபொரித்த குஞ்சுகள் அரைகுறை முதிற்சியோடு கூட்டிலிருந்து வெளியேறி மறுநாள் தரையில் விழுந்துகிடந்தன. சத்தியமாக உண்மையை சொல்கிறேன். இன்று யார் என் வீட்டில் வந்தாலும் அந்த காலியான இரு குளவிக்கூடுகளையும் என்னால் காண்பிக்க முடியும். நான் bathroom செல்லும்போதெல்லாம் அந்த கூடுகளைப்பார்த்து என் விசுவாசத்தை பெருக்கிக்கொள்வேன். 

கிராமத்தில் என் வீட்டுக்கு பக்கத்துவீட்டில் பசு வளர்ப்பதால் கொசுத்தொல்லை பெருகியது. என்னதான் புகையிட்டாலும் தொல்லை குறையவில்லை. ஒருநாள் வைராக்கியத்தோடு கொசு வாதை என் கூடாரத்தை அணுகாதே என கூறினேன். பாருங்கள் அதன்பின் இன்றுவரை கொசுக்களால் நான் அவதிப்படுவதே இல்லை. என் வீட்டில் எந்த கொசு எதிர்ப்பான்களும் உபயோகிப்பதுமில்லை, புகை வளர்ப்பதுமில்லை. 

நான் hall -ல் வெறும்தரையில் மேற்சட்டையில்லாமல் சிலநேரம் இளைப்பாறுவதுண்டு. என் பிள்ளைகள் ஏதாவது தின்பண்டங்கள் சாப்பிட்டுவிட்டு அப்படியே சென்றுவிடும்போது சிலவேளை எறும்பு வந்துவிடுவதுண்டு. எறும்புக்கும் ஒருநாள் அதே கட்டளைதான். அதன்பின் ஒருநாள் கூட எறும்புத்தொல்லையை நான் அனுபவித்ததே இல்லை. (பெரிய மிருகங்களைப் பார்த்து நான் பயப்படுவதில்லை காரணம் நான் காட்டில் வளர்ந்தவன். ஆனால் கொசு எறும்பு போன்றவை கடித்தால் எனக்கு உடனே அந்த இடம் தடித்துவிடும். எனவே இவைகள் எனக்கு சற்றே அலர்ஜி)

நான் அபிஷேகம் பெற்ற அன்றுமுதல் மருந்து எடுப்பதையும் நிறுத்திவிட்டேன். சுமார் 6 வருடங்களாக மருந்தெடுத்தால் குணமாகிறதைவிட சீக்கிரமாய் எந்த நோயும் குணமாகிவிடுகிறது. நோய் வராமல் இல்லை, ஆனால் எவ்வளவு பெரிய வியாதியும் குணமாகிறது. மாடிப்படியில் தவறிவிழுந்து, மயங்குகிற நிலையில் இருந்த நான் இயேசுவின் ஜீவனால் பெலனடைகிறேன், இயேசு என் வேதனைகள் சுமந்துதீர்த்தார் என கூறியவுடன் உடனே முழு வேதனையும் நீங்கி (மயக்கம் வரும் அளவு வேதனை) சாதாரணமாக எழுந்தேன். பால் கறக்கும் நபர் வராததால் என் மனைவி பசுவின் அருகில் விளையாட்டாக சென்றாள். பசு ஓங்கி மிதித்துவிட்டது. முழங்கையில் கடும் வலி; இரவில் கை அசைக்கயியலாமல் அரற்றிக்கொண்டிருந்தவளுக்கும் இதே வார்த்தைகள்: உடனே வேதனை நீங்கி பரிபூரண சுகம். ஒரு துருப்பிடித்த கம்பியை பலமாக இழுத்துக்கொண்டிருந்தேன்; கம்பி லாக்கிலிருந்து விடுபட்டு திடீரென மூக்கு மற்றும் கண்ணின் மேல்பாகத்தில் இடித்துவிட்டது. இரத்தம் கொளகொளவென கொட்டியது. இயேசு எனக்குப்பதிலாக காயப்பட்டார் எனவே எனக்கு காயம் இல்லை என சொன்னேன்: இரத்தம் அடுத்த நொடியில் நின்றது. வலி உண்மையில் நம்பினால் நம்புங்கள் அடிபட்டதுபோலவே தெரியாமல் மறைந்துவிட்டது. தையல் இல்லாமல் அவ்வளவு இரத்தம் உடனே நின்றது அதிசயம். வேண்டுமானால் இவை உண்மைதானா என எனது கிராமத்தில் வந்து விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள். இவை யாவருக்கும் தெரிந்த உண்மைதான். ஏனெனில் காயத்தை கண்டவர்கள் ஆஸ்பிடல் செல்லவில்லை என்பதையும் கட்டு போடவில்லை என்பதையும் கண்டிருக்கிறார்கள்.

நான் சென்னையில் வேலைபார்த்த ஒரு வருடம் சுமார் 15+15 கி.மீ தூரம் பைக்கில் ஆபீஸ் செல்லவேண்டியிருந்தது. ஒரு ரெயின்கோட் வாங்க நேரமின்றி அந்த ஒரு வருடமும் சமாளித்தேன். எப்படி தெரியுமா? மழைக்காலத்தில் ஆபீஸ் கிளம்பும்போது மழை மலைபோல் வரும். நான் குறிப்பிட்ட நேரம் ஆபீஸ் செல்லவேண்டும் எனவே மழையே என்னை நனைக்க உனக்கு அதிகாரம் இல்லை என்று கூறிச் செல்வேன். வேண்டுமானால் நான் வேலைபார்த்த ஆபீஸில் புறமத நண்பர்களிடம் விசாரித்துப் பாருங்கள்: என்றாவது நான் நனைந்துகொண்டு சென்றதாகவோ அல்லது தாமதமாக சென்றதாகவோ அவர்கள் சொல்வார்களா? அங்கும் யாவருக்கும் தெரியும் நான் யார் என்று. என் மேலதிகாரி Mr. Sivakumar அடிக்கடி என்னிடம் சொல்வார், பீட்டர் சார், Trust GOD but lock your car என்று. வேண்டுமானால் அங்கு சென்று விசாரியுங்கள் address தருகிறேன். 

இன்றைக்கும் நான் பைக்கில் (ரெயின்கோட் எடுக்காமல்) வெளியே கிளம்பி வழியில் மழை வந்துவிட்டால், அந்த மழை என்னை நனைக்காது (program-க்கு போகும்போது மட்டும், வரும்போதல்ல). வேண்டுமானால் என்னுடன் வந்துபாருங்கள் 

இவையெல்லாம் ஏதோ நான் மட்டும் மேன்மையானவன் என்று என்னை காட்டிக்கொள்ள அல்ல, ஆண்டவரை இப்படி உண்மையாய் விசுவாசிப்பவர்களுக்கு இவை எல்லாம் சாத்தியம் என்பதுதான் உண்மை. நான் மற்றவர்களிடத்தில் இவைகளை உபயோகிக்க அதிகமாக முயல்வதில்லை. இவை உங்கள் வாழ்விலும் சாத்தியம் என கற்றுக்கொடுக்கவே அதிகம் விரும்புவேன். (அதற்காக மற்றவர்களுக்கு ஜெபிப்பதே இல்லை என்றும் அர்த்தமல்ல. அதை ஆண்டவரிடமிருந்து நன்மை பெற்றவர்கள் தான் சொல்லவேண்டும், நானல்ல...!)

இப்படி ஆண்டவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்வில் அனுபவிக்கிற நான், அவரைப்பற்றி, அவர் இப்படியெல்லாம் நம் வாழ்வில் செயல்படுகிறவர், அவரை நம்புங்கள் என்று சொல்வது தவறாகுமா நண்பர்களே...!

சர்க்கரை இனிப்பாக இருக்கிறது என அதை சாப்பிட்டுப்பார்த்தவன் தான் சொல்லமுடியும். அதை சாப்பிட்டுப்பார்க்காதவர்கள், அப்படி சர்க்கரை இனிப்பாகவெல்லாம் இருக்காது, அது எந்த சுவையும் உடையதல்ல, இனிப்போ, கசப்போ, எல்லாவற்றுக்கும் சர்க்கரையே காரணம் என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்காமல் விசுவாசத்தோடு ருசித்துதான் பாருங்களேன்...! 

பி.கு.: என்னை என்ன வேண்டுமானாலும் கிண்டல் பண்ணிக்கொள்ளுங்கள்; ஆனால் இவை வாழ்வில் சாத்தியமா என அறிய வேண்டுமானால் கொஞ்சமேனும் சந்தேகமில்லாமல் நிச்சயம் நடக்கும் என்ற விசுவாசம் வேண்டும். ஆண்டவர் பரீட்சை பார்க்கத்தக்கவர் அல்ல, பாதுகாக்கிற தகப்பன்.

எனக்கு என்னை அறியாமல் விஷம் தந்துபாருங்கள், நிச்சயம் அது என்னை சேதப்படுத்தாது. பாம்புகளும் மிருகங்களும் நிறைந்த காட்டில் இரவில் எந்த விளக்கு வெளிச்சமும் இல்லாமல் தனியாக நடந்து பழகியவன் நான். எதுவும் என்னை சேதப்படுத்துவதில்லை. மறுநாள் பாடல் பாடவேண்டுமெனில் முந்தின நாள் நள்ளிரவில் fridge தண்ணீர் குடிப்பவன் நான். காலை எழுந்து கூட...! சாவுக்கேதுவானதே என்னை சேதப்படுத்தாதபோது பச்சைத்தண்ணீர் எம்மாத்திரம். கிறிஸ்தவ வாழ்வு என்பது சும்மா விளையாட்டல்ல நண்பர்களே...! அது அனுபவம்....! 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!
Permalink  
 


chillsam wrote:

OK... அதற்கும் யோவேல்.2:25-க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ...



 

 தெரியவில்லை!!

யோவேல் 2:25. நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

 ஆண்டவர் பூச்சிகளை நியாயத்தீர்ப்பு செய்ய பயன்படுத்திக் கொண்டார் என்று தானே அர்த்தம் வருகிறது.

 எகிப்தில் எதை தெய்வமாக வணங்கினார்களோ, அதையெல்லாம் நியாயந்தீர்த்தார் ஆண்டவர். அல்லது அதை வைத்தே ஜனங்களை நியாயந்தீர்த்தார்.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:
chillsam wrote:
பலத்த சேனைகளாக பூச்சிகளை வைத்திருக்கும் ஆண்டவர் ஒருபுறமும் பெயல்செபூல் என்பவன் பூச்சிகளின் தலைவன் எனும் கருத்து ஒருபுறமும் எழும்பி என்னைக் குளவி மாதிரி சுற்றி வருதே,என்ன செய்ய..?

நம்ம ஆட்கள் தான் எல்லாவற்றுக்கும் ஒரு கடவுளை உண்டாக்கி விடுகிறார்கள் அல்லவா. அது போல் தான் இந்த பூச்சிக் கடவுள். இதைக் கும்பிட்டா பூச்சித் தொல்லை இருக்காது என்று நினைத்து வணங்கியிருப்பார்கள்.

--

Beelzebub literally "Lord of the Flies"; is a Semitic deity that was worshipped in the Philistine city of Ekron. In later Christian and Biblical sources he appears as a demon and the name of one of the seven princes of Hell.

 http://en.wikipedia.org/wiki/Beelzebub

--


OK... அதற்கும் யோவேல்.2:25-க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ...




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

பலத்த சேனைகளாக பூச்சிகளை வைத்திருக்கும் ஆண்டவர் ஒருபுறமும் பெயல்செபூல் என்பவன் பூச்சிகளின் தலைவன் எனும் கருத்து ஒருபுறமும் எழும்பி என்னைக் குளவி மாதிரி சுற்றி வருதே,என்ன செய்ய..?


 

நம்ம ஆட்கள் தான் எல்லாவற்றுக்கும் ஒரு கடவுளை உண்டாக்கி விடுகிறார்கள் அல்லவா. அது போல் தான் இந்த பூச்சிக் கடவுள். இதைக் கும்பிட்டா பூச்சித் தொல்லை இருக்காது என்று நினைத்து வணங்கியிருப்பார்கள்.

 

--

Beelzebub literally "Lord of the Flies"; is a Semitic deity that was worshipped in the Philistine city of Ekron. In later Christian and Biblical sources he appears as a demon and the name of one of the seven princes of Hell.

 http://en.wikipedia.org/wiki/Beelzebub

--

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:
chillsam wrote:

 பூச்சியைப் பற்றி வாசித்ததும் ஞாபகம் வருது...ஒரு நண்பர் இவ்வாறான கொள்கையுடையவர்;அது என்னவென்றால் தற்காலத்தில் நம்மோடு வாழும் தீங்கு செய்யும் பூச்சிகள் யாவும் அதாவது கொசு குளவி மூட்டைப்பூச்சி போன்ற அனைத்து பூச்சி வகைகளும் விழுந்துபோன தூதர்களாம்;அதாவது சாத்தான் கூட்டமாம்;ஆண்டவர் தனது மீட்பின் திட்டத்தை முடித்ததும் இனியும் சாத்தான் அவருடைய மக்களை வஞ்சிக்காதபடிக்கு அவனுடைய கூட்டத்தாரை பூச்சிகளாக மாற்றிவிட்டாராம்;கதை இண்ட்ரஸ்டிங் காக இருக்கில்லே...?


 

ரொம்ப interesting ஆ இருக்கே!

பெயெல்செபூல் என்ற வார்த்தைக்கு Lord of the Flies (பூச்சிகளின் தேவன்?) என்று ஒரு அர்த்தம் இருக்கிறதாம்.


அப்படின்னா ஆண்டவரை பெயல்செபூலுடன் ஒப்பிட்டு தாக்கினார்களே... அதற்கும் யோவேல்.2:25-க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ...ரொம்ப குழப்பமா இருக்கே... பலத்த சேனைகளாக பூச்சிகளை வைத்திருக்கும் ஆண்டவர் ஒருபுறமும் பெயல்செபூல் என்பவன் பூச்சிகளின் தலைவன் எனும் கருத்து ஒருபுறமும் எழும்பி என்னைக் குளவி மாதிரி சுற்றி வருதே,என்ன செய்ய..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

chillsam wrote:

 பூச்சியைப் பற்றி வாசித்ததும் ஞாபகம் வருது...ஒரு நண்பர் இவ்வாறான கொள்கையுடையவர்;அது என்னவென்றால் தற்காலத்தில் நம்மோடு வாழும் தீங்கு செய்யும் பூச்சிகள் யாவும் அதாவது கொசு குளவி மூட்டைப்பூச்சி போன்ற அனைத்து பூச்சி வகைகளும் விழுந்துபோன தூதர்களாம்;அதாவது சாத்தான் கூட்டமாம்;ஆண்டவர் தனது மீட்பின் திட்டத்தை முடித்ததும் இனியும் சாத்தான் அவருடைய மக்களை வஞ்சிக்காதபடிக்கு அவனுடைய கூட்டத்தாரை பூச்சிகளாக மாற்றிவிட்டாராம்;கதை இண்ட்ரஸ்டிங் காக இருக்கில்லே...?


 

ரொம்ப interesting ஆ இருக்கே!

பெயெல்செபூல் என்ற வார்த்தைக்கு Lord of the Flies (பூச்சிகளின் தேவன்?) என்று ஒரு அர்த்தம் இருக்கிறதாம்.



__________________
«First  <  1 2 3 46  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard