Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெரேயன்ஸின் காமெடி!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: பெரேயன்ஸின் காமெடி!
Permalink  
 


இப்படி என்பார்கள்! அப்படி என்பார்கள்!!

---

சிலர் பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்றால், ஆத்துமா என்றால் என்ன என்பார்கள்! சரீரம் தான் ஆத்துமா என்பார்கள்! மரிக்கும்போதே அனைத்தும் முடிந்துவிடும் என்பார்கள். ஆனால் அதிசயமாக இராஜ்யத்தில் உயிர்ப்பு உண்டு என்பார்கள்! அங்கே அனைவரும் சிட்சிக்கப்பட்டு பின்பு இரட்சிக்கப்படுவார்கள் என்பார்கள்! வேதத்தில் இல்லாததை மூல மொழியில் இருக்கிறது என்பார்கள்! translation mistake என்பார்கள்! வேதத்தில் இருக்கிறதை இல்லை இது தவறாக மொழிபெயர்க்கப்பட்டது என்பார்கள் அல்லது இது முதலாவது கையெழுத்துப்படியில் இல்லை பின்னர் சேர்க்கப்பட்டது என்பார்கள்! எதற்கும் செவிகொடுத்துவிடாதீர்கள்!!!

உங்கள் அன்பு சகோதரன்

Peter Samuel S.

---

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ் அவர்களே, நீங்க எங்கு சென்றாலும் ஜனங்கள் விழிப்பாய் இருந்து, தங்கள் மூக்கை உடைக்கிறார்கள் என்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. யெகோவா விட்னஸ் என்ற பெயர் தங்களுக்குப் பிடிக்காததால், “கள்ளக் கிறிஸ்தவர்கள்” என்று வேண்டுமானால் உங்களுக்கு பெயர் வைக்கலாம்.

வசனம் கேட்க கிடைக்காத பஞ்சம் உண்டாகும் என்று வசனம் சொல்லுகிறது. வேதப் புத்தகம் கம்யூனிஸ நாடுகளுக்குள் செல்ல முடியாமல், தடை செய்து பிசாசு வார்த்தைக்குப் பஞ்சம் உண்டாக்கினான் ஒரு காலத்தில். இந்த இன்டர்நெட் யுகத்தில் அப்படி வேதத்தை தடை செய்வது சாத்தியப்படாது என்பதால், ரே ஸ்மித் மற்றும் கோவைபெரேயன்ஸ் போன்ற தன் தூதர்களால் , இக்காலத்தில் இப்படி எழுதப்பட்ட வார்த்தைகளை தப்பு தப்பா விளக்கும்படி தூண்டுகிறான், தவறான மொழி பெயர்ப்புகளைக் கொண்டு வருகிறான்.

 

இப்படிப்பட்ட பூமிக்குரிய பஞ்சம், ஆவிக்குரிய பஞ்சத்திலிருந்தெல்லாம் அவர் சத்தம் அறிந்த அவர் ஜனங்களை அவரே போஷித்து காப்பாற்றுகிறார்.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//முழு நேர ஊழியர்கள்" என்பதை யார் நிச்சயிப்பது!!//

யாரு? நீங்களா??

//பழைய ஏற்பாட்டு லேவியர்கள் தங்களின் சாப்பாட்டிற்கு மாத்திரமே வைத்துக்கொண்டார்கள், வழிப்போக்கர்கள், விதவைகள், அனாதைகள் போன்றோருக்கு உதவி செய்வதற்காக வாங்கினார்கள்!!//

அப்படி ஊழியம் செய்பவர்கள் யாருமே இல்லையா? சோஃபாவில் அமர்ந்து ஊழியம் செய்பவர்கள் அப்படி இல்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?? கூட இருந்து பார்த்தீர்களா? என்னால் சிலரை சொல்ல முடியும். அவங்களும் உங்க வாயில் விழ வேண்டாமே என்று சொல்லாமல் விடுகிறேன்.

//பாவம் தான் போகும், தேவனை அறிகிற அறிவில் வளரனுமே!! சத்தியத்தை அறிகிற அறிவில் வரனுமே!! அதற்கு தான் நியாயத்தீர்ப்பு!!//

காமெடியா தெரிவதை, எவ்வளவு சீரியஸா பேசுறீங்க! கொஞ்சம் பரிதாபமா இருக்கு உங்களைப் பார்த்தால்!

சரி, நியாயத்தீர்ப்பு என்பது தண்டனைதானே? பாவமற்ற ஒருவனை ஏங்க தண்டிக்கணும்? அமைதியா போதித்து அறிவைப் வளர்க்கலாமே?

//"அக்கிரமசெய்கைக்காரர்களாக" இருக்கும் இந்நாள் சோஃபா பேர்வழிகளை விட மற்றவர்கள் தேவனை ஏற்றுக்கொள்வதில் சிரமமே இருக்காது!!//

பாவமற்ற பரிசுத்தவானா மாறுவதால்தானே உயிர்தெழுகிறார்கள். அப்புறம் ஏற்றுக் கொள்வதில் என்ன கஷ்டம் இருக்கப் போகுது?

//நாங்கள் பாவங்கள் முழுமையாம மன்னிக்கப்பட்டு உயிர்த்தெழுதல் அனைவருக்கும் என்று தான் சொல்லிவருகிறோம்!!//

எல்லோரையும் ஆண்டவர் மன்னிப்பார் என்று சொல்றீஙக. ஆனாலும் நியாயத்தீர்ப்பு உண்டு என்றும் சொல்றீங்க. சரி, 1000 வருட அரசாட்சியில் பாவம் செய்வாங்களா? பாவம் செய்தால் திரும்ப மரித்து திரும்ப உயிர்த்தெழுவாங்களோ? இப்படி எத்தனை தடவை recycle ஆவாங்க?

////இது என்ன புது வெளிப்பாடா?? சாத்தானா வசனங்களை எழுதி வைத்திருக்கிறான்?//

நீங்கள் வசனமா எழுதுகிரீர்கள்!!//

எழுதுறதெல்லாம் இல்லை. காப்பி பேஸ்ட் தான் பண்றேன். அதைத் தான் துருபதேசம் என்று சொல்கிறீர்கள்.

//ஏனென்றால் நாங்கள் எல்லாவற்றுக்கும் தேவனை தான் நம்பியிருக்கிறோம், கட்டளையிடுவது இல்லை!! தேவனுக்கு சித்தமானால் ரே ஸ்மித் சுகம் பெறுவார்!!//

தேவ சித்தம்தான் நடக்கும் என்றால், அது என்னவென்றே தெரியாவிட்டால், ஆண்டவர் சுகம் தருவார் என்று ஏன் நம்புறீங்க?? ஆண்டவர் சுகப்படுத்துகிறாரா இக்காலத்தில்?? உங்க நம்பிக்கை என்ன?

//கிருமிகளாகவே இருப்பதினால் தான் நோய் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறீர்கள்!! ரே ஸ்மித்தின் எழுத்து கிருமியல்ல, கூரான கத்தி!!//

பிசாசு எவனை குத்திக் கிழிக்கலாம் என்று வகை தேடி திரிகிறான். தமிழ் பேசும் தங்கங்கள் மாட்டிக் கொண்டீர்கள். உங்களுக்கு யார் இதைப் பற்றி முதலில் சொன்னது? எப்படி இரட்சிக்கப்பட்டீர்கள்...சாரி... எப்படி இந்த சூப்பரான் இரட்சிப்பின் திட்டத்தை தெரிந்து கொண்டீர்கள்?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//உங்களுக்கு இருந்தாலும் நகைச்சுவை உணர்வு அதிகம் தான்!!//

காமெடியர்களிடம் காமெடியா பேச வேண்டியதுதானே!!!

//சோஃபாவில் உட்கார்ந்து பேசுபவன் சொந்தமாக சம்பாதித்து உட்கார்ந்து என்ன படுத்துக்கொண்டே பேசட்டும்!! உழைக்காதவன் சாப்பிட அருகதை இல்லாதவன் என்கிறது வேதம்!!//

போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக. சுவிசேஷம் சொல்கிறவர்களுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்பு உண்டாக வேண்டும். ஞான நன்மைகளை விதைப்பவர்கள் சரீர நன்மைகளை அறுக்க உரிமை இருக்கிறது என்றும் வேதம் சொல்லுகிறது.உங்களிடத்தில் வாங்க எனக்கு அதிகாரம் இருந்தாலும், அதை நான் பயன்படுத்த மாட்டேன் என்று பவுல் சொல்கிறார்.

பழைய ஏற்பாட்டில் ஊழியம் செய்த லேவியர்களை ஆண்டவரே போஷித்தார். இக்காலத்திலும் முழு நேரமாக உழியத்திற்கு அழைக்கப்பட்டவர்களை அவர் தான் போஷிக்கணும்.

//பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் மீண்டும் பாவம் செய்யவதே கிடையாதா!!//

அவன் மீண்டும் மன்னிப்பு கேட்பதே இல்லையா? பாவம் மன்னிக்கப்பட்டவன் அவன் கணக்கில் பாவம் இல்லாமல் தான் சாகிறான். இறுதியில் பாவம் கணக்கில் உள்ளவனும், இல்லாதவனும் உயிர்த்தெழுவார்கள்.

உங்க கருத்துப்படி, செத்தபின் தான் மன்னிப்பு. சரி. ஆணடவர் பாவத்தையெல்லாம் மன்னித்து உயிர்த்தெழசெய்து விட்டார் என்றால், எதற்கு ஆயிரம் வருட அரசாட்சியில் நியாயத்தீர்ப்பு அவனுக்கு தேவைப்படுகிறது? அவன் தான் இப்ப பாவமற்ற பரிசுத்தவானா இருக்கிறான் அல்லவா.

//என்றால் சிலருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வில்லை என்றுதான் அர்த்தம்.

இது தான் உங்கள் மூலமாக சாத்தான் கொண்டு வரும் துருபதேசம்!!//

இது என்ன புது வெளிப்பாடா?? சாத்தானா வசனங்களை எழுதி வைத்திருக்கிறான்?

//இப்படி ஊரை ஏமாற்றி பிழைப்பதை விட ரே ஸ்மித் உத்தமர்!!//

ஆண்டவர் சுகம் தருவார் என்று அவர் எதிர்பார்ப்பது, உங்களுக்கு அதிர்ச்சியாக இல்லையா?

//உங்களுக்கு ரே ஸ்மித் போன்றோரை பேசுவதற்கே அருகதை கிடையாது!! தெரியுதா!!//

ஆமாம். நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கணும்.

எனக்கு என்ன வருத்தம் என்றால் சாது, விசெ போன்றோர் இப்படி உங்க வாயில் விழ வேண்டியிருக்கே என்பதுதான்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//இந்த கடைசி காலம் என்றவுடன் ஏதோ நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தை சொல்லவில்லை!! ஆத்துமா, மரணம் என்றாலே என்னவென்று தெரியாத உங்கள் கூட்டத்தாருக்கு காலங்கள் புரியாது!!//

உங்களுக்கு புரிஞ்ச மாதிரியெல்லாம் எங்களுக்கு எதுவும் புரிய வேண்டாம்!!

கடைசிக் காலம், பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவர் ஊற்றப்பட்டவுடனே ஆரம்பித்து விட்டது. இப்ப நாம் இருப்பது கடைசியிலும் கடைசிக் காலம்.

ஒரு மனிதனுக்கு 75/80 வயதானவுடன் கடைசிக் காலம் வ்ந்து விட்டது என்று சொல்கிறோம். அதே மனிதர் சரியா சாப்பிட முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டார் என்றால் கடைசி நாட்களில் இருக்கிறார் என்று சொல்வோம். இன்னும் 10/20 நாள்தான் தாங்கும் என்று டாக்டர் சொல்லி விடுவார். அப்படிப்பட்ட க்டைசி நாட்களில்தான் தான் நாம் இருக்கிறோம்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//பாவங்கள் மன்னிக்கப்பட்டதால் தான் உயிர்த்தெழுதலே தவிர பாவத்துடன் உயிர்த்தெழுதல் கிடையாது!! //

ஏன் மரித்தபின் தான் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்?

உயிரோடு இருக்கையில் ஏன் உங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டேன் என்கிறார்?? அப்படி மன்னித்தார் என்றால் மரணம் இல்லாமலே நீங்க வாழலாமே.

ஒவரா யோசிக்காம, இப்படி, லாஜிக்கா யோசிங்க!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//அப்படியே வேதத்தை ஒரே மொழிப்பெயர்ப்பில் படித்து பின் மற்றவர்களின் பிரசங்கம் கேட்டு திருப்தியாகாமல், தேவனின் பொக்கிஷ புத்தகமான வேதத்தை பல மொழிப்பெயர்ப்புகளில் படித்து "உமது வசனமே சத்தியம்" என்பதை உறுதியாக நம்புகிறேன்//

நல்ல காமெடி பெரேயன்ஸ் அவர்களே! வேதம் சத்தியம் என்று நம்புகிறேன் என்று சொல்லவேண்டியதுதானே! ஏன் மொழிபெயர்ப்பையும் சேர்த்து சொல்கிறீர்கள். பேசாமல் Greek, Hebrew எல்லாம் படித்தீர்கள் என்றால், ஒரிஜினலையை எப்பவும் வாசிக்கலாம்!



__________________
«First  <  1 2 3 4 5 | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard