Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காவலில் இருந்த ஆவிகள்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: காவலில் இருந்த ஆவிகள்
Permalink  
 


//பாவம் செய்த தூதர்களை என்று தான் வசனம் சொல்லுகிறதே!! உங்கள் சாது சொல்லாட்டி எல்லாமே பொய்யாகிவிடுமா!!??//

நீங்க பொய் சொல்லி வசனம் தெரியாத அப்பாவிகளை ஏமாத்தலாம். உங்க மனசாட்சியை ஏமாத்த முடியுமா??!!

குரங்கு ஒரு கிளையிலிருந்து இன்னோரு கிளைக்கு தாவித் தாவிப் போகும். அது போல தான் உங்க வேத வசன வியாக்கியானங்களும் இருக்கிறது. You are interpreting like a MONKEY !!!

 Monkeys!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[அம்மணி, அந்த ஆவிகள்.... கீழ்ப்படியாமல் போனவைகள் என்ற சாதாரணத்தமிழ் கூடவா புரியாது?]

அது நல்லா புரியுது.

[ஆவிகளுக்கு அதாவது தூதர்களுக்கு மாமிட சரீரம் கிடையாது.]

மனித ஆவிகளுக்கும் கிடையாது

[கீழ்ப்படியாமல் போன ஆவிதூதர்களைத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.]

அல்ல.

[மனிதர்களூக்கு அப்படி ஆவி இருக்குமானால், அவைகளுக்கு பிரசங்கித்து இரட்சிப்புக்குள் நடத்தமுடியுமானால்... கிறிஸ்து எல்லாரும் மரித்தபின் எல்லா ஆவிகளுக்கும் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு சூப்பரான பிரசங்கம் செய்து அவர்களை இரட்சிக்க வைக்கலாமே... எதற்கு இவ்வளவு பிரயாசம்?]

There are one time events. உம்: Big Bang, நோவா காலத்து வெள்ளம் போன்றவை. அது போல் இதுவும் தேவ திட்டத்தில் ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சியாக இருக்கலாம்.

விழுந்து போன தூதர்களுக்கு பிரசங்கம் எதற்கு என்று சொல்லவே இல்லையே சோல் அவர்களே!. பிசாசும் அவன் கூட்டத்தாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதுதான் உங்க நம்பிக்கையா?

ஆவி,ஆத்துமா பற்றி நாங்க தெளிவாதான் இருக்கோம். நீங்களும் சீக்கிரம் ஒரு தெளிவுக்கு வாங்க!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[//II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

அத்துடன் அவர்கள் கட்டப்பட்டிருந்தாலும் எங்கும் அலைந்து திரிவார்கள் என்று சொன்னீர்கள். ஆனால் அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டார்கள் என்றல்லவா வசனம் சொல்கிறது. வசனமே உங்களுக்கு விரோதமா சாட்சியிடுகிறதே!//

நரகத்தில் தள்ளுவதே தண்டனைதானே பின்னே என்ன நியாய்த்தீர்ப்புக்கு "வைக்கப்பட்டவர்களாக" ஒப்புக்கொடுப்பது. ஏன் நரகத்திலிருந்து வெளியே எடுத்து நியாயத்தீர்ப்பு செய்து மீண்டும் நரகத்தில் தள்ளவா?]

வசனத்தில் அப்படித்தானே இருக்கிறது. கட்டினார்,நரகத்தில் தள்ளினார், நியாயத்தீர்ப்புக்கென்று வைத்திருக்கிறார் என்று.

தேவ தூதர்களையும் நியாயம் தீர்ப்போம் என்று அறியீர்களா? என்று ஒரு வசனமும் இருக்கிறது.

காலம் வருமுன்னெ எங்களை வேதனைப் படுத்த வந்தீரோ என்று அசுத்த ஆவிகள் கேட்டதல்லவா? நியாயத்தீர்ப்பு செய்ய ஒரு காலம் இருக்கிறது. அதுவரை அந்த பாவம் செய்த தேவ தூதர்களை ஆண்டவர் தற்காலிகமாக கட்டி வைத்திருக்கிறார் என்றுதான் தெரிகிறது.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[//இங்கே சொல்லப்பட்டிருக்கும் நரகம் நரகமா, அல்லது கல்லறையா? அல்லது வேறு ஏதாவதா?? ஏன்?//

தமிழில் நரகம் என்று மொழிப்பெயர்க்கப்பட்ட மூல பாஷை "டார்ட்டரு"

மற்றா இடங்களில் ஹேடஸ் என்கிற வார்த்தைக்கு தான் நரகம் என்று தமிழில் உள்ளது!!]

சரி. இந்த வசனத்தில் உள்ள நரகம் கல்லறையல்ல என்றால் என்ன இடம்? எங்க இருக்கு?

II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

அத்துடன் அவர்கள் கட்டப்பட்டிருந்தாலும் எங்கும் அலைந்து திரிவார்கள் என்று சொன்னீர்கள். ஆனால் அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டார்கள் என்றல்லவா வசனம் சொல்கிறது. வசனமே உங்களுக்கு விரோதமா சாட்சியிடுகிறதே!

[ஆவியை சங்கிலிகளால் "கட்ட" முடியுமென்றால் அவர்கள் பூமியில் நடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்!!]

நரகத்திலே தள்ளி என்று வசனம் போட்டிருக்கிறது. அப்ப நரகத்திலிருந்தும் பார்க்கலாம் போல. பயங்கரமான பவர்ஃபுல் கண்ணுதான்!!

[அவர்கள் பூமியில் நடப்பதை பார்க்கிறார்களா?? ஆம்!!

1 பேதுரு 1:12. தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.]

என்ன ஆம்? அந்த தேவ தூதரும், இந்த தூதரும் ஒன்றா?

//வசனத்தை யார் திரித்து பேசினாலும் நிச்சயமாகவே எழுதுவேன்!! சாது விசெயின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் தவறாமல் பார்த்த காலம் உண்டு!! //

உண்மையாகவா? அப்புறம் என்ன ஆச்சு? உங்களால சோல் கெட்டாரா? அல்லது சோல் உங்களை ஏமாத்தினாரா? அல்லது உங்க இருவரையும் வேற யாராவது ஏமாத்தினாங்களா?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 


//பிரசங்கித்தார் என்றவுடன், அவர் அங்கே போய் அவர்களுக்கு முன் நின்றோ, உட்கார்ந்தோ பேசினார் என்பது கிடையாது!! தேவ தூதர்களின் நிலையிலிருந்து பாருங்கள்!! அவைகள் மனிதர்களை விட உயர் ரகம்!! அவர்களுக்கு பேசி தான் ஒரு விஷயத்தை புரிய வைக்க வேண்டும் என்பது கிடையாது, அவர்கள் கிறிஸ்துவின் செயல்களை பார்த்தே அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் தன்மையுடையவைகள்!! //

சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்த நிலைமையிலும் அவர்கள் பூமியில் நடப்பதை பார்த்துக் கொண்டே இருந்தார்களாம். எப்படி ஏதாவது live telecast அங்க ஜெயிலில் பார்த்தார்களா? அல்லது , அவர்களும் ஆண்டவர் போல் சர்வ ஞானம் உடையவர்களா?

போய் காவலிருக்கும் ஆவிகளுக்கு பிரசங்கித்தார் என்பதுதான் வசன்ம். “போய்” என்ற வார்த்தை அடைப்புக்குறி, ஆச்சர்யக் குறிக்குள் எல்லாம் போடப்பட வில்லை. ஆவியில் போனார். பிரசங்கித்தார் என்பதை வேற எப்படியும் விளக்க முடியாது. 

--

தேவ தூதர்கள் ஒன்றும் ஆவியாக நோவா காலத்தில் சுற்றி வரவில்லை, மாறாக மனுஷகுமாரிகளை திருமனம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்றார்களாம்!! தெரியுமா!!?? இவர்கள் தான் பாவஞ்செய்த தூதர்கள்!! ஜலப்பிரலயம் வந்தவுடன் தங்களின் உண்மையான நிலைக்கு திரும்பிய தூதர்கள் தான் அந்தகாரச் சங்கிலிகளினால் கட்டி வைக்கப்பட்டிருப்பவர்கள், நியாயத்தீர்ப்புக்கென்று!! நியாயத்தீர்ப்பு என்பது ஒரு தனி சப்ஜெக்ட்!!

--

அந்த பாவம் செய்த தூதர்கள் இவர்களாகவும் இருக்கலாம். அல்லது ஆதியில் லூசிபருடன் சேர்ந்து கலகம் செய்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் காவலில் உள்ள ஆவிகள் தூதர்கள் அல்ல என்பது உறுதி! தெளிவு! சத்தியம்! நிச்சயம்!

II பேதுரு 2:4 க்கும் I பேதுரு 3:20 க்கும் சம்பந்தமே கிடையாது.

 

அத்துடன், சம்பந்தமேயில்லாமல் சாதுவையும், வி.செல்வகுமாரையும் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. அவங்க ஒவ்வொரு வருடமும் கோயம்புத்தூர் வருகிறார்கள். அவங்க கூட்டத்திற்கு ஒரு தடவை போய்த்தான் பாருங்களேன்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

காவலில் இருந்த ஆவிகள் யார் என்று பார்ப்போம்.

--

1 பேதுரு 3: 19. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

20. அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்;

--

 

ஆண்டவர், நீடிய பொறுமையோடே மனந்திரும்புவார்கள் என்று காத்திருந்தவர்களின் ஆவிகள் இவை என்று வசனம் சொல்கிறது.

யார் மனந்திரும்ப வேண்டும் என்று காத்திருந்தார்? நம்மைப் போன்று அக்காலத்தில் வாழ்ந்த ஜனங்கள் மனந்திரும்ப வேண்டும் என்றுதான் காத்திருந்தார். ஆதி 5 வாசிக்கவும்.

--

லூக்கா 17:26 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

லூக்கா 17:27 நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.

--

 

நோவாவின் காலத்தில் மனந்திரும்பாமல் அழிந்தவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த ஜனங்களே, நோவா பிரசங்கித்த செய்தியை ஏற்றுக் கொள்ளாதவர்களே!

 

II பேதுரு 2:5 பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;

 

ஆனால் பெரேயன்ஸ் & சோல் என்ன கதை சொல்கிறார்கள்?

 

ஆணடவர் விழுந்து போன தேவ தூதர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று காத்திருந்தாராம்.விழுந்து போன தேவ தூதர்கள் மற்றும் பிசாசுக்கு மனந்திரும்ப சந்தர்ப்பம் உண்டா? கிடையாது என்பது சின்ன பிள்ளைக்குக் கூட தெரியும்.

 

அவர்கள் சொல்லும் கதை:

--

காவலில் உள்ள ஆவிகள் நோவா காலத்தில் தவறு செய்தவர்கள் மாத்திரமே!! அவைகள் நோவா காலத்தில் மனுஷக்குமாரத்திகளுடன் திருமனம் செய்துக்கொண்ட ஆவிகள், நோவாவின் ஜல பிரலயத்தின் போது இந்த பூமியை விட்டு மீண்டும் தங்களின் ஆவிக்குரிய சரீரத்தில் தப்பிக்கும் போது தான் அவர்களை காவலில் (இனியும் அவர்கள் மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்தமுடியாதபடி) வைத்தார் தேவன்!!

--

 

இன்றைய கிறிஸ்தவம் போதிக்கிறபடி இந்த ஆவிகள் ஏதோ மரித்து போனவர்களின் ஆவிகள் அல்ல, மாறாக ஆவி ஜீவிகள், பாவம் செய்த தூதர்கள் அதுவும் நோவா காலத்தில் உள்ளவைகள் மாத்திரமே!!

--

 

மனிதர்களின் ஆவி அழிவற்றது. சரீரம் அழிந்தாலும் உயிருடன் இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல் அது தேவ தூதர்களின் ஆவிகள் என்று சொல்கிறீர்கள்.

 

பெரேயன்ஸ் சொன்னது

--

இந்த ஆவிக்குரிய ஜீவிகளுக்கு யாரும் போய் பிரசங்கிக்க வேண்டிய அவசியம் இல்லை!! இந்த ஜீவிகள் மனிதனுடன் மேலானவர்கள், ஆகவே அவர்கள் பார்த்தே அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் தன்மையுடையவர்களாவ்ர்!! கிறிஸ்து இயேசு மனித குலத்திற்கு தன்னை ஈடுபலியாக ஒப்புக்கொடுத்ததை அவர்கள் பார்த்து தெரிந்துக்கொண்டது தான், காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கம் என்பதின் சுருக்கம்!!

--

 

ஆண்டவர் அவைகளுக்கு பிரசங்கித்தார் என்றால் அவைகளுக்கு இரட்சிப்பு உண்டு என்று அர்த்தம் வந்து விடுகிறது. மனிதர்களுக்குத்தான் இரட்சிப்பு, விழுந்து போன தூதர்களுக்கு இல்லை என்பதால், காவலில் இருக்கும் ஆவிகளுக்கு போய் பிரசங்கம் பண்ணினார் என்று சொல்லப்பட்டிருப்பதை அது அப்படி இல்லை, இப்படி என்று திரித்து சொல்கிறீர்கள்.

You are not honest and consistent in your interpretation.

 

ஆனால் சோல் சொன்னது:

--

தூதர்களுக்கு 'ப்ரசங்கித்தார்'. செத்துப்போன மனிதர்களுக்கல்ல‌...

--

 

தூதர்களுக்கு எதற்கு பிரசங்கிக்கணும் சோல் அவர்களே? இதன் நோககமென்ன?

 

சோல் என்ன கதை சொல்வார் என்று பார்ப்போம்!

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard