Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் கோமாளி,யார் ஏமாளி..?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: யார் கோமாளி,யார் ஏமாளி..?
Permalink  
 


Bro Chillsam: இன்னும் எங்களை இதுபோல அவதூறாக எழுதுவதற்காகவே உங்களை மேலிடத்தில் தனியா கவனிக்கிறாங்களாமே...

 

பண ஆசையே எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

VNK.No.1

// இந்த கோமாளியின் பதிவுகளால் நம் தளத்தை அழுக்கு படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன் சகோ சோல் சொல்யூஷன் அவர்களே!! கோமாளி என்று இவனே ஒப்புக்கொண்ட பிறகு இனி அவனை கோமாளி என்று அழைக்கும் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறான்!! நம் பதிவுகளை அவன் அங்கே போட்டால் தேவனுக்கு சித்தமானவர்களுக்கு நம் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும்!! ஆனால் அவனின் பதிவுகள் இங்கே வேண்டாம், ஏனென்றால் அந்த குப்பைகளை வைத்து நம் தளத்தின் முத்துக்களை மூடுவது போல் இருக்கும்!! குப்பையை அவனிடம் இருக்கும் குப்பைத்தொட்டியில் இருக்க விடுங்கள்!! அவனுக்கு அங்கே வேலையில்லையாம், ஆனால் நமக்கு இங்கே நிறைய வேலையிருக்கு!!! //

அடேய் மாங்கா மடையா,உனக்கு கட்டுப்படாமல் எகிறிக் கொண்டிருக்கும் சோல்சோலீஷனை சமாளிக்க முடியாத நீ நாண்டுகிட்டு சாகலாமே...அவன் எழுதியதற்கு இதைவிட நாகரீமாக யாரடா எதிர்கருத்து எழுதமுடியும்..? கடந்த மாதம் முழுவதும் நீங்களெல்லாம் எழுதியவை முத்துக்களா என்ன..?

என்னுடைய எழுத்தை குப்பை என்று சொல்லும் நீ எழுதுவது வேதமா..? இரஸலின் மூத்திரத்தில் தினமும் வாய்க்கொப்பளிக்கும் உன்னுடைய எழுத்துக்களே டேட்டா பேஸில் (data base) இருக்கும்போது இதுவரை எந்த கொள்கையையும் அறிவிக்காமல் விமர்சனம் மாத்திரமே செய்துகொண்டிருக்கும் என்னுடைய எழுத்துக்கள் இருக்கக்கூடாதா..?

சின்னபுள்ள மாதிரி என் தளம் உன் தளம் என்கிறாயே,நம்மெல்லாருடைய எழுத்துக்களையும் சுமந்துகொண்டிருப்பது இணையதளம் தானே,இங்கே வந்து கிறிஸ்தவ போர்வையில் அலம்பல் பண்ணுவதைவிட நேர்மையாக உன் ஆளோடு சேர்ந்து மல்டி லெவல் மோசடித் தொழிலை ஒழுங்கா  செய், அதனால் உனக்கும் அதிகமா போனஸ் வருமில்லே..? ஊர் பணத்தில் ஒடம்ப வளர்த்து அப்பாவிகளின் தாலியை அறுத்து பிழைப்பு நடத்தும் நீ எங்களைக் குறித்து எழுதுவதை நிறுத்தினால் மட்டுமே நீ விமானப் படையில் இருந்தவன் என்று நம்புவேன்..!

கணவன் விபத்தில் சிக்கி வருமானமில்லாமல் இருக்கும்போது அவனுடைய மனைவியின் தாலியை அறுத்து அதில் வந்த வருமானத்தில் கன்வென்ஷன் நடத்தும் நீங்களா எங்களை குறைகூறுவது..?

இன்னும் எங்களை இதுபோல அவதூறாக எழுதுவதற்காகவே உங்களை மேலிடத்தில் தனியா கவனிக்கிறாங்களாமே... இதெல்லாம் ஒரு பொழப்பாடா,மானங்கெட்டவனே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Tag;(VNK) திரித்துவத்தை நம்பும் கோமாளிகளுக்கு...

பரிசுத்த வேதாகமத்தில் ஒரே ஒரு இடத்தில் பிராக்கெட் போட்டிருப்பதற்கு நீட்டி முழக்கி சர்ச்சையைக் கிளப்பிய (மேசியாவின்) எதிரிகள், தங்கள் அலப்பறைகளில் வரிக்கு வரி ப்ராக்கெட் போடுகிறார்களே, என்ன காரியம், யாருக்கு ப்ராக்கெட் போடப்பார்க்கிறார்கள்? குள்ளநரியும் குழிநரியும் சிறுநரியும் ஒரே கூட்டமாக வருது,அப்பாவி ஆடுகளே உஷார்... மந்தைக்குள்ளே தங்கியிருங்கள்..!

இந்த (ப்)ராக்கெட்டுகளைப் பார்த்தாலே நமக்கு குரான் மொழிபெயர்ப்புகளே ஞாபகத்துக்கு வரும்;அவர்களுடைய வகையறாவிலிருந்து பிரிந்துவந்த பொறம்போக்குகளான சிலர் கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் தொழத்தக்க தெய்வமான இயேசுவை மறுதலித்து கொள்கைக் குழப்பங்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள்;

திரித்துவவாதிகள் கோமாளிகளாக இருந்தாலும் ஏமாளிகளல்ல; அவர்களுக்கு ஏரியஸுக்கும் இரஸலுக்கும் ரதர்போர்டுக்கும் என்ன மரியாதை கொடுக்கவேண்டும் என்று தெரியுமுங்கோ..! கோமாளிகள் காரியத்தில் கண்ணாக இருப்பார்கள்; ஏமாளிகளோ கோவணத்தையே (இரஸலிடம்) தொலைச்சிட்டு நிக்கறாங்களே..?

வெளக்கம் சொல்றாய்ங்க...கேட்டு வெப்போமே..!

"தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்." (அப்போஸ்தலர் 13:36)

தாவீதும் தன் முற்பிதாக்களைப்போலவே தானும் அழிவைக்கண்டான்.

(சரி,அதுக்கு இன்னா இப்போ..?)

அப்2:34. தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. (ஆமா...)

யோவான்.3:13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (சரி...)

ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி,(அழிந்து) அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்;

(மரணத்திலூற்றி என்றால் "அழிந்து" என்று மூலபாஷையில் இருக்கிறதாம்..!)
 
வெளி 1:18 மரித்தேன், (அழிந்தேன்!) ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

மரித்தேன், என்றால் அழிந்தேன் என்று அர்த்தமாம், அப்போ உயிரோடிருக்கிறேன் என்றால் அழியவில்லை என்று அர்த்தமில்லையா..? "ஆனாலும்" என்று ஒன்று இருக்கிறதே அத இன்னா பண்றது'ங்க..?

அப்போஸ்தலர் 3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்(அழித்தீர்கள்); அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்(அழிந்து போனவர்களிடத்திலிருந்து); அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.

கொலை செய்வது என்றால் உயிரை எடுப்பது என்றே நினைத்திருந்தோம்; ஆனால் ஏதோ ஒன்றை அழிப்பது இப்போது தான் அறிந்துகொண்டோம்; ஞானம்'யா,ஞானம்...ஞானம் இங்கே பீர்பாட்டில் மாதிரி பொங்குது பாரு..!

மரணத்தைக் குறித்து வேதம் நித்திரை என்கிறது;ஆனால் இவர்களோ அதனை அழிவு என்கிறார்கள்;மரணம் என்பதும் அழிவு என்பதும் மாம்சத்துக்கு மட்டுமே ஆத்துமாவுக்கு அல்ல,என்கிறது வேதம்;அந்த அழிவையும் குமாரனுடைய தேகம் சந்திக்கவில்லை என்பதில் சங்கீதக்காரனின் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது;ஆனால் ஆத்துமாவையே மறுக்கும் இவர்கள், மாம்ச மரணத்தை ஆத்துமாவின் அழிவு என்று வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

உயிரின் தத்துவமே தெரியாத அறிவிலிகளிடம் யார் வேதத்தை கேட்கமுடியும்? ஆண்டவர் தம்மை பச்சை மரம் என்றும் ஏனையோரை பட்டமரம் என்றும் சொல்லவில்லையா? ஒரு மரத்தின் உயிர் (வேர்)செத்து பட்டுப்போனாலும் சிலகாலத்தில் துளிர்க்கிறதே;அப்படியானால் அதற்கு ஜீவன் எங்கிருந்து வந்தது என்பதை சிந்திப்பார்களா?

சாவாமையுள்ள ஜீவாதிபதியான இயேசுவானவர் பிதாவின் சித்தப்படி தனக்குக் கொடுக்கப்பட்ட மாம்ச தேகத்திலிருந்து வெளியேறி மீண்டும் அவருடைய பாவமில்லாத சரீரத்துக்குள் மூன்றாம் நாள் பிரவேசித்து (மனுஷருக்கான நீதியை நிறைவேற்றி..) தமது சீடர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்ததையே கனவு காட்சி என்று சாதிப்போரிடம் யார் சத்தியத்தைக் கற்கமுடியும்? தெய்வத்தை யார் கொலை செய்யமுடியும்? அவரே பிதாவின் சித்தப்படி தமது ஜீவனைக் கொடுத்தார், ஏனெனில் கொடுக்கவும் மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரமுடையவராம்,நம் இம்மானுவேலர்..!

ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து (அழிந்தோரிடத்திலிருந்து)  எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

I பேதுரு 1:21 உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து(அழிந்து போனவர்களிலிருந்து) எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.

கர்த்தருடைய வார்த்தையுடன் ஒன்றையும் கூட்டாதே என்று வேதம் எச்சரித்தும் வியாக்கியானம் என்ற பெயரில் துணிகரமாக வேத வசனத்துடன் சொந்த கருத்தை ப்ராக்கெட் போட்டு கூட்டியிருக்கிறார்கள்;இதன்விளைவு என்னவாம்? இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்திலுள்ள வாதைகளெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் மீது கூட்டப்படும்.

மரணம் என்றாலே அழிவு என்கிறார்கள்;ஆனால் போஸ்ட்மார்ட்டம் செய்யும் டாக்டர்கள் இவர்களுடைய கூற்றை கேட்டால் சிரிப்பார்கள்;ஏனெனில் மரித்து பல வருடமானாலும் சரி மீண்டும் தோண்டியெடுத்து மரணத்துக்கான காரணத்தை அறியமுடிகிறது;அப்படியானால் மரணம் என்பது வெறும் இயக்கமற்ற நிலைதானே தவிர இல்லாமற் போகும் நிலையல்ல;ஒரு மனிதன் மரித்தபிறகும் அவனுடைய முடியும் பற்களும் இன்னும் எலும்புகளிலுள்ள திசுக்களும் பல காலம் அழியாமல் இருப்பதால் அதிலிருந்து பெறப்படும் தகவல்கள் மூலம் ஒருவன் இயற்கை மரணம் அடைந்தானா,தற்கொலை செய்துகொண்டானா,கொலை செய்யப்பட்டானா என்பதை அறியமுடிகிறது;இதில் எதை அழிவு என்கிறார்கள்,(மேசியாவின்) எதிரிகள்..? இப்படி சரீரத்தின் இயக்கம் முடக்கப்பட்ட நிலையில் பாவமில்லாத தமது சரீரத்திலிருந்து (அதில் பாவமில்லாததால் அது மரண சரீரமல்ல...)பிறப்பு இறப்பு எனும் மனிதனுக்கான பிரமாணத்தை நிறைவேற்றுவதற்காகவே ஒரு அறையிலிருந்து வெளியேறுவது போல வெளியேறி தாம் மனுக்குலத்தை எந்நாளும் வாழவைக்கவேண்டியதற்கான சில முக்கிய கடமைகளை செய்து முடித்துவிட்டு வேதவாக்கியமும் தாம் முன்னுரைத்ததும் நிறைவேற வேண்டி மீண்டும் தம்முடைய சரீரத்துக்குள் பிரவேசித்தார்.

  • "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
  • But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you. " (ரோமர்.8:11)


இவர்களுக்கு சமமாக இறங்கி விளக்கமோ வியாக்கியானமோ தரக்கூடாது என்று இத்தனை நாள் இருந்தேன்; ஆனால் தற்போது சூழ்நிலையின் அவசியம் கருதி எனக்கு மேற்கண்ட வசனத்திலிருந்து தோன்றும் ஒரு கருத்தை வாசகர்களின் சிந்தனைக்காகத் தருகிறேன்.

மேற்கண்ட வசனமே வேதமாணவர் எனப்படும் போலிகளும் யெகோவா சாட்சிகளும் மற்றும் இஸ்லாமியரும் இயேசுவானவரின் தெய்வத்துவத்தை மறுக்க பயன்படுத்தும் வசனமாகும்;இதில் அவர்கள் தங்களுடைய வாதத்துக்கு வலுசேர்க்க எடுத்தாளும் வார்த்தை இயேசுவே தம்மை பிதா எழுப்பவேண்டிய நிலையிலிருந்தார் என்பதே;மேலும் முகமதியர்கள் சாவுக்கேதுவான சரீரத்திலிருந்தவர் (mortal body) எப்படி பரமேறிச் செல்ல இயலும் என்றும் கேட்கிறார்கள்;ஆனால் முக்கியமான ஒன்றை இவர்களெல்லாம் மறந்துவிட்டார்கள்,இயேசு இந்த பூமியில் வாழ்ந்தது சாவுக்கேதுவான (mortal body) சரீரத்தில் அல்லவே?

  • "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." (எபேசியர்.2:1)

மனிதன் மரித்த நிலையிலேயே பிறக்கிறான்;அவன் கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்தினால் பிழைக்கிறான் என்பதே வேத தத்துவமாகும்;ஆனால் நம்முடைய ஆண்டவரோ அடிமையின் ரூபமெடுத்தாரே தவிர பாவ சரீரத்தில் அதாவது சாவுக்கேதுவான (mortal body) மரண சரீரத்தில் வாழவில்லை; மரணம் சம்பவிப்பதற்கான காரணம் ஏதுமில்லாதவர் எப்படி மரிக்கமுடியும்? எனவே தம்முடைய ஜீவனை அவரே ஒப்புகொடுத்தார்; பிறந்ததே மரணமில்லாதவராக இம்மார்ட்டல் ஆக பிறந்தவ‌ர், சாவுக்கேதுவான (mortal body) மார்ட்டல் பாடியிலிருந்து எப்படி எழுந்திருப்பார்? சாவுக்கேதுவான  (mortal body) எனும் வார்த்தையிலேயே கோடி அர்த்தங்கள் இருக்கிறதே..?

// இயேசுகிறிஸ்து எங்குமிராதபடி அழிக்கப்பட்டு தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டார். //

இதற்கு வசன ஆதாரமில்லை; இயேசுவானவர் மாம்சத்தில் இல்லாத நாட்கள் இருந்ததே தவிர உலகத்தில் இல்லாத ஒரு நிமிடம் கூட இல்லை;எனவே வசனம் சிறப்பாக சொல்லுகிறது,

  • "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில்..."(எபிரெயர்.5:8) என்பதாக;

மற்றபடி அவர் இல்லாதிருந்த காலமே இல்லை;ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருக்கவுமில்லை;அவர் இயங்கிக் கொண்டே இருந்தார்,இதனை வேதம் பலமாக நிரூபிக்கிறது.ஆனாலும் இவர்களுக்கு வசனத்தைப் போட்டு உபதேசிக்க எனக்கு விருப்பமில்லை;எனது அன்புக்குரிய வாசகர்கள் கேட்கட்டும் சொல்ல ஆயத்தமாக இருக்கிறேன்.

// முன்னோர்கள் அழிவைக் கண்டார்கள்; தாவீது அழிவைக்கண்டான்,//

இதுக்கு மட்டும் வசதியா,தமிழ் வேதாகமத்திலேயே நொண்டுவீர்களோ, ஆங்கிலத்தை நோண்டமாட்டீர்களோ..? ஆங்கிலத்தில் "ஸ்லீப்" (Sleep) என்றும் லெய்ட் (Laid) என்றும் இருக்கிறது; அதற்கு அழிவு என்று அர்த்தமா,மேதாவிகளே..?

//ஆனால் குழப்பக் கிறிஸ்தவர்கள் அழியாமல் யேசப்பாவ பாத்தேன், பவுலைப்பார்த்தென், பேதுருவைப் பார்த்தென், யோவான் ஸ்நானகனைப் பார்த்தேன். என்று எத்தனை துணிகரமாகச் சொல்கிறார்கள்? //

நீங்கள் உலகத்துக்கே அல்வா கொடுத்து உலகமுழுவதும் உள்ள அப்பாவி மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறீர்களே, உங்களை யாராவது மிஞ்சமுடியுமா?

மரித்தவர்களைப் பார்ப்பது என்ன அதிசயமானதா? மனிதனுடைய மனம் அவ்வண்ணமாக சிருஷ்டிக்கப்பட்டிருப்பதாலேயே விசித்திரமான காட்சிகளை அமைத்து திரைப்படமாக்குகிறான்; ஹாலிவுட் படங்களை எப்படி உருவாக்குகிறார்கள்?

சாதாரண உலகக் காரியத்தையே பாவ மனுஷன் பாவத்தை நிறைவுசெய்ய யோசித்து பிரம்மாண்டமாகச் செய்யும்போது சர்வ வல்லவர் தம்முடைய அடியவர்களுக்கு மேலானவற்றை ஆவியில் சொப்பனத்தில் வெளிப்படுத்தமாட்டாரா? நீங்களெல்லாம் கனவே காணாத ஜடங்களா என்ன? செத்துபோன தாத்தாவை உயிரோடிருப்பதைப் போலவும் நீங்கள் அவரோடு இருப்பதைப் போலவும் பார்த்ததில்லையா? அந்த காட்சியை யார் இயக்கியது?

ஆம்,மனிதனுடைய சிந்தையில் பதிந்துள்ள தகவல்களிலிருந்து ஆழ்மனம் காட்சிகளை அமைக்கிறது;அவ்வாறே வேதத்தை ஆழமாக தியானித்து வாசிப்போர் தன்வயப்பட்டு வேதப்புருஷர்களை தங்கள் சொப்பனத்தில் காண்கிறார்கள்;இதில் என்ன தவறு? இந்த அனுபவத்தை யார் வேண்டுமானாலும் பெறமுடியுமே?

ஆனால் இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பதால் அவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டுதானிருக்கிறார்;அவரைக் குறித்து வேதத்தில் வாசித்தறிந்த தகவல்களால் உந்தப்படும் உள்மனம் அவரையும் தரிசிக்கும்;இதனால் இன்புற்று துன்பம் நீங்கி சுகம் பெற்றால் உங்களுக்கென்ன வருத்தம்?

அவர் சர்வ வல்லவர் ஆனதால் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் காட்சி தர வல்லவர் என்பதை விசுவாசிக்கும் ஒரு சாதாரண விசுவாசியின் உணர்வைப் புண்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன உரிமையுண்டு?

இயேசப்பாவைப் பார்த்தேன்,என்று சொன்னால் சாத்தானுக்கு என்ன தவிப்பு? உன்னை பார்க்க ஆளில்லையே என்று ஏங்குகிறாயோ? மாட்டுக்காரனுக்கு கன்று பால் குடிப்பதைப் பார்த்தால் காண சகிக்காது தானே..? என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று யோபுவே சொல்லுகிறான், உங்களுக்கு சொல்ல நா கூசுகிறதோ..? எந்த தைரியத்தில் ராஜ்யத்துக்கு ஆயத்தமாகிறீர்கள் என்றே புரியவில்லை..!

// மரித்தவுடன் உடனடியாக பரலோகம்தான் நான் ஸ்டாப் சர்வீஸ்...  //

இந்த பூமியிலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் கடந்தாலே வேறு உலகம் தானே,அதை விண்ணுலகம் அல்லது பரலோகம் என்கிறோம்,அதில் என்ன தவறு..? உள்ளேயிருந்து ஏதோ ஒன்று வெளியேறியவுடனே உனக்கு சங்கு ஊதுவாங்க இல்ல,வெளியே போச்சே அது எங்கே போச்சுன்னு சொல்லேன் பாக்கலாம்..! அதில் தானே சிந்தனையும் செயலும் இருந்தது..? மாம்சம் சுயமாக இயங்குமா என்ன..? அப்ப ஏன் மூக்குல ஈ மொய்ப்பது கூட தெரியாமல் அப்படியே டெட் பாடி மாதிரி இருக்கிறான்,மனுஷன்..? வெளியேறிய ஆவி மனிதன் எங்கே போனான் என்று முதலில் தெரியுமா..?

// ஆத்துமா அழியாது என்ற (சாத்தானின் நீங்கள் சாகவே சாவதில்லை)ஒரு மாபெரும் பொய்தான் இன்றைய எல்லா தப்பறைகளுக்கும் மூலகாரணம். //

ஆத்துமா அழியாது என்று சொல்லவில்லை,அழிந்துபோன நிலையிலிருப்பதாகவே வேதம் சொல்லுகிறது; பாவத்தின் மீறுதலினால் விழுந்துபோன ஆத்துமா நித்தியத்துக்கும் அழியாதிருக்கும் மீட்பின் ஏற்பாடே புதிய ஏற்பாடு..! ஆதாம் பாவத்தில் விழுந்த அன்றே மரணம் அவனை ஆட்கொண்டது என்று வேதம் சொல்லுகிறது.அது தேவனற்ற நிலையான ஆத்மிய மரணம் என்கிறது வேதம்.

  • "கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு.."(யோவான்.3:16)

எது கெட்டுப்போகாமல்..? அதுதான் ஆத்துமா..! இங்கே மாம்சத்தைக் குறித்தும் மாம்ச மரணத்தைக் குறித்துமா பேசுகிறார்?

  • "ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே."(சங்கீதம்.49:7,8)

இதுவே மனுக்குல நியதி;ஆனால் இயேசுவானவர் தம்முடைய தியாகத்தினால் அதனை மாற்றி சாத்தானை ஏமாற்றினார்.மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுத்தாராம்.

// திரித்துவத்தை நம்பும் கோமாளிகளுக்கு... //

யார் கோமாளி, யார் ஏமாளி என்பதெல்லாம் இராஜ்யத்தில் விளஙகும்; அறுப்பிலே பிச்சை கேட்டாலும் உங்களுக்கெல்லாம் ஒன்றும் கிடைக்காது'ங்கோ..!


// I தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். என்று பிதாவைக்குறித்து வேதம் சொல்லுகிறது.

ஆனால் குமாரனோ மரித்தேன் என்கிறார். சாவாமையுள்ள பிதாவாகிய தேவனே இவரை அழிவிலிருந்து எழுப்பினார். வேதம் இரண்டு வெவ்வேறு நபர்களைச் சொல்லுகிறது. பிதா வேறு, குமாரன் வேறு. //

குமாரன் மரித்தேன் என்று மட்டுமா சொல்லுகிறார், உயிரோடிக்கிறேன் என்றும் சொல்லவில்லையா; மரணம் என்றாலே என்னவென்றே அறியாத ஜீவாதிபதி மரணத்தை ருசிபார்த்தார் என்று வேதம் சொல்லுகிறது; சாவாமையுள்ளவரான அவர் மரித்த காரணத்தினாலேயே நித்திய ஜீவனைக் குறித்து பேசும் அருகதை மனுக்குலத்துக்கே கிடைத்தது;அவர் மரித்தோரிலிருந்து எழுந்தவரில் முதற்பேறானவர் என்று வேதம் சொல்லுகிறது.பிதா சாவாமையுள்ளவர் எனில் குமாரனும் சாவாமையுள்ளவரே; சாவாமையுள்ள பிதாவுக்கு சாவுக்கேதுவான குமாரன் எப்படி ருக்கமுடியும்? சாவுக்கேதுவான சரீரமுள்ள மனிதனிடம் சாவாமையுள்ளவர் எப்படி பிறக்கமுடியும்? சிந்திப்பீர்களா? அவர் தேவன்,சர்வ வல்ல தேவன்,தேவாதி தேவன்.

// 1கொரி8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். //

பிதாவாகிய ஒரே தேவன் சரி,இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தர் யார்? சாதா கர்த்தரா,ஸ்பெஷ்ல் கர்த்தரா? தியோஸ் ஹோ தியோஸ் மாதிரி இதிலும் ரெண்டு அர்த்தம் இருக்கணுமே..? கர்த்தர் என்றாலே சிருஷ்டிகர் அல்லது எஜமானர் என்பதே பொதுவான அர்த்தம்;சிருஷ்டிகரை தொழுது சேவியாமல் தேவத்துவத்தை மறுதலிப்போரை அழிக்கவே தூதர்கள் பட்டயத்துடன் இறங்குகிறார்கள்;

// 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

அறிவில்லாதவர்கள் என்று பவுலெ சொல்கிறார்....
விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்.... அறியாமை இருள் மெல்ல அகன்றுகொண்டிருக்கிறது.... அவருடைய பிரசன்னமாகுதலின் முதற்கட்டம்... //

யார் அறிவில்லாதவர்கள் என்று இந்நேரம் எல்லோரும் விளங்கியிருப்பார்கள்; எனவே என்னுடைய வேலை இலகுவானது.

// "உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக" //

வந்தா தானே தெரியும்,சங்கதி..!

 

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard