Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "க்ஷேமம் " அறிவோமா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
"க்ஷேமம் " அறிவோமா..?
Permalink  
 


சரி அந்த பாட்டுக்கு அர்த்தம் யாராவது சொல்லுங்க. அடுத்த முறை கேட்கும் போதாவது அர்த்தம் புரியட்டும்!

rajkumar_s Wrote on 12-07-2011 12:32:25:
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் --- துதி

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் --- துதி

3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் --- துதி

4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் --- துதி

5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் --- துதி

6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் --- துதி



பரமண்டலத்தில் துதிகளின் மத்தியில் தங்கியிருக்கும் இயேசுவின் நாமத்திற்கு
நல் மங்களமும் மிகுந்த சுகமான‌ ஷேமம் உண்டாகட்டும்

பூரண அழகான அருள் ஒளியானை
கதியென்று சரணடைந்தவர்கள் தொழும் கருணையின் அதிபதி

மேய்ப்பர்கள் வணங்கி அவர் பாதம் அமர்ந்து மகிழ்ந்து வாழ்த்திய தேவாதிதேவன்
அவமாணமான ஒரு கந்தைத் துணிகட்டிக் கொண்டு பூமிக்கு வந்த மகா பரிசுத்தம் உள்ளவர்

பரலோகத்தில் அரசனாய் வளர்ந்த தேவ சாயலானவர்
ஒரு பெண்ணிடத்தில் வந்து மனிதனாய தன்னைத் தாழ்த்தி பிறந்தார்

ஆபிரகாமிடம் கொடுக்கப்பட்ட வக்குதத்தத்தின் படி
எபிரேயர்கள் குலத்து அரசனான தாவீதின் குமாரனாய் பிறந்தார்

வேதாகமத்தின் மையமாக சொல்லப்பட்ட நற்செய்தியாளன்
ஆதாமின் வம்சாவளியினருக்கு வந்த மேசியா


விண்ணவரும் மண்ணவரும் திருப்பாதம் பணிந்து வணங்கும் பரமண்டல நாயகன்


10 நிமிட நேரத்தில் எழுதிய பொருள் 90 விழுக்காடு சரியானதாக இருக்கும் இன்னும் தெளிவான விளக்கம் வேண்டுமெனில் அறியத்தாருங்கள் கொஞ்சம் home work ‍ பண்ணி எழுதுகிறேன்.


Chillsam:

கற்றுத் தேர்ந்த தமிழ்ப் புலவர்களுக்கிணையாக நண்பர் இராஜ்குமார் அவர்கள் முயற்சித்திருக்கிறார்; ஒரு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சியில் இவ்வாறே ஒருவருடைய திருத்தமான தமிழ் பேச்சை இன்னொருவர் மெட்ராஸ் பாஷையில் மொழிபெயர்ப்பார்; அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறப்பாகவே இருக்கிறது.

இது தமிழ் வேதாகத்தின் திருத்திய பொது மொழிபெயர்ப்பைவிட பரவாயில்லை; அதிலிருந்து ஜோக்..."ஜீவ அப்பம் நானே.." எனும் வசனம் தற்கால தமிழர்களுக்கு விளங்காது என்ற நல்லெண்ணத்தில் அதனை "உயிருள்ள தோசை நானே.." என்று திருத்தியிருக்கிறார்களாம்,இது நியாயமா..?

சரி நான் சொல்லவந்த சிறு குறிப்பை மட்டும் சொல்லுகிறேன்; "ஷேமம் " (Shemam) என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாமல் அதனை நேர்மையுடன் அப்படியே போட்டிருக்கிறீர்கள், நன்று; ஆனால் "ஷேமம்" (Shemam) என்று உச்சரிப்பதே தவறு என்பதை பலர் அறிகிறதில்லை; சகோ.மோகன் சி லாசரஸ் உட்பட பலரும் இதனை "ஷேமம்" (Shemam) என்றே சொல்லுகிறார்கள்; "ஷேமம்" என்ற வார்த்தை தமிழில் இல்லை; அது தமிழ் வார்த்தையுமல்ல; பொதுவாகவே நம்முடைய தமிழ் வேதாகமத்தில் சுமார் 40 சதவீதம் சமஸ்கிருத வார்த்தைகள் இருப்பதாகச் சொல்லுவார்கள்; அதிலொன்றான இந்த "ஷேமம்" (Shemam) என்ற வார்த்தையானது வேதாகமத்தில் நான்கு இடத்தில் மட்டுமே வருகிறது.அதுவும் "ஷேமம்" (Shemam) என்று இல்லாமல் " க்ஷேமம் " (Tshemam) என்றே வருகிறது.

  • ஆதியாகமம் 37:14 அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய க்ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
  • II இராஜாக்கள் 9:31 யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி க்ஷேமம் அடைந்தானா என்றாள்.
  • II நாளாகமம் 7:14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
  • எரேமியா 38:4 அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் க்ஷேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.


"க்ஷேமம்" எனும் வார்த்தையின் பொருள் என்ன? உச்சரிக்கவே தெரியாத போது பொருளை எப்படி அறிவோம், என்று கேட்பீர்கள், அதுவும் நியாயம் தான்..! இது தமிழுக்கு வந்த சோதனையோ இல்லை, அதுவே தமிழின் சாதனையோ அறியோம்; இதன் பொருள் "நலன்" அல்லது சமாதானம் என்பதாகும்; ஆங்கிலத்தில் ஒப்பிட்டு பார்க்கவும்.

"க்ஷேமம்" எனும் வார்த்தையின் உச்சரிப்பு எப்படியிருக்கவேண்டும்? முதல் எழுத்தான "க்ஷ" என்பதை உச்சரிக்கக் கற்றுக்கொண்டால் மற்றவை எளிதாகுமல்லவா? "ட்சஷ‌" ஆகிய மூன்று எழுத்துகளையும் இணைத்து உச்சரிக்கவேண்டும்; இதிலிருந்து பிறக்கும் ஒலியே ட்ச்ஷே எனும் ஒலியையும் தரும்; இனி "க்ஷேமம்" என்பதை உச்சரிப்பது எளிதாகும் அல்லவா..? எதுக்கு இவ்வளவு பிரச்சினை என்று தான் இதுபோன்ற‌ வடமொழி எழுத்துக்களையே தமிழிலிருந்து நீக்கி தமிழை செம்மொழியாக்க பலரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்;அது வேறு பிரச்சினை..!

இனி "க்ஷ" எனும் எழுத்தின் அடிப்படையிலான உயிர்மெய் எழுத்துக்களை அறிவோமா..? ஏனெனில் அதையும் சேர்த்தாலே தமிழ்மொழியின் 247 எழுத்துருக்களும் கிடைக்கும் அல்லவா?

சத்தமாக எல்லோரும் சொல்லுங்க...

"க்ஷ க்ஷா க்ஷி க்ஷீ க்ஷு க்ஷூ க்ஷெ க்ஷே க்ஷை க்ஷொ க்ஷோ க்ஷௌ க்ஷ் "

ப‌க்ஷி (பட்சி- பறவை) கக்ஷி (கட்சி) போன்ற வார்த்தைகளை அமைத்து இந்த எழுத்தைப் பழகலாம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard