Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துர்உபதேசங்களின் தன்மைகள்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: துர்உபதேசங்களின் தன்மைகள்
Permalink  
 


eloi4u wrote:
chillsam wrote:
ஒரு படைப்பாளியின் உழைப்பை அவருக்குத் தெரியாமல் எடுத்து அவருடைய அனுமதியில்லாமலே மறுபதிப்பு செய்வது தவறில்லை எனும் பிடிவாதமான கருத்து அதிர்ச்சியடைய வைக்கிறது.

 

chillsam wrote:

இதுபோன்ற வெற்று வாதங்களை மூச்சுபிடிக்கச் செய்ய‌ ஆயத்தமாக இருக்கும் சிலர் சத்தியத்தைவிட்டு விலகி தெய்வத்துவத்தை தூஷிக்கும் பன்றிகளிடம் "பகிரங்க மன்னிப்பு" கோருவார்கள்..!


சரியாகச் சொன்னீர்கள் முன் அனுமதி பெற்று பதிப்பதே சிறந்தது, கோல்வின் அவர்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்


 

இதை நான் கவனிக்கவில்லையே.

சகோ கொல்வின் நல்ல கிறிஸ்தவ நற்பண்பான மன்னிப்பு கேட்பதை வெளிகாட்டியதுதான் , சகோ சில்சாம் , சகோ கொல்வினை இப்படிக் காய்ச்சுவதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். இத்தனை நாள் ஒன்றும் சொல்லாத சகோ சில்சாம் திடீரென்று ஏன் இப்படி செய்கிறார் என்று யோசிக்கவும்!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


நான் எழுதியவற்றில் பெரும்பாலானவை திரு.அற்புதம் அவர்களுக்கே எழுதினேன். அவர்தான், ஒருவர் எழுதும் அனைத்தும் தேவனால் எழுதுவது எனவே அதற்கு காப்புரிமை கோரக்கூடாது அதை பணத்துக்கு விற்கக்கூடாது என்று அறிவித்தார்; தேவைப்பட்டால் இதுகுறித்து தனி விவாதத்தை வெளிப்படையாக துவக்குங்கள்; அப்போது ஒருவேளை நியாயம் வெளிப்படலாம். இத்தனை விளக்கமாக எழுதியும் ஒரு படைப்பாளியின் உழைப்பை அவருக்குத் தெரியாமல் எடுத்து அவருடைய அனுமதியில்லாமலே மறுபதிப்பு செய்வது தவறில்லை எனும் பிடிவாதமான கருத்து அதிர்ச்சியடைய வைக்கிறது.

arputham Wrote on 12-07-2011 17:39:22:
பணத்துக்கு விற்கக் கூடாது என்றோ இலவசமாகத்தான் புத்தகத்தைக் கொடுக்கவேண்டும் என்றோ யாரும் கூறவில்லை சகோ.சில்சாம். இலாப நோக்கை அடிப்படையாகக் கொண்டு புத்தகம் வெளியிடக் கூடாது என்றேன். கிறிஸ்தவப் புத்தகங்களுக்கான் காப்புரிமை தேவனிடமே இருக்கிறது. அது இலவசம்.. மகனையே தந்தவர் இதைத் தரமாட்டாரா. இதே திசையில் நீங்கள் விவாதித்தால் ஜெபிக்கிறதற்கும் காணிக்கை கேக்கும் ஊழியர்களுக்கும் வக்காலத்து வாங்குவீர்கள் போல.

நாம் இங்கே ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிற விஷயங்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், பக்திவிருத்திக்காகவும் மற்றும் விழிப்புணர்வுக்காகவும் செய்ய ஏவப்படுகிறோம். ஒரு நல்ல கட்டுரை அல்லது பத்தியை படிக்கும்போது அதை பகிர்ந்து கொள்கிறோம். நாமே சொந்தமாக ஏதோ எழுதிக் கொள்வதாகக் காட்டிக் கொண்டால்தான் தவறு.

எது எப்படியோ போங்க.... நீங்க ஆளைப் போட்டுத் தாக்குவதில் சூராதி சூரர் என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டு வருகிறீர்கள்.

நீங்கள் குறிப்பிடும் சகோ.ஆன்ரூ தேவ் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை நாங்கள் அனுபவத்தில் நன்கறிந்துள்ளோம். ஆகவே விவாதத்திற்கு தேவையானதை மட்டும் எல்லாரும் பகிர்ந்து கொள்ளுவோம். துர் உபதேசங்கள் குறித்த விசயத்தில் வேறு திசை திருப்பும் விடயங்களுக்கு இடம் தரவேண்டாமே.


ஆன்ரூ தேவ் எப்படிப்பட்டவர் என்றும் கொஞ்சம் சொல்லுங்களேன்; மனுஷன் பொதுவா மூணு விஷயத்தில் "வீக்"காக இருப்பான்; இவர் எதில் "வீக்" என்கிறீர்கள்? அவர்தானே சகோதரி ஜெயராணி அவர்களின் கணவர்? அவரோடு பேசியிருக்கிறீர்களா? அவரே ஆண்ரூ பிரபுகுமார் என்ற பெயரில் துர்உபதேசங்கள் உட்பட‌ பல புத்தகங்களை எழுதியிருப்பதை அறிவீர்களா? தவறை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மைகூட இல்லாதவர்கள் என்னைப் போன்றவர்களைக் குறைகூறக் கூடாதல்லவா?

என்னைப் பொறுத்தவரை ஒருவருடைய அனுமதியில்லாமல் அவருடைய படைப்பை பொதுவில் வைக்க எனக்கு உரிமை கிடையாது; அதேபோல எந்த ஒரு செய்திக்கும் தொடுப்பு தருவதையும் வழக்கமாக வைத்துள்ளேன்; நீங்களே ஒருமுறை சொன்னதுண்டு,ஒருவருடைய அனுமதியில்லாமல் அவருடைய புகைப்படத்தை வெளியிடக்கூடாது,என்பதாக; அப்படியானால் அந்த நாகரீகம் இந்த விடயத்தில் தேவையில்லையா?

கோல்வின் அவர்களே கூட ரெஃபரன்ஸ் மற்றும் ஸைட்டேஷன் காரியத்தில் மிகவும் கவனமாக இருப்பார்; இது சம்பந்தமாக அவர் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்தவர்கள் கூட அவரை பரியாசம் செய்திருக்கிறார்கள்; எனவே தான் அவரிடம் பொதுவாகக் கேட்டேன்; நீங்களோ தேவையில்லாமல் இதனை வேதத்துடன் ஒப்பிட்டு வாதத்தை வளர்த்துக்கொண்டே போகிறீர்கள்; யாரையும் தாக்கவேண்டும் என்ற உள்நோக்கம் எனக்கு இல்லை என்பதை கர்த்தர் அறிவார்.(நம்முடைய விவாதத்தில் கர்த்தரை அழைத்தமைக்காக வருந்துகிறேன்.)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

eloi4u wrote:
chillsam wrote:
ஒரு படைப்பாளியின் உழைப்பை அவருக்குத் தெரியாமல் எடுத்து அவருடைய அனுமதியில்லாமலே மறுபதிப்பு செய்வது தவறில்லை எனும் பிடிவாதமான கருத்து அதிர்ச்சியடைய வைக்கிறது.
chillsam wrote:

இதுபோன்ற வெற்று வாதங்களை மூச்சுபிடிக்கச் செய்ய‌ ஆயத்தமாக இருக்கும் சிலர் சத்தியத்தைவிட்டு விலகி தெய்வத்துவத்தை தூஷிக்கும் பன்றிகளிடம் "பகிரங்க மன்னிப்பு" கோருவார்கள்..!


சரியாகச் சொன்னீர்கள் முன் அனுமதி பெற்று பதிப்பதே சிறந்தது, கோல்வின் அவர்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்


 ஆதரவான கருத்துக்கு நன்றி,சகோதரரே; நண்பர் கோல்வினை நான் அதிகமாக நேசிக்கிறேன்;ஆனாலும் அவர் ஏனோ நட்புக்காகக் கூட நான் சொல்லுவதை ஏற்க மறுக்கிறார்; நீங்களாவது நடுநிலையுடன் எனது இந்த எளிமையான கருத்தை ஏற்றுக்கொண்டது குறித்து சந்தோஷம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

chillsam wrote:
ஒரு படைப்பாளியின் உழைப்பை அவருக்குத் தெரியாமல் எடுத்து அவருடைய அனுமதியில்லாமலே மறுபதிப்பு செய்வது தவறில்லை எனும் பிடிவாதமான கருத்து அதிர்ச்சியடைய வைக்கிறது.

 

chillsam wrote:

இதுபோன்ற வெற்று வாதங்களை மூச்சுபிடிக்கச் செய்ய‌ ஆயத்தமாக இருக்கும் சிலர் சத்தியத்தைவிட்டு விலகி தெய்வத்துவத்தை தூஷிக்கும் பன்றிகளிடம் "பகிரங்க மன்னிப்பு" கோருவார்கள்..!


சரியாகச் சொன்னீர்கள் முன் அனுமதி பெற்று பதிப்பதே சிறந்தது, கோல்வின் அவர்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


\\இரவுபகலாக உட்கார்ந்து ஒருவர் எழுதும் ஆராய்ச்சி புத்தகத்தை எப்படி இலவசமாகத் தரமுடியும், என்கிறீர்கள்; இலவசமாகத் தரப்படும் புத்தகங்களுக்கும் யாராவது சிலர் தியாகத்துடன் பணம் செலவு செய்திருக்கிறார்களே? கோல்வின் அவர்களுடைய அபிமான எழுத்தாளரான வசந்தகுமார் இலவசமாகவா புத்தகங்களை எழுதி தருகிறார்? வேதாகம கல்லூரிகளில் இலவசமாகவா சேர்த்துக்கொள்ளுகிறார்கள்?\\

சகோ. சில்சாம் எதனையும் விளங்காமல் எழுத வேண்டாம். பெரும்பாலாள இலங்கை கிறிஸ்தவ எழுத்தாளர்கள் பணத்திற்காக எழுதுவதில்லை. இங்கு அச்சக செலவுகளே மிக மிக அதிகம். அதையும் சில விசுவாசிகள் ஏற்றுக் கொள்வதால் ஓரளவுக்கு குறைவான விலைக்கு நூல்கள் கிடைக்கின்றன. மற்றும் அங்கு போல் நிறைய சந்தைவாய்ப்புக்களோ அன்றேல் வசதிகளோ இங்கில்லை. குறிப்பிட்ட நூல்களுக்கு உதவி செய்தவர்களின் பெயர்களைக் கூட போடுகிறார்கள். இங்கு ஒரு நூலை வெளியிடுவது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. கிறிஸ்தவ எழுத்தாளர்களில் யாரும் பணத்திற்காக இங்கு எழுதுவதில்லை. விளங்கிவிட்டதா? அவர்களின் தியாக சிந்தனையும் அர்ப்பணிப்பு நோக்கமும் பாராட்டப்படவேண்டியவை. இலங்கை படைப்பாளிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் சில்சாமை வன்மையாக கண்டிக்கின்றேன்.

வேதாகமக் கல்லூரிகளில் சேர பணமில்லாதுவிட்டால் மாற்று ஏற்பாடு செய்து தருகிறார்கள். கட்டணத்தை குறைக்கிறார்கள். அன்றேல் வேறு யாராவது செலவை பொறுப்பேற்கிறார்கள். இது பற்றி உங்களுக்கு என்ன கவலை?

எனவே கண்டதையும் எழுதி உங்கள் பெயரை தயவு செய்து கெடுத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் சொல்லும் நீங்கள் இப்போது மட்டும் ஏன் குரல் கொடுக்கிறீர்கள். முன்னர் இப்படி செய்யவில்லையே!. நிற்க உங்கள் தளத்தில் இதை Copy/Paste செய்தது ஏனோ? எந்த சட்டம் இதை அனுமதிக்கிறது. நீங்கள் செய்தது நாகரீகம்தானே!

இதற்கு மேல் உங்களுக்கு பதில் எழுவதில்லை என தீர்மானி்த்துள்ளேன். என் தனிப்பட்ட விவகாரங்களில் நீங்கள் இனி தலையிட வேண்டாம். இலங்கை வெளியீடுகள் சிலவற்றை இணையத்தில் வெளியிடுவதற்கு நான் அனுமதி பெற்றுள்ளேன்.

ரொம்பவும் உணர்ச்சிவயப்பட்டு துள்ளாதீர்கள், நண்பரே..! நான் உங்கள் தேசத்தையோ உங்கள் தேசத்தின் எழுத்தாளர்களையோ குறிப்பாக குறைகூறவில்லை; உங்கள் அபிமான எழுத்தாளரான வசந்தகுமார் குறித்து மாத்திரமே கேட்டேன்; அதற்கு பதில் "ஆம்" அல்லது "இல்லை" என்பதே; "ஆம்" என்றால் "மகிழ்ச்சி", "இல்லை" என்றால் வருத்தம்; இதற்கு மேல் இதில் கோபப்பட என்ன இருக்கிறது?

நீங்கள் இலங்கை தேசத்தவராக இருப்பதால் திரு.வசந்தகுமார் அவர்களின் படைப்புகளை இணையத்தில் பதிக்க உரிமை பெற்றிருப்பீர்கள் என்றே எண்ணினேன்; இங்கிருந்து காப்பி பேஸ்ட் செய்வது சட்டவிரோதம் என்று நான் எச்சரிக்கப்பட்டால் அடுத்த நிமிடமே நமது யௌவன ஜனம் தளத்திலிருந்து அவற்றை நீக்கிவிடவும் ஆயத்தமாக இருக்கிறேன்; என் பெயரை உங்களால் கெடுக்கவும் முடியாது, என்னை காப்பாற்றவும் உங்களால் கூடாது;ஏனெனில் நான் உங்களை நம்பியிருக்கவில்லை. கெட்டுப்போகுமளவுக்கு எனக்கென்று சிறப்பான எந்த பெயரும் கிடையாது; தமிழ் கூறும் நல்லுலகிலுள்ள அனைவரும் எனது கருத்தை வரவேற்பார்களே தவிர எதிர்க்கமாட்டார்கள்.

நான் எழுதியவற்றில் பெரும்பாலானவை திரு.அற்புதம் அவர்களுக்கே எழுதினேன். அவர்தான், ஒருவர் எழுதும் அனைத்தும் தேவனால் எழுதுவது எனவே அதற்கு காப்புரிமை கோரக்கூடாது அதை பணத்துக்கு விற்கக்கூடாது என்று அறிவித்தார்; தேவைப்பட்டால் இதுகுறித்து தனி விவாதத்தை வெளிப்படையாக துவக்குங்கள்; அப்போது ஒருவேளை நியாயம் வெளிப்படலாம். இத்தனை விளக்கமாக எழுதியும் ஒரு படைப்பாளியின் உழைப்பை அவருக்குத் தெரியாமல் எடுத்து அவருடைய அனுமதியில்லாமலே மறுபதிப்பு செய்வது தவறில்லை எனும் பிடிவாதமான கருத்து அதிர்ச்சியடைய வைக்கிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam Wrote@Tcs on 12-07-2011 02:22:12:

நம்முடைய செயலை அவர் இரசிப்பாரா என்று தெரியவில்லை;ஆனால் இது தவறான முன்னுதாரணம் என்று மாத்திரம் தெரிகிறது. இதுபோல அவரவர் ஒவ்வொருவருடைய படைப்பையும் சம்பந்தப்பட்டவருடைய அனுமதியில்லாமல் எடுத்துப்போட்டுக் கொண்டிருந்தால் காப்புரிமை சட்டம் என்பதே கேலிக்குரியதாகிவிடும்.

arputham Wrote on 12-07-2011 03:09:24:

எனது கருத்தில் மாற்றமில்லை சகோ.சில்சாம். தேவனுடைய நோக்கத்திற்காக, அவரால் அருளப்படும் எழுத்துக்களை நாம் உரிமை கொண்டாடுவதுதான் காப்புரிமை சட்டமா? அப்படியென்றால் அவை மீறுவதற்கே. நாம் லாப நோக்கத்திற்காக பயன்படுத்தினால் மட்டுமே தவறு.

பல ஆங்கிலவேதாகமங்களில் காப்புரிமைச் சட்டம் குறிக்கப்பட்டிருக்கும். அப்படியெனில் அவற்றை பயன்படுத்தக் கூடாதா என்ன? எங்கிருந்து எடுத்தாளப்பட்டது என்ற மேற்குறிப்பைக் கொடுத்தாலே போதுமானது. அதை நாம் செய்துவிட்ட பின் உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருந்தால் வேலைகள்தாம் தடைபடும்.

chillsam Wrote on 12-07-2011 02:22:12:

சகோ.ஆண்ரூ பிரபுகுமார் அவர்களுடைய மனைவி டாக்டர் ஜெயராணி அவர்களும் சிறந்த ஊழியராவார்; தந்தை பெர்க்மான்ஸ் அவர்களுடன் ஆரம்ப காலத்தில் இணைந்து ஊழியம் செய்தவர்கள்;அவருடன் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

அவர்களுடைய தளத்தின் தொடுப்பு:

http://thejesusmission.org/index.php?option=com_contact&view=contact&id=1&Itemid=160
அற்புதம்:
ஆளையே மாத்திட்டீங்களே. அல்லது அவர் பெயரை மாத்திகிட்டாரா?

”துர் உபதேசங்கள்” புத்தக ஆசிரியரின் பெயர் ஆன்ரு பிரபுகுமார்
ஆனா டாக்டர்.ஜெயராணி அவர்களின் கணவர் பெயர் ஆன்ரூ தேவ்

ஜெயராணி அக்கா எங்க ஊர் காரங்க. :) தெரியாம கூட ஆள மாத்தாதீங்கப்பா....

Chillsam:

நண்பரே, நான் எழுதுவது சலிப்புண்டாக்குவதாகவும் நான் தடாலடியாக எழுதுவதாகவும் சொல்லுவீர்களே நீங்கள் எழுதுவதை சற்று கவனியுங்களேன்;நான் சொன்னது மிகமிக சாதாரணமான அடிப்படை ஒழுக்கம் சம்பந்தமான எளிமையான கருத்தாகும்;அதற்கு தாங்களும் கோல்வினும் கொடுக்கும் விளக்கம் மிகமிக நீண்டதாகவும் சத்தில்லாததாகவும் அடிப்படையற்றதாகவும் இருக்கிறது.

அற்புதம்:
// எனது கருத்தில் மாற்றமில்லை சகோ.சில்சாம். தேவனுடைய நோக்கத்திற்காக, அவரால் அருளப்படும் எழுத்துக்களை நாம் உரிமை கொண்டாடுவதுதான் காப்புரிமை சட்டமா? அப்படியென்றால் அவை மீறுவதற்கே. நாம் லாப நோக்கத்திற்காக பயன்படுத்தினால் மட்டுமே தவறு.//

Chillsam:

உங்கள் கருத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளவே வேண்டாம்; அப்போது தான் தவறானதும் முரண்பாடானதுமான கருத்து இன்னது என்பதை மற்றவர் அறியமுடியும்;காப்புரிமை என்பது ஒரு கருத்துக்கு சொந்தங் கொண்டாடுவதுடன் முடிகிறதில்லை; நான் வெளியிடும் குறிப்பிட்ட கருத்துக்கு பொறுப்பேற்றுக்கொள்வதிலும் இருக்கிறது;இது அரசாங்கமே ஏற்படுத்தியுள்ள உலகளாவிய ஒழுங்கு முறையாகும்; இது புத்தகத் துறைக்கு மாத்திரமல்ல,இசைத்துறைக்கும் பொருந்தும்; ஒரே கருத்தை பலரும் வெளியிடும்போது தேவையில்லாத குழப்பமுண்டாகாதிருக்கவே காப்புரிமை ஒழுங்கு உண்டானது; அதனை மீறுவோம் என்பது நாகரீக சமுதாயத்துக்கு நல்லதல்ல. வேதாகமமும் கூட ஆவியானவருடைய அகத்தூண்டலால் எழுதப்பட்டதாயினும் அதனை எழுதியது மனிதர்கள் தானே; அவர்களுடைய பெயரால் தானே அது வழங்கப்படுகிறது?

இரவுபகலாக உட்கார்ந்து ஒருவர் எழுதும் ஆராய்ச்சி புத்தகத்தை எப்படி இலவசமாகத் தரமுடியும், என்கிறீர்கள்; இலவசமாகத் தரப்படும் புத்தகங்களுக்கும் யாராவது சிலர் தியாகத்துடன் பணம் செலவு செய்திருக்கிறார்களே? கோல்வின் அவர்களுடைய அபிமான எழுத்தாளரான வசந்தகுமார் இலவசமாகவா புத்தகங்களை எழுதி தருகிறார்? வேதாகம கல்லூரிகளில் இலவசமாகவா சேர்த்துக்கொள்ளுகிறார்கள்?

இலவசம் எனப்படுவதும் உள்நோக்கத்துடன் கூடிய ஒரு வியாபாரமே.லாப நோக்கில்லாமல் பணிபுரிகிறார்கள் என்பதே ஒரு கவர்ச்சியாகவும் புகழ்ச்சியாகவும் மாறி நியாயமான வெகுமதியை விட அதிகமாகவே பணம் குவிகிறது; மேலும் இலவசமாக ஒரு பொருளைத் தரும்போது அதனை பலரும் மதிக்கிறதில்லை என்பதையும் தாங்கள் கவனிக்கவேண்டும். இலவசமாக அல்லது மலிவான விலையில் தரப்படுவதால் புறக்கணிக்கப்படும் புத்தகங்களில் பிரதான இடத்தில் இருப்பவற்றில் ஒன்று டெலிபோன் டைரக்டரி இன்னொன்று பைபிள்..!


அற்புதம்:
// பல ஆங்கில வேதாகமங்களில் காப்புரிமைச் சட்டம் குறிக்கப்பட்டிருக்கும். அப்படியெனில் அவற்றை பயன்படுத்தக் கூடாதா என்ன? எங்கிருந்து எடுத்தாளப்பட்டது என்ற மேற்குறிப்பைக் கொடுத்தாலே போதுமானது. அதை நாம் செய்துவிட்ட பின் உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருந்தால் வேலைகள்தாம் தடைபடும். //


ஒரு படைப்பாளி தனது படைப்பை இலவசமாகத் தருவதும் காப்புரிமை குறித்து பொருட்படுத்தாதிருப்பதும் அவருடைய பெருந்தன்மையல்லவா..? அதை அவர் செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களா,என்ன..? நீங்கள் படைப்பாளிக்கே அறிவுரை கூறுவது போலிருக்கிறதே..? இலவசமாக வழங்கப்படும் படைப்பும் கூட தகுந்த அனுமதிபெற்ற பிறகே பயன்படுத்தப்படவேண்டும்.இப்படியே விஜய் அவர்களுடைய கட்டுரைகளும் இணையதளத்தில் தவறானவர்களால் எடுத்தாளப்பட்டபோது அதற்காகவும் போராடினேன்.இன்றைக்கும் நீங்கள் சொல்லுவது போல ஆங்கிலத்தில் பல்வேறு மொழியாக்கங்கள் வந்துகொண்டிருக்கிறது;அவையனைத்தும் இலவசமல்ல; உதாரணத்துக்கு பிரபல வெர்ஷன் (Version) ஆன டேக்ஸ் (Dakes) பைபிள் இணையத்தில் இல்லை, தெரியுமா..?


அற்புதம்:
// ஆளையே மாத்திட்டீங்களே. அல்லது அவர் பெயரை மாத்திகிட்டாரா?

”துர் உபதேசங்கள்” புத்தக ஆசிரியரின் பெயர் ஆன்ரு பிரபுகுமார்

ஆனா டாக்டர்.ஜெயராணி அவர்களின் கணவர் பெயர் ஆன்ரூ தேவ்

ஜெயராணி அக்கா எங்க ஊர் காரங்க. :) தெரியாம கூட ஆள மாத்தாதீங்கப்பா....//


உங்களைப் போன்றவர்களுடன் -அதிலும் கோல்வின் போன்ற மெத்த படித்த பெரிய மனிதர்களுடன் மோதும்போது அவ்வளவாக படிப்பறிவில்லாத நான் அதிக எச்சரிக்கையாக அனைத்து தகவல்களையும் சேகரித்துக்கொண்டே காரியத்தில் இறங்குகிறேன்; உங்களிடமிருந்து தகுந்த தகவல்கள் கிடைக்காததால் இணையதளத்தில் அவரைக் குறித்த தகவல்களைத் தேடியெடுத்து இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்; நீங்களும் கூட தேவைப்பட்டால் அவருடன் தொடர்பு கொண்டிருக்கலாம்; ஜெயராணி அக்காவிடமே தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாமே; தவறான ஒரு செயலுக்கு இத்தனை வக்காலத்து நீங்கள் நியாயமான காரணத்தோடும் நட்புணர்வுடனும் சொன்ன ஒரு ஆலோனையைப் புறக்கணிக்கலாமா? கிறித்தவ சகோதரர்களிடையே ஒருங்கிணைப்பும் ஒருமித்த கருத்தும் இல்லை என்பதற்கு இந்த காரியமே நிரூபணமாக இருக்கிறது.

கோல்வின்:

// சகோ. அற்புதம் அவர்களே தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி. புத்தகம் தொடர்பான விபரங்களை தந்தமைக்கும் மிக்க நன்றி. ஆரம்பத்தில் நான் நூல் விபரங்களை தரத்தான் எண்ணியிருந்தேன். அந்நூலினை நூலகத்திலிருந்துதான் எடுத்துப் பயன்படுத்தினேன். சில பக்கங்களை மட்டும் பிரதி செய்து வைத்துள்ளேன். அதைத்தான் இங்கு பிரசுரித்தேன். சில பக்கங்களை மட்டும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தலாம். தவறில்லை என்பது என் கருத்து ஆயினும் காப்புரிமை சட்டத்தினையும் கவனத்திற் கொள்ள வேண்டும். நாம் எவற்றையும் தவறாக இந்நூலிலிருந்து கையாளவில்லை. நான் இஙகு பதிப்பதால் அவரின் நூலுக்கு விளம்பரமுண்டாகுமே தவிர நட்டம் ஏற்பட வாய்ப்பில்லை. சில நேரங்களில் ஆசிரியர்கள் இதுபோன்ற விடயங்களை கவனியாது விடுவதும் உண்டு.//


படைப்பாளி கண்டுங் காணாமல் இருக்குங் காரணத்தினால் இதுபோன்ற செயல்களை நியாயப்படுத்திட இயலாது; இது தவறான செயலா அல்லவா என்பதில் படைப்பாளியின் உணர்வுக்கும் உரிமைக்கும் மரியாதை தரவேண்டும்; முறைப்படியான அனுமதியில்லாமல் ஒரு குறிப்பிட்ட படைப்பின் எந்தவொரு பாகத்தையும் மறுபதிப்பு செய்வதே தவறு எனும்போது தவறான நோக்கத்தில் செய்யவில்லை என்பது மட்டும் எப்படி சரியாக இருக்கும்? இது தவறா சரியா என்பதை படைப்பாளி சொல்லட்டுமே..! இதனால் தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்று படைப்பாளி நினைத்திருந்தால் அதையும் அந்த குறிப்பிட்ட புத்தகத்திலேயே திறந்த அனுமதியாக அறிவிப்பு செய்திருப்பார்.

இதுபோன்ற வெற்று வாதங்களை மூச்சுபிடிக்கச் செய்ய‌ ஆயத்தமாக இருக்கும் சிலர் சத்தியத்தைவிட்டு விலகி தெய்வத்துவத்தை தூஷிக்கும் பன்றிகளிடம் "பகிரங்க மன்னிப்பு" கோருவார்கள்..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

rawangjohnson Wrote@Tcs on 11-07-2011 19:57:44:

துர் உபதேசத்திற்கும் கள்ள உபதேசத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.

துன்மார்ககமான உபதேசம் என்றால், ஒருவனை நெறி தவறச் செய்யும் உபதேசம். மது அருந்தும் பழக்கம் இல்லாத ஒருவனை மது உருந்த பழக்குவது துர் உபதேசம் எனலாம்.

கள்ள உபதேசம் என்றால், அடிப்படை மார்க்க உபதேசத்தைப் புரட்டிப் போட்டு, மக்களைக் குழப்புவது ஆகும். சகோ.கொல்வின் வழங்கியுள்ள எடுத்துக் காட்டும் உதாரணங்கள் யாவும் கள்ள உபதேசத்தைச் சார்ந்திருக்கின்றன என்று நம்புகிறேன்.

எனவே, இது தொடர்பாக விளக்கம் தேவை.



துருபதேசம் மற்றும் கள்ள உபதேசம் ஆகிய வார்த்தைகள் நேரடியாக தமிழ் வேதாகமத்தில் இருப்பது போலத் தெரியவில்லை; ஆனாலும் "துர்" என்ற வார்த்தையுடன் இணைந்த வார்த்தைகளும் (துர்க்கிரியை,துர்க்குணம்..) "கள்ள" என்ற வார்த்தையுடன் இணைந்த வார்த்தைகளும் (கள்ளப்போதகர்,கள்ளத்தீர்க்கதரிசிகள்) உண்டு.

இதன்படி "துர்" என்ற வார்த்தையின் பின்னணியில் ஈவில் (evil) எனும் ஆங்கில வார்த்தையும் "கள்ள" என்ற வார்த்தையின் பின்னணியில் ஃபால்ஸ் (false) எனும் ஆங்கில வார்த்தையும் இருக்கிறது; இதலிருந்து ஓரளவுக்கு பொருள் விளங்கும்; எப்படியெனில் தேவத்துவத்துக்கு எதிரான பிசாசின் போதகத்தை துருபதேசம் எனலாம்; ஏனெனில் பிசாசின் உபதேசம் என்ற வார்த்தை வேதத்தில் நேரடியாகவே இருக்கிறது;

  • I தீமோத்தேயு 4:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.


இனி எது பிசாசின் உபதேசம் என்று ஆராய்வது எளிதாக இருக்கும் என்றெண்ணுகிறேன்.

அதேபோல கள்ள உபதேசம் எனும் வார்த்தையும் வேதத்தில் இருப்பது போலத் தெரியவில்லை;ஆனால் "கள்ள" எனும் வார்த்தையானது ஃபால்ஸ் (false) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுவதால் அதிலிருந்து தவறான என்ற மாற்று வார்த்தையின் மூலம் பொருள் கொள்ளலாம்; இதனால் கள்ள உபதேசம் என்பதை தவறான உபதேசம் என்றும் சொல்லலாம்; தவறான உபதேசம் எது என்பதை சரியான உபதேசம் எது என்பதை அறிவதன் மூலமே அறிய இயலும் என்பது வெளிப்படை.

மேலும் "கள்ள" எனும் வார்த்தையின் ஆழத்தை நோக்கின் போலி என்றும் திருடப்பட்டது என்றும் அறியலாம்; இதன்படி திருடனான‌ பிசாசினால் பீடிக்கப்பட்ட மக்களில் சிலர் தாங்கள் முதலில் வஞ்சிக்கப்பட்டு அவனுடைய ஏவுதலால் ஏனையோரை வஞ்சிக்க அலைகிறார்கள்; அவர்கள் கள்ளர்களைப் போல பதிவிருந்து பிடிக்கிறார்கள்; எனவே இவர்களை துருபதேசக்காரர்கள் (துருபதேசக்காரர்கள் என்றும் சொன்னாலும் தவறில்லை..!) என்பதைக் காட்டிலும் கள்ள உபதேசக்காரர்கள் என்பதே சரியாக இருக்கும்; ஏனெனில் இங்கிருந்து திருடிச்சென்றதை லேபிள் மாற்றி சரக்கையும் மாற்றி வியாபாரம் செய்கிறார்கள்; ஒரிஜினல் கிறித்துவின் உபதேசமே.

chillsam Wrote on 11-07-2011 16:11:56:
arputham: சகோ.கோல்வின் உங்களின் அருமையான பதிவுக்கு நன்றி. நானும் கூட “துர் உபதேசங்கள்” புத்தகத்தை நம் தளத்தில் பதிக்கும்படி சமீபத்தில் ஒரு நூலகத்திருந்து இரவலாகப் பெற்றேன். ஆயினும் பதிக்க முடியவில்லை. உங்களின் முயற்சி அற்புதமானது.
Quote:
(இவ்வாக்கமானது சகோ. அன்ரு பிரபுக்குமார் அவர்கள் எழுதிய துர்உபதேசங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)

காப்புரிமை பெற்றுள்ள இந்த நூலின் ஆசிரியரிடம் எழுத்துப்பூர்வமான முறைப்படி அனுமதி பெற்றபிறகே அதனை இங்கு பதிக்கவேண்டும்; மற்றபடி நூலாசிரியருக்கு இதனால் உண்டாகும் இழப்பை நாம் ஈடுசெய்திடவேண்டும்; குறைந்தபட்சம் இந்த நூலாசிரியரின் விலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் புத்தகம் கிடைக்கும் இடங்களையும் அதன் விலையையும் குறிப்பிடுவது நல்லதொரு முன்மாதிரியாக இருக்கும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

9. மூலஉபதேசங்களை மாற்றுதல்
வேதாகமம் கூறியுள்ள உபதேசங்கள் அடிக்கடி மாறக்கூடிய உபதேசங்கள் அல்ல. அது என்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரே தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் துர்உபதேசக் கூட்டத்தோரோ தங்கள் செய்திகளையும் வியாக்கியானங்களையும், உபதேசங்களையும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் எவரும் மக்களை ஒரே நோக்கத்தற்காக வழி நடத்துவது கிடையாது மறுவாழ்க்கையின் நிச்சியம் இவர்கள் எல்லாரிடத்திலும் ஒரே விதமாக இல்லை. இவர்கள் ஒரு வெளிப்பாட்டிலிருந்து இன்னொரு வெளிப்பாட்டிற்கு அடிக்கடி தாவும வழக்கமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

யெகோவா சாட்சிகள் கூடடத்தார் ஆண்டவர் இயேசுவின் பகிரங்க வருகை 1874 இல் இருக்குமென அறிவித்தார்கள். அறிவித்தபடி நடக்கவில்லை. பல வருடங்களுக்கு முன் இக்கூட்டாத்தார் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இப்பொழுதோ அதை நிறுத்திவிட்டார்கள். முன்பெல்லாம் இக்கூட்டத்தாருக்கு பரலோகம் செல்லும் நம்பிக்கையிருந்தது. இப்பொழுதோ 1,44,000 பேர் மட்டுமே கிறிஸ்துவோடு செல்லுவார்கள் என்று கூறுகின்றனர்.

ஒரே கொள்கையும் ஒரே உபதேசமும் இப்படிப்பட்ட கூட்டத்தைச் சார்ந்த எவருக்கும் இல்லை. தலைவர்கள் மாறும்போது போதனைகளும் இவர்கள் காலத்திற்கேற்றவாறு தங்களையும் தங்கள் கொள்கைகளையும் மாற்றிக் கொளளக் கூடியவர்களாயிருக்கின்றனர்.

மோர்மன் சபையாரும் வெகு சாதாரணமாய் தங்கள் செய்தியை மாற்றிக் கொள்ளுகிறவர்கள். ஒரு செய்தியை அறிவிப்பார்கள். சில நாட்களுக்குப் பின் தாங்கள் அறிவித்தவைகளேயே மாற்றிக் கூறுவார்கள். அல்லது கைவிடுவார்கள். ஆகவே இவர்களும் இவர்களைப் பின்பற்றுவோரும் நிகழ்காலத்து விசுவாசமோ எதிர்காலத்து நம்பிக்கையோ இல்லாமல் காற்றில் அடிப்பட்டு அலையும் மேகம் போல் புறப்பட்ட இடம் தெரியாமலும் போய்ச் சேரும் இடம் அறியாமலும் இருக்கின்றனர்.

10. வலுவான தலைமைத்துவம்
துர்உபதேசக் இயக்கங்களின் ஸ்தாபகர்களும் அதனை முன்னின்று நடத்தும் தலைவர்களும் தங்களைப் பிரசித்தி பெற்ற தேவனுடைய அறிவிப்பார்களென்றும் தேவனுக்கும் மனிதருக்குமிடையே தோன்றிய அவதாரமென்றும் மக்களை நம்பவைக்கின்றனர். இவர்கள் தேவனுக்கு விசேஷித்தவர்களாகவும் தேவ வெளிப்பாடு பெற்றவர்களாகவும் இம்மக்களால் கருதப்படுகின்றனர். இவ்வியக்க தலைவர்கள் பல்வேறு திறமைகளில் கைத்தேர்ந்தவர்கள்.

இந்தத் தலைவர்கள் கூறும் அனைத்தையும் அவர்களுக்குக் கீழிருக்கும் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர்.இவர்களில் சிலர் தங்களையே மேசியாகவும் வெளிக்காட்டிக் கொள்வதால் வசதிபடைத்த மக்களும் இவர்களைப் பின்தொடர முன்வருகிறார்கள். ஒற்றுமைப்படுத்தும் சபை (Unification Church), அகில உலக வழி (The way Intrnational) உலகளாவிய தேவசபை (World Wide Church of God) போன்ற இயக்கங்களின் தலைவர்கள் இதற்கு உதாரணம்.

தலைவர்கள் தங்களின் வழி நடப்போருக்கு தங்களின் நம்பிக்கைகளையும் தங்களின் உபதேசங்களையும் வியாக்கியானங்களையும் சொல்லி அவர்களை அதன்படி நடக்க வைக்கிறார்கள். வேதத்தை தங்களுக்கேற்றற்போல படித்து அதற்கு சுயமாக விளக்கங்களையும் எழுதுகின்றனர். ஒருவேளை தங்கள் தலைவர் ஏதோ ஒன்றில் தவறிப் போய் விட்டாரானால் அதற்கும ஒரு நல்ல காரணம் காட்டி தலைவரின் தவறுகளை மூடி மறைத்து விடுகிறார்கள்.

இவ்விதத் தலைவர்களின் வீட்டிலும் அலுவலகங்களிலும் நடக்கும் காரியங்கள் வெளிஉலகிற்குத் தெரிவதில்லை. மிகப்பெரிய திடங்களெல்லாம் இரகசியமாகவே நடக்கும். இவர்களில் சிலர் அடிக்கடி தாங்கள் கூடும் இடங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை சுலபமாக இவர்கள் தங்கள் இரகசியங்களை வெளியிடுவதில்லை. இரகசிய திட்டங்களுக்குப் பின்னே அக்கூட்டத்தின் பணியாளர்கள் செயல்படுகிறார்கள். கடவுளின் பிள்ளைகள் (Childern of God) இயக்கம் இதற்கு ஓர் உதாரணம்


11. கிரியையினால் இரட்சிப்பு
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் என்கிறது தேவனுடைய வார்த்தை. ஆனால் எல்லா துர்உபதேசக் கூட்டங்களுமே இந்த வசனத்தை மறைத்து இவ்வசனத்தோடு ஏதாவது கூட்டியோ குறைத்தோ தவறுதலாகப் போதித்து வருகின்றன.

“கிருபையினால் இரட்சிப்பு“ என்ற சத்தியத்தை இவர்களில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வதில்லை. கிரியைகள் செய்வதே இரட்சிப்பு யாரையாவது பின்பற்றுதலே இரட்சிப்பு. ஞானஸ்நானம் எடுத்துவிட்டாலே இரட்சிப்பு. சுவிசேஷத்திற்கும் நியாயப்பிரமாணத்திற்கும் கீழ்ப்படிவதே இரட்சிப்பு என்றெல்லாம் சத்தியத்திற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.

ஹெர்பட் W. ஆம்ஸ்ராங் (Founder of the World Wide Church of God) என்பவர் “இரட்சிப்பு என்பது ஒரு தொடர் செயல்முறை. ஆனால் எந்தச் செயலும் செய்யாமல் இயேசுவை மட்டுமே ஏற்றுக் கொண்டால் போதுமானதொன்று இந்த உலகத்தின் தேவனானவன் உங்களையெல்லாம் வஞ்சித்து உங்கள் கண்களைக் குருடாக்கப் பார்க்கிறான். ... ஆனால் இதுவரை யாருமே இரட்சிக்கப்படவில்லையென்று வேதம் சொல்லுகிறது.” என்று தன் உபதேசத்தில் கூறுகிறார் (Herbert W. Armstrong, Why were you Born? p.11)

இரட்சிப்பு எதற்காகவென்றால் சரியான மனித வாழ்க்கை வாழவும் உரிமையோடும் செழிப்போடும் இந்த பூமியில் வாழ்வதற்காகவுமே.... உண்மையான, சரியான மதிப்புள்ள மனித வாழ்க்கை இப்போதும் இப்பூமியில் நமக்கு காத்திருக்கின்றது. என்று யெகோவா சாட்சிகள் கூட்டத்தார் கூறுகின்றனர். (Let God be True, 1952, p 114-116)

இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் கிருபையால், விசுவாசத்தால் மட்டுமே இரட்சிப்பு வருகின்றதென்பதை மறுக்கின்ற எவருமே இரட்சிக்கப்படாதவர் என்பதே பொருள். இரட்சிக்கப்படாதவர் எவருமே நரகம் செல்வர் என்பதே வேத போதனை. இயேசுவை மறுப்போர் அவரின் இரட்சிப்பை மறுப்போர். பரலோகத்தை இழப்பர் என்பது உறுதி.

12. கள்ளத் தீர்க்கதரிசனம்.
கள்ள உபதேச இயக்கங்களில் அதிகப்படியாக இடம் பெறுவது பொய் தீர்க்கதரிசனமே . இந்த இயக்கங்களின் தலைவர்கள் தங்களை தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாகவும் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றவர்களாகவும் சொல்லிக் கொள்கின்றனர். இவர்கள் உலகத்தில் நடக்கப் போகின்ற காரியங்களை முன்னறிவிக்கின்றனர். ஆனால் இவர்கள் முன்னறிவிக்கின்ற ஒன்றும் நடந்ததாகவே தெரியவில்லை. எந்த ஒரு தீர்க்கதரிசனமும் சொல்லியபடியே நடக்கவில்லையேல் அது பொய்த் தீர்க்கதரிசனம் தானே?

Charles T. Russell என்பவர் யெகோவா சாட்சிகள் கூட்டத்தின் ஸ்தாபகரும் முதல் தலைவருமாவார். இவர் தன்னை தேவனுடைய தீர்க்கதரிசயாக அழைத்துக் கொண்டார். அவரை தேவவெளிப்பாடு பெற்ற தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவர் பின்னால் சென்றனர். சார்ல்ஸ் ரசல் 1914 ம் ஆண்டு உலகம் முடிந்து விடும் என்று முன்னறிவித்தார். ஆனால் சொன்னவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. உலகமோ அப்படியே இருக்கிறது.

இப்படி அவர்கள் சொல்லும் தீர்க்கதரிசனம் நி்றைவேறுவதில்லை. இயேசுவின் இரண்டாம் வருகையை நாள், மாதம், வருடத்தோடு உரைத்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. உலகத்தின் முடிவையும் கூறுகிறார்கள். அப்படியும் நடப்பதில்லை. காரணம் இவர்கள் தங்கள் சொந்த ஏவுதலினால் வேதத்திற்குப் புறம்மாக தீரக்கதரிசனம் உரைத்தவர்கள். இவர்கள் கூறுவது நடவாதபடியால் இவர்களைக் கள்ளத் தீர்க்கதரிசிகள் என்றே அழைக்க வேண்டியிருக்கிறது.

13. வளமான பொருளாதாரம்
எந்த ஒரு துர்உபதேசக் கூட்டத்திற்கும் பணம் ஒரு பிரச்சினை அல்ல. போதுமான அல்லது தேவைக்கு மிஞ்சிய பணம் அவர்களுக்கிருக்கிறது. இவர்கள் பணத்தை வைத்து ஜனத்தைப் பிடிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். இந்த இயக்கங்கள் தங்கள் அங்கத்தினர்களை பணம் கொடுக்கும்படி கேட்பதால் எல்லோரும் தாராளமாக கொடுக்கின்றனர். தங்களுடைய சேமிப்புகளையும் வீடுகளையும் சொத்துக்களையும் இயக்கத்திற்கும் கொடுப்பதற்கும் அங்கத்தினர்கள் உள்ளனர்.

இயக்கத்திற்குப் பணத்தையும் பொருளையும் கொடுப்பவர்கள் தேவனுடைய ஊழியத்திற்காக கொடுப்பதாய் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இயக்கங்களின் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் நல்ல வசதியான சுபகோ வாழ்க்கையே வாழ்கின்றனர். ஒவ்வொருவருக்கும் வீடும், வாகனமும், இதரச் செலவுகளுக்குப் பணமும் கொடுக்கப்படுகின்றது. சிலருக்கு உணவு, உடை, உறைவிடம் கூட இலவசமாகக் கொடுக்கப்படுகின்றது.

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கின்றது. போதுமென்ற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகந்த ஆதாயம் என்ற வேதம் சொல்கிறது. ஆனால் .இவ்வித இயக்கங்களுக்குப் பண ஆசையும் பொருளாசையும், சுகபோகப்பிரியமும், வீண்ஆடம்பரமும் அதிகம். இந்தப் பூலோக வாழ்வை சிற்றின்பத்துடன் மற்ற உலக இன்பத்தோடும் அனுபவிக்கப் பணம் இவர்களுக்கு உதவுகின்றது. பலர் பணத்தின் மேல் ஆசை வைத்து பல இன்பஙக்ளையும் வசதிகளையும் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இவ்வியக்கங்களுடன் இணைகின்றனர். பணமில்லா ஏழைகளும் பணத்திற்காக இவ்வியக்கங்களில் சிக்கிவிடுவது பரிதாபத்திற்குரியது.

இவ்வித துர்உபதேசக் கூட்டத்தாரின் சொல்லும் செயலும் விசுவாச வாழ்விற்கு முரண்பாடாகவே இருக்கின்றன. இவர்கள் கூறும் புது சத்தியம் தவறான வியாக்கியானம் ஆகியவை ஆத்துமாக்களை பாதிக்கின்றது.

நல்ல ஆவிக்குரிய திருச்சபைகளை இவர்கள் புறக்கணிப்பதால் தவறான கோட்பாட்டிற்கும் போதனைக்கும் தங்கள் மக்களை வழிநடத்தசி் செல்கின்றனர். பாவத்தையும் பணத்தையும் சார்ந்து கொள்வதால் விசுவாசத்தை அப்பியாசிக்க முடியாது வாழ்கின்றனர். இவர்களின் கனிகளைக் கொண்டே இவர்களின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தேவசத்தியத்தை தலைகீழாக மாற்றும் பயங்கரமான ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து மற்ற உலக நாடுகளிலிருந்தும் வேகமாய் பரவிவரும் துர்வசனக் கூட்டங்களை ஒவ்வொரு கிறிஸ்தவனும் தெரிந்து கொள்ளாது போனால் ஆபத்து பயங்கரமாக இருக்கும். இக்கடைசி நாட்களில் சபை மக்கள் தங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு விழிப்பாயிருப்பது திருச்சபைக்கு மிக நல்லது.

துர்உபதேச இயக்கங்கள் மத அடிப்படை இயக்கங்கள். அதிலும் கிறிஸ்தவர்களோ சம்பந்தப்பட்டு வேதத்திற்கும் தேவ நியமங்களுக்கும் எதிராய்பேசும் இயக்கங்கள். வேதத்தை தவறாகக் கூறி கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைக் குழப்புவதால் விசுவாசிகள் இவற்றுக்கு விலக வேண்டியது அவசியமாகின்றது “வேறு சுவிசேஷத்தை“ சொல்லும் இவர்களின் தன்மைகள் எவைகள்? இந்தப் புகழ்வாய்ந்த போலி இயக்கங்களின் வெளிப்பாடுகள் எவைகள்? என்பதை விபரமாய் அறிந்து கொள்வது நலமாகும்.

வேறே சுவிசேஷம் (Different Gospel)
துர்வசனக் கூட்டத்தார் பொதுவாகவே அடிப்படை வசனத்திலிருந்து விலகி வேதத்தை பிரசங்கிப்பவர்கள். இவர்களின் செய்திகளில் “வேறே சுவிஷேசம் காணப்படுகின்றது. இதைப் பவுல் கலாத்தியருக்கு எழுதும்போது கூறியிருக்கிறார்.

“உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலா. 1: 6- 8 )

பவுல் கலாத்தியருக்கு எழுதின கடிதம் கி.பி. 55 இற்கும் 56 இற்கும் இடையேயுள்ள ஆண்டுகளில் எழுதப்பட்டது. அப்படியானால் முதல் நூற்றாண்டின் மையப்பகுதியிலேயே வேறொரு சுவிசேஷம் சபைக்குள் வந்துவிட்டது. அப்போஸ்தலரால் சொல்லப்பட்ட சுவிசேஷமேயன்றி வேறே சுவிசேஷம் இல்லை. அப்படி ஒரு சுவிசேஷத்தை வானத்திலிருந்து ஒரு தூதன் வந்து சொன்னாலும் அவன் சபிக்கப்பட்டவன் என்கிறார் பவுல்.

துர்உபதேசக்கூட்டம் மக்களைக் களங்கப்படுத்தி அவர்கள் மனதைக் கெடுத்தும் குழப்பியும் தங்கள் பக்கம் இழுக்கும்போது கிருபையை விட்டு விலகுகிறவர்கள் அந்தக் கூட்டங்களோடு சேர்ந்து விடுகின்றனர். எனவே பவுல் “நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.“ (அப். 20;29-30) அவர்கள் சீஷரகளை இழுத்துக் கொள்ள மாறுபாடானவைகளை போதிப்பார்கள். என்ன போதிப்பார்கள் வேறே சுவிசேஷத்தைப் போதிப்பார்கள்.

சுவிசேஷம் என்பது எது? தேவகுமாரனான இயேசுக்கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, அவரது அற்புதமான ஊழியம், அவரது சிலுவை மரணம் அவரின் உண்மையான உயிர்தெழுதல், அவரின் இரண்டாம் வருகை அவரோடு பரலோகத்தில் நித்தியவாழ்வு இவைகள் அனைத்தும் அடங்கியதே சுவிசேஷம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்த வேறே சுவிசேஷம் என்பது என்ன? சரியான சுவிசேஷத்தில் வரும் மூல உபதேசங்களை மாற்றி, திரி்த்து வேறுபடுத்தி இயேசுவோடு சம்பந்தப்படுத்திக் கூறுவதே வேறே சுவிசேஷம்.


இன்றும் உலகில் கன்னிப்பிறப்பை மறுதலிக்கும் கிறிஸ்தவர்களும் உயிர்தெழுதலை விசுவசியாத கல்விமான்களும் இருக்கிறார்கள் இவர்களெல்லாம் அந்த வேறே சுவிசேஷேத்திற்கு செவி சாய்ப்பவர்கள். கன்னிப்பிறப்பே சுவிசேஷேத்தின் வேர். இதையும் அடியோடு மறுதலிப்பவர்கள். வேறே சுவிசேஷக் கூட்டத்தார். அவர்களின் துர்உபதேச இயக்கங்களும். இதை வெகுவாய் மறுதலிக்கின்றன.

2. வேறே இயேசு (Different Jesus)
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய .இரண்டாம் கடிதத்தில் இவைகளைத் தெளிவாக்குகின்றார்.“எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.“ (2 (கொரி. 11.4)

பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில், நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசு, நீங்கள் பெற்றிராத வேறே ஆவி, நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வெறொரு சுவிசேஷம் என்று எழுதியிருக்கிறார். வேறே இயேசு, வேறே ஆவி, வேறே சுவிசேஷம் ஆகிய இம்மூன்றும் துர்உபதேசக் கூட்டத்தினரால் போதிக்கப்படுபவை.

வேறே இயேசு என்றால் வேதம் கூறும் இயேவை வேதத்தின்படி கூறாது வேறுவிதமாய் கூறுவதாகும். இயேசு வந்த நோக்கம் முழுவதையும் மாற்றி வேறுவிதமாய் போதிப்பதாகும். இயேசு செய்த ஊழியத்தை வேறு விதமாய் சித்தரிப்பதாகும்.

யெகோவா சாட்சி கூட்டத்தார் (Jehovah's Witnesses) இயேசு தேவனுடைய நித்திய குமாரனல்ல. அவர் தேவனுடைய முதல் சிருஷ்டி பிரதான தூதனான மிகாவேலைப் போல் இயேசுவும் ஒருவர் என்கிறனர்.
மோமர்மன் சபையார் (Mormon Church) இயேசுவை தெய்வீகமானவராக ஏற்றுக் கொள்வதில்லை. பல கடவுள்களி்ல் இருவரும் ஒருவர் வானலோகத் தகப்பனுக்கும் வானலோகத் தாய்க்கும் பாலுறவு முறையில் உற்பவித்துப் பிறந்த ஆவியின் முதல் குழந்தை (First Sprit Child) இயேசு லுசிபருக்கு ஆவியின் சகோதரன் (Sprit Brother of Lucifer) என்கிறனர்.

இப்படி இயேசுவை வேறுவிதங்களில் சித்தரித்து அவரை முழுவதும் மாறுபட்ட இயேசுவாக கூறுவது இவர்களின் கொள்கைகளாகும். பொதுவாக அனைத்து துர்உபதேசக் இயக்கங்களிலும் இவ்விதக் கொள்கைகள் இருக்கின்றன. அவை இயக்கங்களுக்கு இயக்கம் வேறுபட்டும் இருக்கின்றன.

3. வேறே ஆவி. (Different Spirit)
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 2 தேவஆவியை நீங்கள் எதினால் அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.“ என்று யோவான் தனது முதல் நிருபத்தில் மூல அறிவிப்பைக் கூறியிருக்கின்றார். ( 1 யோவான் 4:1-3)

இயேசுவை அறிக்கை பண்ணாத வேறே ஆவிகள் உலகத்தில் கிரியை செய்கின்றன. அவைகள் அந்திக் கிறிஸ்துவின் ஆவிகள் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வித ஆவிகள் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகி்ன்றன. அந்திக்கிறிஸ்துவும் அந்த ஆவியையே பெற்று இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுவான்.

சபைக்கு இருக்கும் ஐந்து வகை ஊழியங்களும் தேவ ஆவியின் அழைப்பைப் பொறுத்தே அமைகின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. கள்ளத் தீரக்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள மேய்ப்பர்கள், கள்ளப் போதகர்கள், கள்ள சுவிசேஷகர்கள் (வேறே சுவிசேஷத்தை பிரசங்கிப்பவர்கள்) ஆகிய இவர்கள் அனைவரும் சபைக்கு எதிரான தவறான ஊழியர்கள் மட்டுமல்ல, தவறான ஆவியையுடைய பொய் ஊழியர்களும் கூட.

4. புதிய சத்தியம் (New Truth)
அனைத்து கள்ள உபதேசக் இயக்கங்களும் தங்களுக்குப் புது வெளிப்பாட்டைக் கடவுள் கொடுத்தார் என்றே கூறுகின்றன. புது அந்த உபதேச செய்திகளை தேவனிடமிருந்தும் பிரசித்திப் பெற்ற தேவமனிதர்களிடமிருந்தும் பெற்றுக் கொண்டனர் என்றும் சொல்லுகின்றனர். ஆனால் அந்தச் செய்திகள் மிகவும் மாறுபாடானதாகவும் சந்தேகப் படக்கூடியதாகவும் சிந்தித்துப் பார்த்தால் நாம் கிரகிக்க் கூடாத அளவு விகற்பமானதாகவும் இருக்கின்றன.

சன் மங் மூன் (Sun Myung Moon) என்பவர் மூனிஸ் (Moonies) எனும் இயக்கத்தின் ஸ்தாபகர் “கிறிஸ்துவும் கிறிஸ்துவின் கூட்டத்தைச் சாரந்தவர்களும் தங்களுடைய சேவைகளை முற்றும் முடிய செய்யாது பாதியிலே விட்டுச் சென்று விட்டார்கள். இயேசு விட்டுச் சென்ற சேவை செய்து முடிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மூன் கூறினார். ஒற்றுமைப்படுத்தும் சபை (Unification Church) என்னும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடவுள் இதற்கு முன் வெளிப்படுத்தாத உண்மைகளையும், ஆழ்ந்த சத்தியங்களையும் போதகர் மூன் வெளிப்படுத்தினார் என்று கூறுகின்றனர்.

இயேசுவின் இருதயத்தையும் இயேசுவின் வேதனையும் இயேசுவின் நம்பிக்கையையும் எங்களால் மாத்திரமே அறிந்து புரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். (Rev. Moon, The Way of the World, Holy Sprit) (Ass'n for the Unification of World Christianity Vol VIII, No 4, April 1976)

கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளாய் கிறிஸ்தவம் எவ்விதத் தெளிவும் வெளிப்பாடுமின்றிக் கிடந்த்து.. ஆனால் கடவுள் ஜூனியர் ஜேசப் ஸ்மித்துக்கு (Joseph Smith Jr.) கொடுத்த “புதிய சத்தியத்தால்“ சுவிசேஷம் இதுவரை இழந்துபோனதையெல்லாம் தக்க வைத்துக் கொண்டது. இன்றோ ஐக்கியப்படுத்தும் சபைக்கு தேவனிடமிருந்து தொடர்ச்சியாக பதிய தெய்வீக வெளிப்பாட்டைக் கொடுக்கும் ஜீவனுள்ள தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த உலகத்திற்கு புதிய “சத்தியங்களை“ சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் என்று மோர்மன் சபையார் (Mormon Churcch) கூறுகிறார்கள்.

இவ்வித இயக்கங்கள் எல்லாம் வேத அடிப்படையும் ஒழுங்கும் கிரமுமின்றி, அவ்வப்போது புதிய சத்தியங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அவர்களது சொந்தக் கருத்துக்களும் சுய வெளிப்பாடுகளும், வசன ஆதாரமற்று பிரசங்கிக்கப்படுகின்றன. கற்பனையான வெளிப்பாடுகளை வசனத்தோடு ஒப்பிட்டு தங்கள் இயக்கக் கொள்கைகளாக இவர்கள் வெளியிடுகிறார்கள்.

5. தவறான வியாக்கியானம் (Wrong Interpreation)
சில துர்உபதேச இயக்கங்கள் வேதத்திலிருந்து பல புதிய வியாக்கியானங்களைக் கொடுகின்றன. ஆவிக்குரிய வட்டாரத்தினர் ஒத்துக் கொள்ள முடியாத, தேவ மனிதர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் வசனத்தை வியாக்கியானம் செய்கின்றனர். அவர்கள் சொல்லுவதே உறுதியானதும், .இறுதியானதுமாக நினைத்து, சத்தியத்தின் கருத்துக்களை புறம்பே தள்ளுகின்றனர்.

ஆவிக்குரிய திருச்சபைகளும் ஆவிக்குரிய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட சபைகளும் ஏற்றுக் கொண்டிருக்கும் மூல உபதேசங்களை இக்கூட்டத்தினர் தவறென காண்கிறார்கள். தேவ வசனத்தை மற்றவர்களெல்லாம் தவறாகப் படித்து புரிந்த கொண்டதையும் இவர்கள் மாத்திரமே சரியாய் படித்து போதிப்பதாயும் உரைக்கின்றனர்.

ஹெர்பட் ஆம்ஸ்ட்ராங் (Herbert W. Armstrong) என்பவர் “இன்றைய பிரபலமான முக்கிய சபைகள் போதிப்பதும் செயல்படுவதும் எதுவுமே வேதஅடிப்படையானதல்ல. இவர்கள் எதையோ படித்து சபைகளையோ போதனை செய்து கொண்டிருக்கிறார்கள்“. என்று கூறுகிறார். *The Auto Biography of Herbert W. Armstrong. Pasadena, Ambassador College Press 1967, 0.264, 298) சாதாரணமாக வேத அடிப்படைக் கருத்துக்களுக்கு தவறான விளக்கம் கொடுப்பதால் இவர்கள் துர்உபதேசக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களென்று அறிந்த கொள்ள முடியும். குறிப்பாக சில இறையியல் கல்லூரிப் பாடங்களும் இதற்கு உதவி செய்கின்றன. இவ்விதக் கள்ள ஊழியர்கள் தேவ விசுவாசத்தைக் கெடுக்க முயற்சி செய்யும் ஊழியத்தைச் செய்து வருகின்றனர்.

6. திருச்சபைகளைப் புறக்கணித்தல்
துர்உபதேச இயக்கங்கள் சமநிலையுள்ள பாரம்பரிய திருச்சபைகளையும் ஆவிக்குரிய திருச்சபைகளையும் அறவே வெறுக்கின்றன. நமது ஆலய ஆராதனை ஒழுங்கு முறைகளையும் குற்றஞ்சாட்டுகின்றன. மறுபிறப்பு. ஞானஸ்நானம் ஆவியின் நிறைவு, தொழுகை, வரங்கள் இவைகள் முக்கியமற்றவை எனக்கூறி அப்புறப்படுதுகின்றனர். பாரம்பரிய திருச்சபைகளையும் அவர்களது கூட்டத்தினர் வெறுக்கின்றனர்.

ஆவிக்குரிய திருச்சபைகள் அனைத்தும் தேவ திட்டத்தோடும் அங்கீகாரத்தோடும் நடக்கின்றன. எந்தத் திருச்சபையும் ஆவியானவரின் அங்கீகாரம், தேவமக்களின் அனுமதி ஆகிய இரண்டையும் பெறும்போது சரியான சபைக்குரிய இடத்தைப் பெறுகின்றது.

துர்உபதேசக் கூட்டத்தினர் இப்படிப்பட்ட எந்த சபையையும் ஏற்க மறுக்கின்றார்கள். காரணம் சொல்லும் புதுமையான மாறுபாடான உபதேசத்திற்கு நமது சபைகள் இசைவதில்லை. அவர்களின் கருத்துக்களைப் பறம்பே தள்ளி சபை மக்களைப் பாதுகாப்பதால் சரியான சபைகள் மீது இக்கூட்டத்தினர் கோபமும் பொறாமையும் கொள்கின்றனர்.

தேவனை ஆராதித்து தொழுகை நடத்துதலை இவர்கள் விரும்புவதில்லை. ஆனால் இவர்கள் நடத்தும் தொழுகை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. தொழுகையில் நல்ல பாடல்களையோ தேவனை மகிழ்விக்கும் கீதங்களையோ சேர்ப்பதில்லை. ஆராதனையில் இவர்களுக்கு வேத செய்தியைக் கொடுக்கும் நபர் நல்ல பரிசுத்தவனாக இருக்கமாட்டார். சிலரது ஆராதனையில் அப்பம் பிட்கும் கர்த்தருடைய பந்தி என்பது கிடையாது, ஆவியின் நிறைவு, அந்நிய பாஷை பேசுதல, ஆவிக்குரிய வரங்களின் கிரியைகள் ஆகியவற்றை துர்உபதேசக் கூட்டத்தினர் ஒருபோதும் மதிப்பதில்லை.

எனவே இப்படிப்பட்ட நியமங்களைக் கடைப்பிடிக்கும் சபைகளைப் பார்த்து இவர்கள் குறை கூறுகிறார்கள். அந்த சபைகளுக்கு விரோதமாய் செயல்படுகிறார்கள். சபையின் ஆட்களை வஞ்சித்து தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளகிறார்கள். எதைச் செய்தாலும் திரித்துவ சபைகளுக்கு எதிராகவே செய்கின்றார்கள். அதே நேரத்தில் இவர்களின் ஆராதனைகள் பெரும்பாலும் அந்தரங்கமான இடங்களிலேயே நடத்தப்படுகின்றன. அங்கத்தினரைத் தவிர மற்றவர்களை அத்தனை எளிதில் இவர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை.

7. இரட்டைப் பேச்சு
சில துர்உபதேசக் கூட்ங்களில் இரட்டைப் பேச்சுக் நிறைந்திருக்கின்றன. அவர்கள் நம்மோடு பேசுவது ஒன்று. ஆனால் மனதில் வைத்துக் கொண்டிருக்கும் கருத்து வேறொன்று. இரட்டைச் செய்திகளும் இரட்டைக் கருத்துக்களும் ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்றன. உண்மையான சத்தியத்தில், ஆழ்ந்த சரியான நம்பிக்கையுள்ளவர்கள் போல வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் விசுவாத்தின் எவ்வித அடிப்படை அம்சமும் உள்ளத்தில் இருப்பதில்லை.

தங்களை நல்ல கிறிஸ்தவர்களாய்க் காட்டிக் கொண்டு மக்களுக்கு முன்விசுவாசிகள் போல் நடிக்கிறார்கள். மக்கள் அவர்களோடு நெருங்கிப் பழகிய பின்னர்தான் அவர்கள் உள்ளத்தில் கொண்டுள்ள கருத்துக்களையும் தவறான விசுவாச நம்பிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

மோர்மன் சபையினர் இதற்கு ஒரு உதாரணம்

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசுகிறிஸ்துசபை (The Church if Jesus Christ of Latter-day Saints) தனது செய்தி ஒன்றில் “அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை நாங்கள் விசவாசிக்கிறோம்“ என்று எழுதியிருந்தார்கள். இந்த அறிக்கையைப் படிக்கம் மக்கள். இது கிறிஸ்தவ மக்கள் பங்கேற்கு்ம் திருச்சபைகளில் ஒன்று என நினைக்கத் தோன்றும் ஆனால் உண்மையென்னவென்றால் அவர்கள் சொல்லும் செய்திகளின் மறுபக்கம் விசவாசத் துரோகம் அடங்கியிருக்கிறது.

இவ்வித இயக்கங்களின் உறுப்பினர்கள் தங்களையும் கிறிஸ்தவர்கள் என அழைத்துகு் கொள்ளத் தயங்குவதில்லை. கிறிஸ்தவர்கள் போல் பேசிப் பழகி கடைசியில் தாங்கள் சார்ந்து வாழும் உத்தேச இயக்கங்களோடு மற்றவர்களையு் இணைத்து விடுகிறார்கள்.

8. தேவ தன்மைகளை மறுத்தல்
பிதா, குமாரன், பரிசுத்தாவி என்னம மூன்று பேரும் ஒருவரே.இவர்கள் தனித்தனி காலக்கட்டங்களில் செயல்பட்டவர்கள். பழைய ஏற்பாட்டுக் காலம் பிதாவின் காலம். புதிய ஏற்பாட்டுக் காலம் இயேசு கிறிஸ்துவின் காலம். நாம் வாழ்நது கொண்டிருக்கு இந்தக் காலமோ ஆவியானவரின் காலம். ஆனால் இம்மூவரும் ஒருவரே என்று கிறிஸ்தவர்கள் நம்புவது போல இவ்வியக்கத்தார் நம்புவதில்லை தேவனது இந்த திரித்துவ தெய்வத் தன்மைகளை அடியோடு மறுக்கின்றனர். யெகோவா சாட்சிகள் தேவனுடைய வார்த்தையில் திரித்துவத்திற்கான எவ்வித ஆதாரங்களுமில்லை என்கின்றனர். (Charles Russell, Studies in the Scriptures, V, Brooklyn, Indernational Bible Students 1912, p54)

கிறிஸ்தவம் தோன்றின காலத்தில் கடவுள் மூன்று விதங்களில் செயல்படுகிறார் என்ற கருத்து இருந்தது. ஆனால் இதே கருத்து கிறிஸ்தவம் தோன்றிய நாட்களில் இருந்த பழம் பெரும் மதங்களிலும் இருந்தது. அந்த மதங்கள் கடவுள் மூன்று தன்மைகளிலிருந்தும் அதற்கு மேலும் செயல்படுகிறார் என்று கூறின. பாவிலோனியர் இவ்வித மூன்றில் ஒன்று (Three in one) எனும் தன்மையைக் கொண்ட கடவுளை வழிபட்டனர். அந்நாட்களில் தான் இக்கொள்கை நவீன விசுவாசிகளின் சின்னமாகிவிட்டது.“ என்று உலகளாவிய வழி (The Way international) எனும் கூட்டத்தார். திரித்துவத்தைக் குறித்து கூறுகின்றனர். Jesus Christ is not God, Wierwile, New Knowville, Ohio)

(வளரும்)

(இவ்வாக்கமானது சகோ. அன்ரு பிரபுக்குமார் அவர்கள் எழுதிய துர்உபதேசங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard