அடடா... கொஞ்சநாள் இந்த பக்கம் வரலை, அதுக்குள்ளே இவ்வளவு விஷயம் பேசி இருக்கீங்களே...
மேலும், சகோதரி கோல்டா, இதை பிராண சிகிச்சை, ரெய்கி முதலியன பற்றி விவாதிக்க ஆரம்பித்தார், இப்போ அது யோகா, தியானம் என்று போய்கொண்டிருக்கிறது.
பிராண சிகிச்சை
ஒரு காலத்தில் இது கோவையில் மிக பிரபலமாய் இருந்தது. அதுவும், தியானம், யோகாசனம் போன்றவற்றை கடைபிடிப்பவர்கள் மத்தியில். நானும் இந்த பைத்தியத்தில் ஒரு காலத்தில் இருந்தவன்தான் (இப்போது முழுமையாக வெளிவர ஆண்டவர் அருளினார்). பிலிப்பைன்சை சேர்ந்த மாஸ்டர்.சோவா கோக் சுய் அவர்கள் இதில் மிக பிரபலம். இவர்தான் இதை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதில் இருந்தார். நான் இதை எனது பதினெட்டாம் வயதில் கற்றேன். கோவையில் பூமார்கட் பக்கம், சமரச சன்மார்க்க சங்கத்தில் இந்த பிராண சிகிச்சையாலர்களை பார்க்கலாம்.
இது தவிர நான் ரெய்கி மாஸ்டர் லெவல் கற்றேன். முறையாக பலப்பல ஆசனங்கள் கற்றேன். (மகேஷ் யோகியின்) ஆழ்நிலை தியானம், வேதாத்த்ரியின் எளிய குண்டலினி யோகம், இன்னும் பல யோகங்களையும் கற்றேன்.
சொந்த அனுபத்தில் சொல்கிறேன் நண்பர்களே, இந்த சாத்தானிய பயிற்சிகளில் நாம், நமது உடலை பலவித அவைகளுக்கு ஒப்பு கொடுக்கிறோம்.
ரெய்கி (மாஸ்டர் லெவல் ) கற்றிந்தால், உங்களுக்கே தெரியும் பல ஆவிகளை உங்கள் உடலுக்குள் வருவதை அனுமதிப்பதின் மூலமே, அந்த சுகமாக்கும் வல்லமையை பெறுகிறார்கள்.
ரட்சிக்கப்பட்டு, இன்று யாராவது வியாதியஸ்தர்களுக்கு நான் ஜெபிக்கும்போது, அந்த (ரெய்கி) ஆவிகள், இந்த முறை ரெய்க்கியை உபோயோகப்படுத்தி அவரை குணப்படுத்தலாமே என்று என்னை கேட்பதுபோல் இருக்கும்.
முத்ராவிதானம் கற்றவர், யோகா முத்திரைகளின் மூலங்களை அறிந்தவர், யோகாசனத்தை வெறும் உடற்ப்பயிற்சி என்று கூறமாட்டார். ஒவ்வொரு முத்திரையும், ஒவ்வொரு தேவதைகளை (ஆவிகளை) அழிக்கும் முறைகள்.
ஈசாக்கும், யாகொப்பும் செய்த தியானமும், இந்தியாவில் கற்றுகொடுக்கப்படும் தியானமும் ஒன்றா என்று நம் நண்பர்கள் தங்களை கேட்டுகொள்வார்கலாக
சாத்தான் மனிதனிடமிருந்து நன்மையான யாவற்றையும் திருடிக்கொண்டிருக்கிறான். நாம் அதை அவன் கையில் பார்க்கும்போது அது அவனுடையது என எண்ணி ஒதுங்கிக்கொண்டிருக்கிறோம். அது எப்படியாவது போகட்டும். இழந்துபோன ஜீவனை மீட்க இயேசுவே வழியாக வந்தார். அந்த ஒரு வழியே போதுமானதாயிருக்கும்போது வேறு வழி எதற்கு!!!!!!!!!
விஷம் என்று தெரிந்து குடித்தாலும், தெரியாமல் குடித்தாலும், விளைவு ஒன்றுதான். அது போல்தான் யோகாவும். நல்ல உடற்பயிற்சி முறை என்று செய்ய ஆரம்பித்து விட்டோம் என்றால் பிசாசு விரித்த கண்ணியில் சிக்கி விட்டோம் என்று தான் அர்த்தம். மனந்திரும்ப வேண்டியது அவசியம்.
--
In my 2006 article "Christian Yoga? C'mon!" I explained why this is wrong thinking:
"Professor Tiwari is an authority on classical yoga. He believes that yoga cannot be separated from its spiritual center. "The simple, immutable fact," he says, "is that yoga originated from the Vedic or Hindu culture. Its techniques were not adopted by Hinduism, but originated from it." These facts need to be unequivocally stated in light of some of the things being written to the contrary by yoga teachers. The effort to separate yoga from Hinduism must be challenged because it runs counter to the fundamental principles upon which yoga itself is premised, the yamas (restraints) and niyamas (observances). These ethical tenets and religious practices are the first two limbs of the eight-limbed ashtanga yoga system which also includes asana (postures), pranayama (breath control), pratyahara (sense withdrawal), dharana (concentration), dhyana (meditation) and samadhi (contemplation/Self Realization). Efforts to separate yoga from its spiritual center reveal ignorance of the goal of yoga." (Emphasis added)
If the above doesn't convince you, perhaps this will:
"What is Yoga?" asked "Integral Yoga" pioneer Sri Chinmoy, "Yoga is the language of God. If we wish to speak to God, we have to learn His language. What is Yoga? Yoga is that which discloses God's secret. If we wish to know God's secret, we have to launch into the path of Yoga.
What is Yoga? Yoga is the Breath of God. If we wish to see through God's Eye and feel through His Heart, if we wish to live in God's Dream and know God's Reality, if we wish to possess the Breath of God, and finally if we wish to become God Himself, Yoga will beckon us. (Online source)
**// ஜெபிக்க அமரும்போதெல்லாம் தேவ பிரசன்னத்தை உணர்ந்து தேவனோடு ஐக்கியமாகி ஜெபிக்க ஆரம்பித்துவிடுகிறேன் என்று தாங்களால் கூற இயலுமா? நான் கேட்டது சிலவேளைகளில் மட்டுமல்ல. எப்போதும்.!!! //**
கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே உங்கள் முதல் கேள்வியிலேயே இரண்டாவது கேள்விக்கு பதில் இருக்கிறது. கேள்வி வாக்கியத்தை நேர்மறை எதிர்மறை செய்தி வாக்கியமாக்குறேன் படித்து உங்களிடமிருந்தே விடையை எடுத்துக் கொள்ளுங்கள்
நேர்மறை செய்தி வாக்கியம்: ஜெபிக்க அமரும் போதெல்லாம் கருத்தூண்றி அன்புசெலுத்தி முழுமனதோடு ஜெபித்தால் தேவபிரசன்னத்தில் தேவனோடு ஐக்கியமாகி எப்போதுமே ஜெபிக்கமுடியும்
ஆரம்பிப்பதைப்பற்றி.
//நான் டைபாய்டு வந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் மருந்தை நிறுத்திவிட்டு என்ன ஆசனம் செய்தால் குணமடையலாம்?
என் நண்பன் புகை ஊதிக்கொண்டு தெருத்தெருவாக நடந்து கொண்டே இருக்கிறான் என்ன ஆசனம் செய்தால் அவன் புகை நிறுத்தி குணமாவான்?//
முறையாக யோகா பயிற்சியெடுப்பவனுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகமாயிருக்கும். தன் உடல் நலனில் அக்கரையுள்ளவன் தான் யோகா செய்வான். புகைக்கு அடிமையாக மாட்டான்.
பாருங்கள் ஆண்டவருடைய அன்பைப்பற்றியும் கிருபையைப் பற்றியும் சிலுவை தியாகத்தைப் பற்றியும் மேன்மை பாராட்டவேண்டிய நான் யோகாவைப் பற்றியும் மருத்துவத்தைப் பற்றியும் (இதிலொன்றிலும் மேன்மையில்லை என்று அறிந்து விட்டுவிட்ட நான்) மேன்மை பாராட்டிக்கொண்டிருக்கும்படியாக ஆகிவிட்டது. என்னை எல்லா விதங்களிலும் நலமாய் குறைவின்றி நடத்தும் என் தகப்பன் இயேசு என்னை மன்னிப்பாராக!!! எல்லா உண்மைகளையும் சரிவிகிதத்தில் ஆராயும் ஞானமும் கிருபையும் பரத்திலிருந்து உண்டாவதாக; ஆமென்!!!
உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது (சங்கீதம் 109:24);
இவர்கள் எதற்காக முழங்காலில் நின்றார்கள் தூங்காமல் இருக்கவா?
இது எல்லாவற்றிற்கும் மேலாக ஓரிடத்தில் "முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்",(ஏசாயா 45:23) என்று தேவனே சொல்லியிருக்கிறாரே யாரும் தன் முன்னால் தூங்கக் கூடாது என்பதற்காகவா அப்படி சொன்னார்?
மேற்கண்ட வசனங்களுக்கும் முழங்காலில் நிற்பதற்கும் சம்மந்தமேயில்லை. முழங்கால் பகுதி பலவீனமடையும்போது நேராக நிற்க முடியாது என்பதைக் குறிக்கும் வசன்ங்கள். வசனங்களை புரிந்து வாசிக்கவேண்டும் சகோதரரே.
//நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு(எபேசியர் 3:15), //
இந்த வசனத்தின்படி நானும் அத்க நேரம் முழங்காலில் நின்று ஜெபிப்பவன் தான்.
//நான் டைபாய்டு வந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் மருந்தை நிறுத்திவிட்டு என்ன ஆசனம் செய்தால் குணமடையலாம்?//
மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடக்கூடாது. நான் எழுதியுள்ளவற்றை எல்லாம் மறுபடியும் வாசித்துப்பாருங்களேன்.
**// (கருத்தூன்றி ஆண்டவரில் அன்பு செலுத்தி முழுமனதோடு ஆராதிக்காமல்) வெறும் உதட்டளவில் ஜெபிக்க இயலுமா? //**
**// ஜெபிக்க அமரும்போதெல்லாம் தேவ பிரசன்னத்தை உணர்ந்து தேவனோடு ஐக்கியமாகி ஜெபிக்க ஆரம்பித்துவிடுகிறேன் என்று தாங்களால் கூற இயலுமா? நான் கேட்டது சிலவேளைகளில் மட்டுமல்ல. எப்போதும்.!!! //**
கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே உங்கள் முதல் கேள்வியிலேயே இரண்டாவது கேள்விக்கு பதில் இருக்கிறது. கேள்வி வாக்கியத்தை நேர்மறை எதிர்மறை செய்தி வாக்கியமாக்குறேன் படித்து உங்களிடமிருந்தே விடையை எடுத்துக் கொள்ளுங்கள்
நேர்மறை செய்தி வாக்கியம்: ஜெபிக்க அமரும் போதெல்லாம் கருத்தூண்றி அன்புசெலுத்தி முழுமனதோடு ஜெபித்தால் தேவபிரசன்னத்தில் தேவனோடு ஐக்கியமாகி எப்போதுமே ஜெபிக்கமுடியும்
எதிர்மறை: ஜெபிக்க அமரும்போது கருத்தில்லாமல் அன்பில்லாமல் அரைமனதோடு ஜெபித்தால் தேவபிரசன்னத்தை உணரமுடியாமல் வெறும் உதட்டளவில்தான் ஜெபிக்க முடியும்.
ஒருவன் ஜெபிக்கும் போது தன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கிக் கூப்பிட்டால் அவனுக்கு வெளியறங்கமான பலன் கிடைக்கும், ஆகவே ஒருவர் ஜெபிப்பதை வெளியரங்க கோலமாக வெளியில் சொல்ல முடியாது, தேவன் அவருக்கு அளிக்கும் வெளியரங்கமான பலன்களின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.
**// மருந்தை உபயோகிப்பவர்கள் மாற்றுமருந்தாக ஆசனங்களை பயன்படுத்தலாமா என்பது தான் விவாதம். அதற்கு பயன்படுத்தலாம் என்பதே என் கருத்து. //**
நான் டைபாய்டு வந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் மருந்தை நிறுத்திவிட்டு என்ன ஆசனம் செய்தால் குணமடையலாம்?
என் நண்பன் புகை ஊதிக்கொண்டு தெருத்தெருவாக நடந்து கொண்டே இருக்கிறான் என்ன ஆசனம் செய்தால் அவன் புகை நிறுத்தி குணமாவான்?
உங்களைப்போலவே நோய்களை ஆசனம் மூலம் குணப்படுத்தலாம் என்று சொன்ன பாபா ராம்தேவ் 2009 ஆம் ஆண்டு அதை மத்திய சுகாதார அமைப்பிடம் நிரூபிக்க தவறியது ஏன் அவரும் அறைகுறையா?
**// ஒரு விஷயத்தை அரைகுறையாய் தெரிந்து வைத்துக்கொண்டு அதை குறைசொல்லக்கூடாது என்பதுதான் என்னுடைய வாதம். //**
நல்லது நான் ஆண்டவருடைய காரியங்களைத் தவிர வேறு எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை, அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.
**// ஏன் முழங்காலில் நிற்க வேண்டும், தூங்காமல் இருக்கதான். //**
உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது(சங்கீதம் 109:24);
நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு...(எபேசியர் 3:15),
இவர்கள் எதற்காக முழங்காலில் நின்றார்கள் தூங்காமல் இருக்கவா?
இது எல்லாவற்றிற்கும் மேலாக ஓரிடத்தில் "முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்", (ஏசாயா 45:23) என்று தேவனே சொல்லியிருக்கிறாரே யாரும் தன் முன்னால் தூங்கக் கூடாது என்பதற்காகவா அப்படி சொன்னார்?
Oxygen மனித உடலுக்குள் சற்று அதிகமாக செலுத்தபடின் அது அவன் உடலை சீக்கிரம் புதுப்பிப்பதாக, இதையே பிரயாணமம் என்ற பெயரில் அவனின் மகிமைக்காக பயன்படுத்துகிறான்.
தேவன் தந்த ஜீவ சுவாசத்தை சரியான அளவில் உள்ளிளுப்பது தவறு என்றால் நான் வேறு என்ன சொல்வது.!!! தேவன் நியாயமாய் அனுபவிக்கத் தந்தவற்றை தொடாதே தீண்டாதே ருசிபாராதே என்று சொல்லி தடுப்பதும் மனிதனை பெலவீனமாக்குவதும் பிசாசின் தந்திரம். உண்மையில் நாம் பிசாசுக்குரியது என்று ஒதுக்கும் பல காரியங்கள் ஆண்டவர் நமக்கு தந்த நன்மைகள். நன்மையான எந்த ஈவும் பரத்திலிருந்து உண்டாகின்றன. ஆவியின் வரங்களையும் கனிகளையும் பெற்ற தேவனுடைய பிள்ளைகள் பலர் சரியான உணவு எடுக்காமலும் உடற்பயிற்சியின்றியும் உடல் நலம் குறைந்து தேவன் அவர்களை உருவாக்கி அபிஷேகித்த நோக்கம் நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளனர். சிலர் மரித்துமுள்ளனர். புசிப்பது பாவம், மூச்சு அதிகமாய் இழுப்பது பாவம், உடலை நீட்டி இழுத்துக்கொள்வது பாவம் என கூறி உடலை அசைக்காமல் வைத்திருந்தால் சீக்கிரத்தில் நோயுற்று தேவன் உருவாக்கிய நோக்கம் நிறைவேற்றாமல் அழியவேண்டிவரும். அப்போதுதானே பிசாசின் (நம்மை முடக்கவேண்டும் என்ற) நோக்கம் நிறைவேறும்!!!
விசுவாசம் இருந்தால் பிசாசின் அந்த நோக்கத்தை முறியடிக்கலாம் என்பது உண்மைதான்
ஆனால் உணவை தேவன் எதற்கு ஏற்படுத்தியிருக்கிறார்?
மனிதன் நிலத்தை பண்படுத்தி சாப்பிட்டு வாழத்தேவையான காரியங்களை மனித உடலில் வைத்திருக்கிறார். ஆனால் எந்த உடல் வேலையும் செய்யாமல் வாழ்ந்தால் உடல் ஆரோக்கியம் கெடும்.
விருப்பமே இல்லாத ஒன்றை செய்யும் போதுதான் மனது அலைபாயும். அப்படியானால் ஜெபிப்பதற்கு யோகாவின் உதவியை நாடும் தங்களுக்கு தேவனோடு உறவாடுவது எப்படிப்பட்ட உறவாக இருக்கிறது என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டால் நல்லது
நான் எழுதியுள்ளவற்றை நன்றாக ஒருமுறைகூட வாசித்துப்பாருங்கள் சகோதரரே!!! நான் யோகா செய்வதில்லை என்றே கூறியிருக்கிறேன். யோகா மூலம் கடவுளை அடையலாம் என்ற கருத்தைதான் முதலிலிருந்து மறுக்கிறேன்.
சிலர் யோகா மூலம் கடவுளை அடைய முயற்சிக்கிறார்கள் என்பதற்காக யோகாவையே தவறு என கூறுவதைத்தான் மறுக்கிறேன்.
தாங்கள் தவறான இடத்தில் தவறான நோக்கத்தோடு கற்பிக்குமிடத்தில் க்ற்கும்படி சென்றிருக்கிறீர்கள்.
//அதிகமாய் கல்வி கற்றால் விஞ்ஞானியாகி அணுகுண்டை கண்டுபிடித்து அதன்மூலம் உலகை அழித்துவிடுவோம் எனவே கல்வி கற்பது பாவமாகும்!!!//
மேலும் ஆசன பயிற்சிகள் உடலுக்கு; தியானம் மனதுக்கு.
//தெய்வீகம் என்பது இவை எல்லாவற்றையும் விட மேலானது. ஆவியினாலே மாமிசத்தின் கிரியைகளை அழிப்பது யோகா தியானம் எல்லாவற்றையும் விட மேலானது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்//
தாங்கள் ஆண்டவரை தியானிக்கிறேன் என்கிறீர்கள். தாங்கள் யாரை தியானிக்கிறீர்கள் என்பதுதான் இங்கே முக்கியமாகிறது. எதையோ தியானித்துவிட்டு அமைதியில்லை என்பவர்கள் மெய்யான ஆண்டவரை தியானித்தால், வசனத்தை தியானித்தால் மன அமைதிகிட்டும். அஞ்ஞானிகள் தியானிக்கிறார்கள் என்பதற்காக நாமும் தியானிக்காமல் (கருத்தூன்றி ஆண்டவரில் அன்பு செலுத்தி முழுமனதோடு ஆராதிக்காமல்) வெறும் உதட்டளவில் ஜெபிக்க இயலுமா?
நான் தனிமையில் நடந்து சென்றுகொண்டே ஆண்டவரை தியானித்து ஆராதித்து செல்லும்போது பரிசுத்தாவினின் நிரப்புதலை பெற்றேன். எனவே ஆராதிக்க முழங்கால் தேவையில்லை. எந்த சூழ்நிலையிலும் (பாத்ரூமில்கூட) ஆண்டவரை தியானிக்கவும் ஆராதிக்கவும் முடியும்.
மருந்தை உபயோகிப்பவர்கள் மாற்றுமருந்தாக ஆசனங்களை பயன்படுத்தலாமா என்பது தான் விவாதம். அதற்கு பயன்படுத்தலாம் என்பதே என் கருத்து. மற்றபடி நான் மருந்து எடுத்துக்கொள்வதில்லை என்றும் முன்பே கூறியிருக்கிறேன்.
ஒரு விஷயத்தை அரைகுறையாய் தெரிந்து வைத்துக்கொண்டு அதை குறைசொல்லக்கூடாது என்பதுதான் என்னுடைய வாதம். ஆசனங்களையும் தியானத்தையும் ஒன்றாய் நினைப்பதால் தான் இந்த குழப்பம்.
முழங்காலில் நிற்பது தாழ்மையை குறிக்கிறது என்பதால்த்தான் அப்படி நிற்கிறோம் என்பது சரிதான். அது (மற்றவர்களுக்கு) மனதை ஒருமுகப்படுத்தும் முக்கியமான ஆசனம் என்பதற்காய் அதை தவிர்த்துவிடுவோமோ?
தாழ்மையை குறிக்க சாஷ்டாங்கமாய் பணிதல், பாதத்தில் விழுதல் தரைமட்டும் குனிதல் இவையெல்லாம் வேதத்தில் உண்டு. கலைமுதல் மாலைவரை மோசேயைப்போல படுத்துகிடந்தால் தூங்கிவிடுவோம். படுத்துகிடத்தல் முழங்காலில் நிற்பதைவிட அதிக தாழ்மையை குறிக்குமே; பின் ஏன் முழங்காலில் நிற்க வேண்டும், தூங்காமல் இருக்கதான்.
இறுதியாக ஒரு கேள்வி சகோதரரே: தாங்கள் சென்று ஜெபிக்க அமரும்போதெல்லாம் தேவ பிரசன்னத்தை உணர்ந்து தேவனோடு ஐக்கியமாகி ஜெபிக்க ஆரம்பித்துவிடுகிறேன் என்று தாங்களால் கூற இயலுமா? நான் கேட்டது சிலவேளைகளில் மட்டுமல்ல. எப்போதும்.!!!
குறிப்பு: அப்படி இந்த தளத்தில் வருகிற யாரேனும் இருந்தால் எனக்கு சொல்லுங்களேன். அவர்களிடம் நான் கற்றுக்கொள்ள வாஞ்சையாயிருக்கிறேன்.!!!
உங்கள் நோக்கம் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டுமெனில், பரிசுத்த ஆவியாரை நேசித்து அழைக்கும் போது அவர் நம்மை அவருடையகுணநலங்களால் நிரப்புகிறார். கலாத்தியர் 5 - 22,23 ன் படி ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமானம் ஒன்றுமில்லை. இதை என் அனுபவத்திலிருந்தே கூறுகிறேன். பிசாசு எப்போதும் தந்திரக்காரனாகவே உள்ளான். நன்மையானதை தருவதானாலும் அவைகளை வெறுக்க இயேசு தாம் சோதிக்கப்பட்ட போது நமக்கு கற்பித்திருகிறார். பிசாசு தான் விரும்பினாலும் முற்றும் நன்மையான எதையும் தர அவனால் இயலாது. ஏனெனில் அவன் மனித கொலைபாதகனாகவே அவன் உள்ளான். உடற்பயிற்சி நல்லதே, அதை யோகாவில் புகுத்தி, தியானத்தை இனைத்தது பிசாசின் தந்திரமே. மேலும் எங்கோ வாசித்த ஞாபகம் எனக்கு உண்டு, Oxygen மனித உடலுக்குள் சற்று அதிகமாக செலுத்தபடின் அது அவன் உடலை சீக்கிரம் புதுப்பிப்பதாக, இதையே பிரயாணமம் என்ற பெயரில் அவனின் மகிமைக்காக பயன்படுத்துகிறான். நமக்கு இம்மானுவேல் என்ற நாமமே சகலத்தையும் அடையும் திறவுகோலாக கொடுக்கபட்டிருக்கிறது.
யோகா என்பது ஜிம்னாஸ்டிக்ஸ் கலையின் மெதுவான வடிவம். அது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் மூச்சை சரியான அளவில் உபயோகிக்கவும் மூளைக்கு தேவையான அளவு ஆக்ஸிஜனை கொடுக்கவும் பயன்படும் நல்ல உடற்பயிற்சி. இது மனதை ஒருநிலைப் படுத்தவும் நரம்புகளை பலப்படுத்தவும் செய்கிறது. தேவயற்ற கொழுப்பை நீக்கி மனதை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிற ஒரு நல்ல பயிற்சி.
நம்மவர்களுக்கு தான் உடல் கட்டுப்பாடோ, மன கட்டுப்பாடோ தேவையே இல்லையே.???????????!!!!!!!!!!!!!!
ஒன்றையும் அனுபவித்து தெரிந்துகொள்ளாமல் கருத்து சொல்லாதிருப்பது நலம். செத்தால் தான் சுடுகாடு தெரியும் என்பார்கள்.
அதற்கு யோகா மட்டும் தான் ஒரே தீர்வா? இளம் வெய்யிலில் காலையில் சில கிலோமீட்டர்களை வேகமாக நடக்கலாம். ஜிம்மிற்கு போகலாம். கார்போ ஹைட்ரேட் உணவுகளைக் குறைத்து காய்கறி பழங்களை எடுத்துக் கொண்டு உடலைப் பேணலாம். இதெல்லாம் செய்யாதவர்கள் இன்று குறைவு
யோகாவை நான் அறிந்து கொள்ளாமல் பேசவில்லை, கற்றிருக்கிறேன். அதில் தேடியிருக்கிறேன். ஆனால் எனக்கு சுடுகாடுதான் தெரிந்தது. ஆம் என்னுடைய வெறுமைக்கு யோகா தீணிபோடவில்லை, மாறாக வெறுமை அதிகமாகி அது என்னை தற்கொலைக்குத் தான் தூண்டியது
யோகா மனம் சார்ந்த நோய்களுக்கு மருந்தில்லை என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் வியாபாரிகள் அது மருந்து என்று சொல்லி விற்கிறார்கள். பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவை என்று வேதம் சொல்லுகிறது, அரோக்கியமானவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்த உதவுவதாக கருதப்படும் ஒன்று எப்படி மருந்தாக இருக்கமுடியும்? அவர்களின் மனதை ஒருமுகப்படுத்துவது எளிமையல்லவா?
இதை 99.9 மதிப்பென் எடுத்தால் எங்கள் பள்ளியில் சேரலாம். என்று வடிகட்டி சேர்த்துக் கொண்டு எங்கள் பள்ளியில் எல்லா மாணாக்கர்களும் சிறந்த மதிப்பென் பெற்று வெளிவருகிறார்கள் அவ்வளவு சிறந்த பயிற்சி கொடுக்கிறோம் என்று பொய்யான விளம்பரம் செய்வதற்கு ஒப்பானதாக கருதுகிறேன்.
சுருக்கமாகச் சொன்னால் இது வியாபார உத்தி ஆட்டுமூத்திரத்தை, இளநீராக விற்க செய்யப்படும் தந்திரம்
சுயநீதி உதவாதென்பதால் துன்மார்க்கமாய் நடக்கலாமா? அதுபோலதான் உடற்பயிற்சியும். நாய், பூனை, பசு மற்றும் மிருகங்கள் கூட தங்கள் உடலை நெட்டிமுறித்து யோகா செய்கின்றன. நெட்டிமுறித்தல் ஒரு யோகாசனம். முழங்காலில் நிற்றல் ஒரு யோகாசனம். முழங்காலில் நிற்பதால் மனம் அதிகமாக ஒருநிலைப்படுகிறது. நேராக நிற்றல் ஒரு யோகாசனம். கொட்டாவி ஏன் விடுகிறோம் தெரியுமா? மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் குறையும்போது தானாகவே மூளை செயல்படுகிறது.
அவைகள் யோகா செய்வது தானும் கடவுளாகவேண்டும் என்ற நோக்கத்திலா? ஆனால் மனிதன் கண்டுபிடித்த யோகாவின் அடிப்படை நோக்கம் என்ன? என்பதை முதலாவது புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஆக்சிஜன் குறையும் போது கொட்டாவி விட்டு அதிகமான காற்றை வாய்வழியாக இழுக்க மூளை தூண்டும் அது ஆசனமா என்ன? முழங்காலில் நிற்பதால் மனது ஒருநிலைப்படுவதில்லை., முழங்காலில் நின்று ஜெபிப்பதே அதனால் தான் என்று நீங்கள் கற்பனை செய்து கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள் அது தாழ்மையின் அடையாளம். உண்மையான மனம் ஒருநிலைப்படுதல் நேசிப்பதில் இருக்கிறது. உண்மையாக தேவனை நேசிப்பவர்களுக்கு அவரோடு உறவாடுவதற்கு மற்றவைகளான ஆசனப்பயிற்சிகள் தேவையில்லை.
விருப்பமே இல்லாத ஒன்றை செய்யும் போதுதான் மனது அலைபாயும். அப்படியானால் ஜெபிப்பதற்கு யோகாவின் உதவியை நாடும் தங்களுக்கு தேவனோடு உறவாடுவது எப்படிப்பட்ட உறவாக இருக்கிறது என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டால் நல்லது
மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தால் யாராலும் சரியாக ஜெபிக்க முடியாது. மனம் அலைபாய்வதை தடுத்து மனதை ஒருமுகப்படுத்த யோகா பயன்படும். மட்டுமல்ல தேவன் தந்த ஜீவ சுவாசத்தை தாராளமாய் பயன்படுத்தினால் (மூச்சுபயிற்சியின் மூலம் ஆஸ்துமா, சக்கரைவியாதி, இரத்தகொதிப்பு போன்ற) பல வியாதிபயங்களிலிருந்து விடுபடலாம்.
இப்படிப்பட்ட வஞ்சகத்தில் சிக்கி விடுதலையானவர்களில் நானும் ஒருவன், தியானத்தை ஒரு மனிதன் பயிற்சி நிலையத்துக்குப் போய் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உடலை வளைத்து பயிற்சி செய்தால் தான் மனம் கட்டுப்படும் என்பதும் இல்லை.
ஒரு செயலைச் செய்யும் போது அந்த செயலை மட்டுமே குறித்து சிந்தித்தல் தான் தியானம். அப்போது தான் அந்த செயல் சிறப்பாக இருக்கும். இன்று சில வியாபாரிகள் இதை விற்கிறார்கள். அவர்களது விளம்பரத்தில் சோரம்போனவர்கள் அதைப் புகழுகிறார்கள்.
வெறுமை என்னை வாட்டியபோது சரி யோகா கற்றாலாவது சமாதாணம் ஏற்படுமா என்று முயன்றேன். ஆசனங்கள் செய்ததற்கு பின் ஒரெ வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லி அதன் மீதே கவனத்தை திருப்ப சொல்லி பயிற்றுவித்தார்கள். ஆனால் செயற்கை தனமான அந்த செயல்கள் ஒரு சடங்காக இருந்ததே தவிர ஒரு பிரயோஜனமும் இல்லை.
சச்சின் டென்டுல்கரின் மனைவி ஒரு முறை அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பினாராம். அதற்கு சச்சின் கொஞ்சம் இருங்கள் பேடு கட்டிக்கொண்டு வந்து விடுகிறேன் என்று தூக்கத்தில் பதிலலித்தாராம்.
இப்படி உடல் பொருள் ஆவியை ஊற்றி கருத்தூண்றி செய்யும் ஒன்றில் நாம் ஈடுபட்டால் அதுவே தியானம், நாம் எதை அதிகம் விரும்புகிறோமோ? எதில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறோமோ அதைச் செய்யும் போது நிச்சயம் கவனம் சிதறாது அது ஏன் ஆண்டவரோடு உறவாடுவதாக இருக்கக் கூடாது?
காதலியோடு பேசுவதற்கும் கொஞ்சுவதற்கும் போய் யோக கற்க வேண்டுமா? அல்லது பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டுமா? அப்படித்தான் இதுவும்,
யோகா என்பது கடவுள் ஸ்தானத்தை அடையும் வழி என்பதே அதன் மையக்கருத்து..
நாம் கடவுளாக வேண்டாமே...!! ஆதம் ஏமாந்தது போதுமே..!!
தேவசாயலாய் தேவனுடைய ரூபத்தின்படி சிருஷ்டிக்கப்பட்டோம் நாம். ஆதாம் இழந்துபோன அந்த சாயலை நாம் மறுபடியும் அடையும்படியாகத் தான் தேவன் மனிதசாயலானார். நம்மை ம்றுபடியும் தமது மகிமையின் சாயலாக்கும்படியாய் அவர் தம் ஜீவனைக் கொடுத்தார். நாம் மகிமையின் மேல் மகிமையடைந்து அவருடைய சாயலாக ஒரே வழி இயேசுவே. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என அவர் கூறியிருப்பதால் அவர் சாயலாய் நாம் மாற யோகாவோ, தியானமோ, சுய நீதிமார்க்கமோ மற்ற எந்தகாரியங்களும் உதவாது என்பதுதான் உண்மை.
சுயநீதி உதவாதென்பதால் துன்மார்க்கமாய் நடக்கலாமா? அதுபோலதான் உடற்பயிற்சியும். நாய், பூனை, பசு மற்றும் மிருகங்கள் கூட தங்கள் உடலை நெட்டிமுறித்து யோகா செய்கின்றன. நெட்டிமுறித்தல் ஒரு யோகாசனம். முழங்காலில் நிற்றல் ஒரு யோகாசனம். முழங்காலில் நிற்பதால் மனம் அதிகமாக ஒருநிலைப்படுகிறது. நேராக நிற்றல் ஒரு யோகாசனம். கொட்டாவி ஏன் விடுகிறோம் தெரியுமா? மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் குறையும்போது தானாகவே மூளை செயல்படுகிறது.
//முப்பத்து முக்கோடி தெய்வங்களைக் கொண்ட இந்து மதக் கருத்தின் படி//
அந்த காலத்தில் ஜனத்தொகை முப்பத்து மூன்று கோடி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வம் என்ற கருத்திலேயே இந்த சொல் வழக்கில் வந்தது. எனவே மருத்துவரின் மேற்கண்ட கருத்து தவறானது.
//உண்மை தெய்வத்தின் அருளால் வியாதிகள் அகலும் போது, தீய சக்திகளின் வல்லமையினாலும் வியாதிகள் விலகும் என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அது ஆச்சரியமல்ல; ஏனெனில், சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே //
உண்மையில் தெய்வத்தின் அருளால் மட்டுமே வியாதிகள் அகலுகின்றன. திருடன் கொல்லவும் அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் ..... வந்தேன் என்றார் உண்மை தெய்வம். தனக்குத்தானே பிரிந்திருக்கிற எந்த இராஜ்யமும் பாழாய் போகும். சாத்தான் கொண்டுவருகிற பிரச்சினைகளை சாத்தானே தீர்த்தால் எப்படி அவனுடைய இராஜ்யம் நிலை நிற்கும்? தேவனுடைய சிருஷ்டிகளை நாசம் பண்ணுவதே சாத்தானின் வேலை.
//சுவிசேசத்தை பிரசங்கியுங்கள்... வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள்... இதுவே பன்னிரு சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் வரிசை(மத். 10:7,8). சரீர நலனில் காட்டும் அக்கறையைக் காட்டிலும் ஆன்மீக நலனே மிகவும் முக்கியம். ஏனெனில், சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது//
இந்த மருத்துவர் சொல்வதை பார்த்தால் மருந்து எடுப்பதே பாவமாகிறது. மட்டுமல்ல சரிவிகித உணவு கூட சரீர முயற்சியே. மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வார்த்தையினாலும் பிழைப்பான் என்றும் வேதம் கூறுகிறதே!!!
ஒன்றை மாத்திரம் புரிந்துகொள்ளுவோம்: மனிதன் தேவ சாயலாக அவருடைய ரூபத்தின்படியே சிருஷ்டிக்கப்பட்டவன். இயல்பாய் மனிதனுக்குள் இருக்கும் சக்தியே (தெய்வ சக்தியோ அல்லது பிசாசின் சக்தியோ இல்லாமலே) அலாதியானது. மனிதன் தன் மூளையறிவின் 10% திற்குளாகவே பயன்படுத்துகிறான். சில சூழ்நிலைகளில் (அட்ரீனல் சுரப்பியின் உதவியால்) இயல்பை விட பல மடங்கு பலமடைந்து நினைத்துப் பார்க்கவியலாத காரியங்கள் செய்கிறான். மனித உடலில் உள்ள சுரப்பிகளை சரியான விதத்தில் செயல்படச் செய்வது யோகா.
தெய்வீகம் என்பது இவை எல்லாவற்றையும் விட மேலானது. ஆவியினாலே மாமிசத்தின் கிரியைகளை அழிப்பது யோகா தியானம் எல்லாவற்றையும் விட மேலானது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.
குறிப்பு: ஒரு நல்ல நாட்டுவத்தியர், மந்திரவாதியின் பேரனான எனக்கு; யோகா காரியங்களில் பழக்கமுடைய எனக்கு அதைவிட இயேசுவோடு வாழும் வாழ்வு மேலானதென தெரிந்ததால் அவரைப் பற்றிக்கொண்டிருக்கிறேன். எனவே நான் யோகா செய்வதில்லை மட்டுமல்ல குடும்பமாக மருந்தை உபயோகிப்பதுமில்லை. இயேசுவே எல்லாவற்றுக்கும் போதுமானவராக இருக்கிறார். ஆனால் எப்படி உணவு உண்பது பாவமில்லையோ அதுபோல மருந்து எடுப்பதும், யோகா செய்வதும் பாவமல்ல என்பதும் நிச்சயம். அது ஒவ்வொருவருடைய விசுவாசத்தின் அளவைப் பொறுத்தது.
யோகா என்பது கடவுள் ஸ்தானத்தை அடையும் வழி என்பதே அதன் மையக்கருத்து..
நாம் கடவுளாக வேண்டாமே...!! ஆதம் ஏமாந்தது போதுமே..!!
கண் தெரியாத நால்வர் யானையை தடவிப் பார்த்த கதையாக ஏதாவது கருத்தை சொல்லாதீர்கள். தயவு செய்து நன்றாக தெரிந்த விஷயத்தில் மட்டும் எதிர்மறை கருத்தை சொல்ல முயலுங்கள்.
குறிப்பு: யானை கதை வேண்டுமானால் கேளுங்கள் சொல்லப்படும்