ஆலோசனைக்கு நன்றி சகோதரி, தற்போது நான் எந்தவிதமான கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில்லை, வாசிப்பது வேதம் மாத்திரமே, அதில் கருத்தூன்றி வாசித்தாலே ஆண்டவர் அனேக காரியங்களை கற்றுத்தருகிறார்.ஊழியர்களை hero worship செய்து சிலாகித்த காலங்கள் கடந்து போய்விட்டன. மற்றபடி, இருண்ட இந்த உலகத்தில் ஓரடி மட்டும் என் முன் ஆண்டவர் காட்டவே ஆசிக்கிறேன்.
கடைசிக் காலத்தில் கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்பது இதுதான்.
எல்லாவற்றையும், யாரையும், எவரையும் சோதித்துப் பார்த்தால் மிகவும் அவசியம் இக்காலத்தில்.
அறிவுரைக்கு நன்றி. ஆவிக்குரிய கண் கொண்டு பார்த்தால் தான் தெரியும் - இக்காலத்திற்கென்று ஆண்டவர் எழுப்பியதுதான் ஏஞ்சல் டிவியும் அதன் இரண்டு தீர்க்கதரிசிகளும் என்று.
எனவே, ஏஞ்சல் டிவி பார்த்து பயனடையுங்கள். ஆண்டவர் வெளிப்படுத்தும் காரியங்களைக் கேளுங்கள்.
I am very much surprised to see Rick Warren with this agenda and colour. I had a great respect for him and the book which he wrote "Purpose driven life". I was shocked to see this.
Sis Golda, please consider the fact that men of God, many of them will surprise us with such hypocrisy and no one is perfect. I have observed your immense goodwill and affinity to Sadhu. Please trust only in the teachings of Christ and I advise you not to get carried away by whims and fancies of people. This is just an advise out of Goodwill and I am not to criticise you
சமாதானத்தின் போர்வையில் , உலக மதங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை கடைசிக்காலத்தில் பிசாசு உண்டாக்குவான் என்பது நாம் அறிந்ததே.
கிறிஸ்தவர்களும் , இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று போதிக்கும் வஞ்சிக்கும் கிறிஸ்தவ ஊழியக்காரர்களில் முக்கியமானவர்:ரிக் வாரன்(Rick Warren).
Purpose Driven Life என்ற பாப்புலரான புத்தகத்தை எழுதியவர். இவர் அமெரிக்காவின் கலிஃஃபோர்னியாவின் சேடில்பேக் சபை என்ற சபையின் நிறுவனர் மற்றும் போதகர். P.E.A.C.E என்ற திட்டம் தீட்டி உலகத்தை அமைதிப் பாதையில்(?) கொண்டு செல்வதே இவர் விருப்பம். யார் யாரெல்லாம் இணைந்து செயல்படுவோம் என்று சொல்கிறார்களோ, அவ்ர்களுடன் சேர்ந்து கொள்வார்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பதவியேற்ற விழாவில் குரானின் சொல்லப்பட்ட இயேசுவின் நாமமான ஈசா வின் பெயரை சொல்லி ஜெபித்தவர். குரானின் இயேசுவும், நம் வேதத்தின் நாயகரான இயேசு கிறிஸ்துவும் முற்றிலும் வேறானவர்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 21 நாள் தானியேல் உணவு முறை என்ற திட்டத்தை சபை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, புதுயுக (New Age) கொள்கையாளர்களை அழைத்து, சில உணவு பழக்க வ்ழக்கங்களை சபையாருக்குக் கற்றுக் கொடுத்தவர். கிறிஸ்துவுக்கும், பேலியாளுக்கும் சம்பந்தமில்லை என்ற வ்சனத்தை மறந்து அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள தயங்காதவர்.கடைசிக் காலத்தில் கள்ள கிறிஸ்துக்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி அனேகரை வஞ்சிப்பார்கள் என்று வேதம் சொல்வது நம் கண் முன் நடந்து கொண்டிருக்கிறதைத்தான் பார்க்கிறோம்.
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரான டோனி பிளேரும் (Tony Blair) உலக மதங்களை இணைத்து உலக சமாதானம் உண்டாக பாடுபடும் அந்தி கிறிஸ்துவின் ஆவியை உடையவர். இவர் Anglican (புராடஸ்டண்ட்) மதத்திலிருந்து, கத்தோலிக்கராக மதம் மாறிக் கொண்டவர்.(மரியாளை, தேவ தூதர்களை வணங்கும், போப்பை கனப்படுத்தும் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்களே அல்ல). ரிக் வாரனும், டோனி பிளேரும் இணைந்து செயல்பட முயற்சிக்கிறார்கள்.