Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூடப்பட்ட திரிக்கு ( யெகோவாவின் சாட்சிகள்) தாமதமாக அனுப்பப்படும் செய்தி...!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
RE: மூடப்பட்ட திரிக்கு ( யெகோவாவின் சாட்சிகள்) தாமதமாக அனுப்பப்படும் செய்தி...!
Permalink  
 


suncauvery wrote:

எமது சாட்சி மற்றவருக்கு உதவுமா...? என்பது தெரியவில்லை.


 கண்டிப்பாக உங்கள் சாட்சி மற்றவர்களுக்கு உதவும். அந்த இடத்தில் இருபவர்களுக்கு (atleast any one) கூட இது மிகவும் உதவும் என்று நான் நினைக்கிறேன்

suncauvery wrote:


ஆயினும் அன்பரே, உமக்கு கைமாறாக, நீர் சொன்னப்படி செய்ய, ஓர் சிறு கால அவகாசத்தை எமது நண்பர் எடுத்துக் கொள்கிறார். ( தாமதிப்பதற்கு வருந்துகிறோம்).


 தாமதித்தாலும் அந்த சாட்சியை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

 



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
Permalink  
 

ஐயோ Brother. இது வேண்டாம் என்று தான், அந்த திரிக்கு விலகியிருந்தோம். கடைசியில் எழுதச் சொல்கிறீரே....! 
எமது நண்பரின் உதவியுடன் தான் இந்த தளத்திற்குள் நுழைகிறோம். எமது சாட்சி மற்றவருக்கு உதவுமா...? என்பது தெரியவில்லை. ஆயினும் அன்பரே, உமக்கு கைமாறாக, நீர் சொன்னப்படி செய்ய, ஓர் சிறு கால அவகாசத்தை எமது நண்பர் எடுத்துக் கொள்கிறார். ( தாமதிப்பதற்கு வருந்துகிறோம்).



__________________
karna


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

suncauvery wrote:

(முன்பு இந்த போதகத்தில் இருந்த என்னையும் இயேசு பெருமான் இரட்சித்தார். அவருக்கு மிக்க நன்றி...! ).


சரியா போச்சு...இவ்வளவு நாளா அடிச்சிகிட்டு இரத்தம் சொட்ட சொட்ட நிற்கிறோம்... ச்சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு போயிருக்கீங்க இல்லே...? இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமில்லே...? நீங்க தான முக்கியமா இங்க வேணும்..! சொல்லுங்க, எப்படி அந்த மாயமான உபதேசத்தில் சிக்கினீங்க, எப்படி வெளியே வந்தீங்க‌....விவரமா சொல்லுங்க‌...உங்களுக்கு அசைன்மென்ட் கொடுத்தாச்சு... நீங்க சொன்னது போலவே உணர்ச்சிவயப்படாம எழுதுங்க நாங்களும் படித்து தெரிந்துகொள்ளுகிறோம்; வாழ்த்துக்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
மூடப்பட்ட திரிக்கு ( யெகோவாவின் சாட்சிகள்) தாமதமாக அனுப்பப்படும் செய்தி...!
Permalink  
 


பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய தேவனை (தேவர்களை அல்ல) சரியாக அறிந்து கொள்ளாததால், உலகில் பல துர்உபதேசங்கள் தோன்றின. இவைகளை தோன்றச் செய்ததே பிசாசு..!

வெளி 12:4. மத்தே 13:24-30. (இங்கு வெளிபடுத்தல் வசனம் ஏன் சேர்க்கப்பட்டது என்பதை, பிரிதோர் சமயத்தில் எழுதுவோம்) .

2 கொரி 11:3-4 / கலாத்தி 1:6-9. ஆகிய பைபிள் வசனங்களின் படி துர் உபதேசங்களின் பிரதானமான பணி...

1) வேறோரு இயேசு.......!
2) வேறோரு சுவிசேசத்தை பிரசங்கிப்பதே....!

எனவே, யேகோவாவின் சாட்சிகள் பிரசங்கிப்பது வேறோரு இயேசுவை  (பைபிள் இயேசு வேறு என்பதை நினைவில் கொள்ளவும்).

குர்-ஆனின் ஈசா எப்படியோ...! அப்படி தான் இவர்களுடைய வேறோரு இயேசுவும்...!

இவர்கள் பிரசங்கிப்பது இராச்சியத்தின் சுவிசேசத்தை ( கலப்படம் செய்யப்பட்ட இராச்சியத்தின் சுவிசேசம்) என்பதையும் அறிய வேண்டும்...!
( நாம் பிரசங்கிப்பது கிறிஸ்துவின் சுவிசேசத்தை ).

பைபிளில் உள்ள 5 வகை சுவிசேசத்தை அறிந்து வைத்திருப்பது நல்லது...!

1) இராச்சியத்தின் சுவிசேசம்.  ( மத்தே 24:14)

2) தேவ கிருபைக்கான சுவிசேசம்.    

( அப்போ 20:24) ( கிறிஸ்துவே இதன் மையப் பொருள் ).ரோமர் 1:1/ 2கொரி 10:14/ 1தீமோ 1:11/2கொரி 4:4/எபி 2:10/எபே 6:15...!

3) என் சுவிசேசம்.( உரோம 2:16) ( கிறிஸ்துவே இதன் மையப் பொருள்).

4) நித்திய சுவிசேசம்.  ( வெளி 14:6)

   கடைசியாக
5) வேறோரு சுவிசேசம்.  (2 கொரி 11:3-4 / கலாத்தி 1:6-9.).

எந்தெந்த கால கட்டத்தில், எந்த சுவிசேசம் பிரசங்கிக்கப்படும் என்பதை அறிந்திருத்தல் நலமாயிருக்கும்...!

வேறோரு சுவிசேசத்தின் ஸ்தாபகன் பிசாசு எனப்படும் சாத்தான்.இவன், ஆரம்பத்தில் பிரதான தூதனாய் படைக்கப்பட்டதிலிருந்து அதிக ஞானம் கொண்டவனாய் இருக்கிறான். (எசேக்கி 28:3 மற்றும் எசேக்கி 28:12)

இவனுடைய போதகத்தை பின்பற்றுபவர்களிடத்தில்,தர்க்கம் செய்யும் போது, பிசாசுடன் மோதுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் பல நூற்றாண்டுகளாய் இருப்பவன்.நம்மைக் காட்டிலும் அதிக ஞானவான்.

நம்மை சோர்வடைய செய்வதும் / கோபப்படுத்துவதும் அவனுடைய தாக்குதல் யுக்தி...  நாம் சோர்ந்து போகாமல், பொருமையுடன்  எதிர்கொள்வது நல்லது..!

நாம் பரிசுத்த ஆவியானவருக்கு இடம் கொடுத்து, பேசுவோம். அவர் அவர்களை தொடுவார். (Argument Never Win's a SOUL for CHRIST).

பாலில் கலந்த நீர்... உண்மையில் கலந்த பொய் இரண்டையும் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பிசாசின் போதகமும் இப்படியே....!

ஏவாளை வஞ்சித்தப்போது. அவன் உண்மையும் பொய்யும் கலந்து பேசினான்.
பயிருக்குள் வளரும் களையும் பார்ப்பதற்கு பயிரை போலத்தான் இருக்கும்.

(முன்பு இந்த போதகத்தில் இருந்த என்னையும் இயேசு பெருமான் இரட்சித்தார். அவருக்கு மிக்க நன்றி...! ).



__________________
karna
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard