நீங்கள் எங்கே பழமொழியை தவறாக உபயோகித்தீர்கள் என்று தெரியவில்லை. அப்படி நான் அறியும் போது கண்டிப்பாக சொல்லுவேன். நான் பழமொழி என்று சொல்லுவது, நம் ஊர் பெரியோர்கள் அறிவுரை சொல்ல பயன்படுத்தும் (உலக) பழமொழிகள். அவைகளில் பல(அனைத்தும் அல்ல), வேத உண்மைகளுக்கு எதிராக உள்ளன என்றே நினைக்கிறேன். \
நண்பர்கள், நான் கூறியதற்கு சாதகமான, பாதகமான பழமொழிகளை இங்கு விவாதத்திற்கு கொண்டு வரலாம்.
தாங்கள் குறிப்பிட்ட பழமொழியைப் பொருத்தவரையிலும் நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு ஏற்புடையதே;நான் என்னைக் குறித்து அறிந்தவரையிலும் பழமொழிகளை அதிகம் பயன்படுத்துவதாக உணருகிறேன்; எனவே நான் பொருந்தாத சூழ்நிலைகளில் பயன்படுத்தியிருக்கக்கூடிய பழமொழிகள் இன்னதென்று எனக்குத் தெரிவிப்பீர்களானால் விளக்கவும் விளக்கம் பெறவும் ஏதுவாக இருக்கும்;
மேலும் பழமொழிகள் மூலம் சத்தியத்தை அறிவிப்பதில் யூதர்களைப் போன்றவர்கள் யாரும் இருக்கமுடியாது என்பதையும் அறியவேண்டுகிறேன்; நம்முடைய வேதம் முழுவதுமே பழமொழிகளால் நிரம்பியிருக்கிறது; நம்முடைய ஆண்டவரும் கூட பல்வேறு பழமொழிகளைப் பயன்படுத்தியிருப்பதையும் தாங்கள் அறிந்திருக்கக்கூடும்;
நம்முடைய சமுதாயத்தில் பல்வேறு தரப்பட்ட பின்னணியிலிருந்து வரும் சகோதரர்களிடம் நாம் பழக நேரும்போது அவர்களுக்கு பரிச்சயமான பழமொழிகள் மற்றும் முதுமொழிகள் மூலம் அவர்களை அணுகி அதனுடன் வசனத்தையும் ஒப்பிட்டு சத்தியத்தைச் சொல்லுவது நன்மையே பயக்கும் என்று நான் எண்ணுகிறேன்;ஆனாலும் பொருந்தாத சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் பழமொழிகள் நகைப்பிற்கிடமாகிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"செய்யும் தொழிலே தெய்வம்..." இது நம் தமிழ்நாட்டில் சொல்லப்படும் ஒரு பழமொழி. முன்பு இந்த பழமொழியை கேட்கும்போது, எனக்கு பெரிதாக ஒன்றும் தோன்றியதில்லை. ஆனால், சமீபத்தில் நம் கிறிஸ்துவ சகோதர்கள் பழமொழிகளையும் வேதவசனங்களையும் குழப்பிக்கொள்ளும்போது, இத்தகைய பழமொழிகளும் நம்மை வேதத்திற்கு புறம்பாக கொண்டு செல்லகூடிய சாத்தானின் கைகூலியே என்று புரிந்தது.
நான் செய்யும் தொழிலை தெய்வம் என்றால் அது என் தெய்வத்திற்கு இழுக்கல்லவா? நம் தொழில் முக்கியமான ஒன்றுதான், ஆனால் அது தெய்வமல்லவே. வேண்டுமானால், அது தெய்வம் அளித்த ஈவு என்று கொள்ளலாம்.கிறிஸ்துவர்களான நாம், பழைய பழமொழிகளை உபயோகிக்கும் போது கவனம் கொள்ளவேண்டும். நம்மையும் அறியாமல் வேதத்திற்கு புரம்பானவைகளை கூறுகிரவர்கலாவோமே. பழமொழிகளுக்கு பதிலாக, வேதவசங்களை உபயோகிப்பது இன்னும் சிறந்தது.