Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தான் பாதாளத்தில் சிறைப்பட்டு இருக்கிறானா...?


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
சாத்தான் பாதாளத்தில் சிறைப்பட்டு இருக்கிறானா...?
Permalink  
 


ஐயா, இது பல வருடங்களுக்கு முன், சாது செல்லப்பா என்னும் பெரியவரின், ஒலிநாடாவின் ஒரு சில வரிகள்....

" அதிகாலையின் மகனாகிய விடி வெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே..........! ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்." இசையா 14:12-15.

"சாத்தான் தன் உள்ளத்தில் இப்படி நினைத்தவுடன். கடவுளுடைய சினத்தின் தீப்பொறி ஒன்று சாத்தானை சுட்டு கருகச்செய்து. அவனை பரலோகத்திலிருந்து பாதாளத்திற்கு தள்ளியது" என அந்த பெரியவர் செய்தி கொடுத்துக் கொண்டிருந்தார்.

 அதே போல். இதே கால கட்டத்தில்,எம்முடன் இருந்த ஓர் பையன்.கிறிஸ்தவனாகி விட்டான். அவன் எம்மை வலுகட்டாயமாய்.அவன் செல்லும் சபை கூடுதலுக்கு எம்மை அழைத்து சென்றான்.எம்முடன் வந்திருந்த இன்னோர் பையன்,போதகரை பார்த்து " சாத்தான் என்றால் யார்..? இப்போது சாத்தான் எங்கிருக்கிறான்"...? என்றான்.. எம்மை தெரிந்துக் கொண்ட அவர். தமிழ்நாட்டில் DGS - தினகரன் என்பவர் மிகப்பெரிய ஊழியர். "ஓர் தடவை ஆண்டவர் இவருக்கு வெளிப்பட்டு, இவரை பாதாளத்திற்கு கூட்டிச் சென்றார். அங்கே பாதாளத்தில், சாத்தானை சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.அவன் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக உறுமிக் கொண்டிருந்தானாம். ஆனால்,அவனுடைய ஆவி வெளியே பூமிக்கு வந்து அட்டூழியம் செய்கிறது.அவனுடைய ஆவியே இந்தளவுக்கு, வேலை செய்கிறது என்றால். இன்னும் அவன் வெளியே வந்தால், என்னவாகும் என. உண்ர்ச்சி பொங்க பேசினார்.

ஐயா.இது எந்தளவுக்கு உண்மை என்பது, அப்போது எமக்கு தெரியவில்லை...! ஆனால் பிரமிப்பாய் இருந்தது...!

இது பைபிள் வார்த்தையோடு ஒத்து போகிறதா..? என பார்ப்போம்.!

இப்போது சாத்தான் எங்கே இருக்கிறான்..?

பரலோகத்தில் தனக்கு இடமில்லாமல் போனதும். சாத்தான் குடிக்கொண்ட இடம். இரண்டாம் வானம் என்றழைக்கப்படும். நட்சத்திர மண்டலம்... ஏனெனில் இதற்கு ஆதாரமாக சில வசனங்கள் உண்டு. ஓபதியா 1:4 -ல் "நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன். என்று கர்த்தர் சொல்லுகிறார்."

சாத்தான் வானத்திலிருந்து மின்னலை போல் கீழே விழுகிறதை கண்டேன்" என இயேசு பெருமான் கூருகிறார். இதுவும் கடந்த கால தொனியில் ஒலிக்கும் தீர்க்கதரிசனம்..!

" வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனை..." எபேசி 6:12. ( இங்கே பொல்லாத ஆவிகளின் தலைவனும்,தன் சேனையோடு தான் இருப்பான்). ஏனெனில்... கடவுள் படைப்பின் போது.. ஆதியா 1:8. இரண்டாம் நாள் நல்லது என்று சொல்லவில்லை... (இரண்டாம் நாளில் தான் 2-ம் வானம் உண்டாக்கப்பட்டது)

சாத்தான் இங்கு இருப்பதால் தான், அப்போதே கடவுள் இந்த இடத்தை நல்லது என்று சொல்லவில்லையோ...! சாத்தான் இங்கிருந்து ஏதேன் தோட்டத்துக்கு வந்து மனிதரை வஞ்சிக்க முடிந்தது.நோவா காலத்து பெரு வெள்ளத்திற்கு முன்னும் பின்னும் மனிதரை பாவத்தில் தள்ள பூமிக்கு வர முடிந்தது. தேவ பிள்ளைகளை குற்றப்படுத்த, பரலோகத்துக்கும் சென்று வர முடிந்தது.

பாதாளத்தில் கட்டப்பட்டிருந்தால் வெளியே வர இயலாதே...! வான மண்டலத்திலும் இருக்க இயலாதே..! பூமி எங்கும் உலாவி, சுற்றி திரிய இயலாதே...!

சாத்தான் எப்போது பாதாளத்தில் கட்டி வைக்கப்பட போகிறான்...?       

" அதிகாலையின் மகனாகிய விடி வெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே..........! ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்." இசையா 14:12-15. என்பது கடந்தக்கால தொனியில் இருக்கும் எதிர்க்கால தீர்க்கதரிசனம்...

இது, வெளி 12:7-9 -ல் சாத்தான் பூமியில் தள்ளப்பட போகிறான்.. பூமிக்கு வந்து விழுந்ததும் . அந்திக்கிறிஸ்துவை முழுமையாக ஆட்க்கொள்ளப்போகிறான்.. அதாவது தானியேல் தீர்க்கதரிசியின் 70வாரத்தின். கடைசி வாரமான 70 -வது. வாரத்தின் மத்திய பகுதி.( உபத்திரவ காலம் முடிந்து மகா உபத்திரவகாலம் தொடங்கும் போது).முதல் 3 1/2 அரை வருடம் முடிந்து மற்ற 3 1/2 அரை வருடம் தொடங்கும், போது. நடக்கும் சம்பவம். முதல் 3 1/2 வருடம் அந்திகிறிஸ்து மிருகம் என்றழைக்கப் படவில்லை.அதன் பிற்பாடே அவன் அப்படி அழைக்கப்படுகிறான்..!

வெளி 20:1-2 -ல் தான் சாத்தான் பாதாளத்தில் கட்டி வைக்கப்பட போகிறான்.. என்பது தெளிவு...!

இது தானியேல் தீர்க்கதரிசியின் 70-வது வாரத்தின் கடைசியில் நடக்க உள்ளது...! (7 வருடத்தின் முடிவில் / மகா உபத்திரவ காலத்தின் முடிவில்). ஆக. இது கடந்த காலத்திலும் நடக்கவில்லை.. இந்நாள் வரைக்கும் நடக்கவில்லை...!

இது எதிர்க்காலத்தில் நடக்க உள்ளது...!

வாய்ப்பு அளித்ததிற்கு நன்றி, சில்சாம் அவர்களே. இது தவறாக காணவந்தால் தயவுச்செய்து, இதை அழித்து விடுங்கள்...! (எமக்கு சமயம் வாய்க்கும் போது தான், கணினி பக்கம் வரமுடிகிறது).



-- Edited by suncauvery on Monday 20th of June 2011 08:33:52 AM

__________________
karna
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard