இதுவும் ஒருவகை அரசியல்தேன்...இருக்கமுடியாதபடி சூழ்நிலையை உருவாக்குவது, தாக்குவது, மவனே ஓடிரு என்பது அப்புறம் போனப்புறம், பாத்தியா, ஓடிட்டான், எப்படி துரத்தினோம் பாத்தியளா என கொக்கரிப்பது.
//அப்புறம் போனப்புறம், பாத்தியா, ஓடிட்டான், எப்படி துரத்தினோம் பாத்தியளா என கொக்கரிப்பது.//
யாக்கோபு 4:7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
நண்பரே, உங்கள் கருத்துக்கு (மேசியாவின்) எதிரி மேற்காணும் வசனத்தால் பதிலளித்திருக்கிறான்; என்னிடமும் இப்படியே அடிக்கடி வசனம் கேட்பார்கள்; அவர்கள் தூஷித்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி நான் வசனத்தை வீணிலே வழங்கவே மாட்டேன்; ஏனெனில் கர்த்தருடைய வார்த்தையின் மகத்துவத்தையும் வல்லமையையும் நன்குணர்ந்து அதற்கு அஞ்சுபவன் நான்; ஆனால் (மேசியாவின்) எதிரிகளுக்கு அந்த பயம் கொஞ்சமும் இல்லையென்பதற்கு இதோ இங்கே அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வசனமே அத்தாட்சியாகும்;
இந்த வசனமானது யாரால்- யாருக்கு- எந்த சூழலில் வழங்கப்பட்டது என்பதைக் குறித்த ஞானம் கொஞ்சமும் இல்லாமல் அதனை நமக்கெதிராகவே பிரயோகித்த சாத்தானின் துணிகரத்தை என்னவென்பது..?
இந்த வசனத்தை மீண்டும் மீண்டும் வாசித்து வாசித்து பார்த்தாலும் எந்த வகையிலும் இது பொருந்தவில்லையே...
"ஆகையால்" என்றால் அதற்கு முன்னுள்ள வசனத்தைப் பார்க்கவேண்டும்; அடுத்து,
"தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்"என்றால் கீழ்ப்படிதல் என்றால் என்ன என்று பார்க்கவேண்டும்; இவன் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டினால் தேவனுக்குக் கீழ்ப்படிவதாகிவிடுமா என்ன..?
"பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்" அதைதானே நாம் ரொம்ப நாளா செஞ்சுகிட்டிருக்கோம்..?
"அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." அப்படின்னா இவங்கள விட்டு ஓடினா தேவனையே விட்டு ஓடறாதாயிடுமா..? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை,உங்களுக்கு..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எல்லாமே தேவ சித்தம் என்கிறார்கள் சிலர். அப்ப மல்டி லெவல் மார்கெட்டிங்கில ஒருத்தர் லிங்கில் சேர மறுக்கும்போது (யாரும் உடனே சேரமாட்டாங்கல்ல, சேரக்கூடாது என்பது தேவ சித்தம்!) அதற்கப்புறம் அவரை சேர வறுபுறுத்தி எம்.எல்.எம் ஆட்கள் முயற்சி செய்வார்கள். இது தேவ சித்தத்தை மாற்றும் முயற்சியில்லையா? வேணாம்னே நீங்க அதில் சேர்ந்து மாட்டிக்கிடாதீக.
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் தனது குப்பைகளை அள்ள மறந்து ஒருவர் ஓடினார், தள நிர்வாகிகள் வாக்குவம் கிளீனர் வைத்து சுத்தம் செய்தனர். ஓடினப்புறம் ஐயோ வடை (குப்பை) போச்சே என ஒப்பாரி வைத்தார்.
அப்படி தான் நொறுக்குங்க...அண்ணாச்சி அடிச்சி நொறுக்குங்க..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
துரத்துவது என்று திருத்தி வாசிக்கணுமோ...துரத்தப்படுவது கோழைத்தனம் என்றால் அர்த்தம் வராதே..? ஓடுவது வேண்டுமானால் கோழைத்தனமாக இருக்கும்; ஆனால் அடியேன் கோழையைப் போல ஓடவில்லை; அங்கே பதிக்கும் வார்த்தைகள் திருத்தப்படும் அல்லது நீக்கப்படும் என்பதால் வெளியேறி வந்து தனி தளம் அமைத்து (மேசியாவின்) எதிரிகளுக்கு சுளுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறேன்.முன்பை விட அதிகமாகவே வேலை செய்கிறேன்; இணையத்தில் இலக்கில்லாமல் பணியாற்றிய எனக்கு வேலை கொடுத்த முதலாளிகள் (மேசியாவின்) எதிரிகள்; கூலி தான் கொடுக்கமாட்டேங்கிறாய்ங்க.., மல்டி லெவல்ல சேர்ந்து நானே சம்பாறிச்சுக்கணுமாம்.. வெளிநாட்டு பணத்தை மட்டும் தனியா வெச்சு மொக்கறாய்ங்க..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் தனது குப்பைகளை அள்ள மறந்து ஒருவர் ஓடினார், தள நிர்வாகிகள் வாக்குவம் கிளீனர் வைத்து சுத்தம் செய்தனர். ஓடினப்புறம் ஐயோ வடை (குப்பை) போச்சே என ஒப்பாரி வைத்தார்.
சகோதரி, துரத்தப்படுவது கோழைத்தனத்துக்கு சமம், அன்பு இவர்களை எதிர்த்து தான் போரிடுகிறார். யாரையும் இவர்கள் துரத்தமுடியாது, இவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என எண்ணி காறி துப்பிவிட்டு தான் போவர்.
நான் பேடி போல ஓடிட்டதா தூஷித்தார்களே... என்னை ஓடுகாலி என்பதற்கு நான் என்ன அவங்க வீட்டுக்கு சீர் செனத்தியோடு வாக்கப்பட்டா போனேன்..? தான் பிறந்து வளர்ந்த தாய் சபையையே வேசியின் சபை என்று கூறும் இவர்களைப் பார்த்தா வேதம் வேசியின் பிள்ளைகளே என்று கூறுகிறது..? இத சொன்னா என்னைய கோவிச்சுக்கிறாங்களே..! இவிங்கல்லாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கும் இன்னொரு இடத்திலிருந்து இடத்துக்கும் ஓடிகிட்டே இருப்பதால் பார்க்கறவங்களாம் ஓடறது போல இருக்கிறதாம்... இதே நிலையில் தான் நானும் அங்கிருந்து வெளியேறினேன் அல்லது நெட்டித் தள்ளி துரத்தப்பட்டேன்; அன்பு அவர்கள் பெரியவர் என்பதால் இத்தனை காலம் பொறுமையாக சமாளித்திருக்கிறார்;அவருக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இவர் பேசுறதயெல்லாம் பேசிவிட்டு கடைசியில் நான் பேசுவதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் அப்படிம்பார். மத்தவங்க இவரை பேசுறது மாத்திரம் ஊசியால் குத்துவது போல் இருக்கும்.
சகோதரி, துரத்தப்படுவது கோழைத்தனத்துக்கு சமம், அன்பு இவர்களை எதிர்த்து தான் போரிடுகிறார். யாரையும் இவர்கள் துரத்தமுடியாது, இவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என எண்ணி காறி துப்பிவிட்டு தான் போவர்.
அவர் முன்னாள் நண்பர் அல்ல, இன்றும் உங்கள் நண்பர் தான். இந்த கருத்துக்கணிப்பை மீண்டும் கொண்டு வந்திருக்கவேண்டாம்.
மன்னிக்க வேண்டும் நண்பரே; இன்று மெய்யாகவே சில வாதங்களில் அவர் பதிலளிக்கும் முதிர்ச்சியை நினைத்து அவருக்காக ஏங்கினேன்;அவருடைய பின்னூட்டங்கள் நேர்த்தியாகவும் ஆதாரப்பூர்வமானதாகவும் இருக்கும்; அவரையே (மேசியாவின்) எதிரிகள் நோகடித்து துரத்திவிட்டார்களே என்ற ஆதங்கத்திலேயே இவற்றை எழுதினேன்; நம்முடைய போராட்டங்களைக்குறித்து பலரும் அறிந்துகொள்ளுவதற்கு இந்த திரியின் பகிரப்பட்ட கருத்துக்கள் உதவியாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே இந்த திரியில் எனது கருத்தை எழுதியிருக்கிறேன்; ஆனாலும் கருத்துக்கணிப்பு தற்போதைய சூழலில் தேவையற்றது தான் என்பதால் அதனை நீக்கிவிடுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இன்று திடீரென எனது முன்னாள் நண்பர் கோல்வினை நினைத்துக்கொண்டேன்; இந்த திரியின் மூலம் தான் செய்த தூஷணங்களுக்காக அவர் (மேசியாவின்) எதிரிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார்; அவர்களும் இவரை மன்னித்து இவரைக் குறித்து எழுதுவதை நிறுத்திவிட்டனர்; இதனால் அவர்களிடம் கோல்வின் விலைபோய்விட்டதாக அர்த்தமில்லை என்று பல நண்பர்களும் அவருக்காக பரிந்து பேசினர்; அப்படியானால் சரிதான் இவர்களுக்கு எதிரான போராட்டத்தில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு ஆக்கப்பூர்வமாகப் ப்ங்காற்றுவார் என்று நானும் நம்பினேன்; ஆனால் கோல்வின் அவர்கள் (மேசியாவின்) எதிரிகளுக்கு இனி பதிலளிப்பதில்லை என்றும்- முக்கியமாக இந்த தளத்திலிருநது பதிலளிப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பது போலத் தெரிகின்றது; ஏனெனில் இதோ கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் எந்தவொரு பதிவையும் போடவில்லை; ஆனாலும் ஒரு பார்வையாளராகத் தொடருவது குறித்து அதிக மகிழ்ச்சி;
சகோதரி கோல்டா அவர்களையுங் கூட (மேசியாவின்) எதிரிகள் பல விதத்திலும் புண்படுத்தி எழுதிவருகிறார்கள்; ஆனாலும் அவர் மிக சாமர்த்தியமாக அவர்களை கையாண்டு வருகிறார்; அதேபோல நண்பர் ஜோசப் அவர்களையும் மிக மோசமாகவும் கீழ்த்தரமாகவும் முகாந்தரமில்லாமல் தூஷித்தனர்; அவருங் கூட விரக்தியான நிலைக்கு விரட்டப்பட்டாலும் இன்னும் வைராக்கியத்துடன் பங்காற்றி வருகிறார்; இதற்கெல்லாம் ஒரே காரணம் என் தெய்வத்தைக் குறித்து மாறுபாடானவற்றை ஒருவன் போதித்து சபைகளைக் குழப்பிக்கொண்டிருக்கிறானே என்பது தான்; அதிகம் கொடுக்கப்பட்டவனிடமிருந்து அதிகம் கேட்கப்படும் எனும் வேதத்தின் எச்சரிப்புங் கூட மற்றொரு காரணம்; தாவீதுக்கு இப்படிப்பட்ட கோபம் வந்த காரணத்தினாலேயே இன்று வரை பேசப்படுகிறார்;
எனவே கௌரவத்தையும் நாகரீகத்தையும் நற்பெயரையும் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் நண்பர்கள் எப்போதும் போல பார்வையாளராகத் தொடரலாம்;ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் (மேசியாவின்) எதிரிகளிடம்கோல்வின் அவர்கள் கேட்ட மன்னிப்புக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டுமாய் யௌவன ஜனம் தள நண்பர்களை வேண்டுகிறேன்; பொது அமைதிக்காகவும் நல்லிணக்கத்துக்காகவும் ஒருவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அதன் விளைவுகளில் அது தெரியவந்திருக்கும்; தனிப்பட்ட நோக்கங்களுக்காக மன்னிப்பு கேட்டிருந்தாலும் கூட போராட்டத்தை தொடர்ந்திருக்கலாம்; ஆனால் உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சரணடைந்ததைப் போல சிலர் செயல்படும்போது அவர்களுடைய தாலந்துகளெல்லாம் வீணாகிறதே என்று வருத்தமாக இருக்கிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
golda wrote:தனிப்பட்ட முறையில் தவறாக குற்றம் சாட்டியதற்குத்தானே சகோ கொல்வின் மன்னிப்பு கேட்டார். மற்றபடி அவர் உங்கள் நண்பர்தான். அவர்களுக்கு (கொள்கைகளுக்கு) எதிரிதான்.
கோல்வின் (மேசியாவின்) எதிரிகளை தனிப்பட்ட முறையில் தவறாகக் குற்றஞ்சாட்டி விட்டார் என்பது சரியல்ல; அது உண்மையே, அதற்கு நான் விளக்கமும் கொடுத்திருக்கிறேன்; அவர்கள் கூடுவதும் அந்த கூடுகையில் அவர் பேசுவதும் இல்லையென்று மறுக்கவில்லையே; அப்படி கூடும் கூடுகைக்கு சபை என்று பெயரில்லாமல் வேறென்ன? அங்கு செலவினங்களை அனைவரும் பகிர்ந்து கொள்ளுகிறார்களாம்; காரணம் யாரும் யாரையும் நம்பவில்லை என்பதே.
இதற்கு ஆதாரமாக ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் இவர்களுடைய வருடாந்தர கன்வென்ஷன் செலவுக்காக தனது ஒரு மாத சம்பளத்தையே கொடுத்ததையும் குறிப்பிட்டுள்ளேன்.மேலும் வெளிநாட்டு தண்ணீரும் இவர்கள் கூட்டத்தில் பெருக்கெடுப்பதையும் கூறியிருக்கிறேன்; இவையெல்லாவற்றையும் யூகத்தின் அடிப்படையில் கோல்வின் குறிப்பிட்டார்.
ஆனால் நான் எனது பாஸ்டரை நம்புகிறேன்; எனவே சபையின் செலவுகளுக்காக எனது பாஸ்டருக்கு நான் காணிக்கை கொடுக்கிறேன்; அவர் உண்மையாக செலவு செய்து அதற்கு கணக்கும் காட்டுகிறார்; நான் கொடுத்ததைவிட அதிகமாக ஒரு வருடத்தில் சபை எனக்கு செலவுசெய்கிறது; இங்கே பகிர்தலும் ஐக்கியமும் இருக்கிறது;அங்கே அது இல்லை; அதைவிட மோசமாக வேதஆராய்ச்சிக்காக வருவோரை மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனும் மோசடியில் தள்ளுகிறார்கள்.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக நான் சபை நடத்துவதாகக் கூறி என்னைக் கீழ்த்தரமாக தூஷித்த குற்றச்சாட்டு அப்படியே இருக்கிறது; அதை நிரூபிக்கச் சொல்லி நான் விடுத்த சவாலும் அப்படியே இருக்கிறது; கோல்வினுக்கு எனது நட்பைவிட அவர்களுடைய நல்லெண்ணமும் தன்னைக் குறித்த நன்மதிப்புமே முக்கியமாக இருந்ததால் அவர்களிடம் தடாலடியாகச் சென்று கவிழ்ந்தார்; அதன் பின்னணியிலுள்ள இரகசியம் என்னவென்பது எனக்கும் என் ஆண்டவருக்கும் மட்டுமே தெரியும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அவர்களைப் பார்த்தால் சில சமயங்களில் நமக்கு நரகம் போகப் போறாங்களே என்று பரிதாபம் வருகிறது. சில சமயங்களில் பிறரை ஏமாற்றி நரகம் கொண்டு போறாங்களே என்ற கோபம் வருகிறது. எனக்கு அவர்கள் எழுதுவதை வாசிக்கக் கூட பிடிக்கவில்லை.
அவர்கள் கொள்கைகளுக்கு நாம் எல்லோரும் எதிரிகள்தான். அவர்கள் கொள்கைகளை விமர்சித்ததற்காக அல்ல, தனிப்பட்ட முறையில் தவறாக குற்றம் சாட்டியதற்குத்தானே சகோ கொல்வின் மன்னிப்பு கேட்டார்.
மற்றபடி அவர் உங்கள் நண்பர்தான். அவர்களுக்கு (கொள்கைகளுக்கு) எதிரிதான்.
பகிரங்கமாக குற்றம் சாட்டியதால், பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுதான் சரி. இதற்கும் ஒரு தைரியம் வேண்டுமல்லவா!
இப்ப வெள்ளைக் கொடி காட்டினாலும்...!
நண்பர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு எதிரிகளுடன் சமரசம் செய்வதற்கும் ஒரு தைரியம் தேவை என்பது உண்மைதான்..!
" நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக." (II தீமோத்தேயு 4:16)
ஆனானப்பட்ட பவுலுக்கே அந்த நிலைமை என்றால் இந்த சாதாரண மனிதன் எம்மாத்திரம்..!?
கோல்வின் பலமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறார்...அவர்களும் பலமுறை மன்னித்திருக்கிறார்கள்... முள்ளி வாய்க்கால் சம்பவத்துக்குப் பிறகு வெள்ளைக் கொடிக்கெல்லாம் மதிப்பில்லை என்பதை எல்லோரும் தெரிந்து கொண்டோம்; பகிரங்கமாக யாருக்காகப் போராடினோம், பகிரங்கமாக யாரிடம் மன்னிப்பு கேட்கிறோம்... என்பதையும் சற்று நிதானித்தால் நல்லது...நன்றி..!
// உயிர்த்தெழ சத்தியத்தையோ தேவனை அறிகிற அறிவோ அவசியம் இல்லை, ஆனால் நிச்சயமாக பாவம் இருந்தால் உயிர்த்தெழ முடியாது, ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணம் மாத்திரமே!! பாவம் இல்லாமல் உயிர்த்தெழும் மனிதர்கள் இந்த பூமியில் தேவனின் நியாயத்தீர்ப்பின் நாட்களில் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி தானே!! //
இப்படிப்பட்ட விகாரமான கொள்கையுள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு மகா தேவனாகிய இயேசுவை விற்றுப்போடுவதற்கு துணிந்ததைக் காட்டிலும் அவர்கள் சொல்லுவது போல விவாதத்திலிருந்து ஓடிப்போயிருக்கலாம் அல்லது விவாதத்துக்குள் நுழைந்திருக்கவேண்டாம்.
பகிரங்கமாக குற்றம் சாட்டியதால், பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுதான் சரி. இதற்கும் ஒரு தைரியம் வேண்டுமல்லவா!
இப்ப வெள்ளைக் கொடி காட்டினாலும், இன்னும் சில காலங்களுக்குப் பிறகு, திரும்ப அவர்கள் எழுதுவதை வாசித்து சகோ கொல்வினுக்கு பிரஷர் எகிறும். சகோ சில்சாம் சந்தோஷப்படும்படியாக , அது வார்த்தைகளிலும் வெளிப்படும். இதுவே என்னுடைய தீர்க்கதரிசனம்!
நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் இந்த குறிப்பிட்ட திரியில் முதன்முதலாக ஒரு கருத்துகணிப்பைப் பதித்திருக்கிறோம்; இது யாருக்கும் எதிரானதல்ல, இதில் ஓட்டளிப்பவரின் பெயரும் இன்னார் என்று தெரிவதில்லை; இதன் மூலம் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்துக்கொள்ளவும் சரிசெய்து கொள்ளவும் முடியும் என்ற எண்ணத்தினாலேயே இந்த கருத்துக்கணிப்பை அமைத்திருக்கிறோம்;
எனவே நண்பர்கள் ஓட்டளிப்பதற்கு முன்பு இறுதியாக பதிக்கப்பட்டிருக்கும் என்னிலை விளக்கத்தை சற்று கவனத்தில் கொண்டு பிறகு அவசியம் ஒரு புள்ளியை மட்டும் வைத்துச்செல்ல அன்போடு வேண்டுகிறேன்; இந்த கருத்துக்கணிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே பார்வையில் இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்; நன்றி.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)