அன்பான சில்சாம் அவர்களே. இந்திய ஊடகங்களே வெளியிட அஞ்சிய / மறுத்த ஒளிப்பதிவுகளை முதன்முதலாய், ஓர் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் வெளியிட்ட உமக்கு நன்றி...!
நீர் தெரிந்து செய்தீரோ அல்லது தெரியாமல் செய்தீரோ...? நீர் ஓர் கிறிஸ்தவனாய் இதை செய்தீர். ஆனால், இந்திய இறையான்மைக்கு விரோதமாக செயல்ப்பட்டீர் என, உம் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து விடப்போகிறார்கள்...! ஆதலால் இதை நீக்கக்கூடுமானால் நீக்கிவிடும்...!
நண்பரே, நான் எனது 13 வது வயதிலிருந்து அதாவது ஜெயவர்த்தனே காலத்தில் இருந்து இலங்கைத் தமிழர் பிரச்சினையை அவதானித்து வருகிறேன்; நான் ஆன்மீக பாதையில் இருக்கும் ஒரே காரணத்தினால் அரசியல்ரீதியாக எதையும் செய்யமுடியவில்லையே தவிர எனது உணர்வுகள் மங்கிப்போய்விடவில்லை; இந்த உணர்வு ஒவ்வொரு தமிழனின் இரத்தத்திலும் கலந்திருக்கும் காரணத்தினாலேயே வேடதாரிகள் அண்மைய தேர்தலில் மண்ணைக் கவ்வினார்கள்; அங்கே என் இனம் கொத்து கொத்தாக மடிந்ததே அந்த சாபமே தமிழகத் தேர்தல் முடிவாக எதிரொலித்தது; அங்கே அலறித் துடித்த பிஞ்சுகளில் ஒன்று எனக்குப் பிறந்த பிள்ளையாக இருந்தால் நான் இப்படி அமர்ந்திருப்பேனா, அது யார் பிள்ளையோ, அது வேறு ஏதோ தேசம், அவர்கள் நம்முடைய மதத்தை சார்ந்தவர்களல்ல என்றெல்லாம் எண்ணி நான் இருப்பேனானால் என்னைப் போன்றதொரு சுயநலவாதி யாரும் இருக்கமுடியாது;
இந்நிலையில் நீங்கள் சொல்லுவது போல எதற்கோ பயந்து நான் இந்த காணொளி பதிவை நீக்குவேன் என்றால் நான் தமிழனாகப் பிறந்து தமிழ்ப் பால் குடித்து வளர்ந்ததே அர்த்தமற்றதாகிப் போகும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எமக்கு அழ கூட போதுமான நேரமில்லை. எமது மக்களுக்காக அழ இந்த வெள்ளைக்காரனுடைய தொலைக்கட்சியாவது இருக்கிறதே...!
இந்திய தேசீய அளவில் உள்ள ஊடகங்களே வெளியிட மறுத்த பதிவுகள். ஈழத்திலிருந்து 16 மைல் தோலைவில் இருக்கும் தமிழ்நாட்டு ஊடகங்கள் (வின் டிவி / மக்கள் டிவி தவிர்த்து ) வெளியிட அஞ்சிய பதிவுகளை, கடந்த வருடத்திலிருந்து எதற்கும் பணியாது, வெளியிட்ட சானல்-4.-க்கு. தமிழர்கள் என்றும் கடமை பட்டுள்ளனர். அதுவும் பல உலகநாடுகள்,தமது சுயசார்புக்காக அப்பாவி மக்களை பலிக்கொடுக்க விட்டுவிட்டு. இப்போது அதை மூடி மறைக்க போராடி கொண்டிருக்கும். இந்த வேளையில் இதை துணிச்சலுடன் வெளியிடும் அந்த சானலுக்கு நன்றி....!
இன்றைய நிலையில் ஈழ மக்களுக்கு, ஆதரவாய் இருக்கும் மேலைநாட்டு மனித உரிமை அமைப்புகள். மற்றும் மனிதாபிமான வெள்ளைத் தோல்க்காரர்களுக்கு நன்றி...!
அன்பான சில்சாம் அவர்களே. இந்திய ஊடகங்களே வெளியிட அஞ்சிய / மறுத்த ஒளிப்பதிவுகளை முதன்முதலாய், ஓர் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் வெளியிட்ட உமக்கு நன்றி...!
நீர் தெரிந்து செய்தீரோ அல்லது தெரியாமல் செய்தீரோ...? நீர் ஓர் கிறிஸ்தவனாய் இதை செய்தீர். ஆனால், இந்திய இறையான்மைக்கு விரோதமாக செயல்ப்பட்டீர் என, உம் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து விடப்போகிறார்கள்...! ஆதலால் இதை நீக்கக்கூடுமானால் நீக்கிவிடும்...!
வந்திருக்கும் அம்மையார் எப்போது (காங்கிரசுக்கு ஆதரவாக) குட்டிக்கரணம் அடிப்பார் என தெரியாது....!
கள்ளதீர்க்கதரிசிகளுக்கும் / கள்ளபோதகத்துக்கும் எதிரான உமது பணி முன்பை காட்டிலும் அதிக வேகத்துடன். வீறுக்கொண்டு செல்ல, கடவுளை வேண்டுகிறேன்...!