Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது.."


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: "ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது.."
Permalink  
 


Ashokkumar wrote:

கவலைப்படாதீங்க நண்பா.., நம்மை இன்னும் ஒரிசாவில் ஊழியர்கள் அடிக்கப்பட்ட மாதிரி யாரும் அடிக்கலையே...?!


ஆம், நண்பரே... உங்கள் கருத்துக்கு என்னைத் தாழ்த்துகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

கவலைப்படாதீங்க நண்பா.., நம்மை இன்னும் ஒரிசாவில் ஊழியர்கள் அடிக்கப்பட்ட மாதிரி யாரும் அடிக்கலையே...?!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இறைவன் தளத்தில் என்னுடைய நீண்ட கால நண்பர் சுந்தர் அவர்கள் "வெறி நாய்கள் ஜாக்கிரதை.." என்ற தலைப்பில்  ஒரு கட்டுரையைப் பதித்திருக்கிறார்;அதனை ரசித்து வாசித்த நான் இங்கே மறுபதிப்பு செய்யலாமென்று பார்த்தால் எங்கோ இடித்தது; குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள்; வேதமும்,"நம்முடைய இருதயமே நம்மை குற்றவாளிகளாக தீர்த்தால்.." என்கிறது; ஏன் வலியச் சென்று அந்த கருத்தின் பாதிப்பை நம்மீது சாட்டிக்கொள்ளவேண்டும் என்று நான் ஒருபுறம்  யோசித்தாலும் மறுபுறம் என்னுடைய நேர்மையுணர்வும் தெளிவான பார்வையும் அதனைத் தடுத்து அந்த குறிப்பிட்ட கட்டுரைக்கு தகுந்த மரியாதை தரவேண்டும் என்று உணர்த்திய காரணத்தினால் அதனை இங்கே பதிக்கிறேன்;

இதன்மூலம் எனது அன்புக்குரிய வாசகர்களுக்கு நல்லதொரு கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிடைப்பதுடன் சுந்தருக்காக பரிந்துபேசும் கோல்வின் போன்ற நடுநிலையாளர்களுக்கு சுந்தர் மாத்திரம் யோக்கியமானவர் அல்ல என்பதும் தெரியவரும் என்று நம்புகிறேன்;

இதேபோன்று நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொள்ளாமல் அவர் மறைமுகமாக என்னைத் தாக்கிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை என்னால் எடுத்துத் தரமுடியும்; நீதிமொழிகளில் சொல்லப்பட்டதைப் போல நான் சிநேகத்துடன் வெளிப்படையாகக் கண்டிக்கிறேன்;அவர் தனது ஆணவத்தினாலும் கர்வத்தினாலும் தன் சுயத்தினால் வெளிப்படும் கருத்துக்களை ஆவியானவர் வெளிப்படுத்தினார் என்ற பெயரில் மோசடியா எழுதிவருகிறார்; தீர்க்கதரிசிகளுக்கு எதிராகவும் தீர்க்கதரிசனத்துக்கு எதிராகவும் கருத்து சொல்லுவோர் இவருடைய பிதற்றல்களைக் கண்டும் காணாமலும் இருக்கிறதென்ன? வசனத்தின்படி சொல்லும் தீர்க்கதரிசனமே கண்டிக்கப்படவேண்டியதெனில் வசனத்துக்கும் விசுவாச பிரமாணத்துக்கு விரோதமாகவும் சொல்லப்படுவதைக் கண்டிக்கவேண்டாமா? இதனை வாசிக்கும் புதியவர்கள் ஓஹோ,கடவுள் இப்படியும் பேசுவார் போலிருக்கிறது,என்று தப்பெண்ணங் கொள்ளமாட்டார்களா..?

நான், அவர் குடும்பம் நடத்துவதைக் குறித்தோ ஆபீஸில் வேலைபார்ப்பதைக் குறித்தோ அவருக்கு அறிவுரை கூறி அவரோடு மோதவில்லை;பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த தவறான கொள்கைகளையும் மாறுபாடான உபதேசங்களையும் இணையத்தில் பதிக்காதிருங்கள் என்றே போராடுகிறேன்; இரஸல் எனும் கள்ளத்தீர்க்கதரிசியின் சீடர்களிடமும் என்னுடைய‌ போராட்டத்துக்கான காரணம் அதுவே; ஆனால் அவர்கள் நான் ஏதோ வேலையில்லாமல் இங்குமங்கும் தாவி ஒவ்வொரு நேரம் ஒவ்வொருவரையும் தாக்கிக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்;

சுந்தர் எனும் மாய்மாலக்காரன் என்னை வெறி நாய் என்று சொல்லட்டும் அல்லது (மேசியாவின்) எதிரிகள் என்னை இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாகத் தாக்கவேண்டுமோ தாக்கிக்கொள்ளட்டும்; ஆனால் எழுதிமுடிக்கப்பட்ட வேதத்துக்கு வெளியே சென்று சத்தியத்தைத் தேடும் சுயநீதிக்காரர்களையும் வேதத்தையே தவறாக வியாக்கியானம் செய்து உள்ளூர் சபைகளைக் கலங்கடித்துக்க்கொண்டிருக்கும் மேசியாவின் எதிரிகளையும் தொடர்ந்து எதிர்ப்பேன்; அவர்கள் வேதத்தைக் குறித்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமானால் நல்ல வேதாகம கல்லூரியில் சென்று படித்துவிட்டுவந்து முதலில் அதிலுள்ள வசனங்களுக்கு தங்களை ஒப்புக்கொடுக்கட்டும்;

அதன்பிறகு மிகுந்த பயத்துடனும் நடுக்கத்துடனும் அதிலிருந்தே அதனை எடுத்து போதிக்கட்டும்;சொந்த வியாக்கியானங்களைத் தராதிருக்கட்டும்; வேதத்தை- "ஏட்டு சுரைக்காய்" என்று கூறி அதனை இழிவுபடுத்திய சுந்தரைக் கண்டிக்க வக்கில்லாமல் என்மீது பாயும் மேசியாவின் எதிரிகளையும் இந்த நேரத்தில் கண்டிக்கிறேன்;யார் வெறி நாய் என்றும் யார் சொறி நாய் என்றும் யார் (ஓ) நாய் என்றும் யார் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள் என்றும் ஆவியானவர் அறிவார்;அந்த சாட்சியானது ஏற்ற காலங்களில் வெளிப்படும்;

இத்தனை நல்ல- நவீன போதகர்கள் இருப்பதாலேயே நான் குறைகூறும் வேலையை மட்டுமே பார்க்கிறேன்; எனக்கு குருடனைப் பிடிப்பதைவிட திருடனைப் பிடிப்பதே முக்கியமான பணியாகத் தோன்றுகிறது;குருடனுக்கு வழிகாட்ட பலர் இருக்கிறார்கள்; ஆனால் அந்த குருடனைக் கொள்ளையடிக்கவும் அவனைத் தவறான வழியில் நடத்தவும் பல திருடர்கள் இருக்கிறார்கள்; நான் அந்த திருடர்களை அடையாளங் காட்டி அவர்களிடம் எந்த அப்பாவியும் சிக்கிவிடாதிருக்கும் பணியினையே ஏற்றுக்கொண்டிருக்கிறேன்;

தீங்கை அகற்றினால் நன்மையானது இயல்பாகத் தோன்றுமே...?

chillsam wrote:

ரொம்ப நாளாச்சேன்னு அடுத்த வீட்டுக்குப் போனா அங்க வேற ஏதோ கலாட்டா நடந்துகொண்டிருந்தது;அவரும் நமக்கு ஒருகாலத்தில் வேண்டப்பட்டவர் தான்;ஆனால் அவரை சில குரங்குகள் கடித்து குதறி ஏறக்குறைய அவங்க பாஷைய கத்துக்கொடுத்துடுச்சி போல;இப்போ அந்த குரங்குகளைப் போலவே தாவுகிறார்,குதிக்கிறார்,சீன் போடுகிறார்;அறிக்கை விடவும் செய்கிறார்.


1211561?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1308787200&Signature=MVOFy19%2F%2BL%2BBqkcl42qdrNpZT6I%3D&1290686990
வெற்றியாளர்
orangestar.giforangestar.giforangestar.giforangestar.gif

Status: Offline

 
Posts: 806
Date: yesterday
வெறி நாய்கள் ஜாக்கிரதை!
 Printer Friendly


எனக்கு சுமார் 10-12 வயது இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றுண்டு எனது நெருங்கிய உறவினராகிய   நடுத்தர வயது மாமனார் ஒருவர் வயலுக்கு செல்லுகையில் ஒரு வெறிநாய் கடித்து விட்டது. அவரை எவ்வளவோ கவனித்து  பார்த்தும் பயனில்லாமல் இறுதியில் நாய் குறைப்பதுபோலவே குறைத்து மரித்து
போனார். பிள்ளைகள் இல்லாது இருந்ததால் கணவனின் பிரிவை தாங்கமுடியாமல் எனது அத்தையும் சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டார்கள்.
 
ஒரு அற்ப  நாயால் ஒரு குடும்பமே அழிந்துபோன  இச்சம்பவங்களை நான் அறிந்திருந்ததால், எனக்கு சிறுவயதிலிருந்தே  நாயை குறித்து எனக்கு மிகுந்த பயம் உண்டு. அதை கண்டாலே பிடிக்காது. (நாய் போன்று அதிகம் குறைக்கும்/ உறுமும் மனிதர்களயும்தான்)
  
இப்பொழுது எனக்கு நாயை பார்த்து பெரிய பயமில்லை என்றாலும், இன்றும் கூட அப்படி தெருவில் அலையும் நாய்களை கண்டால் நான் சற்று  தூர விலகி சென்றுவிடுவேன். எதற்கு அதன் பக்கத்தில் போகவேண்டும் அதற்க்கு கோபத்தை ஏன் ஏற்ப்படுத்த வேண்டும்? 
 
அதுபோல் மாறுபாடாக நடக்கும் சில மாய்மால காரர்களிடமிருந்தும்  நான் எப்பொழுதும் விலகியிருக்கவே விரும்புகிறேன்.
 
நீதிமொழிகள் 22:5 மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான்.
 
நான் இவ்வாறு நாயை பார்த்து தூர விலகி போவதால் ஒருவேளை அந்த நாய் என்னை பார்த்து  இவ்வாறு நினைத்து கொள்ளலாம் "இவன் நம்மைவிட பெரிய மனுஷனாக இருக்கிறான்! என்னை பார்த்து பயந்து இவ்வளவு தூர விலகி போகிறானே! ஆஹா! என்னை கண்டு மனுஷர்களும் பயப்படுகிறார்கள்! என்ற  மமதை சில நாய்களுக்கு  வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. அதன் குதறும் குணமறிந்தே அதைவிட்டு விலகிபோகிறேன்.
 
ஆனால் இரக்கமற்ற ஒருவன், ஒரேஒரு கல்லை தூக்கி வேகமாக எரிந்ததில் ஒரு நாயின் கால் துண்டாக  ஒடிந்து தொங்கிபோனத்தை நான் பார்த்திருக்கிறேன்.
 
எனவே  ஒரு சம்பவத்தை வைத்தோ அல்லது ஒருமனிதனின் தன்மையை வைத்தோ அடுத்தவரை எடைபோடுதல் ஆகாது. எல்லோரும் என்னைபோல  நாய்க்கு பயந்தவர்களாக இருக்கமாட்டார்கள். எப்போதாவது சிலர் எழும்பி நாயை காலை ஓடித்து விடலாம் என்பதை அறியவேண்டும். நாயின் குணம் குறைப்பதுதான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை! என்றாலும் எந்த தராதரமும் இல்லாமல் அடுத்தவர்கள் எல்லோரையும் பார்த்து அடிக்கடி  குறைக்கும் நாய்கள், ஆண்டவரிடம் அடிபட நேரிடும் என்பதை அறிந்து  தங்கள் வாய்களை சற்று அடக்கியிருப்பது  நல்லது! 
 
தன்  எஜமானர்களுக்காக  தன்னை அர்ப்பணித்து  அந்நியர்களை கண்டால் ஆதங்கத்துடன்  குறைக்கும் அருமையான  நாய்களை பற்றி இங்கு நான் எழுதவில்லை. செய்த நன்றியை என்றும் மறவாமல் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் பாசத்துடன்  வாலை ஆட்டும் பல நன்றியுள்ள நாய்களை பற்றியும் இங்கு நான் எழுதவில்லை! 
 
கொடிய வைரஸ் கிருமி என்னும் பொல்லாத  சாத்தானால் பாதிக்கபட்டு  கண்டவரையும் கடிக்க துணிந்து, எவரை கடிக்கலாம் எவரை விரட்டலாம் என்று ஏங்கி தறிகெட்டு அலையும் சில வெறிநாய்களை பற்றியே இங்கு எழுதுகிறேன். அந்நாய்களுடன்   சாவகாசம் வைத்துகொண்டாலே அதனிடமுள்ள வைரஸ் கிருமிகள் நல்லவர்களையும் தொற்றிகொள்ளும் அவர்களும் குறைக்க ஆரம்பிபார்கள் என்பதையும்  நாம் கண்கூடாக அறிய முடியும்!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Ashokkumar wrote:

சகோ.சில்சாம்,

எனக்கென்னமோ, சுந்தர் அவர்கள் அவர்களின் கூற்று தவறாக தெரியவில்லை (ஆனால், அவருடைய வார்த்தைகளை தவறாகவும் அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியும் என்பதை மறுக்கவில்லை). "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்று அவர் கூறுவது, வேத வசனங்கள் வல்லமை அற்றவை என்ற அர்த்தத்தில் அல்ல என்றே நினைக்கிறேன். ஆனால், வேத வசனங்கள் உள்வாங்கப்படாமல், ஆவிக்குரிய அனுபவமாக மாறாமல் இருந்தால், அவைகள் நம் வாழ்வில் கிரியை செய்யாது என்று சொல்லுகிறார் என்றே நான் நினைக்கிறேன்.

தவறுகள் இருந்தால் விளக்கி சொல்லவும்.


 மதிப்பிற்குரிய நண்பர் அசோக் அவர்களே,
சுந்தர் அவர்களின் சாமர்த்தியமே இதுதான்;சர்ச்சைக்குரியதை வெளிப்படையாகவும் மொத்தமாகவும் எழுதவே மாட்டார்; ஆனாலும் ஆதாரத்துடன் எழுதும் தோற்றத்தை ஏற்படுத்த நாலைந்து வசனங்களைப் போட்டுவிட்டு பொதுவான சில கருத்துக்களையும் எழுதிவிட்டு இறுதியிலோ அல்லது நடுவிலோ தன்னுடைய ஞானத்தை செருகிவிடுவார்;

கடந்த மூன்றுவருடங்களாக இவருடைய எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்; பொதுவாக நல்ல மனிதர்; ஆனால் நான் எதிர்ப்பது சத்தியத்துக்கு விரோதமான கருத்துக்களை மட்டுமே; இதற்கெல்லாம் காரணம் அவர் மறுபிறப்பை நம்புவதே; அதை அவ்வப்போது எழுதி எச்சரித்தும் என்னைப் புறக்கணித்துவிட்டு, ஏற்பதற்கு இஷ்டமில்லாமல் அமைதியாக இரு என்றார்; பிறகே அவருடைய தளத்தைவிட்டு வெளியேறினேன்.

தற்போதும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்திய வசனத்தை சிறுமைப்படுத்தி எழுதியிருக்கிறார்; இதற்கு பின்னால் அவர் ஏற்கனவே எழுதி என்னால் கண்டிக்கப்பட்ட திரிகள் இங்கே உண்டு; அவற்றில் ஒன்றை உதாரணத்துக்குக் கொடுத்துள்ளேன்;

http://chillsam.activeboard.com/t39713289/topic-39713289/

அவருடைய திரிகளுக்கு நாம் அளிக்கும் பதிலை தனி ஃபோரம் ஆகவும் தொகுத்து வைத்துள்ளேன்;அதன் தொடுப்பும் தரப்பட்டுள்ளது;

http://chillsam.activeboard.com/f498687/quotquot/

இவையெல்லாவற்றையும் வாசிக்க நமக்கு நேரமில்லை;ஆனால் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதுபோல‌ ஒரு சில வரிகளை வாசித்தாலே முழுவதையும் யூகிக்கும் திறமை இருந்தால் எளிதில் விளங்கலாம்;சுந்தரைப் பொருத்தவரை எழுதப்பட்டுள்ள "வேதம் மட்டுமே முழுமையானது அல்ல" என்று ஏற்கனவே எழுதியுள்ளார்;இன்னும் பல இந்து தத்துவங்களையும் பௌத்த நம்பிக்கைகளையும் தழுவிச் செல்லும் கருத்துக்களை ஆங்காங்கே ஆவியானவர் பெயரில் தூவியிருக்கிறார்.

இவற்றை நாம் யௌவன ஜனம் தளத்தில் பதித்து எச்சரிக்கும் நோக்கமானது சுந்தர் ரொம்ப பெரிய ஆள் என்பதால் அவரைக் கெடுக்கவேண்டும் என்ற தீய எண்ணமம் அல்ல; மாறாக இதுபோன்ற மாறுபாடான போதனைகளே இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்து மார்க்கபேதங்களுக்கும் எண்ணற்ற சபைகளுக்கும் காரணமாக இருக்கிறது;தமிழ் கிறித்தவ இணையத்திலாவது நாம் இயன்ற மட்டும் இதுபோன்ற தவறான உபதேசங்களை அடையாளம் காட்டிவைத்தால் புதியவர்கள் தெளிவடைய ஏதுவாக இருக்குமே என்பது நம்முடைய எண்ணமாகும்.

குறிப்பாக என்னை அதிகமாக பாதித்தது கீழ்க்கண்ட வரிகளே;மற்ற காரியங்களில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்விவகாரங்கள் உண்டு;அது எனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்;அவர் என் நிமித்தமாக பதுங்கியிருந்து அடக்கிவாசிக்கிறார்;இதனை அவரே அறிவித்துமிருக்கிறார்; ஆனாலும் அவரால் அடக்கிக்கொள்ள முடியாமல் சிதறி விழுபவற்றின் மூலம் நான் எச்சரிக்கிறேன்.
 
// "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்றொரு பழமொழி எல்லோரும் அறிந்ததே. அதேபோல் வெறும் எழுதப்பட்ட வசனத்தை மட்டும் படித்து ஆண்டவரை சரியாக அறிந்துவிட முடியாது. //

என்று சொல்லுகிறார்,சுந்தர்; நீங்களும்,அதனை நீங்கள் விளங்கிக்கொண்ட முறை நேர்மையானது; எனவே பிரச்சினையில்லை;ஆனால் சுந்தரின் நோக்கம் அதுவல்லவே; எழுதப்பட்டு கரங்களில் தரப்பட்டுள்ள வேத வசனங்களில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் அதற்கு மற்ற வேதங்களிலிருந்தும் ஆதாரத்தை தேடவேண்டும் என்றும் புத்தர் போன்ற எல்லா பெரியவர்கள் மூலம் ஆண்டவர் ஏன் பேசியிருக்கக்கூடாது என்றும் வாதிடுகிறார், அவர்; இதன்படி எழுதப்பட்டு நம்முடைய கரங்களில் தவழும் வேதத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இறைவனை அடையமுடியாது,அவரை அடைய விசேஷித்த ஆவி வேண்டும் என்பது சுந்தரின் நிலை; ஆனால் நீங்களும் சரி நானும் சரி வேதத்திலுள்ள அதிசயங்களைக் காணவே ஜெபிக்கிறோம்;அல்லவா..?

அப்படிப்பட்ட வேதத்தை இழிவுபடுத்துவது போல ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது என்று சொல்லலாமா என்பதே என்னுடைய கேள்வியாகும்; வசனத்தின் மூலம் வராத தேவனைக் குறித்த அறிவு அவருடைய ஆவியின் மூலம் வந்துவிடுமா என்ன‌..? அப்படியானால் அவருடைய வார்த்தையே ஆவியும் ஜீவனும் வல்லமையும் உள்ளதாக இருக்கிறது என்ற வார்த்தையின் பொருள் என்ன‌.?

நான் எப்போதும் சொல்லுவேன், உலகத்தின் மற்ற புத்தகங்களையெல்லாம் நாம் வாசிக்கிறோம்; ஆனால் பரிசுத்த வேதாகமம் எனும் புத்தகமோ நம்மோடு பேசுகிறது, என்பதாக; ஒரு வசனம் புரியவில்லை என்றால் தேவ பிரசன்னத்தில் அமர்ந்திருந்து கேட்பதோ அல்லது அது சம்பந்தமாக வெளிவந்துள்ள எண்ணற்ற காமெண்டரிகளின் உதவியை நாடுவதோ வழக்கமானது தான்; அப்போதும் கூட பரிசுத்த வேதாகமத்தை ஏட்டு சுரைக்காய் என்று எப்படி சொல்லுவீர்கள்..? ஏட்டு சுரைக்காய் என்பது சுரைக்காயின் வரைபடம் அல்லது சுரைக்காய் என்று ஏட்டில் எழுதப்பட்டதாகும்; அதை வைத்து கறி சமைக்கமுடியாது என்பதே பழமொழி அல்லவா? அதுதான் நான் புரிந்து வைத்திருப்பது; ஆனால் இந்த பழமொழி வேதத்துடன் எப்படி சம்பந்தப்படுகிறது, என்ன விதமான எண்ணத்தை தோற்றுவிக்கும் என்பதை யோசித்தால் மட்டுமே கோபம் வரும்; குரானையோ கிரந்தாசாகிப் எனும் சீக்கிய மதப் புத்தகத்தையோ நீங்கள் ஏட்டு சுரைக்காய் என்பீர்களா? சுந்தருக்கு பரிசுத்த வேதாகமம் ஏட்டு சுரைக்காயாக தோன்றுவதால் அவர் பைபிளை படிக்காமலே தேவ ஆவியானவரிடம் டைரக்டாக டீல் பண்ணிக்கொள்ளலாம் என்கிறார்;இதற்கு துணையாகவே வேதத்தில் உள்ள தீர்க்கதரிசிகளையெல்லாம் மேற்கோள் காட்டி அவர்களோடு இடைபட்ட ஆவியானவர் என்னோடு பேசமாட்டாரா என்கிறார்; பேசுவார், பேசட்டும், சந்தோஷம்; ஆனாலும் அப்படி இடைபடும் ஆவியானவர் வசனத்தை நோக்கியே நடத்துவார்; எல்லாவற்றுக்கும் வசனத்தை ஆதாரம் கேட்காதே, இது எழுதப்பட்ட ஏட்டு சுரைக்காயில் இல்லை; ஆனாலும் இதுதான் உண்மை என்று ஏதோ ஒரு ஆவி வந்து சுந்தருக்கு சொல்லுமானால் அது என்ன ஆவியாக இருக்கும் என்று நீங்களே சொல்லுங்கள்; இதுதான் சுந்தர் சொல்லியிருக்கும் காரியத்தின் முழு பின்னணி காரியமாகும்; மீண்டும் சொல்லுகிறேன், தரிசனம் என்ற பெயரில் நான் எதையாவது சொன்னால் இதற்கு வேத வசனத்தின் ஆதாரத்தை கேட்காதே, ஆண்டவர் ஏட்டு சுரைக்காயான பைபிளின் மூலமாக மட்டுமல்ல, டைரக்ட்டாகவும் பேசுவார் என்கிறார் சுந்தர்; இதுகுறித்து இரண்டு வருடம் முன்பே இவருடன் வாதிட்டோம்; இன்னும் இவர் திருந்தவில்லை, பதுங்கியிருக்கிறார் அவ்வளவே; யாருக்காவது நேரமிருந்தால் இவருடைய கருத்துக்களை நிதானமாக படித்து நான் சொல்லுவதில் உள்ள உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

சகோ.சில்சாம்,

எனக்கென்னமோ, சுந்தர் அவர்கள் அவர்களின் கூற்று தவறாக தெரியவில்லை (ஆனால், அவருடைய வார்த்தைகளை தவறாகவும் அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியும் என்பதை மறுக்கவில்லை). "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்று அவர் கூறுவது, வேத வசனங்கள் வல்லமை அற்றவை என்ற அர்த்தத்தில் அல்ல என்றே நினைக்கிறேன். ஆனால், வேத வசனங்கள் உள்வாங்கப்படாமல், ஆவிக்குரிய அனுபவமாக மாறாமல் இருந்தால், அவைகள் நம் வாழ்வில் கிரியை செய்யாது என்று சொல்லுகிறார் என்றே நான் நினைக்கிறேன்.

தவறுகள் இருந்தால் விளக்கி சொல்லவும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ரொம்ப நாளாச்சேன்னு அடுத்த வீட்டுக்குப் போனா அங்க வேற ஏதோ கலாட்டா நடந்துகொண்டிருந்தது;அவரும் நமக்கு ஒருகாலத்தில் வேண்டப்பட்டவர் தான்;ஆனால் அவரை சில குரங்குகள் கடித்து குதறி ஏறக்குறைய அவங்க பாஷைய கத்துக்கொடுத்துடுச்சி போல;இப்போ அந்த குரங்குகளைப் போலவே தாவுகிறார்,குதிக்கிறார்,சீன் போடுகிறார்;அறிக்கை விடவும் செய்கிறார்.

அவரை ஒருபோதும் நாம் காரணமில்லாமல் கண்டித்ததே இல்லை;அவரை மனப்பூர்வமாக நேசிக்கிறோம்;பலமுறை அழைப்பும் விடுத்துள்ளோம்;ஆனாலும் நம்மோடு தனக்கு செட்டாகுதுன்னு அவரே சொல்லிட்டார்;ஆனா (மேசியாவின்) எதிரிகளுடன் செட் ஆகிறது;அவர்கள் வெளிப்படையாகவே இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்து பூடகமாக நீண்ட கட்டுரைகளை எழுதி வந்தாலும் அதிலுள்ள சூழ்ச்சியான போதகத்தைக் காண்பதற்கு இயலாதவண்ணம் அவருடைய கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறது;ஆனால் தன்னையும் ஏதோவொரு ஆவி நடத்துவதாகச் சொல்லிக்கொள்ளுகிறார்;

இதோ நமது கரத்தில் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ள புனிதமான தேவனுடைய வார்த்தைகளை வகைதொகையில்லாத ஏதோ பழமொழியினால் சிறுமைப்படுத்தும் ஒரு கருத்தை எழுதியிருக்கிறார்;அவர் சொல்லுவது என்ன,"ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது.."  என்பதே;இது சரிதானா என்பதை நம்முடைய யௌவன ஜனம் தளத்தின் நண்பர்களே சொல்லட்டும்;அவர் தாராளமாக ஓய்வெடுக்கட்டும்;ஆனாலும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தூவிவிட்டு செல்லவேண்டுமா..?

 

 
Post InfoTOPIC: அதிக பதிவுகள் தர முடியவில்லை!

1211561?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1308787200&Signature=MVOFy19%2F%2BL%2BBqkcl42qdrNpZT6I%3D&1290686990

வெற்றியாளர்
orangestar.giforangestar.giforangestar.giforangestar.gif

Status: Offline
Posts: 801
Date: 1h, 49m ago
அதிக பதிவுகள் தர முடியவில்லை!
 


எங்கள்  கம்பனியில் AUDIT வேலைகள் நடந்துகொண்டு இருப்பதால் வேலை பளுவினிமித்தம் அதிக பதிவுகளை  தர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
 
மேலும் 1992ம வருடம்  ஆண்டவர் என்னை 6 நாட்கள் தனது ஆவியால் அபிஷேகித்து தெரியப்படுத்திய காரியங்களில் அநேகமானவைகளை நான் இங்கு எழுதி வைத்துவிட்டேன்  விரைவில் அவற்றின் தொகுப்பு ஒன்றை ஒரே  தனி திரியில் தரலாம் என்று  கருதியுள்ளேன்.
 
நான் இங்கு எழுதியுள்ள கருத்துக்கள் குறித்த சந்தேகம் எதுவும் இருந்தாலோ அல்லது  இறைவன் குறித்த பொதுவான கருத்தில் எதுவும் விளக்கம் தேவை பட்டலோ இந்த தளத்திலோ  அல்லது sundararaj.p@gmail.com  என்ற எனது தனி மெயிலுக்கு எழுதி கேள்விகளை  கேட்கலாம். 
 
தெரிந்த கேள்விகளுக்கு உடனடியாகவும், தெரியாத கேள்விகளுக்கு ஆண்டவர் சமூகத்தில் அமர்ந்து விசாரித்தும் பதில் தர தயாராக இருக்கிறேன்.
 
என்னை பொறுத்தவரை நான் யாரையும் அல்லது எந்த போதகத்ததையும் முற்றிலும் தவறு என்று சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு பிரிவினரும் சில
உண்மைகளை அறிந்திருக்கின்றனர் சில உண்மைகளை அறியாமல் தங்களுக்கு தெரிந்த சொந்த கருத்தை எழுதுகின்றனர். யாரும் முற்றும் அறிந்தவர் இல்லை! எனவே யாரையும் குறைகூறுவது நமது நோக்கமல்ல!
 
"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்றொரு பழமொழி எல்லோரும் அறிந்ததே. அதேபோல் வெறும் எழுதப்பட்ட வசனத்தை மட்டும் படித்து ஆண்டவரை சரியாக அறிந்துவிட முடியாது. தேவனை அனுபவபூர்வமாக அறிந்தால் மட்டுமே, தேவ ஆவியானவர் யார்? கர்த்தருடைய ஆவியானவர் யார்? பரிசுத்த ஆவியானவர் யார்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து யார்? போன்ற உன்மைகள  துல்லியமாக அறிய முடியும்!     
 
ஆண்டவரே ஒருவருக்கு  ஒரு உண்மையை விளக்க தயாராக இல்லை என்றால் அவர் யாரிடம் கேட்டாலும் அந்த உண்மை அவருக்கு புரியாது.  ஏனெனில் சில முக்கியமான காரியங்களை பிசாசால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனுஷ கூட்டத்துக்கு தேவன் தெரிவிக்க விரும்பவில்லை.  
 
"நமது அறிவு குறையுள்ளது" என்று வேதம் சொல்வத்தால்,  நாம் அறிந்ததுதான் சரி என்று நிர்விசாரமாக இருக்காமல்: 
 
தானியேல் 2:22 அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; 
 
என்ற உண்மையை அறிந்து
 
சங்கீதம் 119:18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
 
என்று தேவனை நோக்கி ஜெபித்து உண்மைகளை அறிவோமாக. 
 
ஆண்டவரின் செயலபாடுகள் குறித்து சரியான உண்மைகளை அறிந்தவர்கள் அடுத்தவர்களை  குறைகூறிக்கொண்டு திரியாமல், ஆண்டவருக்கு பிரியமாக வாழ தீர்மானித்து ஆகவேண்டிய காரியங்களைதான்  பார்ப்பார்கள் என்பதுவே உண்மை! 
    


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி-12:28)
Page 1 of 1  sorted by

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard