நான் அணைத்து மனிதர்களையும் சகோதரன் என்று அழைக்கலாமா?
இந்த உலகிலுள்ள மனுக்குலத்தார் அனைவருமே நம்முடைய சகோதரர் என்பதால் அவர்களை சகோதரராக பாவிக்கலாம்; ஆனாலும் கிறித்துவுக்குள்ளான சகோதரருக்கான சிறப்பான இடம் உண்டு. இந்த வித்தியாசத்தை, யாவரும் அறிந்திருந்தும் அதிகமாகப் போதித்திராத ஒரு வசன பகுதியிலிருந்து விளக்க முயற்சிக்கிறேன்..
"நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
மேற்கண்ட வாக்கியத்திலிருந்து நாவைக் குறித்த போதகத்தை நாம் அதிகம் கேட்டிருந்தாலும் இவ்வுலகிலுள்ள அனைத்து மனிதர்களுமே தேவனுடைய சாயலின்படி படைக்கப்பட்டவர்களே என்பதை அறிகிறோம்;எனவே அனைவரையும் சகோதரராக பாவிப்பது தவறல்ல;ஆனாலும் அவர்களோடு ஐக்கியம் கொள்ளும் காரியத்திலேயே வித்தியாசம் இருக்கிறது;எப்படியெனில் மற்றொரு வேதபகுதி இவ்வாறு சொல்லுகிறது,
"எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." (1.யோவான்.1:3) என்பதாக.
இதன்காரணமாகவே "கிறித்துவுக்குள் அன்பான சகோதரன்" எனும் சொல் சிறப்பு பெறுகிறது; பவுலடிகளும் இதனை வலியுறுத்துகிறார்;
"ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்." (கலாத்தியர்.6:10)
-இதன்படி விசுவாசக் குடும்பத்தாருக்குள் ஒரு விசேஷித்த பிணைப்பு காணப்படவேண்டும்; விசுவாசிகளுக்குள் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் அன்பு பேணப்படவேண்டுமே வம்பு வளர்க்கப்படக்கூடாது; வட்டி, சீட்டு, டௌரி போன்ற பணம் சம்பந்தமான விவகாரங்களே அன்பைக் கெடுப்பதிலும் சபையை உடைப்பதிலும் பிரதான பங்கு வகிக்கிறது. (என்று அண்மையில் நடத்தப்பட்ட கருத்துகணிப்பு கூறுகிறது;ஆமாங்க,இப்படி விவ(கா)ரமா- வி(வ)காரமா- (விவ)காரமா சொன்னாதான தான் கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்..!)
அப்படியானால் பாகுபாடு காட்டவேண்டும் என்பது பொருளல்ல, இந்த அன்பின் ஐக்கியத்தின் நிறைவினால் அனைத்து மாந்தரையும் இந்த ஐக்கியத்துக்குள் கொண்டு வர பிரயாசப்படவேண்டும்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமமான காரியங்களுக்கு நாம் விலகியிருந்து அந்நியராக இருக்கவேண்டும் என்பதே பிதாவின் சித்தம்.அதற்காக அவர்களைவிட்டு நம்மை தேவன் வேறுபிரித்தார் என்றும் வேதம் சொல்லுகிறது;அப்படியானால் பிரிவினைக்குக் காரணம் ஆவியானவரே; ஏனெனில் அவரே உணர்த்துகிறவர்;பிரிவினைக்கான பின்னணி கசப்பு அல்ல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
" அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே.. " என்று உலகத்தார் சொல்வார்கள் அல்லவா... ஆமா,காரியம் ஆகணும்'னா தம்பி அண்ணன் ஆவதும் காரியம் ஆனதும் அண்ணன் தம்பி ஆவதும் சகஜம் தானே... ஆனால் சகோதரன் என்பது மட்டுமே நிரந்தரம்; அதுவும் "கிறித்துவுக்குள் அன்பான சகோதரன்" என்று விளிப்பது தமிழ் கிறித்தவத்துக்கேயுரிய அருமையான சொற்றொடர்.
ஆனால் அதுவும் இப்போது உதட்டளவில் என்று ஆகிப்போச்சே..! கிறித்துவுக்குள் அன்பான சகோதரனை நாமெல்லாம் என்ன பாடுபடுத்திக்கொண்டிருக்கிறோம்...? இதில் சொந்த சகோதரர்கள் நம்மை படுத்தும் பாடுகளும் அந்த வலி மறக்க நாம் பாடும் பாடல்களும் தனிரகம்.
சகோதரன் என்றால் என்னவென்பதை நான் எப்படியோ எனக்கு வந்து சேர்ந்த தகவல் ஒன்றின் மூலம் இறுதிசெய்து கொண்டேன்; சகோதரன் எனும் வார்த்தையை இரண்டாகப் பிரிக்கலாம்;
சக + உதிரன். இதன்படி உதிரம் என்றால் இரத்தம் என்பதாலும் சக என்றால் உடன்பிறந்தவன் என்பதாலும் சக உதிரன் என்பது உடன்பிறந்த இரத்தம் என்றாகிறது;
நாமெல்லாம் கிறித்து இயேசுவின் இரத்தத்தால் உறவுகளானதால் சகோதரன் என்பது எத்தனை வல்லமையான வார்த்தையல்லவா..?
இந்த பொருளை உணர்ந்து சகோதரன் எனும் வார்த்தையைச் சொல்லுவோமானால் சகோதரன் எனும் வார்த்தையைவிட சிறப்பான உறவு வேறேதுமில்லை என்று விளங்கும்.
ஒருவரை அண்ணன் என்பதிலும் பல நியாயங்களும் காரணங்களும் உண்டு; அதையும் கொஞ்சம் பார்த்துவிடுவோமா.... ஐயய்யோ தெரியாமல் கேட்டுட்டேன்'யா என்று யாரோ ஓடுவது போலிருக்கிறதே... இப்போதைக்கு இடைவெளி விட்டுடுவோமா...
ஸீ யு, பை.. பை..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)