Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அடப் பாவமே...படுபாவிப் பய‌...பாவம்..!

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: அடப் பாவமே...படுபாவிப் பய‌...பாவம்..!
Permalink  
 
colvin wrote:
chillsam wrote:
தமிழ் கிறித்தவ தளத்தில் படித்தவர்கள் அதிகம் என்பதால் புறக்கணிப்புகளும் அதிகம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஆகும்;மேலும் ஆவிக்குரிய அனுபவங்களின் உச்சத்தில் தான் இருப்பதாக நினைத்துக்கொண்டு என்னைப் போன்றவர்களுடன் வாதிடுவதையே இழிவாக எண்ணுபவர்களும் உண்டு.எனவே எப்போதும் அடியேன் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டியதிருக்கிறது.

 இது ஆதாரமற்ற குற்றசாட்டு. உலகக் கல்விக்கும் வேதத்திற்கும் முடிச்சுப் போட வேண்டாம். எனக்குத் தெரிந்து பாடசாலையே போகாத எத்தனையோ விசுவாசிகள் நல்ல வேதஅறிவு உடையவர்களாய் இருக்கிறார்கள். 

மற்றது உங்களை யாரும் புறக்கணிக்கவில்லை. இழிவாக கருதவும் இல்லை. உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். சிலவேளைகளில் உங்கள் எழுத்துகள் வரம்பு மீறியாக தோன்றுகிறது அந்த சந்தர்பத்தில்தான் சர்ச்சை வருகிறது.

 உங்களைப் போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம்...

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379

"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
colvin wrote:

// இதுபோல பொத்தாம்பொதுவில் ரெண்டு மார்க் போடுவார்கள் என்றறிந்தே நான் பங்கேற்கவில்லை;மேலும் எனக்கு கவிதையும் எழுதவராது..! ஓகே, கொஞ்சம் எழுத்துப்பிழைகளை கவனித்தால் நல்லது.இது நம்முடைய தாய்மொழியல்லவா..?//

வாழ்த்துக்கள் சகோ. சில்சாம். இக்கருத்தினை எழுதியது அடியேனாகிய தாங்கள் தானே. ஏன் திடீர் ஞானோதயம். இதில் 2 மார்க்கு பெற்றாலும் தொடர்ந்து பதிவிடுவீர்கள்தானே. அடியேன் தவறாக கருத்து கூறியிருந்தால் எஜமானனாகிய நீ்ங்கள் என்னை மன்னித்து விடுங்கள்

 என்ன கிண்டலோ....நான் எப்போது உங்களுக்கு எஜமானனேன்...? சம்பளம் எதுவும் கேட்டுவிடாதீர்கள்....நம்முடைய தாய் தளம் தூங்கி வழிவதை காண சகிக்காமலும் நண்பர் மனோஜ் அவர்களின் வேண்டுகோள் எனக்கென்றே எழுதப்பட்டதுபோல தோன்றியதாலுமே எழுதினேன்;ஆனாலும் நீண்ட நேரம் விழித்திருந்து எழுதியதால் உண்டான பெலவீனங்கள் எனக்கு மட்டுமே தெரியும்;எனவே விதிமுறைகளைக் கூட வாசிக்காமல் மிதமாகவே எழுதியிருக்கிறேன்;அது ஒரு முழுமையான கட்டுரையும் அல்ல;நான் எழுதியது கவிதையும் அல்ல‌..! எப்படியிருப்பினும் தமிழ் கிறித்தவ தளத்தில் படித்தவர்கள் அதிகம் என்பதால் புறக்கணிப்புகளும் அதிகம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஆகும்;மேலும் ஆவிக்குரிய அனுபவங்களின் உச்சத்தில் தான் இருப்பதாக நினைத்துக்கொண்டு என்னைப் போன்றவர்களுடன் வாதிடுவதையே இழிவாக எண்ணுபவர்களும் உண்டு.எனவே எப்போதும் அடியேன் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டியதிருக்கிறது.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 
quote name="chillsam" date="29-04-2011 12:58:59"] [size=4] இதுபோல பொத்தாம்பொதுவில் ரெண்டு மார்க் போடுவார்கள் என்றறிந்தே நான் பங்கேற்கவில்லை;மேலும் எனக்கு கவிதையும் எழுதவராது..! ஓகே, கொஞ்சம் எழுத்துப்பிழைகளை கவனித்தால் நல்லது.இது நம்முடைய தாய்மொழியல்லவா..?[/size]

வாழ்த்துக்கள் சகோ. சில்சாம். இக்கருத்தினை எழுதியது அடியேனாகிய தாங்கள் தானே. ஏன் திடீர் ஞானோதயம். இதில் 2 மார்க்கு பெற்றாலும் தொடர்ந்து பதிவிடுவீர்கள்தானே. அடியேன் தவறாக கருத்து கூறியிருந்தால் எஜமானனாகிய நீ்ங்கள் என்னை மன்னித்து விடுங்கள்

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 
இது தமிழ் கிறித்தவ தளத்தில் அடியேன் பாவத்தைக் குறித்த கலந்துரையாடலில் பதித்துள்ள கருத்தாகும்.

அடப் பாவமே...படுபாவிப் பய‌... பாவம்... போன்ற வார்த்தைகளெல்லாம் நம்முடைய தமிழ் சமுதாயத்தில் மத வேறுபாடின்றி பாவிக்கப்படும் சொற்களாகும்; ஆனால் இதன் முழு தாக்கத்தையும் நமக்கு பரிசுத்த வேதாகமே எடுத்துரைக்கிறது.

sps1.jpg

  • ஆதியாகமம்.4:7- இந்த உலகின் முதல் சுவிசேட வாக்கியமெனலாம்;
  • நீதிமொழிகள்.28:13- அதனை வழிமொழிகிறது;
  • ரோமர்.6:23 -அதன் முத்தாய்ப்பானது.

(கர்த்தருடைய புஸ்தகத்தில் தேடி வாசியுங்கள்...)

ஆனால் சிலருக்கு பாவம் என்றாலே கோபம் வருகிறது; அடுத்தவர் பாவத்தைக் குறித்து ஆராயும் பலர் தம்மைத் தாமே சோதித்தறிய துணிகிறதில்லை; பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்தும் அதே ஆவியானவர் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் அறிவிக்கிறார் அல்லவா..? ஆனாலும் தங்களுக்கு மாறுதல் நேரிடாததால் துணிகரங் கொண்ட மனிதர்கள் பாவத்தின் விளைவிலிருந்து தப்பும் வழியை முற்றிலும் புறக்கணித்து புறவழிகளையே நாடுகிறார்கள்;இதுவே நாம் பாவத்தைக் குறித்து மீண்டும் மீண்டும் போதிப்பதன் காரணமாகிறது.

பாவம் செய்ததால் ஒருவன் பாவி அல்ல;அவன் பாவஞ்செய்யும் தன்மையுடையவனாக இருந்ததாலேயே பாவம் செய்கிறான்;ஏனெனில் அவன் பிறந்ததே பாவத்தில் என்று வேதம் போதிக்கிறது. ஆதி பாவத்தைக் குறித்த கொள்கை குழப்பங்களே பாவத்தின் விளைவுகளிலிருந்து தப்பும் தீர்வுகளையும் பலவாக்குகிறது;தீர்வு ஒன்றிலிருந்து பாவத்தின் அனைத்து பாதிப்புகளிலிருந்தும் தப்பி குற்ற உணர்ச்சியற்ற சுகவாழ்வு வாழலாமே என்றால் பாவத்தின் அடிமைத்தனமானது அதன் தீர்வை எட்ட விடுகிறதே இல்லை.

பாவத்தின் மூலம் மீறுதல் எனில் மீறுதலின் மூலம் வஞ்சகம்;வஞ்சகத்தை வென்றாலே பாவத்தின் விளைவிலிருந்து தப்பமுடியும்;பாவத்தின் பாதையால் அக்கிரமும் அதன் விளைவால் சாபமும் சந்ததி சந்ததியாகத் தொடர்ந்து பிடித்தது;உன் பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும் என்றும் வேதம் சொல்லுகிறது;

தற்கால நவீன உலகில் செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இன்னொருவரால் கண்காணிக்கப்படுகிறோம்; இன்டர்நெட்டிலும் அவ்வாறே ஐபி எண் மூலம் உலகின் எந்த மூலையில் எந்த கணிணியிலிருந்து எதைச் செய்தாலும் அதனை மற்றொருவர் அறியாதிருக்கமுடியாது; அதுபோலவே ஒரு மனிதன் இறை அச்சம் உள்ளவனாக இருப்பான் எனில் அவன் தன் கிரியைகளுக்குரிய பலனை அடைந்தே தீருவோம் என்ற உண்மையை அறிந்தவனாக இருப்பான்; அப்படியானால் செயல்களைப் பொறுத்தே பலன்களும் அமையும் என்ற எளிமையான உண்மையின்படி நல்ல செயல்கள் நல்ல விளைவுகளை உண்டாக்கி நல்ல பலனாக விளையும் அல்லவா?

ஆனால் இந்த நன்மை செய்ய மனம் இருந்தும் அதனை செய்ய இயலாத பாவத்தின் அடிமைத்தனத்தில் தவிக்கும் இருதயமும் நல்ல நோக்கமுமுடைய உணர்வுள்ள மனிதன் இருப்பானானால் அவன் உடனே செய்யவேண்டியது நன்மை செய்வதற்கான முயற்சிகளை உடனே நிறுத்தவேண்டும்; ஏனெனில் நன்மை செய்ய ஓடிய ஒவ்வொரு அடியிலும் தீமையே வந்தது அல்லவா?

எனவே தீமையைவிட்டு விலகி நன்மைசெய்ய விரும்பும் ஒருவன் ஏற்கனவே தீமையே செய்திராத ஒருவருடைய உதவியை நாடி வரவேண்டும் என்பது மனித இயல்புதானே,அப்படிப்பட்ட நல்லவரும் நன்மைசெய்பவரும் பாவமே இல்லாதவருமான இரட்சகர் என்று அறியப்பட்ட சாட்சியிடப்பட்ட இயேசுராஜாவை அண்டிக்கொள்ளவேண்டும்...

"இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்..!"

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard