Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் கிறித்தவ இசை: ஆல்பமா,அல்பமா..?


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 16
Date:
தமிழ் கிறித்தவ இசை: ஆல்பமா,அல்பமா..?
Permalink  
 


மிகவும் அருமையான கருத்து.

இன்று இசை வாயிலாக இயேசுவை விற்பது, அன்னியபாஷை, ஆட்டம் பாட்டம் என்று  வரைமுறை இல்லாமல் சபையில் ஆடுவது, சாவி விற்பது, கைகுட்டை விற்பது, மலையை வாங்குவது, கோபுரம் கட்டுவது இப்படி எல்லாவற்றிலும் மக்களால் (கர்த்தரால் இல்லை..!) கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒரு நல்ல மார்க்கம் சிதறாமல் இருக்க-  அன்னா ஹாஸாரே   நாட்டில் உள்ள பிரச்சனைக்கு  போராடும் போது பரலோக வாழ்வுக்கு நம் ஒவ்வொரு வீடிலும்  இதுபோன்ற அக்கறை வேண்டும், இருந்தால் இப்படிப்பட்ட கள்ளத்தனங்கள்  எல்லா வீட்டிலும் நுழைய   வாய்ப்பில்லை. இது ஒவ்வொரு மக்களை சார்ந்தது . 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

rawangjohnson Wrote on 16-06-2011 04:56:16:
நாய்க் குட்டியும் எஜமானரும்

மீண்டும் உருவகவணியோடு வந்திருக்கிறேன்.

கிறிஸ்தவத் தமிழிசைக்கும் இந்த உருவகவணிக்கும் என்ன சம்மந்தம்?

முதலில் நாய்க்குட்டியோடு நடைபோகும் எஜமானரைப் பார்பபோம். கட்டிப்போடப் பட்டிருந்த நாய்க் குட்டி நடைபோகும் ஆடையணிந்தவாரு எஜமானர் தன்னருகே வந்தவுடன் உற்சாகமாக எழுந்து நின்று கொண்டு உடலைச் சிலிர்த்துக் கொள்கிறது. தூணில் கட்டப்பட்டிருந்த சங்கிலியின் முனையை அவிழ்த்துவிட்டு, அதனை இருக்கமாகத் தன் கையில் பிடித்து வைத்துக் கொண்டு போகிறார். நடந்து செல்ல வேண்டிய இலக்கு இன்னதென்று திட்டமில்லாமல் முடிவு செய்து கொள்கிறார். நாய்க்குட்டி எஜமானரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தன் முழு பெலத்தோடு, தனக்கென்று நிர்ணயித்துக் கொண்ட இலக்கை நோக்கிச் செல்கிறது. ஏஜமானரும் அந்த நாய்க் குட்டிக்குச் சுதந்திரம் கொடுத்தாலும், முடிந்த வரை அதனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்.

இப்போது கிறிஸ்தவத் தமிழிசையைப் பார்ப்போம். நம்மைப் போன்ற பழமைவாதிகளும் அடிப்படைவாதிகளும் இந்த எஜமானருக்கு ஒப்பானவர்கள். அந்த நாய்க்குட்டி விக்கிரகங்களுக்கு முன்பு சாமியாடும் கூட்டத்திற்கு ஒப்பானவர்கள். நாம் போற்றும் கிறிஸ்தவத் தமிழிசையை நிலைநிறுத்த விரும்பினாலும் ‘கண்ட கசுமாளத்தையும்’ நாடும் நாய்க்குட்டிக்குச் சமமான பேயாட்டத்திற்குக் கொஞ்சம் கொஞசம் விட்டுக் கொடுக்க தான் வேண்டும். விட்டுக் கொடுக்கவில்லை என்றால், ‘கசுமால சபைகளை’ நாடிச் சென்று விடுவார்கள். அப்படிப்பட்ட ‘கசுமாலச் சபைகள்’ இல்லையென்றால் அவர்களே புதிதாக ஒன்றை அமைத்துக் கொள்வார்கள்.

‘அவர்கள் இஷ்டத்திற்குப் போகட்டும்’ என்று விட்டு விட்டால், அந்த நாய்க்குட்டியைப் பிடித்திருக்கும் சங்கிலியை விட்டு விடுவதற்குச் சமம். கழுத்தில் கட்டியிருக்கும் சங்கிலியோடு நாய்க்குட்டி, கண்ட கண்ட கசுமாளத்தைத் திண்ணும். தெரு நாய்களோடு புணரும். பின்னர் 'local' நாய்க் குட்டிகள் நமது வீட்டுக்குள் வந்துவிடும். இந்த அறுவறுப்புகள் எல்லாம் வேண்டாம் என்றால், சங்கிலியை இருக்கமாகப் பிடித்துக கொண்டே அதன் பின்னால் போக வேண்டியதுதான். ஏதாவது அசிங்கத்தைத் திண்ணப் போகும் போது, தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து விட வேண்டும். தெரு நாய்களோடு புணரச் சென்றாலும் இழுத்துக் கொண்டு வந்து விட வேண்டியதுதான்.

இன்று எங்கள் சபையும் இப்படிப் பட்ட நாய்க் குட்டிகளைக் கட்டிக் காக்கிற எஜமானர்களாகத் தான் இருக்கின்றது. ஆங்கிலிக்கன் சபை என்பதால் பாரம்பரியத்தை இறுக்கமாகக் கட்டிக் காக்கிறோம். அதே நேரத்தில், ‘கசுமாளத்திலும்’ தெருநாய்களிலும் மோகம் கொண்டுள்ள இளைய தலைமுறையினரை முடிந்த வரை இழுத்துக் கொண்டு நமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். நாங்கள் இனி முழுமையாக பண்டையக் கிறிஸ்தத் தமிழ் இசையில் திளைத்திருக்க முடியாது. அதே வேளையில் ‘பேயாட்டத்திற்கு’ சபையாரைப் பலி செய்யவும் முடியாது. கர்த்தரானவரே எங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கட்டும்.

சகோ சேகர் இத்தளத்தின் பிற பத்திப்புகளையும் வேதாகமத்தையும் சரியாக படிக்கவில்லை போலும். உமக்கு நான் இன்று முதல் பாடம் நடத்துகிறேன். முதலில் http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=4&topic=1086&Itemid=287 என்ற தொடுப்பைச் சொடுக்கி, சகோ.ராஜ்குமாரின் பதிப்பைப் படித்து விட்டு வாரும். அந்த உருவகவணி அழுகுணியா, கொச்சையா, கொடுந்தமிழா என்று சொல்லும்.

பிறகு உமது புரிந்துணர்வின் அடிப்படையில் 2ம் பாடம் நடத்துகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

chillsam Wrote on 09-06-2011 12:35:45:

// வியாபார நோக்கில் செய்யப்படுபவை கர்த்தருக்கு மகிமையைத் தருமா என்பதையும் சினிமா கலைஞர்களின் மூலம் இசைக்கப்படும் இசையினால் வருவது பரிசுத்தாவி தானா என்பது என்னுடைய நீண்டநாள் ஐயம் ஆகும். ஆனாலும் அதுபோன்று சிந்திப்பவர்களை பழமைவாதிகள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் பெரும்பான்மையினர் ஒதுக்கிவிடுவதும் உண்டு; எனக்குங் கூட சில பாடல்கள் கிளர்ச்சியூட்டுகின்றது;அதற்குக் காரணம் எனது மாம்சமே என்று உணருகிறேன்; ......................... ஆனாலும் பாபிலோனின் ஆறுகள் அருகே எருசலேமின் பாடல்கள் தகுமா என்பதை தகுதியானவர்கள் சொல்லட்டும்..! //

"arputham@Tcs"

கிறிஸ்தவ இசைக்கலைஞர்களில் எத்தனைபேர் உண்மைக் கிறிஸ்தவர்கள்? திறமையுள்ள கிறிஸ்தவர் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவர்களில் பெரும்பாலானோர்க்கு கிறிஸ்துவுடனான வாழ்க்கையில் அ.. ஆ.. கூட தெரியாது. நான் இசை கற்றுக் கொண்ட புதிதில் என் நண்பர் மூலமாக நெல்லையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ இசைக் கலைஞர்களையும் ஓரளவுக்கு அறிந்திருந்தேன். அப்போது நான் கண்டு கொண்ட உண்மைகள் பல அதிர்ச்சி தரக் கூடியவை..... சாம்பிளுக்கு ஒன்று : ஒரு சபைக்கு இசை வாசிக்க ஒரு குழுவினர் சென்றிருந்தனர். ஆராதனை வேளையில் பாஸ்டர் இசையின் வேகத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும்படி பாடிக்கொண்டிருக்கிறார். சபையில் பெரிய அசைவு. ஆண்களும் பெண்களும் தங்கள் இடம் மறந்து இடம் மாறி ஒரே ஆட்டம்... அந்நிய பாஷை. இதை இசை வாசித்துக் கொண்டிருந்த நண்பர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு விளையாட்டு செய்து பார்ப்போன் என்று கூறி எல்லாரும் ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் இசை வாசிப்பதை நிறுத்திவிட்டார்கள். நடந்தது என்ன தெரியுமா? ஒரே சமயத்தில் எல்லாருக்கும் அந்நியபாஷை நின்று போயிற்று. அவரவர் தங்கள் நிலைக்கு திரும்பினார்கள். இதில் யாரைக் குற்றம் சொல்ல? இன்றைய நவீன ஆராதனைகளில் படிப்படியாக வேகத்தைக் கூட்டுவது ஒருவிதமான மெஸ்மரிசமே. கொச்சையாகச் சொல்லபோனால் இந்து கோவில் கொடைகளில் சாமியாட அடிக்கும் மேளம் போல இன்று ஆராதனை தரம் இறங்கிவிட்டது. அக்கவர்ச்சியில் சிக்கி அனேகர் கிறிஸ்துவை இழந்து விட்டார்கள். பழைய கிறிஸ்தவப் பாடல்கள் தொகுப்பு பலவற்றிற்கு அருமையான இசை அமைத்துக் கொடுத்த ஒரு பிரபலமான கிறிஸ்தவ இசை வல்லுநர் முழுக்க முழுக்க குடி போதையிலேயே இருந்து மறைந்தவர் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? அரைகுறை இசை ஞானமும் கிறிஸ்துவுடன் சரியான தொடர்பும் இல்லாத கிறிஸ்தவக் இசைக் கலைஞரை விட சினிமா இசைக் கலைஞர் எவ்வளவோ மேல். தரமான இசையாவது கிடைக்கும். பிரபலப் பாடகர் யேசுதாஸ் (ஐயப்பதாஸ் :)) பாடி வெளிவந்த ஒரு காஸெட் மிகவும் பிரபலமாக இருந்தது. ராஜா என்பவர் இசை அமைத்திருந்ததாக ஞாபகம். அந்தக் காஸெட்டில் உள்ள அனைத்துப் பாடல்களும் பிரபலமாகின. அதற்குக் காரணம் தரமே.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

"arputham@Tcs"

சகோ.சில்சாம் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். கிறிஸ்தவத்தில் ஆளாளுக்கு ஆல்பம் போட்டு ரொம்ப அல்பமாக போகிவிட்டது.  கிறிஸ்தவர்களே! நீங்கள் சினிமா பார்க்க வேண்டாம். சினிமாவையும் மிஞ்சும் வண்ணம் கவர்ச்சியாக, மசாலாத்தனமாக நாங்கள் வீடியோ வெளியிடுகிறோம் என்று சொல்லாத குறையாக விளம்பர யுக்திகள் வேறு.  கிறிஸ்தவ ஆல்பங்கள் போடுவதில் பலரும் அலைபாய்வதற்கு ஒரு முக்கியக் காரணம், இன்று சினிமாப் பாடல்களை விட கிறிஸ்தவப்பாடல்களே அதிகம் விற்று தீர்கின்றன என்ற புள்ளிவிவர உண்மையே.

தேவ ஏவுதலால் பாடல் எழுதி இசைஅமைத்த காலம் மலையேறி, காசை மன்னிக்க ரூபாய்களை குறிவைத்து வியாபார நோக்கத்துடன் கிறிஸ்தவர்களின் பக்தியை குறிவைத்து வெளியிடப்படும் ஆல்பங்களுக்கும் சினிமாப் பாடல்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

கிறிஸ்தவ இசைகுறித்து நாம் இன்னமும் கூட விரிவாக விவாதிக்கலாம்.  அருமையானப் பாடல்களை கிறிஸ்தவ உலகிற்கு அளித்த பெர்க்மான்ஸ் ஃபாதர் கூட இன்று சரக்கின்றி காப்பியடித்துக் கொண்டிருக்கிறார். பெர்க்மான்ஸ் ஃபாதர் காப்பியடித்தப் பாடல்களை நாம் பட்டியலிடுவோமா?

ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர் அற்புதம் அவர்களுக்கு நன்றி;தாங்கள் முன்பு எழுதிய பிரபலமான பாடல்களின் பின்னணி அதாவது பாடல் பிறந்த வரலாறு தொடர் என்னை மிகவும் கவர்ந்தது;அதனை மீண்டும் (தொடர்ந்தால்...) எடுத்துப்போட்டால் பலருக்கு பிரயோஜனமாக இருக்கும்.

வியாபார நோக்கில் செய்யப்படுபவை கர்த்தருக்கு மகிமையைத் தருமா என்பதையும் சினிமா கலைஞர்களின் மூலம் இசைக்கப்படும் இசையினால் வருவது பரிசுத்தாவி தானா என்பது என்னுடைய நீண்டநாள் ஐயம் ஆகும்.ஆனாலும் அதுபோன்று சிந்திப்பவர்களை பழமைவாதிகள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் பெரும்பான்மையினர் ஒதுக்கிவிடுவதும் உண்டு;எனக்குங் கூட சில பாடல்கள் கிளர்ச்சியூட்டுகின்றது;அதற்குக் காரணம் எனது மாம்சமே என்று உணருகிறேன்; ஏனெனில் சிறுவயது முதலே நாடி நரம்புகளில் ஊறியிருக்கும் வட்டார இசை மற்றும் இரசனை காரணமாக ஒரு பாடலைக் கேட்கும்போது உடனடி ஈர்ப்பு உண்டாகிறது;உதாரணமாக "ஆயத்தமா" எனும் பிரபலமான ஆல்பம் மற்றும் "நேசிப்பாயா"... வரிசையைக் கூறலாம்;இந்த பாடல்களில் சிலவற்றை வைரமுத்து எழுதினால் அருமையான சினிமா பாடல் கிடைக்கும்;மேலும் சினிமாவுக்காகத் தொகுக்கப்பட்டு டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரால் தள்ளப்படும் ட்யூன்களும் கிறித்தவ வட்டாரத்தில் விற்று காசாக்கப்படுகிறது; இதெல்லாம் சகஜமப்பா என்று சிலர் கூறுவதும் காதுகளில் விழுகிறது. ஆனாலும் பாபிலோனின் ஆறுகள் அருகே எருசலேமின் பாடல்கள் தகுமா என்பதை தகுதியானவர்கள் சொல்லட்டும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தற்காலத்தில் கிறித்தவ வட்டாரத்தில் பிரபலமாக ஒலிக்கும் பாடல்களில் அர்ப்பணத்தைவிட ஆர்ப்பாட்டமே பிரதானமாக இருக்கிறது; அப்படி எதை சாதித்துவிட்டதற்காகக் கொண்டாடுகிறார்களாம்..?

அன்னா ஹாஸாரே எனும் ஓல்டு மேன் இந்த கலக்கு கலக்குகிறாரே அதற்காகவா அல்லது ராம்தேவ் எனும் யோகாகுரு சுடிதாரில் தப்பிச்சென்றாரே அதற்காகவா..?

தேசம் பாழாய் கிடக்கிறது... ஜனங்கள் கொள்ளையாகிக் கொண்டிருக்கிறார்கள்... சாதாரண ஒரு சிறு அசம்பாவிதத்தினால்- ஒரு மனுஷனின் தவறு காரணமாக, காஞ்சிபுரம் அருகே 23 பேர் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் எரிந்து சாம்பலானார்களே...அதற்காகவா..?

மக்களின் நாடித்துடிப்பை உணராமல் ஆட்டம் போடுபவர்களை மக்கள் தூக்கியெறிவதை சமீபத்திய தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நிரூபிக்கவில்லையா..?

அப்படியிருந்தும் கொஞ்சமும் பதட்டமில்லாமல் பலிபீடத்தை செப்பனிட வேண்டிய எலியாக்கள் கொண்டாட்ட மையங்களில் களிகூறுகிறார்களே...அதுவும் போதாமல் "அக்கினி... அக்கினி..." என்று கத்துகிறார்களே... எந்த அக்கினியை அழைக்கிறார்கள் என்பதே புரியாமல்..?

இவையெல்லாவற்றுக்கும் அடிப்படை காரணமே இன்றைய ஆராதனை பாடலையும் இசையையும் மட்டுமே சார்ந்திருக்கிறது; இசை, இளைஞர்களை ஈர்க்கிறது என்பதால் இசையின் மற்றும் குத்தாட்டங்களின் வழியே அவர்களை சீஷராக்கப் போகிறோம் என்கிறார்கள்;

அப்படியானாலும் சினிமா பாடல்களில் பார்த்தோமானால் சூழலுக்கேற்ற இசைக்கருவிகளைக் கொண்டே இசையமைக்கிறார்கள்; இதனை நம்முடைய இசைக் கலைஞர்கள் கருத்தில் கொள்ளுவதேயில்லை; உதாரணமாக பாடலின் ரிதம் (rhythm) சந்தோஷமான பாடலுக்குரியதாக இருக்கும், ஆனால் பாடலின் கருத்தோ அர்ப்பணம் (dedication) சம்பந்தமானதாக இருக்கும்... நான் சொல்வதில் தவறு இருந்தால் நண்பர்கள் அவசியம் சுட்டிக்காட்டவும்..!

கிறித்தவர்களின் பக்தியை காசாக்கும் அவசரத்தில் செய்யப்படும் தவறுகளே இவை; சினிமா உலகத்தில் இருந்த அனுபவத்தில் சொல்லுகிறேன், ஒரு சினிமா என்றால் அதில் அவசியம் ஒரு குத்து பாட்டு, இரண்டு காதல் பாட்டு, பேத்தா எனப்படும் ஒரு சோகப்பாட்டு இருக்கும்;

அதே கலவையில் திட்டமிட்டு வியாபார நோக்குடன் ஆல்பம் தயாரித்து பணம் பண்ணுவதில் Fr.பெர்க்மான்ஸ், Apostle.பால் தங்கையா முதலான முன்னணி தலைவர்களிலிருந்து இவர்களைப் போலவே தானும் பிரபலமாகவேண்டும் என்ற கனவுகளுடன் வரும் புதிய தலைமுறை ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல; இதுபோன்ற ப்ரொஃபஷனலான ஆல்பம் ஒன்றை தயாரிக்க எப்படியும் 2 இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.

ஆனால் அதற்கு வசதியில்லாமலும்- பிரபலமாகவேண்டும் என்ற கனவுடனும் வரும் ஒரு சாதாரண ஊழியரே இதுபோன்ற ஒழுங்கில்லாத- திட்டமிடாத ஆல்பங்களை தயாரிக்கிறார்;இவற்றை நிச்சயமாக‌ "ஆல்பம்" என்ற கௌரவமான பெயரால் அழைப்பதே தவறு. எங்கே ட்ரம்ப்பெட் இசைக்கவேண்டும், எங்கே ஷெனாய் இசைக்கவேண்டும், எங்கே வயலின் இசைக்கவேண்டும், எங்கே சாக்ஸ் இசைக்கவேண்டும் என்பதை சினிமாக்காரர்களிடமிருந்தாவது கற்றுக்கொள்ளவேண்டும்; ஏனெனில் நான் அறிந்தவரை கோடம்பாக்கத்த்தின் ஸ்டூடியோக்களில் தரமான இசையை உருவாக்கும்பணியில் இருப்பவர்கள்,மோஸஸும் தானியேலும் டேவிட்டும் தான்; அவர்கள் இல்லாவிட்டால் ஆஸ்கார் புகழ் ரகுமானே தவித்துப்போவார் என்பது பலருக்குத் தெரியாது..!

ஒரு சிறு குறிப்பு: அந்த காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சகோதரி ஹெலன் சத்யாவின் மகன் ஏ.ஆர் ரகுமானிடம் பணிபுரிகிறார் என்று கேள்வி; அதுபோலவே வேதநாயகம் சாஸ்திரியாரின் மகனும்; ஹாரீஸ் ஜெயராஜ் குறித்து சொல்லவே வேண்டாம்..!

கிறித்தவ நாய் விற்ற காசு குரைக்காது போலும்..!

தற்கால கிறித்தவ இசையைக் குறித்த எனது ஆதங்கத்தை ஏற்கனவே எனது வலைப்பூவிலும் தமிழ் கிறித்தவ தளத்திலும் பதிவு செய்துள்ளேன்.

http://chillsams.blogspot.com/2009_01_01_archive.html



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard