இன்று காலை (11:30) எனது அன்புக்குரிய சகோதரி மீனா அவர்கள் ஜெப உதவிக்காக என்னைத் தொடர்பு கொண்டார்கள்; அப்போது அவர்களிடம் நான் பளிச் சென்று தத்துவம் போல சொன்னது, "அம்மாடி,கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இரண்டு பார்வை வேண்டும்;இதில் எது சிறந்தது என்பதை நீங்களே யோசியுங்கள்; ஒன்று உள்ளிருந்து வெளியே பார்ப்பது,மற்றது வெளியேயிருந்து உள்ளே பார்ப்பது;அதாவது கிறித்துவுக்குள்ளிருந்து உங்கள் சூழ்நிலைகளைப் பாருங்கள்;உங்கள் சூழ்நிலைகளிலிருந்து கிறித்துவை நோக்கிப் பாருங்கள்; ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனே உங்கள் ஆண்டவர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வைத்துள்ளார்; ஆனாலும் பிலிப்பியர்.4:11-க்கு மேலான பிற்பகுதியில் வாசிப்பது போல உங்களுக்கு ஒரு குறைவும் இல்லை, கிறித்து இயேசுவுக்குள் நிறைவாகவே இருக்கிறீர்கள்...." என்றேன்; இந்த கருத்து எனக்கே பயனுள்ளதாக இருந்ததால் இங்கே பதிவு செய்கிறேன்.
"...நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
Not that I speak in respect of want: for I have learned, in whatsoever state I am, therewith to be content.
I know both how to be abased, and I know how to abound: every where and in all things I am instructed both to be full and to be hungry, both to abound and to suffer need.