Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரும்பிப் பார்க்கிறேன்...இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: திரும்பிப் பார்க்கிறேன்...இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink  
 


chillsam wrote:
 இதில் ஒன்றுக்காவது உருப்படியாக பதிலளித்திருக்கிறார்களா, வேத மாணவர்கள்...சுத்த மக்கு பிளாஸ்திரிகள்..!

 யெகோவா சாட்சி வெளியீடுகளை நீண்ட காலமாக படிக்கும் வாசகன் என்ற ரீதியில் சொல்லுகிறேன். இவற்றுக்கெல்லாம் அவர்வளிடம் பதில் இல்லை.  அவர்களைப் பொறுத்தவரை திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் கிடையாது. இயேசுவே தன்னிலும் தந்தை பெரியவராயிருக்கிறார். அந்த நாளையும் நாழிகையும் மனுஷகுமாரன் அறியார். இப்படி சொல்லும் ஒருவர் தேவனாக இருக்க முடியாது. இயேசு மரித்திருக்கிறார். எனவே கண்டிப்பாக அவர் தேவனாக இருக்க முடியாது. இந்த வாய்ப்பாட்டைத்தான் தொடர்ந்து பாடுவார்க். ஆங்கிலத்தில் இதற்கென ஏராளமான விளக்க நூல்கள் வந்திருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் குறைந்தபட்சம் கூட பதில் தருவதில்லை. 

இவர்களாவது முயற்சிக்கலாமே. அவர்கள் (யெகோவா சாட்சிகள்) என்ன கூறுகிறார்களோ இதையே ஒப்புவிக்க வேண்டிய அவசியம் என்ன? குறைந்த பட்சம் அந்த நூலையாவது மேற்கோள் காட்டலாமே. சிந்திப்பார்களாக.....!



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
திரும்பிப் பார்க்கிறேன்...இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink  
 


திரும்பிப் பார்க்கிறேன்...
John wrote:

எந்த கர்த்தர் வருகிறார்? இயேசு கிறிஸ்துவா அல்லது பிதாவா? இல்லை இல்லை இது இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைப்பற்றிய வசனம் இல்லை என்று மறுத்தாலும், திரும்பவும் வரப்போவது அவரே!
 
  •  "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் (YAWH) பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும் " (ஏசாயா 40:3)"
 
கிழே உள்ள வசனத்தை படியுங்கள். வேறு தேவன் இல்லை என்றால் யோவான் 1:1 இல் உள்ள தேவன் யார்? மொத்தம் எத்தனை தேவன்கள்?  இஸ்ரவேலின் ராஜா யார்? இயேசு கிறிஸ்துவா அல்லது பிதாவா? ரட்சகர் யார்? கர்த்தர் யார்? ஒரே கர்த்தர் இயேசு என்று கொரிந்தியரில் வாசிக்கிறோமே?
 
  • நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)
 
  • எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை  (ஏசாயா 43:10-11)
 "தேவத்துவம் தேவனில்லாத ஒருவரிடத்தில் பரிபூரனமாய் இருக்கமுடியுமா?" தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
  
  • ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது."(கொலோசெயர் 2:9)
தேவன் ஆவியாய் இருக்கிறார். தேவனுடைய ஆவி அளவில்லாமல் (Infinitely) தேவனைத்தவிர யாரிடமாவது இருக்குமா?
  • தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். (யோவான் 3:34)
 
 
"சகலமும்" , "உண்டானதெல்லாம்" என்கிற வார்த்தை இந்த வசனங்களை புரட்டர்கள் புரட்டக்கூடாது என்ற நோக்கில் தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. "உண்டானது எல்லாம்" அந்த இயேசு கிறிஸ்துவை கொண்டே உண்டாக்கப்பட்டு இருந்தால் அவர் எப்படி உண்டானவரை இருக்க முடியும்?  நீங்கள் தயவு செய்து யோவான் 1:3 விளக்குமாறு கேட்கிறேன்.  "சகலமும்" , "உண்டானதெல்லாம்" போன்ற வார்த்தைகளுக்கு உங்கள் விளக்கம் என்ன?

குறிப்பு: நான் கேட்டபது யோவான் 1:3 க்கு விளக்கம் திரும்பவும் நிதிமொழிகளுக்கு போகாதீர்கள். ஆதியிலே இயேசு உருவாக்கப்பட்டவர் என்றால் ஆதியிலே வார்த்தை "இருந்தது" என்று Past Tense ல்  சொல்லுவது தவறு
 
 
கிழே உள்ள வசனத்தின் படி "குத்தப்பட்டது யார்"?
 
  • நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (சகரியா 12:10)
 
கிழே உள்ள வசனத்தில் யாரை குத்தினார்கள்?
 
  • யோவான் 19:37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. 
 
கடைசிநாளில் பரிசுத்தவான்களோடு நியாயம் தீர்க்க வருகிறவர் இயேசுகிறிஸ்துவா?
 
  • இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது (I தெசலோனிக்கேயர் 3:13 )
 
  • தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். (யூதா 1:15 )
 
கிழே உள்ள வசனத்தில் வருகிறவர் யார்?
 
  • இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.. கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள். (ஏசாயா 66:15-16)
 
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவர் இயேசு கிறிஸ்துவா?
 
  • மத்தேயு 21:4 இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன்குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
 
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவர் எகோவாவா?
 
  •  சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். (சகரியா 9:9 )  
 
யாருக்கு கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்? ஜெகோவா  தேவனுக்கா?
 
  • அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன் (சகரியா 11:12-13 )
 
இல்லை இயேசு கிறிஸ்துவிற்கா?
 
  • நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். (மத்தேயு 26:15 )
 
  • அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப்போடலாகாதென்று சொல்லி, ஆலோசனைபண்ணின பின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.  (மத்தேயு 27:5 -7 )
 
நல்ல மேய்ப்பன் யார்? யேகோவா தேவனா?
 
  • கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். (சங்கீதம் 23 : 1 )

இயேசு கிறிஸ்துவா?
 
  • யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

 

சபையின் மணவாளன்   யேகோவா தேவனா?

 
  • ஓசியா 2:19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.



  • நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.(எசேக்கியேல் 16 :8 )   
 
அல்லது இயேசு கிறிஸ்துவா? இயேசுதான் மிகாவேல் என்று சொல்லுபவர்கள் தேவனை ஒரு அருவருப்பான பாவம் செய்தவராக்குகிறார்கள்
 
  • நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். (வெளி 19:9 )
 
தேவன் ஆதியில் (மன்னிக்கணும் அநாதியில்) இருந்தே பிதாவாக இருந்தாரா? அநாதியில் அவருக்கு அன்பு என்றால் எப்படி தெரியும்? எப்படி வெளிப்படுத்தினார்?
 
கிழே உள்ள வசனத்தில் அநாதியானவர் யார்?
 
  • எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மிகா 5:2)
 

''தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை...."

என்பதும் உண்மை கிழே உள்ள வசனமும் உண்மையென்றால்? ஒன்று இரண்டு தேவர்கள் இருக்க வேண்டும்(அது விபச்சாரம்) அல்லது ஒரே தேவனுக்குள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஆள்த்ததுவம் இருக்கவேண்டும். ஒரு ஆள்த்தத்துவம் பிதாவாகிய தேவன் அவர் ஒருவரும் காணக்கூடாதவர் மற்ற்றொரு ஆள்த்தத்துவம் குமாரனாகிய  தேவன், தேவனை கண்டவர்கள் எல்லாம் அவரைத்தான் கண்டார்கள் (இது புதிய மற்றும் பழைய ஏற்பாட்டு பக்தர்களுக்கு பொருந்தும்)

உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. (ஏசாயா 6:1)

யோவான் ஏசாயா கண்டது இயேசுவின் மகிமையை என்று சொல்லுகிறார்.

  • ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். (யோவான் 12:41)

    அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் (ஆதியாகமம் 32:30)
  • ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; (யாத்திராகமம் 33:11)

    இவர்கள் எல்லாம் யாரை கண்டார்கள்?

கிழே உள்ள வசனத்தின் படி, அவர் மனுஷருபம் எடுப்பதற்கு முன்பு பிதாவுக்கு சமமாய் இருந்தாரா? அல்லது மனுஷரூபம் எடுத்து சம்பாதித்தாரா? குறிப்பு : தயவு செய்து உங்களுக்கு தவறாக போதிக்கப்பட்ட படி லூசிபர் புராணம் படாதீர்கள் ஏனென்றால் அவன் தேவனுக்கு கிழே இருந்து அவரை விட மேலாக வேண்டும் என்று நினைத்தான் இங்கே இயேசு தேவனுக்கு சமமாய் இருந்து கிழே இறங்குகிறார்.

  •  அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் (பிலிப்பியர் 2:6 )

இன்னும் நிறைய கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்தாலும் இத்தோடு நிறுத்துகிறேன். 



-- Edited by John on Saturday 26th of March 2011 08:15:46 AM



-- Edited by John on Saturday 26th of March 2011 09:30:05 AM


 இதில் ஒன்றுக்காவது உருப்படியாக பதிலளித்திருக்கிறார்களா, வேத மாணவர்கள்...சுத்த மக்கு பிளாஸ்திரிகள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard