ஏழை ஜனங்கள் போக்கிடமில்லாமல் பொதுஇடங்களை ஆக்கிரமித்து குடிசை போட்டு குடியிருப்பார்கள்; அவர்களை வெளியேற்ற வழியில்லாத அரசாங்கமும் பணமுதலைகளும் சதிசெய்து தீவிபத்தை அரங்கேற்றும்; இதைக் குறித்து அன்றாடம் செய்தி தாள்களிலும் இன்னும் சினிமாக்களிலும் கூட பார்த்திருக்கிறோம்.
இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தொண்டு நிறுவனங்கள் உதவிசெய்கிறதுண்டு;ஆனாலும் பொதுவாக தமிழர் பண்பாடாக சொல்லுவது என்னவென்றால் வலதுகை செய்வதை இடதுகை அறியக்கூடாது என்பதாக.
ஆனால் கௌரவமானவர்கள் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் மீடியா நாயகர்கள் அவ்வப்போது தங்கள் தயாளத்தை பிரசித்தப்படுத்துவதைக் காண்கிறோம்; இதன்மூலம் ஒரேநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் அவமானப்படுத்தி தாங்கள் ஆராதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் படைத்த தேவனையும் கேவலப்படுத்துகிறார்கள்; இதைக் குறித்து சக கிறித்தவன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன்.
ஏழை மக்களை இதுபோல கேவலப்படுத்தாதீர்கள்... ஏற்கனவே கிறித்தவர்கள் என்றாலே அதையும் இதையும் கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்ற அவப்பெயர் இருப்பது போதாதா..?
இப்படிப்பட்ட ஊழியர்களின் சேவை கிறித்துவின் சபைக்கு தேவையில்லை. 100 ரூபாய் வாங்கி 30 ரூபாய் கொடுத்துவிட்டு அதை விளம்பரப்படுத்திக்கொள்ளும் கீழ்த்தரமான ஊழியர்களாலேயே கிறித்தவம் பல தளங்களில் தலைகுனிந்து கொண்டிருக்கிறது;இதைவிட சாயிபாபா, அமிர்தானந்தமயி போன்றவர்களின் சேவை நிறுவனங்கள் சத்தமில்லாமல் நிறைய சாதித்துக்கொண்டிருக்கிறது;
இதனை வாசிக்கும் மோசடி ஊழியர்கள் திருந்துவார்களா...? திருந்தவேண்டும்.