காதலில் தோல்வியுற்றவர்களுக்கு இயேசு மாற்று காதலர் அல்ல என்பதையும் தான் தன்னுடைய வயசுக் கோளாறு காரணமாக மாயைதனை நம்பி மோசம் போனதற்காக வருந்துவதும் மன்னிப்பு கேட்பதும் மனந்திருந்துவதுமே ஒவ்வொரு இளைஞனும் செய்யவேண்டியதாகும்;இதுவே கன்னியருக்கும் பொருந்தும்.
இயேசுவை நீ காதலிக்கமுடியாது; ஏனெனில் அவர் சிருஷ்டிகர், ராஜாதி ராஜா, வரப்போகும் நியாயாதிபதி ஆவார்;நீயோ அவருடைய திட்டங்களை நிறைவேற்ற இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்ட ஊழியன்; உன்னை அவர் தன்னுடைய பிள்ளையாக பாவிப்பது நீ செய்த பாக்கியம்; மணவாட்டி தனிப்பட்டவர்களை அல்ல,அனைத்து விசுவாசிகளையும் உள்ளடக்கிய சபையையே குறிக்கும்.
தவறே கிடையாது. காதலில் விழுந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?
வேறு யாரும் கண்ணுக்குத் தெரியாது. எல்லோர் மேலும் அன்பு வரும். எப்பொழுதும் மகிழ்ச்சிதான். அவரையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவரையே பிரியப்படுத்த வேண்டும் என்றே சிந்திப்பார்கள். அவருக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவருடைய ஐக்கியத்தில் அதிக நேரம் செல்வழிக்க நினைப்பார்கள். அவர் மேல் கொண்ட நேசத்தால் பிறர்(பெற்றோர், உற்றோர்) முற்றிலும் அசட்டை பண்ணப்படுவார்கள். அவருக்குக்காக எதையும் செய்ய, எதையும்/யாரையும் இழக்கத் தயாராயிருப்பார்கள். அவருக்காக ஏழு கடலும், ஏழு மலையும் தாண்ட ஆயத்தமே. அவர் பேச்சு இன்பமாக இருக்கும். அவரை நினைக்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
இப்படித்தான் நாம் இயேசுவை நேசிக்க வேண்டும். இந்த வெறித்தனமான நேசம் காதலில்தான் உண்டு!
tino Wrote@Tcs on 24-05-2011 22:53:59:
சிஸ்டர் இதுதான் நீங்கள் Bible ஒழுங்கா வாசித்த முறையோ????
அவர் மேல் கொண்ட நேசத்தால் பிறர்(பெற்றோர், உற்றோர்) முற்றிலும் அசட்டை பண்ணப்படுவார்கள்.
நம் தேவன் மிகவும் நல்லவர் அவர் யாரையும் அசட்டை செய்துகிட்டு வரனும் என்று எங்கேயும் சொன்னதே கிடையாது.தன் சகோதரனை நேசிக்காதவன் இயேசுவை எப்படி நேசிப்பான்........தன் பெற்றோரை கணம் பண்ணனும்தான் தேவன் சொல்லியிருக்கிறார்.
நான் காதலுக்கு எதிரியே கிடையாது எங்க வீட்ல எங்க அண்ணா இரண்டு பேருமே லவ் மேரேஜ் தான் அவங்க இரண்டு பேரும் லவ் பண்ணும் போது எங்களோட பெற்றோரையும் என்னையும் எவ்ளோ கஷ்டப்படுத்திருக்காங்கனு தெரியுமா அது அனுபவிக்ரவங்களுக்குதான் தெரியும். ஆனா நம்முடைய தேவன் மேல வைக்ர அன்பு நால எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிக்குமே தவிர யாரும் அசட்டை பண்ணபடமாட்டாங்க....................
தேவன் என்னை மட்டும் அன்பு செய்துகிட்டு என்கிட்ட வாருங்கள் என்று சொல்லவில்லை. எல்லாரையும் நேசிக்கனும் என்னயும் நேசிக்கனும்னு தான் சொலிருக்கிறார். நம்ம Bible லோட whole theme எல்லோரையும் நேசிக்கனும்.
Chillsam:
நான் கேட்க நினைத்த கேள்வியை டினோ கேட்டிருக்கிறார்;கோல்டா ஒரே சமயத்தில் இரண்டு கோல் (டா) அடித்திருக்கிறார்;அதாவது காதலுக்கு எதிராக ஊழியம் செய்யும் இராஜ் அவர்களை ஆதரிப்பது மற்றும் காதலை ஆதரித்து அதனை இயேசுவின் மீதான அன்புடன் சம்பந்தப்படுத்துவது.
பொதுவான வாசகர்கள் குழம்பக்கூடாது என்பதற்காக விளக்கமாக சிலவற்றை எழுதுகிறேன்;வேதம் கூறும் அன்பைக் குறித்தும் அன்பைக் குறித்த பல்வேறு பரிமாணங்களையும் இங்கே நண்பர் ராவங்க் ஜாண்ஸன் அவர்கள் நேர்த்தியாக எடுத்துரைத்திருக்கிறார்;அதனை ஆமோதித்தோ எதிர்த்தோ எதுவும் கூறாத கோல்டா இதனை சூடான விவாதமாக மாற்ற விரும்பினால் அதற்கு அடியேன் தயாராக இருக்கிறேன்;இறுதியில் கோல்டா அவர்கள் வருத்தப்படும் எதுவும் ஆகிவிடாதிருந்தால் சரி.
கொச்சையான வார்த்தைகளோடு சினிமா குத்துப்பாட்டு ஸ்டைலில் இளைஞர்களைக் கவருகிறேன் பேர்வழி என்று கிறித்தவ கலாச்சாரத்தை சிலர் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்;அதனைத் தடுக்க நம்மால் முடியாது;ஆனால் இதிலுள்ள ஆபத்துக்களையும் தவறான புரிதல்களையும் நிச்சயம் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும்;அதனால் ஒரு சிலராவது தெளிவடைய வாய்ப்புண்டு.
மனித காதலுக்கும் தேவனுடனான புனிதமான ஸ்னேகத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு;அவருக்குள் அனைத்தும் அடக்கம்;அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தார் என்று வேதம் கூறுமிடத்து எந்த வகையான அன்பை அவர் நம்மீது செலுத்தினார் என்பதை "அகாப்பே" (agape) எனும் விசேஷித்த வார்த்தையினால் கிரேக்க மூலப்பிரதியானது குறிப்பிடுகிறது;இதனை மெத்தப்படித்த கோல்டா நன்கு அறிந்தும் விதண்டா)வாதம் செய்துகொண்டிருக்கிறார்;அகாப்பே எனும் தேவ அன்பு நிபந்தனையற்றது;அப்படிப்பட்ட அன்பை தேவன் ஒருவரே மற்றொருவர் மீது செலுத்தமுடியும்;அதுபோன்ற அன்பு ஒருபோதும் பாலியல் சம்பந்தமான இச்சையாக உருவெடுக்காது.
ஆனால் கணவன் மனைவி அல்லது காதலர்கள் இடையே தோன்றும் அன்பானது "ஈராஸ்" என்ற வார்த்தையினால் குறிப்பிடப்படுகிறது;இது வடிகால் தேடி உடல் உறுப்புகள் வழியே வழிந்துபோகக்கூடிய அன்பு ஆகும்;ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் சமுதாயக் கட்டுப்பாடாகும்;இந்த வகை அன்புக்கு விதிவிலக்குகளே இல்லை;அனைவருமே வாய்ப்பு கிடைத்தால் தவறக்கூடியவர்களே;இதனை மேற்கொள்ளவே தேவனுடைய அன்பினால் ஆட்கொள்ளப்படவேண்டியதாகிறது.
தேவனுடைய அன்பினால் ஆட்கொள்ளப்படுகிறவர்களுடைய திருமண வாழ்வில் காமவெறி இருக்காது;மேலும் அந்த அன்பு ஒருபோதும் திருமணத்தையும் தவிர்க்காது;ஏனெனில் திருமணம் என்ற ஒழுங்கே தேவனால் ஏற்படுத்தப்பட்டது அல்லவா?
இந்த தேவ அன்பைக் குறித்த தெளிவு இல்லாத அதிகப்பிரசங்கிகள் இல்வாழ்க்கையையே வெறுக்கும்போது (முக்கியமாக பெண்களில் இது அதிகம்..) முதிர்ச்சியடையாத ஆண்கள் பாதை மாறவும் தன்னை விட அந்த ஆண்டவர் பெரிதாகப் போய்விட்டதோ என்று பெண்ணுடன் அதாவது தனது வாழ்க்கைத் துணையுடன் போராடுவதையும் கிறித்தவ சமுதாயத்தில் வெளிப்படையாகக் காண்கிறோம்.
கணவன் இல்லாமல் அவனுக்குத் தெரியாமலோ அல்லது எதிர்த்துக்கொண்டோ ஒரு ஆவிக்குரிய கூட்டத்துக்கு ஒரு சகோதரி வருவாள் என்றால் அவள் தன் திருமண உடன்படிக்கைக்கு விரோதமாகவே செயல்படுகிறாள் எனலாம்;ஆனால் ஊழியர்களோ சற்றும் வெட்கமில்லாமல் இன்னொருத்தன் பெண்டாட்டியை மூளைச்சலவை செய்து தனக்கு இரசிகையாக்கி மகிழுவது வெட்கக்கேடாகும்.அந்த சகோதரியை தேவனை நோக்கி நடத்தாமல் - அவள் தனது கணவனுடன் சுமூகமான இல்வாழ்க்கையை மேற்கொள்ள ஆலோசனை கூறாமல் அவளுடைய கணவனுக்கு பிசாசு பிடித்திருக்கிறது என்பதால் அந்த குடும்பத்துக்கு இரட்சிப்பு வந்துவிடுமா?
இறுதியாக காதலில் தோல்வியுற்றவர்களுக்கு இயேசு மாற்று காதலர் அல்ல என்பதையும் தான் தன்னுடைய வயசுக் கோளாறு காரணமாக மாயைதனை நம்பி மோசம் போனதற்காக வருந்துவதும் மன்னிப்பு கேட்பதும் மனந்திருந்துவதுமே ஒவ்வொரு இளைஞனும் செய்யவேண்டியதாகும்;இதுவே கன்னியருக்கும் பொருந்தும்;இயேசுவை நீ காதலிக்கமுடியாது; ஏனெனில் அவர் சிருஷ்டிகர்,ராஜாதி ராஜா,வரப்போகும் நியாயாதிபதி ஆவார்;நீயோ அவருடைய திட்டங்களை நிறைவேற்ற இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்ட ஊழியன்;உன்னை அவர் தன்னுடைய பிள்ளையாக பாவிப்பது நீ செய்த பாக்கியம்;மணவாட்டி தனிப்பட்டவர்களை அல்ல,அனைத்து விசுவாசிகளையும் உள்ளடக்கிய சபையையே குறிக்கும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு முக்கியமான கேள்வி கேட்கவேண்டும் என்று நினைத்தேன், காதலிப்பது தவறு அல்லது தோற்றுப்போனவர்களுக்காக என்று ஊழியம் செய்யும் சகோதரர் ராஜ் அவர்களுடைய முயற்சிகள் நல்லதாகவே இருக்கட்டும், அவர் காதல் திருமணம் செய்தவரா அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணம் செய்தவரா என்று சொல்லுவீர்களா
காதலித்து தோல்வியால் கையை வெட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.அவர் தீவிரமாக காதலுக்கு விரோதமாகப் பேசுவதைப் பார்த்தால் Arranged Marriage ஆகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தெரியவில்லை.
Bro Chillsam:
"நான் இயேசுவை காதலிக்கிறேன்" என்று சொல்லுவது சரியா, தவறா..? என்பதற்கு நேரடியாக பதில் காண்போமே,அது நிச்சயமாகவே தவறுதான் அல்லது அறியாமை காரணமான குழந்தைத்தனமான கருத்து;
தவறே கிடையாது. காதலில் விழுந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? வேறு யாரும் கண்ணுக்குத் தெரியாது. எல்லோர் மேலும் அன்பு வரும். எப்பொழுதும் மகிழ்ச்சிதான். அவரையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவரையே பிரியப்படுத்த வேண்டும் என்றே சிந்திப்பார்கள். அவருக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவருடைய ஐக்கியத்தில் அதிக நேரம் செல்வழிக்க நினைப்பார்கள். அவர் மேல் கொண்ட நேசத்தால் பிறர் (பெற்றோர், உற்றோர்) முற்றிலும் அசட்டை பண்ணப்படுவார்கள். அவருக்குக்காக எதையும் செய்ய, எதையும்/யாரையும் இழக்கத் தயாராயிருப்பார்கள். அவருக்காக ஏழு கடலும், ஏழு மலையும் தாண்ட ஆயத்தமே. அவர் பேச்சு இன்பமாக இருக்கும். அவரை நினைக்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.இப்படித்தான் நாம் இயேசுவை நேசிக்க வேண்டும். இந்த வெறித்தனமான நேசம் காதலில்தான் உண்டு!
ரஜினி ஸ்டைல் சிவாஜி ஸ்டைல் என்பது போல அவரவருடைய அனுபவம் சார்ந்த நிலையிலிருந்து எதையோ செய்யட்டும்;அவையெல்லாமே வேதத்துக்குட்பட்டதா என்று பார்த்தால் முக்காலே மூணு வீசை சொத்தையாகவே இருக்கிறது,உங்கள் பேரன்புக்குரிய சாதுஜி உட்பட;
இதில் ராஜ் காதல் தோல்வியினால் காதலுக்கு எதிரியாக இருக்கிறாரென்றால் அது அவருடைய தனிப்பட்ட காரியமாக இருக்கட்டும்;அதற்காக வேதத்தில் காதல் என்பதே இல்லையென்பதோ அல்லது காதலை தேவபக்தியுடன் ஒப்பிடுவதோ வரம்புமீறிய நிலையாகவே இருக்கமுடியும்;காதல் என்பது முழுக்க முழுக்க மனிதம் சம்பந்தமானது;அதில் எந்தநிலையிலும் தேவபக்தி சம்பந்தப்பட இயலாது என்பதே என்னுடைய கருத்து ஆகும்.
ராஜ் எனும் ஊழியர் மிக புத்திசாலித்தனமாக கவர்ச்சிகரமான ஒரு ஊழிய களத்தை தனக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்;இதனால் அவர் பெரும்புகழ் அடைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை;ஆனாலும் காதலையும் மதத்தையும் சம்பந்தப்படுத்தாதிருப்பதே உத்தமமானதாகும்;ஏனெனில் காதலை மத உணர்வுகளுடன் சம்பந்தப்படுத்திய மார்க்கங்களில் எல்லாம் பெண்ணடிமைத்தனமே நிலவுகிறது.காதல் என்பது இயல்பானது;இதைக் குறித்து இங்கே எழுதி என்னுடைய நேரத்தை வீணடிப்பதை விட தனி கட்டுரையாகப் படைக்க முயற்சிக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
காதல் ஒரு நல்ல உணர்ச்சிதான்! காதல் நல்ல வார்த்தைதான்!!
காதலில் சிக்குண்ட வாலிபருக்கு “ நான் இயேசுவை காதலிக்கிறேன்” என்று பாட்டுப் போட்டால்தான் புரியும். எனவே அது தவறல்ல.
சரி இந்த பாட்டைப் பத்தி என்ன நினைக்கிறீங்க!
-- கவர்ச்சி நாயகனே! கண்களில் நிறைந்தவரே --
எனது மணவாளனே என் இதய ஏக்கமே
--
கவர்ச்சி நாயகனே, மணவாளனே என்று அப்பா, அம்மா, ஆட்டுக்குட்டியைப் பார்த்தெல்லாம் சொல்ல முடியாது. அப்ப ஃபாதர் பெர்க்மான்ஸும் தப்பாதான் பாடியிருக்காரா???
அன்பு பலவிதம். எல்லா வகையான அன்பையும் நமக்குத் தரக் கூடியவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. என்வே தான் யார் உடன் இல்லாவிட்டாலும் அவர் உடனிருந்தால் நாம் வாழ்ந்து விட முடியும்.
அவர் ஒருவரால் தான் நம்மை தாய் போல், தகப்பன் போல், நண்பன் போல், சகோதரன் போல் , காதலன் போலும், கணவன் போலும் நேசிக்க முடியும். ஒரு வயதான் தாயார் ஒரு ஊழியக்காரரிடத்தில் என் பிள்ளகள் எல்லாம் என்னை கைவிட்டு விட்டார்கள். நான் தனியா கஷ்டப்படுகிறேன் என்று சொல்லி அழுதார்களாம். இவர் ஜெபிக்கும் போது ஆண்டவர் - நான் ஒரு பிள்ளை போல் உடனிருந்து அவர்களைப் பார்த்துக் கொள்வேன். கலங்க வேண்டாம் என்று சொல் என்று சொன்னாராம். கேட்ட போது என்க்கு ஆச்சர்யமாக இருந்தது. பிள்ளை போலும் நேசிக்க அவரால் கூடும்!
எச்சரிக்கை: இது தமிழ் கிறித்தவ தளத்தில் என்னுடைய 1003 வது பதிவு..!
"நான் இயேசுவை காதலிக்கிறேன்" என்று சொல்லுவது சரியா, தவறா..? என்பதற்கு நேரடியாக பதில் காண்போமே,அது நிச்சயமாகவே தவறுதான் அல்லது அறியாமை காரணமான குழந்தைத்தனமான கருத்து;
இயேசு ஒன்றும் கிருஷ்ணனோ அவருடைய பக்தர்கள் மீராவைப் போன்றவர்களோ அல்ல; இவையெல்லாம் அந்நிய மார்க்க போதனைகளால் பரவி வந்தவை; வேதத்தில் கூறப்பட்டுள்ள மணவாளன் மணவாட்டி போதனை முற்றிலும் வேறானது.
தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் "எனது மணவாளனே" என்றோ "கவர்ச்சி நாயகனே" என்றோ பாடிவிட்டதால் மட்டுமே அனைத்தும் சரியாகிவிடாது;அவர் ஆரம்பித்து வைத்த ட்ரெண்டைப் பின்பற்றி பலர் புறப்பட்டு காரியத்தைக் கெடுத்தது குறித்து விவாதித்துக்கொண்டிருந்தால் ஆக்கப்பூர்வமான எந்த வேலையையும் பார்க்கமுடியாது.
தேசபக்தி,ஆத்தும ஆதாயம்,அக்கினி அபிஷேகம்,குடும்ப ஆசீர்வாதம்,காதல் தோல்வி,வியாபாரத்தில் தோல்வி என்று ஒரு அன்றாட மனிதன் சம்பந்தமான அனைத்து தளங்களிலும் லேகிய வியாபாரிகளைப் போல பலரும் எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள்;இவையனைத்துமே சரி என்றோ தவறு என்றோ தீர்க்கமுடியாது.
இவற்றில் நம்முடைய நிலை என்னவென்றால் எப்படியோ கிறித்து அறிவிக்கப்படுகிறார் என்பதே..!
ஒரு முக்கியமான கேள்வி கேட்கவேண்டும் என்று நினைத்தேன்,காதலிப்பது தவறு அல்லது தோற்றுப்போனவர்களுக்காக என்று ஊழியம் செய்யும் சகோதரர் ராஜ் அவர்களுடைய முயற்சிகள் நல்லதாகவே இருக்கட்டும், அவர் காதல் திருமணம் செய்தவரா அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணம் செய்தவரா என்று சொல்லுவீர்களா?
சகோதரி கோல்டா அவர்களுக்கு ஒரு குறிப்பு:
ஒவ்வொரு பின்னூட்டத்தின் கீழும் வலதுமூலையில் என்று "Quote" உள்ளதை "கிளிக்"கி அதிலிருந்து தேவைப்பட்ட வரிகளை மட்டும் தேர்வு செய்துகொண்டு அதன்கீழ் உங்கள் கருத்துக்களைப் பதிக்கலாமே..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சமீபத்தில், பல காதல் கதைகளைக் கேட்டு, ஆவிக்குரிய சபையிலா இப்படி என்று அதிர்ச்சி அடைந்தேன். பல versions இருப்பதால் எது பொய் எது உண்மை என்று தெரியவில்லை. எனக்கு புரியாதது, எப்படி பெற்றோர் இவ்வளவு careless ஆக இருக்கிறார்கள்?
ஒரு முறை ஆண்டவர் எனக்கு சொன்னது, விளையாட்டுக்காக கூட,ஒரு ஆணையும், பெண்ணையும் சேர்த்து, கேலி பேசக் கூடாது. அப்படி யாரும் பேசினால், நீ அதில் கலந்து கொள்ளக் கூடாது. இப்படிப்பட்ட வெளிப்பாடுகள் ஏன் பல மூத்த கிறிஸ்தவர்களுக்கு கூட இல்லை என்று எனக்கு புரிவதில்லை. சர்வ சாதாரணமாக அவன் இவளை காதலித்தான். இவள் அவனை காதலித்தாள் என்று வாய் கூசாமல் (உண்மையோ,பொய்யோ...) சபையில் உள்ளவர்கள் பற்றியும் சொல்றாங்களே என்று எனக்கு வருத்தமாக இருக்கும்.
இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்/பையன், இரட்சிக்கப்பட்ட பையன்/ பெண்ணைக் காதலிக்கலாமா?
கூடாது என்று தங்கத்தைக் கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லை என்ற பாடலுக்கு சொந்தக்காரர் ராஜூ (பெங்களூர்) சொன்னார்.அருமையான தேவ மனிதர்.அவர் பேசுவதை சமீபத்தில் கேட்க நேர்ந்தது.காதல் கூடாது என்று, ஆபாச சினிமா படங்கள், பாடல்கள் பார்ப்பதை/கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் இளம் உள்ளங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மிகவும் அருமையாக பேசினார். பரிசுத்த வாழ்க்கைதான் அதி முக்கியம் என்று பரிசுத்தத்தை மிகவும் வலியுறுத்திப் பேசினார்.(உங்க பகுதிக்கு அவரைக் கூப்பிட்டு வாலிபர் கூட்டம் நடத்த நான் சிபாரிசு செய்கிறேன்!)
பெங்களூரில் ஒரு முறை அவர் வண்டியில் போய் கொண்டிருந்தபோது, ஒரு பார்க் வந்தபோது, ஆண்டவர் உள்ள போய் பார் என்று சொன்னாராம். இவர் ஒரு சுற்று சுற்றி வைந்திருக்கிறார். பல காதல் ஜோடிகள் மரத்தடியில் கண்ணில் பட்டிருக்கிறார்கள். அப்படி ஒரு புதரை கடக்கும் போது,ராஜு பிரதர் மாதிரி தெரியுதே என்று ஒரு பெண் சத்தம் கேட்டிருக்கிறது. இவர் அது யாரென்று பார்க்காமல் வந்து விட்டாராம்.
கொஞச நேரம் கழித்து அந்த பெண் இவருக்குப் போன் பண்ணி, நீங்க அங்க வந்திருந்தீங்களா என்று கேட்க, இவர் ஆமாம் என்று சொல்ல, அது தன் சோகக் கதையை சொல்லியிருக்கிறது. அது 17 வயது நிரம்பிய கிறிஸ்தவ பெண். காதல் வலையில் சிக்கி, ஒரு முறை கருக்கலைப்பு செய்து, அவனிடமிருந்து தப்ப வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அழுததாம்.
இந்த மாதிரி பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகிறாய் என்று ஆண்டவர் கேட்டாராம். என்ன செய்யணும் என்று சொல்லுங்க என்று கேட்க, அடுத்த பாடல் கேசட்டில், இயேசுவை அதிகமாய் நேசிக்கச் சொல்லும் பாடல்களாய் எழுது என்று சொன்னாராம். நான் இயேசுவை காதலிக்கிறேன் என்ற பாட்டை ஆண்டவரே கொடுத்தாராம். காதல் கீதல் என்று இவன் தப்பு தப்பா எழுதுறான் என்று கேசட் வெளியிட வேண்டிய பாஸ்டர் மாட்டேன் என்று சொல்லி விட்டாராம். எல்லா கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் விற்கக் கூடாது என்று தடையும் போட்டுவிட்டார்களாம். அப்புறம் தடை மாறியது. பலர் அந்த கேசட் கேட்டு, உலக காதலை விட்டு, இயேசு கிறிஸ்துவை காதலிப்பவர்களாய் மாறியிருக்கிறார்கள் என்று சொன்னார். அடுத்த கேசட் தலைப்பு - WANTED - Dead to Sin, Alive For Christ - இதைத்தான் அதிகம் வலியுறுத்துகிறார். இப்படிப்பட்ட ஊழியக்காரர்களைப் பார்ப்பது என்ன சந்தோஷம்..!