Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஞானஸ்நானம் எனபது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
RE: ஞானஸ்நானம் எனபது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?
Permalink  
 


chillsam wrote:
ஞானஸ்நானம் மாத்திரமே ஒருவனை இரட்சிக்காது என்ற கூற்று தவறானது என்பதை மீண்டும் வலியுறுத்தவிரும்புகிறேன்.பொறுமைக்கு நன்றி..!

 எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு தெரிந்து சிலர் சில காரியங்களுக்காக மூழ்கி  ஞானஸ்நானம் எடுத்து, அதன் பின்னர் அவர்கள் மீண்டும் விக்ரக ஆராதனைக்கு போய் விட்டார்கள். அவர்கள் இரட்சிக்க பட்டவர்களா? (இது என்னுடைய புரிதலுக்காக மாத்திரமே இங்கு கேட்டுள்ளேன்).



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

@John Edward //என்னுடைய கருத்துக்கள் தவறாய் புரிந்து கொளப்பட வாய்ப்பு இருப்பதால் இதற்க்கு மேல் இந்த தொடுப்பில் நான் ஏதும் எழுத விரும்பவில்லை //

கர்த்தருக்குள் பிரியமான நண்பரே,

சங்கடமில்லாமல் கருத்துக்களைப் பகிரவே இதுபோன்ற சமுதாய தளங்கள் இருக்கின்றன;அதிலும் இங்கே தேவக் காரியங்களை அலசுவது நல்லதொரு வாய்ப்பாகும்;இந்நிலையில் நீங்கள் ஏன் இப்படியான ஒரு கட்டுப்பாட்டை உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்? பவுலடிகளும் கூட தான் தனக்கு அறிவிக்கப்பட்ட ஒன்றையும் மறைக்காமல் ஒப்புவித்ததாக சொல்கிறாரே? சம்பந்தமில்லாவிட்டாலும் ஒரு வசனம் நினைவுக்கு வருவதால் பதிக்கிறேன்.

  • "உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்." (ஏசாயா.58:7)

ஞானஸ்நானமே ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் தன்னை இணைத்துக்கொள்ளும் வாசல் என்றால் மிகையாகாது;அதில் எதுவுமே சாய்ஸ் கிடையாது; உதாரணமாக கிருபை தேவனுடைய தரப்படுவதாக இருக்குமானால் விசுவாசம் நம்முடைய தரப்பிலிருந்து வெளிப்படவேண்டும்; விசுவாசம் நம்மில் வெளிப்பட உதவியாக வேத வார்த்தைகள் இருக்கிறது.இப்படி ஒன்றையொன்று சார்ந்ததாக இருக்கும் சத்தியங்கள் ஒருபோதும் ஒன்றையொன்று முந்தாது மறுக்காது என்பதைத் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

எனவே ஞானஸ்நானம் மாத்திரமே ஒருவனை இரட்சிக்காது என்ற கூற்று தவறானது என்பதை மீண்டும் வலியுறுத்தவிரும்புகிறேன்.பொறுமைக்கு நன்றி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

சகோதரர் Chill Sam அவர்களே..! இயேசு கிறிஸ்துவின் தியாகபலி, பரிகார பலி மட்டுமே என்னை இரட்சிக்கும் என விசுவாசித்து, அந்த விசுவாசத்தை அறிக்கை செய்யும் விதமாக ஞானஸ்நானம் எடுப்பது மாத்திரமே ஒருவரை இரட்சிக்கும். வெறுமனே பெந்தேகோஸ்தே பெண்ணை (அலல்து ஆணை) திருமணம் செய்வதற்காகவோ, பெற்றோரின் வற்புறுத்துதலுக்காகவோ, அல்லது இன்ன பிற காரணங்களுக்காகவோ.... விசுவசமில்லாதவனாகி ஞானஸ்நானம் மாத்திரம் பெற்றவன் நிச்சயம் இரட்சிக்கப்படமுடியாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். தாங்களும் இதையே விசுவாசிப்பவர் என்றும் நம்புகிறேன்...!

//என்ற உங்கள் கருத்தை வாபஸ் பெற்றாலே போதுமானது//

நான் தெரியாத்தனமாகவோ அல்லது தவறிபோயோ எதையும் எழுதவில்லையே சகோதரரே... வாபஸ் வாங்கும் அளவிற்கு என் கருத்தில் தவறிருப்பதாக தோன்றவில்லை.

//இயேசு எடுத்துக்கொண்ட மாதிரியின்படி, பிலிப்பு கொடுத்த மாதிரியின்படி, வேதத்தில் வெளிப்படையாக சொல்லப்பட்டுள்ள மாதிரியின்படி ஒருமுறை எடுத்துக்கொள்வதொன்றும் அவ்வளவு கடினமானதல்லவே..! அது நம்முடைய கீழ்படிதலின் அடையாளம் கூட அல்லவா...! யோவான் கொடுத்த ஞானஸ்நானம் போதாதென்று கருதி பவுல் பின்னும் ஒரு ஞானஸ்நானம் கொடுத்ததும் உண்டே //

என்ற மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கமே அதற்கு போதுமானதல்லவா....!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

@Peter Samuel S  // இயேசு கிறிஸ்துவின் தியாகபலி, பரிகார பலி மட்டுமே என்னை இரட்சிக்கும் என விசுவாசித்து, அந்த விசுவாசத்தை அறிக்கை செய்யும் விதமாக ஞானஸ்நானம் எடுப்பது மாத்திரமே ஒருவரை இரட்சிக்கும்.//

நண்பரே, பின்னூட்டங்களில் தீர்வு எட்டப்பட முடியாது என்ற காரணத்தினாலேயே நான் இங்கே அதிகம் எழுதுகிறதில்லை; எனவே கருத்தை சுருக்கமாக முன்வைக்கிறேன்.

 ஞானஸ்நானத்தை யார் யாரெல்லாம் தவறாக எடுக்கிறார்கள் என்பதல்ல பிரச்சினை,ஞானஸ்நானம் எனும் கிரியையின் பலனாக வேதம் எதை சொல்லுகிறது,என்பதே.

அதன்படி இயேசுவானவரின் "தியாக பலி"யினால் நீங்கள் குறிப்பிட்டது போல கல்மனம் உருகுகிறது,"பரிகார பலி" என்பதால் அவரிடம் சேருவதற்குத் தடையாக இருக்கக்கூடிய பாவங்கள் பரிகரிக்கப்படுகிறது;இறுதியாக "ஞானஸ்நானம்" எனும் கீழ்ப்படிதலின் கிரியையினால் இரட்சிப்பு அதாவது ஆத்தும இரட்சிப்பு உண்டாகிறது.

ஆனால் (மேசியாவின்) எதிரிகளின் கூற்றுப்படி ஆத்துமா மரித்த நிலையில் இருப்பதால் சரீரத்துக்கு மாத்திரமே ஞானஸ்நானம் என்று நினைக்கிறேன்.விசுவாசம் மாத்திரமே போதும் என்றால் முழுக்கு தேவையில்லை,தெளிப்பு மாத்திரமே போதும் என்றாகிவிடும்;ஏனெனில் ஒரு சிறு அப்பத்துணிக்கையை கிறிஸ்துவின் சரீரமாக நினைவுகூர்ந்து உண்ணும் விசுவாசிக்கு சில துளிகள் ஜலம் தெளிக்கப்பட்டால் முழுவதும் நனைந்த உணர்வு வராதா என்ன..?

இந்து மார்க்கம் மற்றும் பௌத்த மார்க்கத்தின் நடைமுறைகளிலிருந்தே இதனை உணரலாம்;அதில் நாம் ஞானஸ்நானம் என்பதற்கு ஈடான ஒரு சடங்கு நடைபெறும்,அதற்கு "தீட்சை" என்று பெயர்..!

இறுதியாக,‎ //ஞானஸ்நானம் யாரையும் இரட்சிக்காது என்பது உண்மைதான் சகோதரரே..// என்ற உங்கள் கருத்தை வாபஸ் பெற்றாலே போதுமானது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இது அண்மையில் ஃபேஸ்புக்கில் பதிக்கப்பட்ட கருத்து.

// ஞானஸ்ஞானத்தை //

முதலில் ஞானஸ்நானம் என்ற வார்த்தையையும் அதன் பொருளையும் அறிந்துகொள்ளுங்கள்;ஞானஸ்ஞானம் அல்ல, ஞானஸ்நானம்; அதாவது ஞானம் + ஸ்நானம்,இந்த வார்த்தை தமிழில் தவிர வேறு மொழிகளில் இந்த பொருளில் பயன்படுத்தப்படவில்லை;

உதாரணமாக தெலுங்கில் இதே கிரியை சம்பந்தமான வார்த்தை பாப்டிஸமு என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது;"பாப்டிஸமு" என்பது தெலுங்கு வார்த்தையுமல்ல, இதைக் குறித்து எமது தளத்தில் எழுதியிருக்கிறேன்.

http://chillsam.activeboard.com/t41358264/topic-41358264/

ஞானஸ்நானம் என்ற வார்த்தையினை திருத்திய மொழிபெயர்ப்பில் "திருமுழுக்கு" என்று சொல்லப்படுகிறது. அதன்படி எளிமையாக அதன் பொருளை விளங்கிக்கொள்ளலாம்;

எந்தவொரு பெந்தெகொஸ்தே சபையிலும் எடுத்தவுடனே யாருக்கும் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை; குறைந்தது ரெண்டு வருடமாவது புதிய உறுப்பினருடைய போக்குவரத்துகளை கவனிக்கிறார்கள்; அதன்பிறகே ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்;

மாத்திரமல்லாமல் திருமுழுக்குக்கு முன்பதாகவும் குறைந்தது மூன்று தனி வகுப்புகள் அமைத்து ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து போதித்து பிறகே ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்; எனவே உண்மை நிலவரத்தை ஆழ்ந்தறிந்து ஆய்ந்தறிந்து கருத்து கூறுமாறு நண்பரை வேண்டுகிறேன்.

மற்றபடி ஞானஸ்நானம் ஒருவரையும் இரட்சிக்காது,அது இரட்சிக்காது, இது இரட்சிக்காது, அது மாத்திரம் போதாது, இது மாத்திரம் போதாது என்பன போன்ற கவைக்குதவாத வார்த்தைகளை ஆவியைப் பெற்றதாகச் சொல்லிக்கொள்ளுவோர் பயன்படுத்தாதிருப்பது நல்லது; இதுவும் துருபதேசங்களை தந்திரமாக உள்ளே நுழைக்கும் ஒருவித தந்திரமே.

இந்திய தேசிய கொடியிலுள்ள சக்கரத்தில் அமைந்திருக்கும் கம்பிகளைப் போன்றதே கிறிஸ்தவ ஆதாரப் போதனைகள்; சைக்கிளிலும் கூட 24 ஸ்போக்ஸ் என்று நினைக்கிறேன்,அதில் ஒன்று இல்லாமற் போனால் பெரிய பிரச்சினை ஒன்றும் வராது; ஆனால் அந்த ஒரு ஸ்போக்ஸ் இல்லாத காரணத்தினால் அருகிலுள்ள மற்றது பெலவீனப்பட்டு அவையும் கழன்று விழுந்து வீல் வளைந்து இணைத்திருக்கும் ஹப் வரை பிரச்சினை வரும்; ஹப் புக்குள் இருக்கும் கோன் பால்ஸ் அக்ஸில்,நெட் போல்ட் என எல்லாமே ஒரு நாளில் கழன்று விடும்;கொஞ்சம் யோசிங்க ஸார்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
ஞானஸ்நானம் எனபது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?
Permalink  
 


எங்கள் சபையில் வாலிபர் கூடத்தில், புதியதாக விவாதம் சேர்க்கப்பட்டுள்ளது. இது  அறிந்த/அறியாத பல விஷயங்களை அனைவரும் அறிய ஒரு வாய்பாக இருக்கும்.

 

இந்த வாரம் இதற்கான தலைப்பு

 

ஞானஸ்நானம் எனபது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?

 

எனக்கு என்ன வேண்டும் என்றால்.....

 

1. இதை பற்றிய பொதுவான தவறான கேள்விகள்/எண்ணங்கள் மற்றும் அதற்கான பதில்கள்.

2. பைபிள் வசனங்களின் மேற்கோள் (எனக்கு சில வசனங்கள் தெரியும், இருந்தாலும், உங்களிடமிருந்து இன்னும் சில மேற்கோள்களை எதிர் பார்கிறேன்).

3. அடுத்த வார/மாத திற்கான சில விவாத தலைப்புகள்.

 

மிக்க நன்றி.......



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard