இவர் இலங்கையிலிருந்து போனவர்.அங்கு சபை ஆரம்பித்து, ஃபிரான்ஸ் தேசத்துப் பெண்ணை திருமணம் செய்து பல வருடங்களாக ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்.நல்ல பாடகர்.
நம்மிடம் பிழை இருப்பது உணர்த்தப்பட்டால், அமைதியாய் இருக்க வேண்டும், நான் யார் தெரியுமா, நான் எப்படிப்பட்ட நீதிமான், எவ்வளவு பெரிய பாஸ்டர்/ஊழியன், என்னென்னெ காரியமெல்லாம் ஆண்டவருக்காக செய்திருக்கேன் தெரியுமா என்று நீதியை நிலை நாட்ட முயற்சிக்க கூடாது. பெரிய பாஸ்டரோ, சாதாரண விசுவாசியோ தவறுவது இயல்புதான்.
பிழை உணர்த்தப்பட்ட போது அமைதியாய் இருந்தவர்கள்
1. லேவி 10: 1-3 -ஆரோன்- தன் பிள்ளைகள் இறந்தற்குக்,அவர்கள் வாழ்க்கையில் காணப்பட்ட தவறுகளே காரணம் என்று அறிந்து கொண்டதால் யாரையும் குறை சொல்லாமல் ஆண்டவரை குறித்து முறுமுறுக்காமல் அமைதியாய் இருந்தார்.
2. லேவி 10:20 -மோசே- காரணமில்லாமல் ஆரோன் மேல் கோபப்பட்டது உணர்த்தப்பட்டவுடன் அமைதியாய் இருந்தார்.
3.கலா 3 : 11-144 -பேதுரு- பெரிய ஊழியர் பேதுருவின் மாய்மாலத்தை சிறிய ஊழியர் பவுல் கடிந்து கொள்கிறார். நான் எவ்வளவு பெரிய ஆள். என் மேல் சபையைக் கட்டுவேன் என்று ஆண்டவர் சொலியிருக்கிறார். இயெசுவோடு கூட 3 1/2 வருடங்கள் உண்டு உறங்கி நெருக்கமாக வாழ்ந்த என்னையா இப்படி பேசுகிறாய் என்று பேதுரு சொல்லாமல், தவறை உணர்ந்து அமைதியானார்.
பிறர் நமக்கு விரோதமாய் பிழை செய்யும் போதும் நாம் அமைதியாய் இருக்க வேண்டும்.
அப்படி அமைதி காத்தவர்கள்
1. ஆதி 42:8,9 - யோசேப்பு- சகோதரர்களைக் கண்ட போது, அவர்கள் செய்த அநியாயங்களை அல்ல, தேவன் தனக்குத் தந்த சொப்பனங்களைத் தான் நினைவு கூர்ந்தார். அவர்களைப் பழி வாங்க துடிக்காமல் அமைதியாய் இருந்தார். நாமும் நம் வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும் நன்மைக்கே என்று சொல்லி, ஆண்டவர் கொடுத்த தரிசனங்களை, சொப்பனங்களை நினைவில் கொள்ள வேண்டுமேயன்றி, பிறர் செய்த துரோகங்களை அல்ல.
2. ஆதி 31: 38-42 - யாக்கோபு - உடன் ஆண்டவர் இருக்கிறார் என்று யாக்கோபு அறிந்திருந்தபடியால், தன்னை அநியாயமாய் நடத்திய மாமாவிற்கு விரோதமாக எழும்பவில்லை.அமைதியாய் இருந்தார்.
3.மத் 1:19 - யோசேப்பு - மரியாள் தவறு செய்திருக்கிறாள் என்று நினைத்த போதும் அனைவரும் அறியும்படி தூற்றி திரியாமல், அமைதியாய், ரகசியமாய் தள்ளிவிடலாம் என்று முடிவு செய்தார். நாமும் பிறர் பாவங்களைத் தூற்றித் திரியாமல் அமைதியாய் இருக்க வேண்டும்.
4.ஆதி 19:26 - லோத்து- மனைவி பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூண் ஆன போதும் லோத்து ஆணடவரை குறை சொல்லாமல் அமைதியாய் இருந்தார்
தன் பிழை உணராதவர்களுக்கு என்ன நடக்கும்?
1. I சாமு 13:10-14- சவுல் - கீழ்படியவில்லை. அது தவறென்று சாமுவேல் சொன்னபோது, தன்னைத் தாழ்த்தவில்லை. ஆண்டவர் மனஸ்தாபப்பட்டார். இராஜ்ய பாரம் அவனை விட்டுப் போனது
2. அப் 5 :1 - அனனியா, சப்பீராள் - பொய் சொன்னார்கள். தவறைத் திருத்திக் கொள்ளவில்லை. உடனே இறந்தார்கள்.
3. மத் 26:25 - யூதாஸ் - ஆண்டவர் உணர்த்துகிறார். மனம் திரும்ப வில்லை. தற்கொலை செய்து கொண்டான்
4. லூக்கா 23: 39-41 - கெட்ட கள்ளன் - மனம் திரும்பக் கிடைத்த சந்தர்ப்பத்தை வீணாக்கினான். நரகம் சென்றான்.