Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அகஸ்டின் ஜெபக்குமாரின் தீர்க்கதரிசனம்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
அகஸ்டின் ஜெபக்குமாரின் தீர்க்கதரிசனம்
Permalink  
 


அகஸ்டின் ஜெபக்குமார் Todd Bentley நடத்திய லேக்லேண்ட் எழுப்புதல் பெருவிழாவில் கலந்து கொண்டதாகவும், அபிஷேகம் நிறைந்த ஒரு மனிதனை நோக்கி இப்படித்தான் ஜனங்கள் செல்வார்கள் என்று அவர் சொல்வதாகவும் ஒரு video clipping அங்கு பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன். அவர் தரிசனம் , தூதர் பார்க்கும் தீர்க்கதரிசிகளை போட்டு காய்ச்சியதை ஒரு சமயம் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர் எப்படி Todd Bentley யை ஏற்றுக் கொண்டாரோ தெரியவில்லை.இப்பொழுது Todd Bentley பற்றிய கருத்துக்களைக் கண்டிப்பாக மாற்றிக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை!

இப்படித்தான் சாதுவும் ஆரம்பத்தில் Todd Bentley யைப் பாராட்டிப் பேசியதைக் கேட்டு அவருக்கு நான் அனுப்பிய மெயில் இது!

---

Todd Bentley lied when he said 32/33 dead people were resurrected through his ministry during the so called Lakeland revival. It seems he also lied when he said- God told me that there are 1000 people in the crowd who will give 1000 dollars. He was also drinking heavily and got involved with a woman in his ministry and thus the revival came to an end!. He immediately divorced his wife and very quickly married the other woman.He has said that God showed his first wife in a vision and that is why he married her. Can one divorce such a wife given by God? Why was he not patient? All the time he was speaking about angels, portals, annointing, experiences etc but showed no fruit. He was also kicking people when they came for prayer for healing. You were openly supporting Todd Bentley, if I remember correctly. Many ministers in the west like Rick Joyner, Peter Wagner were also supporting him without any discernment. Now Rick Joyner is restoring Todd Bentley and trying to bring him back to public ministry.

Our God is a wonderful God and forgives when there is a true repentance. Even if the drinking and adultery is forgiven(assuming there is a real repentance), can God overlook the deliberate lies said in His name- 1000$ offerings, 33 resurrections etc?

---

 

இது அவ்ருக்கு அனுப்பிய இன்னொரு மெயில்...

--
Rick Joyner ஐ திரும்ப quote பண்ணி பேசினீர்கள். That is disappointing again.

கள்ள தீர்க்கதரிசி என்பவன் ஜீவனுள்ள தேவனை விட்டு வழி தப்பிப் போகப் பண்ணுபவன் என்று சொன்னீர்கள். ரிக் ஜாய்னர் அந்த category யில் தான் வருகிறார். Dominion Theology என்னும் தவறான் உபதேசத்தை வைத்து ஜனங்களை ஜீவனுள்ள தேவனை விட்டு வழி விலகச் செய்யும் New Apostolic Reformation -NAR- (founded by Peter Wagner) இல் இவர் ஒரு முக்கிய அங்கத்தினராக இருக்கிறார். பொய் புளுகாணியாய் இருந்த Todd Bentley யை தீவிரமாய் ஆதரித்தவர். அவசர அவசரமாய் Todd Bentley செய்த இரண்டாம் கல்யாணத்தை கடிந்து கொள்ளாமல், அரவணைத்து, தனியே மனந்திரும்ப விடாமல், public show ஆக்கியவர்.

அவர் பார்த்த தரிசனங்களில் அப். பவுல் குறைத்துப் பேசப் படுகிறார். பவுல் தான் தன் நிருபங்களில் homosexulaity க்கு விரோதமாய் பேசியிருக்கிறார். இயேசு கிறிஸ்து ஒன்றும் சொல்லவில்லை என்று சொல்லி homosexual people க்கு பவுல் பொதுவாக பிடிக்காதாம். பவுலை குறை சொல்லும் ஊழியக்காரர்களை அவர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்களாம். அது போல் homosexual behaviour க்கு soft corner உள்ள ஊழியக்காரர்கள் பவுலுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்களாம். ரிக் ஜாய்னர் ஏன் பவுலை குறை சொல்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். நீங்க ஏன் அவரை திரும்ப திரும்ப quote பண்றீங்க என்பது உங்களுக்குத்தான் வெளிச்சம்,
--

பாருங்க எப்படியெல்லாம் அவரை பாராட்டி எழுதியிருக்கேன் என்று!!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

spetersamuel wrote:

ச‌கோத‌ரி கோல்டா அவ‌ர்க‌ள் எழுதியிருப்ப‌தை பார்த்தால் " நீ என் ஆளை குறை சொன்னாய‌ல்ல‌வா, உன் ஆளின் ல‌ட்ச‌ண‌த்தைப் பார்" என்ற‌ தொனி உள்ள‌து.


அகஸ்டின் ஜெபக்குமார் எனக்கும் அண்ணன் தான்! எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். 

spetersamuel wrote:


1)எருச‌லேமின் ச‌மாதான‌த்திற்காக‌ ஏறெடுக்க‌ப்ப‌டும் ஜெப‌த்தில் ஏதாவ‌து அர்த்த‌ம் உள்ள‌தா? (உங்க‌ள் ம‌ன‌சாட்சியிட‌ம் கேட்டுப்பாருங்க‌ள் = யாரிட‌மோ காசு வாங்கிக்கொண்டு ஜெபிப்ப‌து போல் தெரிய‌வில்லையா அல்ல‌து குறைந்த‌ப‌ட்ச‌ம் ஒரு சுய‌ ந‌ல‌ம் தென்ப‌ட‌வில்லையா) அவர் புதிய ஏற்பாடு வாசித்த‌தில்லையா.


ஆவிக்குரிய இஸ்ரவேலர்களான நமக்கே ஆதிப் பிதாக்களுக்களித்த வாக்குத்தங்கள் எல்லாம் சொந்தம் என்றால், எழுத்தின்படியான இஸ்ரவேலர்களான அவர்களுக்கு எவ்வளவு அதிகமான உரிமை இருக்கக்கூடும். அதனால்தானே இஸ்ரேல் என்னும் தேசமே அங்கு இக்காலத்தில் இருக்கிறது. இயேசுவல்லாமல் அவர்களுக்கும் இரட்சிப்பு இல்லை என்றாலும், I do have a soft corner for the land of Israel and Jews. நான் போய் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் ஒரே தேசம் இஸ்ரேல் தான். எருசலேமின் சமாதானத்திற்காக, இஸ்ரேல் தேசத்திற்காக, யூதர்களின் இரட்சிப்புக்காக (காசு வாங்காமலே) ஜெபிக்க வேண்டியது நம் கடமையாக இருக்கிறது. அது நம் தாய் நாடு. எருசலேம் மகாராஜாவின் நகரம். அவர் நாமம் அங்கே எழுதப்பட்டிருக்கிறது. அங்கிருந்துதான்  இயேசு கிறிஸ்து ஆயிரம் வருடம் அரசாட்சி செய்யப் போகிறார். அது நித்திய தலைநகராய் இருக்கும். எருசலேமில் தான் ஆதியில் ஏதேன் தோட்டத்தை மனிதன் இழந்தான். அது சிலுவையில் திரும்ப மீட்கப்பட்ட இடமும் அதுதான். அது ஆண்டவரின் இடமாக இருப்பதால்தான், பிசாசு அதன் சமாதானத்தைக் கெடுக்க, யூதர்களைக் கொல்ல பயங்கரமாக கிரியை செய்து கொண்டிருக்கிறான். சிதறடிக்கப்பட்டவர்கள் இஸ்ரேல் தேசத்திற்கு திரும்ப வந்த போது, முதல் வருகை சம்பவித்தது. திரும்ப யூதர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். 1948 ல் திரும்ப தேசம் உருவாயிற்று. யூதர்கள் தேசம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இரண்டாம் வருகை சம்பவிக்கும். எல்லா தீர்க்கதரிசனங்களும் இஸ்ரவேல் தேசத்தை மையப்படுத்தி எழுதப்பட்டதே.

spetersamuel wrote:


2)அவ‌ர்க‌ள் சொல்லுகிற‌ தீர்க்க‌ த‌ரிச‌ன‌ங்க‌ள் நிறைவேறினால் அத‌ற்காக‌ ப‌ரித‌விப்ப‌தை விட்டுவிட்டு அதையே திரும்ப‌ திரும்ப‌ காட்டி விள‌ம்ப‌ர‌ம் தேடிக்கொள்வ‌து யாரை உய‌ர்த்த‌? (இயேசுவையா த‌ங்க‌ளையா)


 

ஏரேமியா தீர்க்கதரிசி,  பாபிலோனிற்கு சிறைப்பட்டுப் போவீர்கள் என்று சொன்னார். அதன்படி நடந்தவுடன் புலம்பல் தான் பாடினார். நடப்பதற்கு முன்னும் கண்ணீர் வடித்தார். நடந்தபின்னும் கண்ணீர் வடித்தார். எந்த உண்மை தீர்க்கதரிசியும் அப்படித்தான் இருப்பார்கள். சொன்னது - நிறைவேறியது என்று செய்தி போட்டால், இரட்சிக்கப்படாதவர்கள் , இதெல்லாம் ஏன் சம்பவிக்கிறது, என்னதான் நடக்கிறது இவ்வுலகில், என்ற கேள்வி உள்ளவர்கள் அதைப் பார்க்கும் போது, ஓஹோ இப்படியெல்லாம் முன் கூட்டி சொல்லும் ஆண்டவர் ஒருவர் இருக்கிறார் என்று அறிந்து கொண்டு, தொடர்ந்து பார்த்து, இது கடைசிக் காலம், ஆண்டவர் வரும் காலம் என்று தெரிந்து கொண்டு இரட்சிக்கப்பட்டு ஆயத்தமாக ஏதுவுண்டாகும். 

இரண்டு வருடங்களுக்கு முன்பு இனி தீயினால் உண்டாகும் நாசங்கள் அதிகமாக இருக்கும். பெரிய தீ விபத்துகள் பல விதங்களில் உண்டாகும் என்று வின்சென்ட் செல்வகுமார் சொன்னார். இது ஒரு விதமான தேவ நியாயத்தீர்ப்பு. இதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்றும் சொன்னார். கவனித்துப் பார்த்தால் ,  தினந்தோறும்  உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்படுத்தும் தீ விபத்துகள் நடைபெறுவதை நாம் கேள்விப்படத்தான் செய்கிறோம். இது தேவ நியாயத்தீர்ப்பு என்பது ஒரு தீர்க்கதரிசி சொன்னால் தான் நமக்குத் தெரிகிறது, புரிகிறது. இதற்காக ஜெபிக்கத் தோன்றுகிறது. 

சுனாமி போன்ற நிகழ்வுகளை காணும் போது, பல நாட்கள் சரியாக சாப்பிடவும் தூங்கவும் முடிவதில்லை என்றும் வின்சென்ட் செல்வகுமார் சொல்லியிருக்கிறார். அவரை சில கூட்டங்களில்,சுனாமி வரும்முன் பார்த்த தீர்க்கதரிசி என்று சொல்லி அறிமுகப்படுத்துவார்களாம். அது கேட்க வேதனை தரும் என்று சொல்லியிருக்கிறார். பார்த்து என்ன பிரயோஜனம், ஜெபித்து தடுத்து நிறுத்தியிருந்தால் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்  என்று  சொல்லியிருக்கிறார்.

spetersamuel wrote:

4)ஏஞ்ச‌ல் டிவி தான் வெளிப்ப‌டுத்தின‌ விசேஷ‌த்தில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌ வான‌த்தில் ப‌ற‌ந்து எச்ச‌ரிக்கிற‌ 3 தூத‌ர்க‌ள் என்ப‌தை நீங்க‌ள் ஒத்துக்கொள்கிறீக‌ளா? அப்ப‌டியானால் வான‌த்தில் தூத‌ர்க‌ள் என்று யாருமில்லை என்கிறீர்க‌ளா?


 

யாருக்கும் ஆண்டவர் வேத வசனத்திலிருந்து தான் அவர் சித்தத்தை சொல்கிறார். 3 தூதர்கள் சொல்லும் செய்தியை சொல்லும் வேலைதான் Angel Tv க்கு என்று சொன்னால், அந்த வசனம் அவர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று நாம் நினைக்கத் தேவையில்லை. இன்னும் பலருக்கும் ஆண்டவர் அதே வசனத்தைக் காட்டி, இது தான் உன் வேலை என்று சொல்லியிருப்பார்.மனிதர்களுக்கு சுவிசேஷம் சொல்ல ஆண்டவர் மனிதர்களைத் தான் பயன்படுத்துகிறார். கோடி கோடி தேவ தூதர்கள் இருந்தாலும் அவர்களுக்கு இப்பணி கொடுக்கப்படவில்லை. நமக்கு நாமே தான் சொல்லிக் கொள்ள வேண்டும்.



சொன்ன காரியம் நடக்கவில்லை அல்லது தாமதிக்கிறது என்பதற்காக ஒருவரை கள்ள தீர்க்கதரிசி என்று சொல்லக் கூடாது. கள்ள தீர்க்கதரிசி என்பவன் ஜனங்களை ஜீவனுள்ள தேவனை விட்டு வழி விலக செய்பவன் என்று சாது சமீபத்தில் சொன்னதைக் கேட்டேன். அது சரியாகத்தான் எனக்குப் படுகிறது.

 ஒருத்தங்க சொல்றது நடக்குது என்பதற்காகவும் அவர்கள் சொல்லும்  எல்லாவற்றையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை ஏன் அண்ணன் அகஸ்டின் என்று குறிப்பிடுகிறோம் என்பதைக் குறித்து (மேசியாவின்) எதிரிகள் பல்வேறு காரணங்களைக் கூறி பரியாசம் செய்கிறார்கள்;அது குறித்து நமக்கு கவலையில்லை; ஏனெனில் அவர்கள் அதுபோல குறிப்பிடாமல் அவரை ஒருமையில் கீழ்த்தரமாகக் குறிப்பிட்டு தங்கள் வீரப்பிரதாபத்தைக் காட்டி வாசகர்தம் மனதில் பெருமைமிகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்களே, அதுவே நமக்கு போதும்.

ஒருவரைக் கீழ்த்தரமாக எழுதியே தவறுகளைச் சுட்டிக்காட்டும் அவசியம் நமக்கில்லை; ஆனாலும் சமூகத்தாலும் நீதிமன்றத்தாலும் கண்டிக்கப்பட்ட இரஸல் போன்ற கிரிமினல்களைப் புகழுவதற்கு ஆயத்தமாக இருக்கும் இவர்கள் அடித்தட்டு மக்களுடைய வாழ்வியல் தரம் உயரவும் சமுதாயத்தில் மறுமலர்ச்சியுண்டாகவும் பாடுபடும் கிறித்தவ தலைவர்களை எந்த முகாந்தரமும் இல்லாமல் பகைத்து தூஷிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

முக்கியமாக அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் கடந்த சுமார் 25 வருடத்துக்கு மேலாக பீஹார் மாநிலத்தில் அரசாங்கம் கூட நெருங்க முடியாத பகுதிகளை நெருங்கி கிறித்துவின் அன்பால் அந்த மாநிலத்தை நிரப்பியிருக்கிறார்; இந்த மாபெரும் சாதனையைச் செய்ய எந்த சபையும் அல்லது வெளிநாட்டு நிறுவனமும் அல்லது எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயமும் அவருக்கு உதவிசெய்யவில்லை; ஓடுற குதிரை மேல பலரும் பணம் கட்டுவார்கள்;ஆனால் நடைபழகும் குதிரைக்கு யார் கொள்ளு போடுவார்கள்..?

உண்மையில் எனக்கு ஜெம்ஸ் ஊழியத்தைக் குறித்து ஒன்றுமே தெரியாது; ஆனாலும் அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் மீதான பொதுவான நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே மரியாதையாகக் குறிப்பிடுகிறேன்; இவரை மாத்திரமல்ல, நான் விமர்சிக்கும் எந்த ஊழியரையும்  நான் தரக்குறைவாக எழுதியதில்லை; ஒரு சிலரை எழுதியிருந்தாலும் அது விதிவிலக்காகும். ஒருவேளை இரஸலைப் போல‌ நேரடியான கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தண்டனைக்குரியவர்களாக இருந்தால் அதுபோல குறிப்பிடலாம்; ஏனெனில் பத்திரிகைகளிலேயே கிரிமினல்களை மரியாதையுடன் குறிப்பிடும் வழக்கம் இல்லை.

ஆனாலும் இங்கே உபதேசரீதியிலான வேறுபாடுகளை முன்வைத்து இத்தனை ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் தமிழர்களைப் பார்த்து வெளிநாட்டினர் அறிய நேருமானால் நிச்சயம் சிரிப்பார்கள்; ஏனெனில் அங்கே ஆரோக்கியமான விவாதத்துக்கு வாய்ப்பு தரும் நாகரீகத்திலேயே அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்;

இங்கோ விமானப்படையிலேயே 20 வருடம் டயர் பஞ்சர் பார்த்தவனும் அதற்கு காற்றடித்தவனும் கூட சற்றும் நாகரீகமில்லாமல் நடந்துகொள்ளுவது குறித்து ஆச்சரியமாக இருக்கிறது; என்னைப் போன்ற சைக்கிளுக்கு பஞ்சர் பார்த்தவனைப் பார்த்து பொறாமையும் எரிச்சலும் கொண்டு எனக்கு சமமாக அவர்கள் வாதாடுவதை எண்ணி உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

அகஸ்டின் ஜெபக்குமாரின் தீர்க்கதரிசனம் பற்றிய அந்த வீடியோ போஸ்ட் பண்ணிய சகோதரருக்கு நன்றி. வின்செண்ட் செல்வகுமார், சாதுவை குறை பேசியவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறேன்.

 


 தீர்க்கதரிசன வரம் (வரப்போகும் சம்பவங்களை காட்சிகளாய் பார்ப்பது) என்பது ஞானத்தை போதித்தல் மற்றும் அறிவை உணர்த்துதல் போன்ற வரங்களுடன் சேர்ந்தே செயல்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
 
பார்வோன்களும் (தீர்க்க) தரிசனம் கண்டார்கள். ஆனால் அதன் அர்த்தத்தை வெளிப்படுத்த யோசேப்பு, தானியேலிடமிருந்த ஆவியானவரின் ஞானம் தேவைப்பட்டது. ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்றவர்களுக்குக் கூட தங்கள் கண்ட (நீ என்னத்தை காண்கிறாய் = வாதுமை மரத்தின் கிளையை காண்கிறேன் போன்ற‌) காட்சிகளின் அர்த்தத்தை வெளிப்படுத்த தூதர்களின் உதவி தேவைப்பட்டது. யோவான் அப்போஸ்தலரும் தாம் கண்ட காட்சிகளின் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள தூதர்கள், ஜீவன்கள், மூப்பர்கள் தேவைப்பட்டார்கள்.
 
ஆவியில் காண்கிற காட்சிகளை நம்முடைய உலக அறிவு, பொது அறிவு மற்றும் அறிவியல் அறிவு என்பவற்றின் உதவியோடு வெளிப்படுத்த முயற்சி செய்யும்போது தான் ப‌ல‌ வேளைக‌ளில் த‌வ‌று நேர்ந்துவிடுகிற‌து. இத‌ற்கு எந்த‌ பெரிய‌ தீர்க்க‌த‌ரிசியும் விதிவில‌க்க‌ல்ல. (நேர‌டியாக‌ கேட்கும் வார்த்தைக‌ள் போன்ற‌வை விதிவில‌க்கு). மேடையில் நிற்கும்போது காணும் த‌ரிச‌ன‌ங்க‌ள் ச‌ரியான‌படி ஆவியானவருடைய அறிவோடு ஆராய‌ப்ப‌டுவ‌த‌ற்கு நேர‌மின்மையால் அர்த்த‌ப்ப‌டுத்துவ‌தில் த‌வ‌று நேர்ந்திருக்க‌லாம்.

ச‌கோத‌ரி கோல்டா அவ‌ர்க‌ள் எழுதியிருப்ப‌தை பார்த்தால் " நீ என் ஆளை குறை சொன்னாய‌ல்ல‌வா, உன் ஆளின் ல‌ட்ச‌ண‌த்தைப் பார்" என்ற‌ தொனி உள்ள‌து.

ஆவிக்குரிய‌ வாழ்வில் யாரும் ந‌ம் எதிரிக‌ள் அல்ல‌. இயேசுவின் ஜீவ‌னைக் கொடுத்த‌ அன்பு எல்லோரோடும் எப்போதும் ந‌ம்மில் வெளிப்ப‌ட‌வேண்டும். இயேசுவை சிலுவையில் அறைந்த‌வ‌ர்க‌ளோடு அவ‌ர் காண்பித்த‌ க‌ரிச‌னை ந‌ம‌க்கும் வேண்டும். அதே நேர‌த்தில் த‌வ‌றான வழியில், இயேசுவை விட்டு வ‌ழி வில‌கிச் செல்லத் தூண்டுபவர்களை எச்ச‌ரிக்கும் பொறுப்பும் ந‌ம‌க்குள்ள‌து. எந்த தனி மனிதனும் இயேசுவுக்கு முன்பாக நமக்கு பெரிதல்ல. ஆண்டவரைக் குறித்து தவறாக என் தந்தை போதித்தாலும் எதிற்க வேண்டும் (பேதுரு மாயம் பண்ணிய போது பவுல் எதிற்கவில்லையா). யாரைக்குறித்தும் எந்த தனி மனிதனைக் குறித்தும் நமக்கு ஒரு கண்மூடித்தனமான அபிப்பிராயம் தேவையில்லையே!!!

இயேசுவை அப்பா என‌ அழைக்கும் எல்லோரும் ந‌ம் ச‌கோத‌ர‌ரே. சாது ஐயா ஒருபோதும் ந‌ம‌து எதிரி அல்ல‌. அவ‌ரைக்குறித்த‌ அபிப்பிராய‌ம் என்னும் திரையை வில‌க்கிவிட்டு அவ‌ரைக்குறித்து சொல்ல‌ப்ப‌டுப‌வ‌ற்றில் வசனத்தின்படி நியாய‌ம் உள்ள‌தா என‌ பாருங்க‌ளேன்.

1)எருச‌லேமின் ச‌மாதான‌த்திற்காக‌ ஏறெடுக்க‌ப்ப‌டும் ஜெப‌த்தில் ஏதாவ‌து அர்த்த‌ம் உள்ள‌தா? (உங்க‌ள் ம‌ன‌சாட்சியிட‌ம் கேட்டுப்பாருங்க‌ள் = யாரிட‌மோ காசு வாங்கிக்கொண்டு ஜெபிப்ப‌து போல் தெரிய‌வில்லையா அல்ல‌து குறைந்த‌ப‌ட்ச‌ம் ஒரு சுய‌ ந‌ல‌ம் தென்ப‌ட‌வில்லையா) அவர் புதிய ஏற்பாடு வாசித்த‌தில்லையா.

2)அவ‌ர்க‌ள் சொல்லுகிற‌ தீர்க்க‌ த‌ரிச‌ன‌ங்க‌ள் நிறைவேறினால் அத‌ற்காக‌ ப‌ரித‌விப்ப‌தை விட்டுவிட்டு அதையே திரும்ப‌ திரும்ப‌ காட்டி விள‌ம்ப‌ர‌ம் தேடிக்கொள்வ‌து யாரை உய‌ர்த்த‌? (இயேசுவையா த‌ங்க‌ளையா)

3)என‌க்குள் ப‌ரிசுத்த‌ ஆவியான‌வ‌ர் இருக்கிறார். என‌வே என்னை வ‌ண‌ங்கினால் த‌வ‌ற‌ல்ல‌ ஆவியான‌வ‌ரே அந்த‌ வ‌ண‌க்க‌த்தை ஏற்றுக்கொள்கிறார் என‌ கூறினால் அது ச‌ரியா? அப்ப‌டியானால் புற‌ ம‌த சாமியார்க‌ளுக்கும் இவ‌ருக்கும் என்ன‌ வேறுபாடு?

4)ஏஞ்ச‌ல் டிவி தான் வெளிப்ப‌டுத்தின‌ விசேஷ‌த்தில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌ வான‌த்தில் ப‌ற‌ந்து எச்ச‌ரிக்கிற‌ 3 தூத‌ர்க‌ள் என்ப‌தை நீங்க‌ள் ஒத்துக்கொள்கிறீக‌ளா? அப்ப‌டியானால் வான‌த்தில் தூத‌ர்க‌ள் என்று யாருமில்லை என்கிறீர்க‌ளா?

இப்ப‌டிப்ப‌ட்ட வேத‌த்துக்கு புற‌ம்பான‌வைகளைத் (தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் நம்முடைய குறைவினால் குறைவுள்ள‌தாயிருந்தாலும் வேத‌த்துக்கு புற‌ம்பான‌த‌ல்ல‌) தான் நாம் எதிர்க்க‌ வேண்டும். த‌னி ம‌னித‌னை அல்ல‌ என்ப‌தே என் தாழ்மையான‌ க‌ருத்து.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

வேதம் எழுதி முடிக்கப்பட்ட பின்பு சொல்லப்படும் எந்த ஒரு தீர்க்கதரிசனமும் குறைவுள்ளதே!

நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. (1 கொரி 13 :9 )

சகோ. சில்சாம் சொன்னது போல Motive ஐ ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அன்பு சகோதரி அவர்களே, ஆரோக்கிய உபதேசத்திலிருக்கும் நம்முடைய சகோதரர்களை தூஷிக்கும் (மேசியாவின்) எதிரிகளைப் புகழுவது போன்றதொரு கருத்துடன் அவர்களுடைய தளத்துக்குத் தொடுப்பைக் கொடுத்திருக்கிறீர்களே,இது நியாயமா..?

சில்சாம் இதுவரை யாருக்கும் அஞ்சியவனல்ல,கர்த்தரைத் தவிர; அப்படிப்பட்ட என்னுடைய கவனத்துக்கு நீங்கள் இந்த தொடுப்பை யூ ட்யூப் தளத்திலிருந்தே எடுத்து கொடுத்திருந்தால் நானே உங்களுக்கு பதில் சொல்லியிருப்பேன்; அகஸ்டின் அண்ணன் தவறாக சொல்லியிருந்தால் அதை தவறு என்று ஒப்புக்கொள்ள நான் தயங்கமாட்டேன்;இதுகுறித்து விரிவான கட்டுரையை விரைவில் எதிர்பாருங்கள்.உங்கள் தொடுப்பை நான் மாற்றியமைத்திருக்கிறேன்.

இப்போதைக்கு சில வரிகளில் சொல்லுகிறேன், அண்ணன் அகஸ்டின் அவர்கள் உண்மைக்கு மாறாக எதையும் சொல்லவில்லை; இன்னும் அவை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அப்படியே இருக்கிறது; உரைக்கப்பட்டவற்றில் 2009 -ல் ஈரான் இஸ்ரவேலைத் தாக்கும் என்பதைத் தவிர மற்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதானிருக்கிறது;இவற்றையெல்லாம் ஏற்கனவே செய்தி தாள்களிலும் ஊடகங்களிலும் பார்த்துக்கொண்டுதானேயிருக்கிறோம் என்று சில அறிவுஜீவிகள் கேட்கலாம்; ஆனால் காரியம் அதுவல்ல, இவை ஏற்கனவே வேதத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் அவை சம்பவிக்கப்போகும் காலக்கட்டம் இதுவே என்பதுவுமே தீர்க்கதரிசனமாகும்; தீர்க்கதரிசனம் என்பதற்கு மூலபாஷையின் ஆதாரத்தில் மேலும் இரு பொருள்களும் உண்டு;அவை உபதேசித்தலும் எச்சரித்தலுமே;

இதையே அண்ணன் அகஸ்டின் அவர்கள் செய்திருக்கிறார்; வருடம் 2009 என்று கணித்தது ஒன்றே எதிரிகளின் தூஷணத்துக்குக் காரணமாக இருக்கிறது; ஆனாலும்,

  • "தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது. உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்." (சங்கீதம்.102.13,14)

-எனும் வேத வசனத்தின்படி என்னை ஆட்கொண்ட ராஜா வரும் காலம் இதுவோ என்று அலைபாயும் ஊழியனின் அவசரமாகவே இது எனக்குத் தோன்றுகிறது; யாரையோ மோசடி செய்யும் நோக்கத்தில் இது இல்லை; ஏனெனில் ஒரு சம்பவம் நடக்கப்போவதாக ஏற்கனவே முன்னுரைக்கப்பட்டிருக்கிறது; அதையே மற்றொருவர் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்துச்சொல்லுகிறார் எனில் அதனை வாசிக்கும் - கேட்கும் யாருக்குமே குழப்பம் வருவது இயல்பு;

இந்த குழப்பத்திலிருந்து தானியேல் முதலாக யாரும் தப்பவில்லை;இதனால் ஊழியனுக்கும் சோர்வும் தளர்வும் உண்டாகிறது;அப்போது தான் ஆவியானவர் அந்த ஊழியனை தன் கரத்தில் எடுத்துக்கொள்ளுகிறார்; அவனுடைய வார்த்தை நிறைவேற்ற இன்னும் காலம் இருந்தாலும் அது தாமதித்தாலும் நிறைவேறும் என்று சொல்லி தேற்றுகிறார்.

அண்ணன் அகஸ்டின் மற்ற மீடியா நாயகர்களைப் போல உள்நோக்கத்துடன் எதையும் செய்பவரல்ல; எனவே அவர் நிமித்தமாக சஞ்சலப்படும் நண்பர்கள் இதனை கவனத்தில் கொள்ள பட்சமாய் வேண்டுகிறேன்.

  • "குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
  • இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்." (ஆபகூக்.2:3,4)

ஒரு சிறு குறிப்பு:

எங்கள் அன்புக்குரிய சகோதரி கோல்டாவை பொட்ட புள்ள என்று கீழ்த்தரமாகக் குறிப்பிட்டிருக்கிறான், MLM மோசடியாளன் சோலுசோலீஷன்; கோவை வட்டாரத்தில் சொந்த சகோதரியை யாரும் புள்ளை என்றே சொல்லமாட்டார்கள்;அந்த அளவுக்கு பெண்களை மதிக்கும் நாகரீகமிக்கவர்கள், கோவை வாசிகள். ஆனால் வேத ஆராய்ச்சி செய்யும் காகித புலிகள் எங்கள் சகோதரியை மிகச் சாதாரணமாக பொட்ட புள்ள என்று சொல்லி இழிவுபடுத்தியிருக்கிறார்கள்; இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அகஸ்டின் ஜெபக்குமாரின் தீர்க்கதரிசனம் பற்றிய அந்த வீடியோ போஸ்ட் பண்ணிய சகோதரருக்கு நன்றி. வின்செண்ட் செல்வகுமார், சாதுவை குறை பேசியவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறேன்.

 



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard