Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனின் சர்வவல்லமை மற்றும் முன்குறிப்பு(Predestination)


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: தேவனின் சர்வவல்லமை மற்றும் முன்குறிப்பு(Predestination)
Permalink  
 


ஒரு விஷயத்தை சகோதரர்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. கிழே உள்ளது எந்த அளவு உண்மையோ அதே போல ஒருவன் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட தேவன் தெரிந்துகொள்ளதது தான் காரணம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் தெரிந்து கொள்ளுதல் கிருபையின் அடிப்படையில் நடைபெறுகிறது மேலும் ஒருவனுடைய பாவங்களே அவனை நரகத்திற்கு எடுத்து செல்லுகிறது. பாவத்தின் அடிப்படையிலே ஒருவன் நரகம் போகிறான். சுருக்கமாக சொன்னால் நித்திய ஜீவன் என்பது தேவன் அருளும் ஈவு! நித்திய ஆக்கினை என்பது நாம் பாவத்தினால் சம்பாதித்து கொள்ளுவது. கிழே உள்ள வசனத்தின் படி யூதாஸ் தேவனுடைய திட்டத்தின் (Will of Decree) படி இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுத்தாலும் அது அவனுக்கு பாவமே!
 
 
இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார். (யோவான் 19:11)
 
 
யூதாஸ் தேவனுடைய Will of Command (உதாரணமாக தேவனுடைய 10 கட்டளைகளும் அவருடைய சித்தங்களே!) ஐ மீறியது பாவமே !


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
தேவனின் சர்வவல்லமை மற்றும் முன்குறிப்பு(Predestination)
Permalink  
 


நான் நிச்சயமாக நண்பர் Soul Solution ஐ பாராட்டுகிறேன் அவர் எழுதிய 09:20:58 May 14, 2011 பதிவில் பெரும்பாலானவைகளுக்கு ஒத்து போகிறேன் (Finally).

உண்மைதான் தேவன் சர்வ வல்லவர் , பிசாசு அவருக்கு நிகரான எதிரி என்று நினைப்பது தேவனை அசிங்கப்படுதுவதே! துரதிஷ்டவசமாக நிறைய கிருஸ்தவ போதககர்கள் தேவனை "காப்பாற்றும்" கொடூரமான காரியத்தை செய்கிறார்கள். ஆனால் அவருடைய  (Soul Solution) "Conclusion" மகா தவறு வேத விரோதம். ஜனங்களை சாத்தான் தேவனுடைய கையில் இருந்து பறித்து கொண்டு போய் நரகத்தில் தள்ளினால் அது தேவனுக்கு தோல்வி ஆனால் எல்லாரும் போகவேண்டிய நரகத்திற்கு (சரி சரி பாதாளத்திற்கு..) போகாமல் சிலரை மாதிரம் அவருடையை நித்திய கிருபையை காண்பிக்கும் படி பரலோகத்திற்க்கும் (சரி சரி பரதேசுக்கும் ...அப்புறம் இதை விவாதிக்கலாம்) சிலரை நித்திய நீதியை காண்பிக்கும் படி நித்திய ஆக்கினைக்கும் அனுப்பினால் அது அவருடைய சர்வ வல்லமையைத்தான் காண்பிக்குமே தவிர தோல்வியை அல்ல. வேதம் முழுவதும் இதற்க்கு என்னால் வசனங்களை காண்பிக்க முடியும் அவர்களால் மறுக்க முடியுமா?

 

தேவன் தெரிந்து கொள்ளுதலில் சர்வவல்லவர்!:

பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு (ரோமர் 9:11)

 

அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம் (ரோமர் 9:15-16)

யாரை எங்கே அனுப்பவேண்டும் என்பதிலும் அவர் சர்வவல்லவர்!:

மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? (ரோமர் 9:21-23)

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28 )

 

விசுவாசிக்கிறவர்கள் அவரால் விசுவாசத்திற்கென்று தேவனால் நியமிக்கப்பட்டவர்கள். விசுவாசியாதவர்கள் அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்கள்:

 புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (அப்போஸ்தலர் 13:48 )

 

ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள் (யோவான் 10:26)

என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.(யோவான் 6:44)

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;.. .(யோவான் 15:16)

சுருக்கமாக சொன்னால் ஆடு மேயப்பனுக்கு செவி கொடுக்கும் கொடுக்கவில்லை என்றால் அது ஓநாய்! ஒருவன் விசுவாசிக்கிறதினாலே கிருஸ்தவன் ஆனாலும் கிருஸ்தவன் தான் விசுவாசிப்பான். விசுவாசிப்பது அவர் உன்னை தெரிந்து கொண்டதின் Effect டே அன்றி கிருஸ்தவன் ஆவதற்குரிய காரணம் கிடையாது! எல்லாரும் விசுவாசிப்பார்களா? இல்லையே! வசனம் தெளிவாய் சொல்லுகிறது. ஆக்கினை தீர்ப்பு முந்தியது...விசுவாசியாமை பிந்தியது.

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18)

கிழே உள்ள வசனத்தின் படி தேவனுடைய கோபம் நிலை நிற்கும் என்றால் நிலை நிற்கும்! மற்றபடி பரதிசுக்கு எல்லாரையும் கூட்டிபோய் சொல்லிகொடுப்பார் என்பதெல்லாம் ரசலின் வேதத்தில் மட்டுமே உள்ளது

குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.(யோவான் 3:36)

 

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்? (II கொரிந்தியர் 2:16 )



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard