லாசரு உயிரோடெழுந்ததைப் பார்த்து இயேசுவை விசுவாசித்தவர்களும் உண்டு.
யோவான் 12:9 அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாக மாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள்.
யோவான் 12:11 பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்//
சகோதரி. கோல்டா. உண்மைதான் அற்புதங்களை கண்டு இயேசுவை விசுவாசித்தவர்கள் உண்டு ஆனால் யோவான் சுவிசேஷம் முழுமையாக வாசித்தால் அற்புதம் கண்டு வைத்த விசுவாசம் நிலைக்கவில்லை. குருத்தோலை பிடித்து வாழ்த்திய இதே ஜனங்கள் ஆறே நாட்களில் "சிலுவையில் அறையும் , சிலுவையில் அறையும்" என்று கத்தியவர்கள். அற்புதத்தை பார்த்து வியந்து அவரிடம் வந்த நிக்கோதேமுவிடம் இயேசு கறாராக சொல்லுகிறார் "நீ மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டாய்". அற்புதம் அவசியமே! ஆனால் அதைவிட சாட்சியும், வசனமும் மிகவும் முக்கியம் அதுவே மேய்ப்பனுடைய குரலாய் தொனிக்கும் போது ஆடுகள் செவிகொடுக்கும். இந்த "Scheme" மூலம் சாதுவின் கஜானா நிரம்பும் என்பது மட்டும் உறுதி!
இன்னொரு அதிர்ச்சியான சம்பவம் லாசருவை உயிரோடு எழுப்பின அற்புதம் நடை பெற்ற பின் நடந்தது. அற்புதத்தை கண்ணார பார்த்தவர்கள் அவரை கொலை செய்யவும் தீர்மானித்தார்கள்.
"இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள். அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது; ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்."(யோவான் 11:48-50 )
--
லாசரு உயிரோடெழுந்ததைப் பார்த்து இயேசுவை விசுவாசித்தவர்களும் உண்டு.
யோவான் 12:9 அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாக மாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள்.
நல்லா வாசித்துப் பார்த்தால் புரியும். ஏஞ்சல் டீவி, இயேசு ஊழியங்கள் மூலம் பெற்ற அற்புதங்களை மட்டும் சொல்லுங்கள் என்று சொல்லப்பட வில்லை. உஙகள் அற்புதங்களை சொல்லுங்கள் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன் அத்தாட்சியுடன் சொல்லுங்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
மகிமை அதிசயங்கள், அற்புதங்கள் செய்யும் இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக.
இயேசுகிறிஸ்து இருந்தபோதும், அப்போஸ்தலர் காலங்களிலும் நடந்ததுபோல அற்புதங்கள் ஏன் இப்போது நடை பெறுவது இல்லை என்று நான் தற்போது தியானித்து கொண்டிருக்கும் யோவான் நிருபத்தில் இருந்து சிந்தித்த காரியங்களை பகிர்ந்து கொள்ளுகிறேன்.
தேவன் அவருடைய மகிமையை அற்புதங்களின் முலம் வெளிப்படுத்தி அதன் மூலமாய் தம்முடையவர்கள் அவரை விசுவாசிக்கும்படியாய் அற்புதங்கள் செய்கிறார்.
"இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்." (யோவான் 2:11)
ஆனால் அற்புதங்களை கண்ட அவருடைய சொந்த ஜனங்கள் அவரை விசுவாசிக்கவில்லை மாறாக அவரை ஒரு "Miracle Worker" ஆகவும். தங்களுடைய சரிர தேவைகளை (Prosperity) தீர்ப்பவராகவும் மட்டுமே பார்த்தார்கள்.
அவருடைய பிறந்த ஊரான யூதேயாவில்:
"பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்க வேண்டியதாயிருக்கவில்லை." (யோவான் 2:23-25)
அவருடைய சொந்த விட்டிற்குள்:
"அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்." (யோவான் 7:3-5)
அவருடைய வளர்ந்த ஊரான கலிலேயாவில்:
"நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (யோவான் 6:26)
இந்த Response ஐ கண்டு இயேசு கிறிஸ்து ஜெபிக்கும் படி மலையின் மேல் ஏறிவிட்டார்.
"ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக் கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்." (யோவான் 6:15)
ஆனால் "அரை" யூதர்கள் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமாரியாவில் ஒரு அற்புதமும் செய்யாமல் எழுப்புதல் தீ புதிதாக மனம் மாறிய படுபாவி பெண்ணின் மூலம் பரவியது.
"அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்". (யோவான் 4:42)
ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் அவருடைய "உபதேசத்தை" கேட்டு விசுவாசித்தார்கள். இன்னொரு அதிர்ச்சியான சம்பவம் லாசருவை உயிரோடு எழுப்பின அற்புதம் நடை பெற்ற பின் நடந்தது. அற்புதத்தை கண்ணார பார்த்தவர்கள் அவரை கொலை செய்யவும் தீர்மானித்தார்கள்.
"இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள். அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது; ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்."(யோவான் 11:48-50 )
நாம் அற்புதத்தை மாத்திரமே முன்வைத்து சுவிசேஷம் (?) சொல்லி, இயேசுவை Just அற்புதம் செய்யும் 'ஒரு' தெய்வம் (a god) என்று ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் எடுத்து சபையில் சேர்ந்து, அங்கும் 'உபதேசம்' இல்லாமல் அற்புதம் மாத்திரமே போதித்துக்கொண்டு இருந்தால் அவர்கள் நித்தியத்தில் சேர்வது கடினமே! அவர்கள் அப்படியே இல்லாமல் உபதேசத்தை கேட்டு 'கர்த்தராக' (Lord Of Life) அவரை ஏற்றுக்கொள்ளும் போதுதான் உண்மை கிறிஸ்தவர்கள் ஆகிறார்கள். அற்புத ஊழியங்களை மாத்திரம் முன்னிலைப்படுத்தும் பெரிய சபைகளில் (கூட்டத்தோடு கூட்டமாக) இருக்கும் பலரது நிலைமை இதுவாகவே இருக்கும் என்பது வேதனையான விஷயம்..!