தாத்தாச்சார்யர் புத்தகம் இருக்கா என்று கேட்போம் என்று புத்தகக்கடைக்குப் போனால்- நல்ல வேளை இன்று வந்தீர்கள். இருக்கும் 5 பிரதிகளையும் இப்பத்தான் கனடா அனுப்ப பார்சல் பண்ணிட்டிருக்கோம். ஒன்று வேண்டுமானால் உங்களுக்கு தருகிறோம். வேறு எங்கும் பிரதிகள் இல்லை என்று பயங்கர பில்ட் அப் பண்ணி கொடுத்தார்கள்.
இயற்கை உணவின் மகத்துவங்கள் பற்றி ஒருவர் பேசுவதை கேட்க நேர்ந்தது. அவர் ஒரு உருத்திராட்ச மாலையும் வைத்திருக்கிறார்.
செல் போன், டீ பொன்ற பொன்ற பொருள் மேல் மாலை anticlockwise இலும், paper weight மேல் முன்னும், பின்னும், தண்ணீர் மேல் clockwise இலும் சுத்துவதைக் காட்டினார். அதாவது எதில் தீமையான் ரேடியேசன்/கதிர்கள் இருக்கிறது என்று மாலை கண்டு பிடித்து விடுகிறதாம். எல்லா உணவுப் பொருட்களையும் அப்படி சோதித்துப் பார்த்துத் தான் பயன் படுத்துவதாக சொன்னார்.
சமீபத்தில் ஒரு சகோதரி சிவன், பெருமாள் பெருமைகளைப் பற்றி என்னிடத்தில் பேசிக் கொண்டிருக்கையில், சிவன் கதை கையில் இருந்தால் காட்டியிருக்கலாமே என்று தோன்றியது. தாத்தாச்சாரியார் புத்தகத்தை சிலரிடமாவது காட்டி reaction என்னவென்று பார்க்க வேண்டும்.
இந்துத்துவத்தை குறை சொல்வது மூலம் ஒருபோதும் சுவிசேஷம் பரவியதில்லை. இது நாம் நடைமுறையில் காணும் உண்மை. அதனால் நாம் சுவிசேஷத்தை சொல்லுவோம். இந்துத்துவத்தின் முகத்திரையை கிழிக்க தாத்தாச்சாரியார் போன்ற இந்துக்கள் உள்ளனர். மேலும், நம்மிடம் வலியவந்து இந்துத்துவத்தின் "மேன்மையை" பேசுபவர்களிடம் அதன் குறைகளை காண்பிக்கலாம் (கிறிஸ்துவின் நிறைகளை சொல்வதோடு).
மேலும் நீங்கள் இத்தகைய புத்தகங்களை மற்றவர்க்கு கொடுக்க முற்படுவது ஆபத்து. அதற்க்கு பதிலாக சுவிசேஷ பிரதிகளை கொடுங்கள் (ஆபத்து வந்தாலும் ஆண்டவர் பார்த்துகொள்ளுவார், அல்லது ரத்த சாட்சியாவீர்கள்).
தங்களிடமிருந்து இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்; கிறிஸ்தவர்களின் பிரிவினைகளைக் குறித்து யோசித்தாலே அச்சமாக இருக்கிறது; இதைவிட நாங்கள் இந்துவாக இருந்துகொண்டே இரகசிய கிறிஸ்தவர்களாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது; இங்கே நடைபெறும் விவாதங்களை கவனித்த அதிர்ச்சியினால் சொல்லுகிறேன்.
இப்படிப்பட்ட ஆபாசக் கதைகளின் நாயகர்களை கடவுள் என்று நினைத்து வணங்கும் நம் இந்து சகோதர சகோதரிகளை நினைத்து வருத்தமாக இருக்கிறது.இந்த புத்தகத்தை அனைவருக்கும் கொடுப்பது கூட நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கிறிஸ்தவர்கள் சண்டை போட்டுக் கொள்வது தவறுதான். மன்னிக்கவும். என்றாலும் சில சண்டைகள் குடும்ப சண்டைகள் போன்றவை. அடித்துக் கொண்டாலும் அன்பு குறைவதில்லை!
கற்றுக் கொள்ளும் ஆர்வமுடைய தங்களை ஞானத்தின் தேவன் சிறப்பாக போதித்து நடத்துவாராக.
// இதைவிட நாங்கள் இந்துவாக இருந்துகொண்டே இரகசிய கிறிஸ்தவர்களாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது; இங்கே நடைபெறும் விவாதங்களை கவனித்த அதிர்ச்சியினால் சொல்லுகிறேன்.//
இப்படி நீங்கள் சொல்வதினால் வெட்கி தலைகுனிகிறோம். கிறிஸ்துவின் விரோதிகளை அடையாளம் காட்டவும் அவர்களை எதிர்க்கவும் அழைக்கப்பட்டு இருந்தாலும் எங்களுடைய வார்த்தைகளோ அல்லது விவாதங்களோ தங்களுக்கு இடறலை கொண்டு வந்ததிற்காக வருந்துகிறேன். முடிந்தவரை தனிப்பட்ட தாக்குதலை தவிர்த்து வேதத்திற்கு அடுத்த காரியங்களை மட்டும் விவாதிக்க முயல்கிறேன்.
தங்களிடமிருந்து இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்; கிறிஸ்தவர்களின் பிரிவினைகளைக் குறித்து யோசித்தாலே அச்சமாக இருக்கிறது; இதைவிட நாங்கள் இந்துவாக இருந்துகொண்டே இரகசிய கிறிஸ்தவர்களாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது; இங்கே நடைபெறும் விவாதங்களை கவனித்த அதிர்ச்சியினால் சொல்லுகிறேன்.