நான் சற்றும் எதிர்பாராத காரியம் ஒன்று நடக்கிறது. வருத்தம் உண்டாகிறது.
இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே ஆண்டவரே!
இந்த வசனத்தைப் பார்.
ஏசா 50:6 அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
உங்களுக்கே அப்படியென்றால்,பாவியான நான் எம்மாத்திரம்! I have no rights to complain என்ற நல்ல வெளிப்பாடு பெற்றுக் கொள்கிறேன். சந்தோஷம் திரும்ப வருகிறது.
என்றாலும் ஆண்டவரே காயப்படுத்திட்டாங்க. கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு.
இந்த வசனத்திற்கு கீழ்ப்படிய இதுதான் சரியான சந்தர்ப்பம்.
மத் 5: 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
சரி ஆண்டவரே. நல்லா ஆசீர்வதித்து ஜெபம் பண்ணியாச்சு, துன்பப்படுத்தியவர்களுக்காக!
கொஞ்ச நாளாகிறது. திரும்ப வருத்தம் வருகிறது. ஏதாவது சொல்ல மனம் துடிக்கிறது.
தீமைக்குத் தீமை செய்யவே கூடாது- நினைவிலும், வார்த்தையிலும், செயலிலும். நன்மை செய்தால் தான் எனக்குப் பிள்ளை!
சகரியா 8:17 ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும்....
சரி ஆண்டவரே. ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொள்கிறேன்
சில நாட்களாகிறது. திரும்ப வருத்தம் எழும்புகிறது. ஆண்டவரே அவங்க இஷ்டத்துக்குப் பேசினாங்களே!
சில நாட்களுக்குப் பின்: ஆனாலும் அவங்க தப்பாதான பேசினாங்க ஆண்டவரே.
மனிதர் செய்த தப்பிதங்களைத்தான் மன்னிக்க வேண்டும். கசப்பு, மன்னிக்க முடியாத தன்மை பிசாசுக்கு இடங் கொடுப்பதாகும். போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல என்று தெரியாதா?
மத் 18:35 நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
(ஒரு நல்ல செய்தி கேட்கிறேன்)
நன்றாகப் புரிந்து விட்டது ஆண்டவரே. மன்னித்துக் கொள்ளுங்கள். வருத்தம், கசப்பு யார் மீதும் இப்போதும் எப்போதும் இனிமேல் இல்லை.
இப்ப ஒப்புரவாகியாச்சு!!
இன்னும் நான் நை நை என்று ஏதாவது சொல்லியிருந்தால் , இன்னும் அநேக வசனங்களை ஆண்டவர் காட்டியிருப்பார் என்பது நிச்சயம்!