1 இருதயத்தில் விசுவாசித்து, வாயினால் மனிதர் முன் அறிக்கை பண்ண வெண்டும். அறிக்கை பண்ணாவிட்டால், இரட்சிக்கப்படவில்லை!
ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்
எனவே தான் அவசியமோ இல்லையோ, ஞானஸ்நானம் எடுப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். ஞானஸ்நானம் எடுக்கையில் அறிக்கை பண்ண வைத்து விடுகிறார்கள் அல்லவா?
2. தசமபாகம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.கொடுப்பது பாதுகாப்பு. சில விபத்துகள், வியாதிகள் தசம பாகம் நாம் கொடுக்காததால், பிசாசு கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் தசம பாகம் யாருக்கு கொடுக்கப்ப்ட வேண்டுமோ அவர்களுக்கு கொடுத்தால்தால், அது அங்கீகரிக்கப் படும். இல்லாவிட்டால் கொடுத்துப் பிரயோஜனமில்லை. கொடுத்ததாக பரலோகில் கணக்கு வைக்கப் படாது.
தசமபாகம் யாருக்கு?
உபா 26:12
தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,
இதன்படி தசமபாகம் லேவியன்(ஆண்டவரையே சார்ந்து வாழும் ஊழியர்), விதவை, திக்கற்றோர், பரதேசிகள்(ஆண்டவரை அறியாதோர்) போன்ற தேவையிலுள்ளோருக்குத்தான் கொடுக்க வேண்டும்.சபைக்கு நிலம் வாங்க,கட்டிடம் கட்ட,புத்தகம் வெளியிட செலவ்ழிக்கக் கூடாது! தசம பாகம் கர்த்தரின் பணம். அது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் , (தேவைப்படும்) மனிதர்களை சென்றடைய வேண்டும். நாமே நேரடியாகக் தேவைப் படுபவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் கொடுக்கலாம். சபையோ, ஸ்தாபனமோ விசுவாசிகள் கொடுக்கும் தசமபாகத்தை தனியே வைத்து சரியாக செலவழிக்குமானால் அங்கும் கொடுக்கலாம்.
இயேசு கிறிஸ்து இதை உங்களுக்குக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அது இயேசுவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும். அத்துடன் இயேசு கிறிஸ்துவும் இதில் மகிமைப்படுவார்.
உம்: உங்களுக்கு 1000 ரூபாய் தேவை என்று அறிகிறேன். நான் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொடுத்தால், கொடுப்பவருக்கு மகிமை.உங்களுக்கு 1000 ரூபாய் தேவை என்று அறிந்து, பிரதமர் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லிக் கொடுத்தால், பிரதமருக்கு மகிமை.
கொடுப்பதில் எந்த மகிமையும் சபைக்கோ, ஸ்தாபனத்திற்கோ, தனி மனிதனுக்கோ போகக்கூடாது.
தசம பாகம் தேவையிலிருக்கும் மனிதர்களுக்கும், ஊழியருக்கும் மட்டுமே பகிர்ந்தளிக்கப் பட வேண்டும் என்று சொல்வது எனக்கு சரியாகத்தான் படுகிறது.
3. பரிசுத்த ஆவியானவர் போதித்து நடத்தும் விதம் அறியாதிருப்பதுதான் பெரிய கறை. எல்லா கறைகளுக்கும்(தவறுக்கும்) இதுவே காரணம்.
யோவான் 1 : 14 - வார்த்தை என்பது நினைவு என்றும் பொருள்படும்.
ஆண்டவர் எழுதிக் கொடுத்த எல்லா வார்த்தைகளின் பின்னால், அவரின் சிந்தனை இருக்கிறது. அவர் நினைவுகள் நம் நினைவுகளைப் போன்றதில்லை.
ஆண்டவர் வசனத்தில் என்ன சொல்கிறார், அவரின் சிந்தனை என்ன என்பதை புரிந்து கொள்ள பரிசுத்த ஆவியானவரின் துணை/வெளிப்பாடு நமக்குத் அவசியம் தேவை.
13. அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்
நல்ல உதாரணம்: பேதுரு.
முதலில் ஆண்டவர் ஒரு தரிசனத்தைக் காட்டுகிறார். பேதுருவுக்கு அதன் அர்த்தம் என்ன என்று முழுமையாகத் தெரியவில்லை. பின் கொர்நெலியு வீட்டிற்குப் போன பிறகு தான் தெரிகிறது... ஆண்டவர் யூதர்களை மட்டுமல்ல, புற ஜாதிகளையும் தன் இரத்தத்தால் அவர் மந்தைக்குள் சேர்த்துக் கொள்ள ஆவலாயிருக்கிறார் என்று - அந்தக் காலம் வந்து விட்டது என்று ... அது சம்பந்தமான வசனங்கள் வேதத்தில் இருக்கிறது என்றும் அப்புறம் தான் கண்டு பிடிக்கிறார்கள்.