(வின்சென்ட் செல்வகுமார் சொன்னதாக சாது சொன்ன ஒரு சம்பவம்)
அவர் வீட்டின் அருகில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் ஒரு காக்கா கூடு கட்டி குஞ்சுகளோடு இருந்திருக்கிறது. கூட்டில் அருகில் உள்ள கிளைகளை யாரோ வெட்டி விடுவதால், வெயில் நேராக குஞ்சுகளின் மேல் இப்போது படுகிறது. அதைக் கவனித்த தாய் காகம், தன் செட்டைகளை விரித்து நின்று குஞ்சுகளின் மேல் வெயில் படாதபடி காலையிலிருந்து, சாயங்காலம் வரை அப்படியே இருந்து பாதுகாத்ததாம். இவர்கள் குடையோ, துணியோ போட்டு காகத்திற்கு உதவுவோம் என்று நினைத்தால், அந்த காக்காவை கொஞ்ச நேரம் கூட வேறு பக்கம் விரட்டவே முடியவில்லையாம்.
விலங்குகள், பறவைகள் இன்னும் சுபாவ அன்போடுதான் இருக்கிறது. கடைசிக் கால மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்? பெற்றோர் பிள்ளைகளை சிறு வயதிலே ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறார்கள். பிள்ளைகள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள்! இரத்தத்தின் இரத்தமான உடன் பிறந்த சகோதர சகோதரிகள் சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். பணமே கடவுளாக மனிதர்கள் இக்காலத்தில் வாழ்கிறார்கள்.
2 தீமோ 3
1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.