//….கிறிஸ்துவத்தை காப்பாற்ற 120 கும் மேற்பட்ட நாடுகள் இருக்கிறது ஆனால் பாவம் உங்க இந்து மதத்தை காப்பாற்ற இந்திய துணை கண்டதை விட்டால் வேறு வழி இல்லை.. ஆகையால் நீங்கள் வருத்தபடுவதிலோ கிறிஸ்துவத்தை திட்டிதீர்பதிலோ கவலை பட ஒன்றும் இல்லை .. நிச்சயம் ஒன்று சொல்லவா கோபத்தில் சொல்லவதாக எடுத்து கொள்ள வேண்டாம்.. உங்கள் ஆரிய மதத்திற்கு முடிவுரை எழுத போவது ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் தான் பொறுத்திருந்து பாருங்கள்//
ஆஹா, என்ன ஆசை, என்ன ஆசை, ஆசை இருக்கு தாசில் பண்ண , ஆனால் அதிர்ஷ்டம் இருக்கு குப்பை அள்ள என்பார்கள். உலகில் எல்லோரையும் பிற மதங்களின் மீது சகிப்புத் தன்மை இல்லாதவராக பிற மதங்கள் இல்லாமல் போக வேண்டும் என்று நினைப்பவராக ஆக்க வேண்டும் என்கிற உங்களின் ஆசைக்கு எவ்வளவு அதிர்ஷ்டம் அதாவது வாய்ப்பு இருக்கிறது என்றார் பார்க்கலாம்
இந்துமதம் இருக்கக் கூடாது, அதற்கு முடிவுரை எழுத வேண்டும் என்று சகிப்புத் தன்மை இல்லாமல் ஆவேசப்படும் உங்கள் மனநிலை புரிகிறது. இது நீங்கள் கோவத்தில் சொன்னதாக எண்ணவில்லை, நீங்கள் நிதானமாக சொன்னதாகவே கருதிக் கொள்வோம். நீங்கள் சொல்லும் ஆபிரகாமிய மத பிரிவினர் பலரும் இப்படி நினைப்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். சரி, இந்து மத அழிப்புக்கு (முடிவுரைக்கு) ஒரு கருவியாக நீங்கள் தேர்ந்து எடுத்து இருப்பது ஆரியமதம் என்கிற வார்த்தையை.
இந்துமதம் ஒரே ஒரு ஆன்மீக முறையை மட்டும் தராமல், கர்ம யோகம், தியானம், வேள்வி, கர்ம பலத் தியாகம், துறவு, பக்தி …. இப்படி பல ஆன்மீக முறைகளை சொல்லுகிறது . வட இந்தியாவில் முன்பே மார்க்கண்டேயன், துருவன், பிரஹலாதன் … போன்றோர் பக்தி மார்க்கத்தில் சிறந்து விளங்கினாலும் காலப் போக்கில் வேள்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் தென்னாட்டிலோ தொடர்ந்து பக்தி வழிபாடு , உருவ வழிபாடு முக்கிய ஆன்மீக முறையாக பின்பற்றப் பட்டு வந்தது.
குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்கு கண்ணன்…என்பதே பண்டைய தமிழரின் வழிபாடு. இதற்கு ஆதாரம் தொல்காப்பியத்திலும் உள்ளது, நீங்கள் வெறுப்புணர்ச்சியை கைவிட்டு நடுநிலையோடு நோக்கினால், எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக தமிழ் சமுதாயம் முருக வழிபாட்டை சிறிதும் தொய்வின்றி , உற்சாகமாக செய்து வருவதை தெரிந்து கொள்ளலாம்.
இன்றைக்கு இந்தியா முழுவதும் பின்பற்றப் படும் இந்து மதம் என்பது , இந்த முருகனின் தாயை, தந்தையை, மாமனை, மாமியை, அண்ணனை தம்பியை உருவ வழிபாடு செய்யும் முறைதான். நீங்கள் ஆரியமதம் என்று எழுதினாலும், தமிழர் மதம் என்று எழுதினாலும், சனாதன தர்மம் என்று எழுதினாலும், இந்துமதம் என்று எழுதினாலும் எல்லாம் ஒன்றாகவே அத்வைதமாகவே இருக்கிறது.
ஆரியன் சூழ்ச்சி பண்ணுறான் என்று சொல்லி இந்திய நாட்டையும் உடைத்து, இந்து மதத்தையும் அழிக்கலாம் என ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்கப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் அமைதியாகக் கேட்கும் தமிழன், குளித்து முழுகி, முருகன் கோவிலுக்கு செல்வான்.இந்தியாவில், மலேசியாவில், சிங்கையில், தென்னாப்பிரிக்காவில், ஈழத்தில், அமெரிக்காவில் … தமிழ் சமுதாயம் உலகில் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் முருகன் வழிபடப்படுகிறான்.
நீங்கள் அவர்களிடம் சென்று, நீங்கள் பகவத்கீதையில் ஸ்கந்தன் எனக் குறிப்பிடப்பட்டுள்ள முருகனை வணங்காதீர்கள், ஏனெனில் இந்த முருகன், தான் பொறாமையுள்ள கடவுள் என்றோ, தன்னைத் தவிர வேறு கடவுளை கும்பிட்டால் ஏழு தலைமுறைக்கும் வன்மம் வைத்து தண்டிப்பேன் என்றோ சொல்லவில்லை. இதுவே இந்த முருகன் ஜீவனில்லாத கடவுள் என்பதர்க்கு போதுமான சாட்சியாகும், ஜீவனுள்ள கடவுள் என்றால், அவர் தன்னைக் கும்பிடாதவரை கொல்வதற்கு பரிசளிப்பவராகவோ, இன அழிப்புக்கு உதவி செய்பவராகவோ இருக்கவேண்டுமே என்று தைரியமாக பிரச்சாரம் செய்யுங்கள்.நானும் இதே கருத்துக்களை தெளிவாக விளக்கி பிரச்சாரம் செய்வேன்; உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரின் மனசாட்சியிடம்-அவர்கள் எந்தப் பக்கம், அமைதின் பக்கம், நட்பின் பக்கமா அல்லது மத வெறியின் பக்கமா என்று. //
Chillsam:-
நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் அருமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார்;ஆனால் அவை அறிவுபூர்வமானதா என்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது;எங்கள் நம்பிக்கைக் குறித்து சுற்றிவளைத்து கேள்வி கேட்கும் நீங்கள் முருகன் எனும் பேகன் (Pegan) வழிவந்த தெய்வ வழிபாட்டைக் குறித்து இத்தனை தெளிவில்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
நண்பர் அசோக்குமார் கணேசன் அவர்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளது போல திருச்சிக்காரனுக்கு உண்மையைவிட அமைதியே முக்கியமானால் அந்த உணர்வுக்காக உங்களுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்;ஆனால் எந்தவொரு கொள்கைக்கும் நிரூபணத்தைக் கேட்கும் நீங்கள் உண்மைக்கு மாறான- வெறும் நம்பிக்கையை மாத்திரமே அடிப்படையாகக் கொண்ட இந்து மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டும் பாராமுகமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது;மாமியார் உடைப்பது எப்போதும் மண்குடமாகவும் மருமகள் உடைப்பது பொற்குடமாகவும் இருப்பது இன்னும் மாறவில்லையா..?
முருகன் வழிபாட்டைக் குறித்து நீங்கள் எழுதியுள்ளவற்றை நான் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளுகிறேன் என்றே வைத்துக்கொண்டாலும் உங்கள் கொள்கை கண்டுபிடிப்பை அனைத்து இந்துக்களும் ஏற்றுக்கொள்ளுவார்களா என்று மாத்திரம் கொஞ்சம் சொல்லுங்கள்;ஒரு தெய்வத்துக்கு யார் வருடத்தை நிர்ணயிக்கமுடியும்? ஆதியும் அந்தமும் இல்லாதோனே இறைவனாக இருக்கமுடியும்; சரி எட்டாயிரம் வருடமாக முருகன் என்ற பெயரால் நிரூபிக்கமுடியாததும் நிரூபிக்கப்படாததுமான ஒரு தெய்வத்தை வெறும் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைதியாக வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம்; அந்த முருகன் என்பாரை இமயம் முதல் குமரி வரை வாழும் அனைத்து இந்துக்களும் ஏற்று வழிபடுகிறார்களா?
அண்மையில் விஜய் டிவியில் "யாமிருக்க பயமேன்" என்ற தொடரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்;அதில் ஒரே ஒரு காட்சியை மட்டும் சில நிமிடங்கள் மாத்திரமே பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது;அதில் சொல்லப்பட்ட தகவல் எனக்கு முற்றிலும் புதியதாகவும் நம்பகமானதாகவும் இருந்தது;அதற்கு யாரும் இதுவரை எதிர்ப்பு தெரிவித்தது போலத் தெரியவில்லை;அப்படியானால் அது தானே உண்மையாக இருக்கும்?
தகவல் என்னவென்றால் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியிலுள்ள முருகனின் தோற்றத்தைக் குறித்ததாகும்;இங்கு மட்டும் முருகன் ஏன் மொட்டைத் தலையுடனும் கோவணத்துடனும் இருக்கிறான் என்பதே ஆராய்ச்சி; இதன்படி பழனி முருகனின் தலத்தின் பின்னால் ஏதோ சூழ்ச்சியும் மர்மமும் இருக்கிறது என்கிறார்கள்;அது என்னவென்று ஆராயவேண்டியது என்னுடைய வேலையல்ல;ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் சொன்னது போல முருக வழிபாடு என்பது எட்டாயிரம் ஆண்டுகளாக நடைபெறுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை;
ஏனெனில் வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி செழித்திருந்தது புத்த மார்க்கமும் ஜைன மார்க்கமுமே;அதுவே இந்தியா முழுவதும் பரவியிருந்தது;இப்போது வணங்கப்படும் எந்த தெய்வத்தைக் குறித்தும் வெறும் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கூட எந்தவொரு ஆதாரமும் இல்லை;இந்துக்களின் புகழ்பெற்ற நான்கு வேதங்களிலும்கூட இந்த தெய்வங்களின் பெயர் முதலாகக் குறிப்பிடப்படவில்லை;இதைச் சொன்னால் எங்கள் மீதே சீறுகிறீர்கள்;
ஆரியர்களின் சூழ்ச்சியின் காரணமாகவே பௌத்தமும் ஜைன மார்க்கமும் அழித்து ஒழிக்கப்பட்டது;அக்காலத்தில் சொற்ப கூட்டமாக இருந்த இந்திய மண்ணின் சொந்தங்களான திராவிடர்களின் அமைதியான வழிபாட்டைக் கெடுத்து குட்டிச்சுவராக்கி அவர்களுக்கு இடையே பல தெய்வ வழிபாட்டையும் ஜாதி பாகுபாடுகளையும் கொண்டு வந்தவர்கள் இந்த சிறுநரி கூட்டத்தாரே;அதற்கொரு ஆதாரமே,பழனி முருகன் ஜைன மார்க்கத்துறவியின் தோற்றத்தில் காட்சியளிப்பது; அதாவது ஏதோ ஃபுயூஷன் செய்து கன்ஃப்யூஸ் செய்திருக்கிறார்கள்;
வணங்குவதும் வழிபடுவதும் மட்டுமே ஒரு மனிதனுக்கும் இறைவனுக்குமான தொடர்பாக இருக்கமுடியுமா? இறைவன் என்பவர் ஒரு மொழிக்கு மட்டுமே கட்டுப்பட்டவராக இருப்பாரா? வேதம் என்பது ஒரு இந்துவுக்கு இரண்டாம் பட்சமே என்கிறீர்கள்;இதிகாசங்களும் புராணங்களும் உபநிஷத்துகளும் அனைத்துமே நம்பகமானவை அல்ல என்கிறீர்கள்;எனவே தெய்வங்களைக் குறித்த வரலாறுகளிலும் பல்வேறு கொள்கைக் குழப்பங்கள் நிலவுகிறது;ஆனால் ஒரு கோவிலை கட்டுவது முதலாக அனைத்துக்கும் ஆகமவிதி என்ற ஒன்றை சொல்லுகிறீர்கள்;அது மாத்திரம் எப்படி நம்பகமானதாக இருக்கிறது என்று சொல்லுங்களேன்;கேட்டால் ஐதீகம் என்பீர்கள்;ஐதீகம் என்பதே சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் தப்பிக்கும் சூழ்ச்சி தானே? ஐதீகம் என்ற பெயரில் ஒரு பெருங்கூட்ட மக்களை மூடநம்பிக்கைகளில் சிறைவைத்திருக்கிறீர்களே இது நியாயமா?
நீங்கள் எந்த அடிப்படையறிவும் இல்லாமல் பரபரப்புக்காக ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு முருகன் & கோ என்று குறிப்பிட்டு சிலோன் ரேடியோவில் அந்த காலத்தில் சொல்லுவார்களே அதுபோல, "அம்மா அம்மம்மா, அப்பா அப்பப்பா" என்று அனைவருமே ஒன்றுக்குள் ஒன்று என்று கொள்கை அறிவிப்பு செய்ததிலேயே தெரிந்துவிட்டது;மேலும் முருகன் எனும் கடவுள் ஜீவனில்லாதது என்று ஒப்புக்கொண்டது அற்புதமான ஒரு அறிக்கையாகும்;இதற்காக மாத்திரமே என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்;ஜீவனற்ற ஒன்று மற்றொரு ஜீவனுக்கு எப்படி ஜீவனைத் தரமுடியும் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்;ஜீவனில்லாத ஒன்றை வைத்துக்கொண்டு ஊரை ரெண்டாக்குகிறார்கள் என்று ஒப்புக்கொள்ளுகிறீர்கள் தானே..? நன்றி..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நானும் அந்த திருமணத்தை தொலை காட்சியில் பார்த்தேன், அன்றைக்கு விக்டோரியா மகாராணியார் தனது முடிசூடும் விழாவில் "எல்லோருக்கும் மா உன்னதர்" என்ற பாடலை பாடியபோது நின்றவாறு இருந்தார். அரசியார் நிற்க தேவையில்லை, உட்காரலாம் என்றதற்கு பரவாயில்லை, துதித்து பாடப்படுவது மகா உன்னத தேவனையல்லவா, அப்புறம் ஒரு அரசியான நான் எப்படி உட்கார முடியும் என்றார். அவரது இறைபக்தி காரணமாக இங்கிலாந்து சிறிய ஒரு தீவாக இருந்தாலும் உலகையே கட்டி ஆண்டது. இன்றைக்கு இந்தியா அடிமைப்பட்டிருந்தது வெள்ளைக்காரன் சுரண்டினான் என சொன்னாலும் இன்றைக்கு வெள்ளைக்காரனால் தான் இந்தியா இரு தேசமாக ஒன்றினைந்தது.
ஆனாலும் அரச குடும்பத்தார் பலரது வாழ்க்கை விவாகரத்தில் முடிவடைந்துள்ளது. தேவன் முன்னால் செய்துகொண்ட உன்னத உடன்படிக்கைக்கு கட்டுப்பட்டவர்களாக வில்லியமும் கேத்தரினும் கடைசி வரை இணைந்து வாழ, அவர்களது ஆட்சி காலத்தில் (வருங்காலத்தில்) இங்கிலாந்து தேவனுக்குள் பலமாக இன்னும் வேரூன்றப்பட அவர்களை வாழ்த்துவோம்.
கொசுறு செய்தி: இங்கிலாந்து அரச குடும்பம் மட்டும் அல்ல ஐரோப்பாவின் பல அரச குடும்பங்கள் தாவீதின் வம்சத்தில் இருந்து தோன்றியவர்கள் என ஒரு தியரி உள்ளது. உன் சந்ததியில் இருந்து ராஜாக்கள் எழும்புவார்கள், கடற்கரை மணலத்தனையாக பெருகப்பண்ணுவேன் என இஸ்ரவேல் கோத்திர பிதாக்களுக்கு தேவன் வாக்கு பண்ணியிருந்தாரே. இங்கிலாந்தின் அரச முத்திரையில் உள்ள சிங்கமும் ஒற்றை கொம்புள்ள குதிரையும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரங்களை குறிப்பதாகும் ...
இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா? என்ற தலைப்பில் தமிழ் ஹிந்து அண்மையில் ஒரு கட்டுரையினை வெளியிட்டிருக்கிறது;மத துவேஷத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ் ஹிந்து தளத்துடன் நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்;அவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளைக் குறித்து சொல்லுவதும் வலியுறுத்துவதும் தவறல்ல;அது அவரவர் கருத்துரிமை சம்பந்தமானதாகும்;ஆனால் அவர்களுக்கு சம்பந்தமில்லாத வேற்று மார்க்கத்தைக் குறித்து தவறான கொள்கைகளையும் கருத்துக்களையும் அறிவிக்கும்போது வீணான குழப்பங்களே மிஞ்சுகிறது;நாம் கொடுக்கும் விளக்கங்களையும் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து சேற்றை வாரி வீசும் இழிசெயலில் ஈடுபட்டு சிலர் பல பெயரிலும் பலர் சில்லறைத்தனமாகவும் பின்னூட்டங்களை இட்டு போலியானதொரு பரபரப்பைக் கிளப்பி வருகின்றனர்;அவர்களுடைய கட்டுரை வெற்றிபெற நம்முடைய ஒரு சில பின்னூட்டங்களை மட்டும் வெளியிட்டு சூழலை ரணகளமாக்கிவிட்டு தொடர்ந்து நாம் இடும் பின்னூட்டங்களைத் தள்ளிவிடுவது அவர்களுடைய பாணியாகும்.
இதன் காரணமாகவே அவர்களுடைய தளத்தைப் பார்வையிடுவதையே நிறுத்தியிருந்தேன்;ஆனாலும் நண்பர் ஜோசப் அவர்களுடைய குறிப்பிட்ட பின்னூட்டத்தினால் அங்கு செல்லும்படியானது;இதனால் மீண்டும் மனதை சஞ்சலப்படுத்திக்கொள்ளூம் சூழலும் உருவாகிவிட்டது;கடந்த சில நாட்களாக புறவினத்தார் யாரைப் பார்த்தாலும் இவர்களும் இப்படிப்பட்ட கருத்துக்களால் பாதிக்கப்பட்டு இருப்பார்களோ என்ற சங்கடத்துடனே பார்க்கும்படியானது; இதுவே சாத்தானின் தளமான தமிழ் ஹிந்து-வின் நோக்கமாகும்.
ஆனாலும் நாம் நம்முடைய நம்பிக்கையை உறுதியாக அறிக்கையிடுகிறதில் அதிக கவனமாக இருக்கவே வேதம் போதிப்பதால் நம்முடைய நிலையினைத் தெளிவாக எடுத்துரைக்கவே கடமைப்பட்டுள்ளோம்.அதே நேரத்தில் நம்முடைய தளத்தைக் குறித்தும் ஒரு தவறான கருத்தை அங்கு பின்னூட்டமிட்டுள்ள ஒரு நண்பர் பதித்திருக்கிறார்; அதாவது நாம் அவர்களுடைய தரப்பு கருத்துக்களை பதிக்கிறதில்லை அல்லது அவர்கள் இங்கே நுழைய தடைசெய்கிறோம் என்பதாக.இது முற்றிலும் உண்மைக்கு மாறான ஒரு கூற்றாகும்;நாம் யாரையும் இதுவரை தடைசெய்ததில்லை என்பதுடன் கந்தர்வன் எனும் நண்பர் ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் பதித்த தம்முடைய கருத்துக்களையும் நீக்கிக்கொண்டு விலகிவிட்டார் என்பதே உண்மையாகும்.
இனி இந்த புதிய திரியில் ஏற்கனவே மற்றொரு திரியில் நண்பர் ஜோசப் மற்றும் சில நண்பர்கள் தமிழ் ஹிந்துவின் கிறித்தவ விரோதக் கட்டுரைக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களைத் தொகுத்து பதிக்கிறேன்;இதில் தொடர்ந்து யௌவன ஜனம் தளத்தின் நண்பர்கள் இந்த குறிப்பிட்ட கட்டுரை தொடர்பான தத்தமது கருத்துக்களைப் பதிக்க வேண்டுகிறேன்.
இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா? என்ற ஒரு கட்டுரை தமிழ் ஹிந்து தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக நமது நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள இந்து சகோதரர்களுக்கு இயேசுவும் ஒரு தெய்வம் தான். 33 கோடி தேவர்களுக்கு இடம் இருக்கும் போது இயேசுவுக்கும் இடம் இல்லாமல் இருக்குமா என்ன? கிறிஸ்தவர்களான நாம் இந்து தெய்வங்களை வணங்குவதில்லை என்பது தெரிந்தும் பெருந்தன்மையுடன் புரிந்துகொள்ளும் இந்து சமய சகோதரர்கள் அதிகம். ஆனால் இந்த வயிற்றெறிச்சல் கட்டுரையில் இயேசுவை இந்துக்கள் வணங்கலாமா என்ற விஷமத்தனமான கேள்வியை முன்வைத்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர். பல விஷயங்களை நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இயேசுவை இந்துக்கள் வணங்கலாமா? வணங்கலாம், இந்துக்கள் மட்டுமல்ல மனிதனாக பிறந்த யாரும் அவரை வணங்கலாம். இயேசு தொழத்தக்க தெய்வம் அல்ல என்ற ஒரு அராத்து கும்பல் கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டே ஜல்லியடித்துக்கொண்டிருப்பது தனிக்கதை.
இயேசு ஏன் வணங்கத்தக்க தெய்வமாகிறார் ?
கர்மவினை அல்லது பாவம் போன்றவற்றிற்கு மனிதன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அகிலம் படைத்த ஆண்டவர் தானே அந்த பாவத்தை ஏற்றது வேறு எங்கும் காணப்படாத நிகழ்வு. எளிமையின் ரூபம் எடுத்து நம்மில் ஒருவராக, பாடுள்ள மனிதனாக வாழ்ந்து அனுதின பசி, வெப்பம், மழை, குளிர் என எல்லா சூழ் நிலையிலும் வாழ்ந்தவர் இயேசு. ஒருவேளை நீ பாவம் செய்யாதே என கடவுள் சொல்லியிருந்தால் போய்யா உன் வேலையை பாத்துக்கிட்டு இங்கு நான் வம்பாடு படுவது உமக்கென்ன தெரியும் என ரைட் ராயலாக சொல்லியிருந்திருப்பான் மனிதன், அதனாலேயே ஆண்டவர் மனிதனாக வாழ்ந்து மனிதன் செய்யக்கூடிய பாவங்களை வெல்ல முடியும் என காட்டினார். உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக்கூடும் என பகிரங்க சவால் விட்டவர் ஆண்டவர்.
மனிதன் அஞ்சிய மரணத்தின் வழியாகவும் கடந்து சென்று மரணம் வெல்லப்படக்கூடியதே என்பதை காட்டியவர் நம் ஆண்டவர். பரிசுத்த வாழ்வு சாத்தியமே என காட்டினார். இயேசுவை பற்றி இவ்வளவு பேசும் அன்பர்கள் அவர் மீது ஒரு குற்றமாவது சொல்ல இயலுமா? பொதுவாக கிறிஸ்தவ மார்க்கத்தை அதை பின்பற்றுபவர்களை நீங்கள் தாராளமாக குறை சொல்லலாம் ஆனால் கிறிஸ்துவை நீங்கள் குறை கூற முடியாது, அதற்கென்ற தகுதி யாருக்கும் இல்லை என்பது தான் உண்மை.
கட்டுரை ஆசிரியர் ஒரு வேடிக்கையான கருத்தை முன்வைக்கிறார், சிலுவையில் தொங்கும் சரீரத்தை வணங்குவதால் துன்பமே மிஞ்சுமாம். ஆமாம் சிலுவையில் தொங்கும் இயேசுவை மாத்திரம் அல்ல, சிலுவையையே வணங்கக்கூடாது என்பதுதான் உண்மை, கிறிஸ்தவ வேதம் கற்பிப்பதும் சர்வவல்ல தேவனுக்கு சுரூபத்தையாவது விக்கிரகத்தையாவது உண்டாக்கக்கூடாது என்பதே, எனவே கட்டுரை ஆசிரியர் சொல்வது சரிதான். இயேசுவுக்கு நிகராக எ ந்த ஒரு விக்கிரகத்தையும் வைக்கக்கூடாது என்பது தான் உண்மை. அப்புறம் ஏன் குருசுகள் சிலுவைகள்....
புற மார்க்கத்தினரை ஒத்து (கன்வின்ஸ் செய்யும் பொருட்டு)சிலைகளையும் சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவையும் வணக்கத்திற்குரிய பொருளாக வைத்ததால் எவ்வளவு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகிறது என்பதை சபை தலைவர்கள் உணரவேண்டும். யாரையும் அவர்களுடைய வழியில் சென்று கன்வின்ஸ் செய்யவேண்டாம், வேதம் கூறும் வழியிலே நமது வணக்க முறைகள் இருன்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் நமது வழியிலேயே நிற்போம்.
கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்களின் ஆவி அலையுமாம் அதனால் அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களை சமாதானப்படுத்த சிறுகோயில் கட்டி படையல் வைத்து வழிபடுவார்களாம். எதை எதோடு சம்பன்தப்படுத்துகிறார் பாருங்கள், இது ஏதோ ஒரு அரசியல் கொலையோ அல்லது ஒரு சாதாரண மனிதனின் மரணமோ அல்ல, இயேசுவின் மரணம் உலகத்தின் பாவத்திற்காக நிவாரண பலியாக செலுத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் உயிர்தெழுன்த இயேசுவை வணங்குவதில்லையாம், வியாகுலப்படும் இயேசுவை வணங்குவதில்லையாம், சிலுவையில் அகோரமாக தொங்கும் இயேசுவை தான் வணங்குகிறார்களாம். இயேசுவின் பாவ மீட்பிற்கான ஞாபகார்த்தமே சிலுவை அடையாளமேயன்றி சிலுவையோ அல்லது சிலுவையில் தொங்கும் இயேசு சுரூபத்தையோ வணங்குவது கிடையாது, ஒருவேளை அப்படி இருக்குமானால் அது தவறுதான். சரி அப்படி பார்த்தால் காலில் அம்பு எய்து கொலை செய்யப்பட்ட கிருஷ்ணரையோ அல்லது ஆற்றில் மூழ்கி மரித்த ராமனையோ நீங்கள் ஏன் வணங்குகிறீர்கள்?
கட்டுரை ஆசிரியர் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும், நீங்கள் கூறும் சீர்கேடுகள் எல்லா மதத்திலும் தான் இருக்கிறது, இங்கு மடாதிபதிகள் மற்றும் பூசாரிகள் எல்லாரும் நேர்மையானவர்களாக இரு ந்திருக்கிறார்களா. தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா, ஒரு கொலை வழக்கில் எத்தனை சாட்சிகள் பல்டியடித்தார்கள் என்பது தெரியாததா. இயேசுவை நோக்கி குற்றம் சாட்ட துணியாதவர்கள் கிறிஸ்தவர்களையும், பாதிரியார்களை குறை கூறித்திரிகிறார்கள்.
சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிறவர்களுக்கோ தேவ பலனாயிருக்கிறது. இந்த போதனை பலருக்கு இடறல் உண்டாக்கத்தான் செய்யும். மனமேட்டிமை, அகம்பாவம் போன்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இது நிச்சயம் இடறல் தான்.இயேசுவை வணங்குவதை குறித்து இவ்வளவு விலாவரி கட்டுரை எழுதுபவர் நீங்கள் வணங்கும் தெய்வங்களுக்கு வணக்கத்திற்குரிய தன்மை இருக்கிறதா என யோசித்து பாருங்கள். இதற்கு மேல் எழுத எவ்வளவோ இருக்கிறது ஒவ்வொன்றையும் எழுதி உங்களை காயப்படுத்த விரும்பவில்லை.
சகோ.ஜோசப், அருமையான நெத்தியடி பதில்கள்.தமில்ஹிண்டு தளத்தில் இதை கண்டு நான் சரியான வார்த்தைகளை செகரிப்பதற்க்குள்,ஆண்டவர் உங்களை கொண்டு ஒரு அருமையான பதிலை கொடுத்துவிட்டார்.இது தமில்ஹிண்டுவிற்க்கு மட்டுமல்ல, கிறிஸ்த்துவத்தை வளைக்க, நெளிக்க, customize செய்ய முயலும் கிரிச்துவர்க்கும் இது பாடமே.
//இந்த உலக மக்களின் மீது கொண்ட அன்பினால் அவர்கள் செய்த பாவங்களுக்கு பொறுப்பேற்று தன்னையே அதற்காக பலி செய்து கொண்ட தியாக ஓவியம் அது//
// இது ஒரு டுபாக்கூர் என்று புரிந்துகொள்ளுங்கள். யாரோ எப்போதோ செத்தது மற்றவர்களின் பாவங்களை தீர்க்காது. இயேசு என்பவர் கடவுளாக இருந்தால், அவர் தானே செத்துத்தான் மற்றவர்களது பாவங்களை தீர்க்க முடியுமா? சும்மா பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொன்னால் மன்னிக்கப்பட்டிருக்காதா? எவரோ செத்த்தற்கு இப்படியெல்லாம் மடத்தனமாக பொருள் சொல்லி ஊரை ஏமாற்ற வேண்டாம். //
தங்கமணி அவர்களின் இந்த கருத்து நம்முடைய தேசத்தின் சுதந்தரத்துக்காக உயிர் தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளின் இரத்தத்தை கேவலப்படுத்துவது போல இருக்கிறது;மேலும் மகாத்மா என்று புகழப்படும் காந்தியடிகள் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப்படும் சுதந்தரமும் கேள்விக்குரியதாகிறது. என்றைக்கோ வாங்கிக்கொடுத்ததாகச் சொல்லப்படும் சுதந்தரம் இன்றைக்கும் இருக்கும்போது காந்தியடிகள் என்பவர் தேசத்துக்காகவும் தேச ஒற்றுமைக்காகவும் உயிர்த்தியாகம் செய்ததாகப் புகழப்படும் போது இயேசுவின் தியாகத்தால் ஒரு பலனும் இல்லை என்பது பாகிஸ்தான் காரனின் கூற்றுப்போலவே இருக்கிறது.
உருவ வழிபாட்டை நாங்கள் ஊக்கப்படுத்துகிறதில்லை;ஆனாலும் வீரமா, தியாகமா என்ற அலசலில் எனக்கு தோன்றும் கருத்து என்னவென்றால் புதுப்பெண்ணின் அலங்காரத்தைவிட அவள் தாய்மையின் வேதனையில் அவதிப்படுவதே நீங்காத நினைவாகி காலமெல்லாம் நினைவுகூறப்படும் தியாகமாகும்;சிலுவை என்பது நெஞ்சைப் பதறவைக்கும் கொலைக்களம் போலத் தோன்றினாலும் அது மனிதனின் மரணம் ஜனனமான வரலாற்றின் ஆரம்பப்புள்ளி;மரணம் எனும் முற்றுப்புள்ளி அரைப்புள்ளியாகி ஆச்சர்யக்குறியாக மாறிய அதிசயப்பீடம்;உணர்வடைவீர் மாந்தரே..!
John On Thu Apr 28 00:36:10 2011
//இயேசு என்பவர் கடவுளாக இருந்தால், அவர் தானே செத்துத்தான் மற்றவர்களது பாவங்களை தீர்க்க முடியுமா? சும்மா பாவங்களை மன்னிக்கிறேன் என்று சொன்னால் மன்னிக்கப்பட்டிருக்காதா?//
இந்த நண்பரிடம் ரிக் வேதத்தில் ஏன் மிருகங்களை மனிதர்களுடைய பாவங்களுக்காக பலியிடுவதை குறித்து எழுதபட்டிருக்கிறது என்று கேட்க வேண்டும்.
Chillsam:
மேற்கண்ட கருத்துக்கள் மாத்திரமே மாற்று நம்பிக்கையாளருக்கு சரியானதை எடுத்துக்கூறிட இயலாது என்பதை அறிந்தே இருக்கிறோம்;இது வெறுமனே பதிலுக்கு பதில், அடிக்கு அடி எதிரடி பாணியிலேயே இருக்கிறது; ஆனாலும் தமிழ் ஹிந்துவின் கட்டுரைக்கு அடிநாதமாக விளங்கும் கூற்றான, "பிணத்தை வணங்குவது அபசகுனம்" எனும் துணிகரமான கருத்தாக்கத்தை நாம் சரியான விதத்தில் எதிர்கொள்ளும் வண்ணமாக விளக்கத்தைக் கொடுக்கவேண்டும் என்று கருதுகிறேன்.
ஏனெனில் இதன் பின்னணியில் ஏற்கனவே வெளியிடப்பட்ட முதல் பாவம் கட்டுரை முதலாக பல்வேறு சத்திய விரோதக் கட்டுரைகளின் பாதிப்பு இருக்கிறது;இயேசுவானவரின் சிலுவை மரணத்தின் நோக்கத்தை சிறுமைப்படுத்தும் வண்ணமாகவும் அவருடைய உயிர்த்தெழுதலைப் புறக்கணிக்கும் வண்ணமாகவுமே இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது;மேலும் சத்திய வசனத்தின் கூற்றுகளையும் போதனைகளையும் புறக்கணித்துவிட்டு மேலோட்டமாக, கிறித்தவர்கள் அனைவருமே சிலுவையிலறையப்பட்ட வண்ணமாக சித்தரிக்கப்பட்ட ஒரு உருவத்தையே வணங்குபவர்கள் என்ற உண்மைக்கு மாறான கருத்தை தோற்றுவித்திருக்கிறார்கள்.
எனவே நம்முடைய நண்பர்கள் செய்யவேண்டியது என்னவென்றால் கிறித்தவர்கள் பிணத்தை வணங்குகிறார்களா அல்லது இந்துக்கள் பிணத்தை வணங்குகிறார்களா என்பதைக் குறித்து சரியானதொரு பார்வையை இங்கே பதிவுசெய்யவேண்டுகிறேன்.
உதாரணமாக செத்துப்போன காஞ்சிப் பெரியவர் மற்றும் அண்மையில் செத்துப்போன சாயி(சாய்ந்துபோனதால் இப்போது உண்மையிலேயே அவர் சாயிபாபா தான்...)பாபா ஆகியோரின் படத்தை வைத்து வணங்குகிறதில்லையா? இல்லை,அது அவர்கள் துன்பப்பட்ட நிலையில் வணங்கவில்லை என்கிறார்கள்;அப்படியானால் துறவு நிலையில் உள்ள ஒருவரை வணங்கினால் மட்டும் சந்தோஷம் வந்துவிடுமா? துறவு நிலையை விட இல்லற உறவு நிலையினையே இந்துமார்க்கம் போற்றுகிறது என்றும் அவர்களே கூறுகிறார்கள்.
பிறப்புறுப்பில் புற்றுநோய் வந்து மரித்த விசிறி சாமியார் உட்பட பலரை தெய்வ நிலையில் வைத்து வணங்கும் இந்து நண்பர்களுக்கு அவர்கள் படத்தைப் பார்த்தால் அவர்கள் உயிர்வாழ பட்ட பிரயாசங்கள் மறந்துபோகுமா என்ன? அவர்கள் வேறொரு ஜென்மம் எடுத்து மீண்டும் பிறப்பது இருக்கட்டும்,அவர்களும் மரணத்தை சந்திக்கவேண்டியிருந்ததே அதற்கு என்ன சொல்லுவார்கள்? மறுஜென்மத்தை நம்பும் இந்து நண்பர்களுக்கு அதே நபர் அதைவிட சிறப்பான நிலையினை எய்தி தோன்றுவதை நம்ப முடியவில்லையாம்;இதுவே கண்கள் குருடாக்கப்பட்ட பரிதாப நிலை போலும்.
உதாரணமாக அண்மையில் வயோதிகத்தினால் நோய்வாய்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டு உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்த நிலையில் மரித்த சாயிபாபா 14 வயதில் தேள் கடித்த பிறகு குண மாறாட்டம் ஏற்பட்டு தான் ஷிர்டி சாயிபாபாவின் அவதாரம் என்று பிதற்றினாராம்; அதுமாத்திரமல்ல, தான் மீண்டும் கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில வருடங்களில் பிறப்பேன் என்றும் கூறிச்சென்றிருக்கிறாராம்;ஆனாலும் எந்த வருடத்தில் என்று கூறவில்லை என்பதை கவனிக்கவேண்டும்;தற்போது வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் யார் வேண்டுமானாலும் தன்னை சாயிபாபா என்று அறிவித்துக்கொண்டு இன்னொரு ரவுண்டு வரலாம்;அதிலும் பல போலிகள் தோன்ற வாய்ப்பு உண்டு.
ஆனால் இதையெல்லாம் நம்பும் மௌடீகமான பழங்குடி ஆவி வணக்கத்தாரின் வழிவந்த இந்து மார்க்கத்தின் ஒரு பிரிவினர் மரித்த இயேசு மூன்றாம் நாளே உயிரோடு தோன்றியதையும் அதைத் தொடர்ந்து அவர்தம் சீடர்களுக்குள் ஏற்பட்ட எழுச்சி காரணமாகவும் பல்வேறு அற்புத செயல்கள் மூலமாகவும் அந்த மார்க்கமானது நிரூபிக்கப்பட்டதையும் யுகங்களைக் கடந்து நிலைத்து நிற்பதையும் நம்புவதற்குக் கடினமாக இருக்கிறதாம்;பரிதாபம் தான்..!
கிறித்தவ மார்க்கத்தின் சிறப்பான நிலைக்கு ஒரு வலுவான உதாரணம்,அண்மையில் இங்கிலாந்து தேசத்தின் லண்டன் மாநகரில் நடைபெற்ற இளவரசர் வில்லியம்ஸின் கோலாகல திருமணமாகும்;அதை பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் சன்டிவி-யினர் வெட்கமில்லாமல் நேரடி ஒளிபரப்பு செய்தனர்;அதைப் பார்த்த பலருக்கும் கிறித்தவ மார்க்கத்தின் மீதான மதிப்பு உயர்ந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை; கிறித்தவ மார்க்கம், திருமணம் என்ற உன்னதமான ஒழுங்கினை எந்த அளவுக்கு போற்றுகிறது என்பதற்கு இந்த திருமணமே அத்தாட்சியாக இருக்கிறது;மாத்திரமல்ல,அவர்கள் போற்றும் தெய்வமான இயேசுவானவரின் மேன்மையும் அங்கே நிரூபணமானது.
செத்துப்போன ஒருவருக்கு முன்பாக தேசத்தின் இளவரசனும் இளவரசியும் முழங்கால் படியிடுவார்களா? அவர்கள் திருமணக் கோலத்தில் முழங்காலிட்ட போது தீர்க்கன் ஏசாயா மற்றும் பவுலடிகள் மூலமாக சிருஷ்டிகரான சர்வவல்ல தேவனே இணைந்து அறிவித்த வாசகம் எனக்குள் ரீங்காரமிட்டது.
"முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்."(ஏசாயா.45:23)
"இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." (பிலிப்பியர்.2:10,11)
இவ்விரண்டு வசனங்களுக்கும் எதிராக (மேசியாவின்) எதிரிகள் ஒன்றையும் செய்யமுடியாது.இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மாத்திரமல்ல, அவருடைய மாறாத ஒரே தன்மையையும் இந்த வாக்கியங்கள் வெளிப்படுத்துகிறது;உதாரணமாக வேதத்தில் தாவீது என்பாருக்கும் பேதுரு என்பாருக்கும் தனித்தனி சிறப்பான இடம் உண்டு அல்லவா? தாவீது என்பாரின் மறுபிறவியே பேதுரு என்று வேதம் போதிக்கவில்லை; அதுபோலவே எலியாவின் ஆவியும் பெலனும் திருமுழுக்கினர் யோவான் என்பாருக்குள் இருப்பதாக வேதம் அறிவிக்கிறது.
ஆனாலும் இவர்களில் யாரோ ஒருவருடைய மறுபிறவியாக இயேசுவானவர் தம்மை வெளிப்படுத்தவில்லை;அவர் இதுவரை மனுக்குலம் கண்டிராத பரம்பொருளின் காணத்தக்க தன்மையில் தம்மை வெளிப்படுத்தினார் என்று வேதம் சொல்லுகிறது;அந்த பரம்பொருளும் சிருஷ்டிகருமான சர்வவல்லவரும் கூட இதுவரை இந்துமார்க்கம் கூறுவதைப் போல எந்தவொரு (பத்து..?!) அவதாரத்திலும் வெளிப்படுத்தவில்லை;மாறாக அவ்வப்போது தமது அடியார்மூலம் பேசினார்;அவருடையை அதிசய செயல்கள் மூலம் தம்முடைய இருப்பையும் தம்முடைய தன்மையையும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்;அவர் அப்போதும் இப்போதும் ஒருவராகவே இருக்கிறார்;ஒன்றின் பால், பலவின் பால் என்றெல்லாம் அவர் ஒருபோதும் இருந்ததில்லை.
இதைக் குறித்தும் இன்னும் இளவரசர் வில்லியம்ஸின் திருமணத்தைக் குறித்தும் சமயம் வாய்த்தால் தனித்தனி கட்டுரைகளை வெளியிடுவேன்.
இதுபோன்று ஒப்பீட்டு முறையிலோ அல்லது கிறித்தவ போதனையின் அடிப்படையிலோ நண்பர்கள் தங்களுடைய மேலான கருத்துக்களை முன்வைக்க வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)